தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பேய் படங்கள் என்றாலே ஒரு கதை தொடங்கும்.. அதில் பேய் வந்து பழி வாங்கும்.. பின்னர் அந்த பேய்க்கு ஒரு பிளாஷ் பேக் காட்சி இருக்கும்.. ஆனால் இந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சியுடன் தான் படம் தொடங்குகிறது.
கதைக்களம்…
1965 ஆண்டில் பாண்டிச்சேரியில் ஒரு சூதாட்ட குடும்பம் மக்களை வரவழைத்து ஒரு கேம் விளையாடுகிறது. அந்த விளையாட்டில் வென்றால் லட்சங்களில் சம்பாதிக்கலாம். இல்லையென்றால் அந்த மனிதர்களை கொன்று விடுவது அந்த குடும்பத்தின் வாடிக்கை.
இதையறிந்த அந்த மக்கள் ஒரு கட்டத்தில் அந்த குடும்பத்தை தீ வைத்து கொளுத்தி விடுகின்றனர்.
தற்போது 2023 ஆம் ஆண்டில் கதை தொடங்குகிறது…
இரண்டு திருட்டு கும்பல் இருக்கிறது.. ஒரு கும்பலிடம் இருந்து மற்றொரு கும்பல் பணம் பறிக்கிறது. அந்த பணம் தவறுதலாக சந்தானத்திடம் வந்து சேர்கிறது.
தனது காதலியின் கடனை அடைக்க சந்தானம் அந்த பணத்தை கொடுக்க காதலி சுரபி அந்த பணத்தை ஒரு கும்பலிடம் கொடுக்கிறார். அப்போதுதான் அந்த கும்பலின் பணம் தான் அது என்பது அவர்களுக்கே தெரிய வருகிறது.
இதனையடுத்து காதலி சுரபியை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டுகின்றனர். தன்னுடைய காதலை காப்பாற்ற மீதி பணத்தை தேடி செல்கிறார் சந்தானம்.
சந்தானத்தின் நண்பர்களோ அதை ஒரு பங்களாவில் ஒளித்து வைப்பதை அறிந்து அங்கு செல்கின்றனர்.
அதன் பின்னர்தான் அது பேய் பங்களா என அவர்களுக்கு தெரிய வருகிறது.
பேய் பங்களாவிலிருந்து பணத்தை எடுத்தார்களா.? அந்த பேய்கள் என்ன செய்தது.? காதலின் நிலை என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
சமீபத்தில் வந்த குலுகுலு உள்ளிட்ட படங்கள் சந்தானத்திற்கு படுதோல்வியை கொடுத்தன. எனவே மீண்டும் தன்னுடைய பழைய காமெடி டிராக்க்கு வந்து சிக்ஸர் அடித்துள்ளார் சந்தானம்.
தனது ஒன்லைன் காமெடி பன்ச்களை போகிற போக்கில் தூவி விட்டு நம்மை சிரிக்க சிரிக்க கதற விட்டுள்ளார்.
ஒரு நிமிட சிரிப்பு முடிவதற்கு அடுத்த நிமிட சிரிப்பு வந்து விடுவதால் நம்மால் கன்ட்ரோல் செய்ய முடியாமல் போகிறது.
நாயகி சுரபிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கதையின் ஓட்டத்திற்கு உதவியுள்ளார்.
எப்போதுமே படு மிரட்டலாக வரும் பெப்சி விஜயன் இதில் டெட் டேய்..டேய்.. டேட் என சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.
படம் முழுவதும் காமெடியை அள்ளி தெறிக்க விட்டிருந்தாலும் ஒரு சில காமெடிகள் உச்சத்தை தொடுகின்றன.
கட்டிலுக்கு அடியே தெரியும் பேய் கால்கள்… இரண்டு கதவுகளுக்கு மேல் நிற்கும் மொட்ட ராஜேந்திரன் கால்கள்.. ஒரே பங்களாவிற்குள் மாட்டிக் கொண்டு வழி தெரியாமல் அவதிப்படும் கும்பல் என அனைத்துமே சிரிப்புக்கு கேரண்டி.
இதில் கூல் சுரேஷ் சந்தானத்துடன் இணைந்துள்ளார்.. பிளாக் ஜட்டி ஒயிட் ஜட்டி காமெடி செய்து நம்மை கலகலப்பூட்டி செல்கிறார்.
‘லொள்ளு சபா’ மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, பெப்சி விஜயன் மகனாக வரும் கிங்ஸ்லி, அவர் அடியாளாக வரும் தீனா, முனீஷ் காந்த் காமெடியில் வெளுத்து வாங்குகிறார்கள்.
அதுபோல பேய்களாக வந்து ரகளை செய்யும் பிரதீப் ராவத், பேபி மானஸ்வி, மசூம் சர்க்கார், ரீட்டா ஆகியோரின் பங்களிப்பு அல்டிமேட்..
எப்போதும் அழகு குட்டி பாப்பாவாக நாம் பார்த்த மானஸ்வி்இதில் கொஞ்சம் குட்டி பேயாக மிரட்டல் செய்திருக்கிறார்.
டெக்னீசியன்கள்….
ஏ.ஆர்.மோகனின் கலை இயக்கம் பாராட்டத்தக்கது. அந்த பேய் பங்களா செட்டுகளை அவர் எப்படி போட்டார்? பேய் விளையாட்டுக்கு தகுந்தார் போல WIN RUN என காட்சி அமைப்புகளை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.
ஆர்.ஹரிஹர சுதன் உருவாக்கிய வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் குழந்தைகளை சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும்.
ஒளிப்பதிவு பின்னணி இசை எடிட்டிங் அனைத்து பணிகளும் சிறப்பு.. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சந்தானத்துடன் பணிபுரிந்த தன்னுடைய நண்பர் பிரேம் ஆனந்த் என்பவரை இயக்குனராக்கி அழகு பார்த்து இருக்கிறார் சந்தானம்.
தன் மேல் வைத்த நம்பிக்கையை கொஞ்சம் கூட குறை வைக்காமல் சிக்ஸர் அடித்து சந்தானத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார் பிரேம் ஆனந்த்.
எந்த லாஜிக்கும் பார்க்காமல் சிரிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக டிடி ரிட்டன்ஸ் படத்தை பார்க்கலாம்.
ஆக.. டிடி ரிட்டர்ன்ஸ்.. சந்தானத்தின் ஸ்மைல் ரிட்டன்ஸ்
DD RETURNS movie review and rating in tamil