கடிகார மனிதர்கள் விமர்சனம்

கடிகார மனிதர்கள் விமர்சனம்

நடிகர்கள்: கிஷோர், லதாராவ், கருணாகரன், செரிலின் பில்லக்கள், பாலாசிங், சிசர் மனோகர் மற்றும் பலர்.
இயக்கம் – வைகறை பாலன்
ஒளிப்பதிவு – சங்கர் நாராயணன்
இசை – சாம் சி.எஸ்
தயாரிப்பு : பிரவீஸ் பிரதீப்ஜோஸ்

கதைக்களம்…

பேக்கரியில் பெறும் கேக், பிஸ்கட்டுகளை ஒவ்வொரு கடையாக சென்று போடும் வேலை செய்துவருகிறார் கிஷோர்.

இவரது மனைவி லதாராவ். இவர்களுக்கு 2 ஆண், 1 பெண் குழந்தை.

சென்னையில் வாடகை வீடு தேடுகிறார்கள். புரோக்கர் சிசர் மனோகர் குறைந்த வாடகையில் இவருக்கு வீடு பார்த்துச் சொல்லும்போது 2 குழந்தைகள் என சொல்லிவிடுகிறார்.

இதனால் வீட்டு ஓனர் பாலாசிங்கிடம் தன் 1 குழந்தையை மறைத்து மறைத்து வாழ்கிறார்.

இதே காம்பவுண்டில் பாலாசிங்கின் மகள் செரிலினை கரெக்ட் செய்ய குடியேறுகிறார் கருணாகரன். அவர்களுக்குள் காதலும் மலர்கிறது.

இதனால் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார் செரிலின்.

இதனிடையில் கிஷோரின் மகனை மறைக்கும் விஷயமும் ஓனருக்கு தெரிய வருகிறது.

அதன் பின்னர் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

ஒரு நடுத்தர குடும்பம், வாடகை வீடு என பல பிரச்சினைகளை அப்படியே பிரதிபலிக்கிறார்கள் கிஷோர் மற்றும் லதா ராவ் தம்பதிகள். உண்மையை சொல்லிவிடலாமா? என இவர்கள் தவிக்கும் காட்சிகள் அருமை.

கருணாகரன் செரிலின் காட்சிகளில் ரொமான்ஸ சுத்தமாக இல்லை. இதில் கருணாகரனுக்கு காமெடியும் இல்லாமல் போய்விட்டது வருத்தம்தான்.

மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவாக லதா ராவ். நடுத்தர பெண்ணாக கணவரின் நிலை உணர்ந்து நடித்திருக்கிறார். வீடு தேலையும் அலையும் காட்சிகளில் கூட அசதியாக காணப்படுவது யதார்த்தம்.

சினிமாவில் சான்ஸ்க்கு அலையும் அந்த மலையாளி நடிகரும் கவர்கிறார். சரக்கு கொடுத்துவிட்டு பின்பே அவரே அதை வாங்கிச் செல்வது செம.

வீட்