பழைய வண்ணாரப்பேட்டை விமர்சனம்

பழைய வண்ணாரப்பேட்டை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : பிரஜின், அஷ்மிதா, ரிச்சர்ட், கானா பாலா, நிஷாந்த், கருணாஸ், பாடகர் வேல்முருகன், காஜல், கூல் சுரேஷ், ஜெயசூர்யா, ஜெயராஜ் மற்றும் பலர்.
இயக்கம் : மோகன்.ஜி
இசை : ஜூபின்
ஒளிப்பதிவாளர் : பாருக்
பி.ஆர்.ஓ.: மௌனம் ரவி
தயாரிப்பாளர் : கிருஷ்ணா டாக்கீஸ்

palaiya vanarapettai reviews

கதைக்களம்…

பிரஜின் இன்ஜினியரிங் காலேஜ் மாணவன். இவருடைய காதலி அஷ்மிதா.

பிரஜின் ஜாலியாக தன் ஐந்து நண்பர்களுடன் சுற்றுவதை வாடிக்கையாக வைத்திருப்பவர்.

இடைத்தேர்தல் நெருங்கும் வேளையில், இவர்கள் இருக்கும் வண்ணாரப்பேட்டையில் ஒரு கொலை சம்பவம் நடக்கிறது.

சந்தேகத்தின் பேரில் பிரஜின் நண்பர்களில் ஒருவரை குற்றவாளியாக சிறையில் வைக்கிறது போலீஸ்.

இதனால் பிரஜீன், ஒரிஜினல் குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.

இதே சமயத்தில் நேர்மையான கமிஷ்னர் ரிச்சர்ட்டும் நிஜமான குற்றவாளியை தேடுகிறார்.

குற்றவாளியை முதலில் நெருங்கியது யார்? சிறையில் உள்ள நண்பர் என்ன ஆனார்? இடைத்தேர்தல் அமைதியாக நடந்ததா? என்பதே மீதிக் கதை.

Pirajan - Asmitha (1)

கதாபாத்திரங்கள்…

மிகவும் யதார்த்த வண்ணாரப்பேட்டை பையனாக வருகிறார் பிரஜின். இவர்களுடன் இருக்கும் நண்பர்களும் கச்சிதம்.

ரிச்சர்ட் கம்பீரமாகவும் நேர்மையாகவும் நடித்திருக்கிறார்.

நிஷாந்த் இதில் நிறையவே ஸ்கோர் செய்கிறார்.

ஆனால் அஷ்மிதா இப்படத்தில் தேவைதானா? எனத் தெரியவில்லை. நாயகியே இல்லாமல் கதையை நகர்த்தியிருக்கலாம்.

பாடகர் வேல்முருகன், காஜல், கூல் சுரேஷ், கருணாஸ், கானாபாலா, ரோபோ சங்கர் ஏதோ வந்து போகிறார்கள். இவர்களை நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.

richard

படத்தின் ப்ளஸ்…

  • பட்டறை குமார் கேரக்டரை கடைசி வரை தெரியாமல் ஆடியன்சுக்கு தெரியாமல் கொண்டு சென்றது ரசிக்க வைக்கிறது
  • திரைக்கதை மற்றும் படமாக்கப்பட்டவிதம்
  • பாடல்கள் மற்றும் பின்னணி இசை

படத்தின் மைனஸ்

  • பார்ட் 2 எடுக்க வேண்டும் என்பதற்காக நிறைய கேரக்டர்களில் முடிவே இல்லை.
  • ஹீரோ படிக்கும் மாணவன். அப்பா அம்மா இல்லை. அவர் நண்பர்களுக்கு செலவு செய்வது எப்படி?

palaiya vanarapettai movie review rating

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஜூபின் அவர்களின் பின்னணி இசை பாராட்டும்படி இருந்தாலும் சில இடங்களில் இரைச்சல் அள்ளுகிறது.

எல்லாம் பாட்டும் குத்து பாடலாய் இருப்பதால் காதல் பாடலை மெலோடியாக கொடுத்திருக்கலாம்.

ஃபாருக்கின் ஒளிப்பதிவை கொஞ்சம் ப்ரைட்டாக தந்திருக்கலாம்.

கொலைக் காரணத்தை தேடி, இருவர் பயணிப்பது பழகிய கதை என்றாலும் படமாக்கப்பட்ட விதத்தில் ரசிக்க வைக்கிறார் மோகன். வாழ்த்துக்கள்.

உயர்அதிகாரிகளின் கெடுபிடிகளால் அப்பாவிகள் குற்றவாளிகளாக ஆக்கப்படுவதை அசலாக காட்டியிருப்பது டைரக்டர் டச்.

பழைய வண்ணாரப்பேட்டையில் இன்னும் வண்ணம் சேர்த்திருக்கலாம்.

சைத்தான் விமர்சனம்

சைத்தான் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : விஜய் ஆண்டனி,அருந்ததி நாயர்,ஒய்.ஜி.மகேந்திரன், சாருஹாசன், ஆடுகளம் முருகதாஸ், மீரா கிருஷ்ணன், கிட்டி மற்றும் பலர்.
இயக்கம் : பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
இசை : விஜய் ஆண்டனி
ஒளிப்பதிவாளர் : பிரதீப் கலிபுரயத்
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : பாத்திமா விஜய் ஆண்டனி

saithan heroine

கதைக்களம்…

ஜெயலட்சுமி என்ற பெயர் அடிக்கடி ஒரு குரலாக விஜய் ஆண்டனிக்கு கேட்கிறது.

அதனை தேடி அதன்படி அவர் செல்கிறார்.

யார் அந்த ஜெயலட்சுமி? இவருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு? தேடி சென்றதால் விஜய் ஆண்டனியின் மனைவி, குடும்பம் என்ன ஆனது? என்பதே இந்த சைத்தான் கதை.

arunthathi nair

கதாபாத்திரங்கள்…

ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுக்கும் விஜய் ஆண்டனியை பாராட்டியே ஆகவேண்டும்.

அதிலும் இதில் ஒரு குரலை தேடி அலையும் போது நம்மையும் தேட வைக்கிறார்.

ஆனால் இன்னும் ஸ்கோர் செய்ய வாய்ப்பிருந்தும் முக பாவனைகளை மாற்ற மறுக்கிறார். கொஞ்சம் சிரித்து ரசிக்க வைக்கலாமே.

அழகான கண்களை உருட்டி நடிப்பில் மிரட்டியிருக்கிறார் அருந்ததி நாயர்.

விஜய் ஆண்டனியின் ஐடி நண்பனாக முருகதாஸ். இங்கிலீஷ் பேசி சிரிக்க வைக்கிறார்.

சாருஹாசன், கிட்டி, ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் பொருத்தமான தேர்வு.

saithan movie stills

படத்தின் ப்ளஸ்…

  • அதிரடியான இன்டர்வெல் ப்ளாக்
  • கதைக்களம் மற்றும் பின்னணி இசை
  • இரண்டாம் பாதி கமர்ஷியல் ஐட்டம்

படத்தின் மைனஸ்…

  • ப்ளாஷ்பேக் காட்சி ஓகே என்றாலும் வலுவில்லை.
  • டெரர் வில்லனை கொஞ்சர் டர்ர்ர்ர் ஆக்கியது ஏனோ?

saithan arun

தொழில்நுட்ப கலைஞர்கள்

அந்த குரல் கேட்கும் காட்சிகளில் கேமராவை சுழல விட்டு ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீப் கலிபுரயத்.

அதேபோல் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியிலும் சபாஷ் போடலாம்.

சுஜாதாவின் நாவலை எடுத்து கொஞ்சம் தடுமாறினாலும், படமாக்கிய விதத்தில் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி அதிக கவனத்தை ஈர்ப்பார்.

சைத்தான்.. சகலமும் ஜெயலட்சுமி

இளமி விமர்சனம்

இளமி விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : யுவன் (கருப்பு), அணு கிருஷ்ணா (இளமி), அகில் (சடை புலி) கிஷோர் (படை தளபதி) ரவி மரியா (வீரைய்யன்), விக்கிரமாதித்தன், தவசி, வெள்ளையாண்டி ஐயா மற்றும் பலர்.
இயக்கம் : ஜே. ஜூலியன் பிரகாஷ்
இசை : ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவாளர் : யுகா
கலை : ஜான்பிரிட்டோ
பி.ஆர்.ஓ.: மௌனம் ரவி
தயாரிப்பாளர் : ஜோ புரொடக்ஷன்ஸ்

கதைக்களம்…

1715 ஆம் ஆண்டில் இக்கதை நடக்கிறது. அதாவது 300 வருடங்களுக்கு முன்பு உள்ள கதை.
இரு ஊர்களுக்கு உள்ள இடையே கோயில் பிரச்சினை இருந்து வருகிறது.

ஒரு சூழ்நிலையில் தன்னுடைய காளையை அடக்குபவருக்கு தன் மகள் இளமியை கட்டித் தருவதாக வாக்குறுதி கொடுக்கிறார் ரவிமரியா.

ஆனால் இவரது மகளோ அடுத்த ஊர் கருப்பு யுவனை காதலிக்கிறார்.

அதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதை யாருமே கற்பனை செய்யாத படி தந்திருக்கிறார் இயக்குனர்.

Ilami stills 1

கதாபாத்திரங்கள்…

யுவன் (கருப்பு), அணு கிருஷ்ணா (இளமி), அகில் (சடை புலி) கிஷோர் (படை தளபதி) ரவி மரியா (வீரைய்யன்), கருப்பு நண்பர் ஆனந்த் சுந்தர்ராஜன் என ஒருவரையும் விட முடியாது.

அனைவரும் அந்தந்த பாத்திரங்களில் வாழ்ந்துள்ளனர்.

சாட்டையில் பார்த்த யுவனா இது? என வியக்க வைக்கிறார்.

நாயகி இதற்கு முன்பு கத்தி படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்திருந்தாலும், இப்படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை கொடுக்கும்.

வில்லனாக வரும் கல்லூரி படப்புகழ் அகில், நல்ல முறுக்குடன் கம்பீரமாக இருக்கிறார்.

யுவனின் நண்பராக வரும் ஆனந்த் சுந்தர்ராஜனுக்கு வாய்ப்புகள் காத்திருக்கும்.

கிஷோர் கேரக்டர் படைப்பு நன்றாக இருந்தாலும், அதில் வலுவில்லாமல் சட்டென்று முடித்துவிட்டார்.

ilami

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இசையமைப்பாளர், கலை இயக்குனர், ஒளிப்பதிவாளர் மற்றும் எடிட்டர் என எவரையும் குறை சொல்ல முடியாதபடி வேலை வாங்கியிருக்கிறார் டைரக்டர்.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில்… நான் என்ன செய்வேன், அடி ஆத்தாடி, தவில் எடுத்து அடிடா என பாடல்கள் ரசிகர்களுக்கு கிராமத்து வாசனையை கொடுக்கும்.

ஜான் பிரிட்டோ கலையில் ஒவ்வொன்றும் கக்சிதம். அவர்கள் தேர்ந்தெடுத்த லொக்கேஷன் முதல் ஆடைகள், வீடுகள், கட்டில், பாத்திரம் உடை என சொல்லிக் கொண்டே போகலாம்.

இயக்குனர் பற்றி…

இதுபோன்ற கதைக்களம் வந்திருந்தாலும், எந்தவிதமான பிரம்மாண்டமும் இல்லாமல், மக்களின் படு யதார்த்த வாழ்க்கையில் நம்மை இணைக்கிறார் இயக்குனர்.

காளை அடக்கும் காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸ் கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னும் கவனம் தேவை.

பட க்ளைமாக்ஸில் ஹீரோ அல்லது ஹீரோயின் ஜெயிப்பார். ஆனால் இதை யூகிக்க முடியாத படி கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் இளமி.. சுவை குறையாத இனிய விருந்து

கவலை வேண்டாம் விமர்சனம்

கவலை வேண்டாம் விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா, ஆர் ஜே. பாலாஜி, ஸ்ருதி ராமகிருஷ்ணன், கருணாகரன், பாலசரவணன், மயில்சாமி மற்றும் பலர்.
இயக்கம் : டிகே
இசை : லியோன் ஜேம்ஸ்
ஒளிப்பதிவாளர் : அபிநந்தன் ராமானுஜம்
எடிட்டர் : டிஎஸ் சுரேஷ்
பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா
தயாரிப்பாளர் : எல்ரெட் குமார்

கதைக்களம்…

காஜலுடன் உண்டான திருமண காதல் முறிவுக்கு பின்னர் ஜீவா நண்பர்களுடன் ஜாலியாக இருக்கிறார்.

இதனிடையில் பாபி சிம்ஹாவை மணக்க முடிவு செய்கிறார் காஜல்,.

எனவே ஜீவாவிடம் விவாகரத்து தர வேண்டுகிறார்.

காஜலுக்கு ஜீவா டைவர்ஸ் கொடுத்தாரா? காஜல்-பாபி மேரேஜ் நடந்ததா ? என்பது மீதி கதை.

CyAjyL_WIAEnw4n

கதாபாத்திரங்கள்…

கலகலப்பாக அதே சமயம் ப்ரெஷ்ஷாக வருகிறார் ஜீவா. நண்பர்களுடன் அரட்டை என்பது எல்லாம் என்றென்றும் புன்னகை படத்தை நினைவுப்படுத்துகிறது.

டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் காஜலுக்கு பெரிய வேலையிருப்பதில்லை. ஆனால் இதில் ரசிகர்களை ஏமாற்றவில்லை காஜல்.

ஜோதிகா சாயலில் நிறையவே முகபாவனைகளை கொடுத்து, நடித்திருக்கிறார் காஜல்.

ஆர்.ஜே. பாலாஜியும் இந்த அடல்ட் ஒன்லீ ரூட்டுக்கு வந்துட்டாரே.

பாபி சிம்ஹா, சுனைனா கேரக்டர்களில் வலு சேர்த்திருக்கலாம்.

பால சரவணன் மற்றும். மயில்சாமி, மதுமிதா ஆகியோரை நிறையவே பாராட்டலாம்.

டபுள் மீனிங் வசனங்களால் பல காட்சிகளில் பீப் சவுண்ட். (ஆனாலும் நமக்கு புரிந்துவிடுமே…????)

போட் காமெடி மற்றும் போலீஸ் ஸ்டேஷன் காட்சி நிச்சயம் இளைஞர்களை கவரும்.

CxMDUhPXAAA36R6

தொழில்நுட்ப கலைஞர்கள்…

லியோன் ஜேம்ஸ் இசையும் ரசிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவு கலர்புல். அபினந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு படத்தில் நிச்சயம் பேசப்படும்.

மொத்தத்தில் படம் அடல்ட் காமெடி ரசிகர்களுக்கு கவலை வேண்டாம்.

அஞ்சுக்கு ஒண்ணு விமர்சனம்

அஞ்சுக்கு ஒண்ணு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அமர்-மேக்னா, சித்தார்த் – உமாஸ்ரீ இவர்களின் நண்பர்கள், சிங்கம் புலி, முத்துக்காளை, உமா, கசாலி, ஷர்மிளா, காளையப்பன், சிவநாராயணமூர்த்தி மற்றும் பலர்.
இசை: சாகித்யா
ஒளிப்பதிவு: அசோகன் (எ) நந்து
இயக்கம் : ஆர்.வியார்
பி.ஆர்.ஓ.: ஆனந்த்
தயாரிப்பாளர் : பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சண்முகம்

Anjuku-Onnu-Movie-Stills-20

கதைக்களம்…

அமர், சித்தார்த்த உள்ளிட்ட 5 சிறுவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகி கட்டிட வேலை செய்கின்றனர். இவர்களின் மேஸ்திரிதான் சிங்கம் புலி.

இவர்கள் ஐந்து பேரும் எதை செய்தாலும் சேர்ந்தேதான் செய்வார்கள். விலை மாதுவை அனுபவித்தாலும் ஐந்து பேரும்தான்.

இவர்களின் கட்டிட வேலைக்கு ஒரு பெண் (உமாஸ்ரீ) வருகிறாள்.

அதில் சித்தார்த்துக்கு மட்டும் அந்த பெண் மீது காதல் வருகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர்.

இதனிடையில் கான்ட்ராக்டர் மகள் மேக்னா இன்னொருவன் மீது காதல் கொள்கிறாள்.

அதன்பின்னர் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.

Anjukku Onnu review rating

கதாபாத்திரங்கள்…

அமர் (மேக்னாவின் காதலன்) – மேக்னா (முதலாளியின் மகள், அமரின் காதலி)
உமாஸ்ரீ (கட்டிட பணிபுரியும் பெண்,சித்தார்த்தின் காதலி) – சித்தார்த்(உமா ஸ்ரீயின் காதலன்)

இவர்களுடன் சிங்கம் புலி,முத்துக்காளை, உமா, கசாலி,ஷர்மிளா , காளையப்பன், சிவநாராயண மூர்த்தி, ஜெரால்டு, ராஜசேகர், நசீர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஐந்து நண்பர்கள் இடையில் ஒரு பெண் வந்தால், என்ன பிரச்சினைகள் வரும் என்பதை தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிறார் டைரக்டர்.

அந்த பெண் நம்பிக்கை வைத்து, அவர்களின் வாழ்க்கை மாற்றி இன்னும் அழகாக்குகிறார்.

மழைக் காலத்தில் கட்டிடத் தொழிலாளர்கள் படும் கஷ்டங்களை அருமையாக காட்டியுள்ளார்.

காட்சிகள் சொல்லி வைத்ததுபோல், எந்த ட்விஸ்ட் இல்லாமல் வருகிறது.

ஆனால் க்ளைமாக்ஸ் கொஞ்சம் எதிர்பாராதது.

நண்பர்களின் கதையை இன்னும் ஆழமாக நாடகத்தனம் இல்லாமல் சொல்லி இருந்தால் ஒரு புது வசந்தம் கிடைத்திருக்கும்.

கடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்

கடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஜிவி. பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், சிங்கம்புலி, ஆர்ஜே. பாலாஜி, ஊர்வசி, எம்எஸ் பாஸ்கர், மனோபாலா, கௌரவ தோற்றத்தில் ஜீவா, லொக்காலிட்டி பாடலுக்கு மேண்டி தக்கர் மற்றும் பலர்.
இசை : ஜிவி. பிரகாஷ்
ஒளிப்பதிவு : ஷக்தி சரவணன்
படத்தொகுப்பு : விவேக் ஹர்ஷன்
இயக்கம் : ராஜேஷ் எம்
பி.ஆர்.ஓ.: ஜான்சன்
தயாரிப்பாளர் : அம்மா கிரியேஷன் டி.சிவா

கதைக்களம்…

வழக்கம்போல சும்மா சுற்றி திரியும் ஜிவி. பிரகாஷ், நாயகி ஆனந்தியை பார்க்கிறார். அது காதலாக மாறுகிறது.
ஆனால் ஆனந்தி தந்தை இந்த காதலுக்கு மறுக்க, டிவி சேனல் வரை செல்கிறது.

அங்கு ‘பேசுவதெல்லாம் உண்மை’ மூலம் அம்பலமாகி பிரிகிறது.

அதன் பின்னர் மற்றொரு நாயகியான நிக்கி கல்ராணியுடன் திருமண நிச்சயம்.

அப்போது பார்ட்டி வைக்க, ஆர் ஜே பாலாஜியுடன் பாண்டிச்சேரி செல்கிறார் ஜிவி.

அங்கு போலீஸ் பிரகாஷ்ராஜிடம் மாட்டும் இவர்களது வாழ்க்கை என்ன ஆகிறது என்பதே மீதிக்கதை.

கதாபாத்திரங்கள்…

படத்திற்கு படம் தன்னை மெருகேற்றும் முயற்சியில் இருக்கிறார் ஜிவி. பிரகாஷ். ஒரு நீண்ட டயலாக் பேசி ரசிகர்களின் அப்ளாஸை அதிகம் நேரம் அள்ளுகிறார்.

சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்கு இவர் தரும் கார்ப்பரேசன் விளக்கம் எல்லா மாணவர்களையும் ரசிக்க வைக்கும்.

(ஆனால் தாடியை இன்னமும் வைத்துக் கொண்டிருப்பது ஏனோ?)

ஆனந்தி மற்றும் நிக்கி கல்ராணி என இரண்டு கலர்புல் ஹீரோயின்கள். எனவே தியேட்டரில் இளைஞர் கூட்டத்திற்கு பஞ்சம் இருக்காது.

இவர்களுடன் ஆர்ஜேபாலாஜி, ரோபோ சங்கர், சிங்கம் புலி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் இருப்பதால், தன் காமெடி ட்ராக்கை ஹைவேயில் கொண்டு செல்கிறார் ராஜேஷ்.

போதாக்குறைக்கு எம்எஸ். பாஸ்கர், பிரகாஷ்ராஜ், ஊர்வசி, மனோபாலா ஆகியோரும் நாங்களும் காமெடி பண்னுவோம்ல என அசத்துகிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நடிப்பில் முழுவதுமாக தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பாடல்களில் பாஸ் மார்க் பெறுகிறார் ஜி.வி. பிரகாஷ்.

சக்தி சரவணன் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

ஜனங்க ரசிக்கனும், சிரிக்கனும் என்று அடம்பிடித்து காட்சிகளை வைத்திருக்கிறார் ராஜேஷ்.

ஆடி கார் லேடி – லொக்காலிட்டி பாய்ஸ் பாடல் நிச்சயம் களை கட்டும்.

இறுதியாக வரும் 30 நிமிட காட்சிகள் எதற்கு? என்றே தெரியவில்லை. மொட்டை ராஜேந்திரனுக்கு மார்கெட் இருப்பதால் அவரை வலுக்கட்டாயமாக சேர்த்து இருக்கிறார்.

க்ளைமாக்ஸில் என்ன சொல்வதென்றே தெரியாமல் படத்தை முடிக்கிறார் இயக்குனர்.

ராஜேஷிடம் இருந்து பழைய காமெடி ட்ராக்கை எதிர்பார்க்கிறோம். தருவாரா?

ஒரு காட்சியில் கௌரவ தோற்றத்தில் யாராவது வந்தால்தானே அது ராஜேஷ் படம், அதற்கும் குறை வைக்கவில்லை. ஜீவா வருகிறார். இதனால் கதையில் ஒரு ட்விஸ்ட்டும் இல்லை.

கடவுள் இருக்கான் குமாரு… டைம் பாஸ் பண்ணலாம் குமாரு

More Articles
Follows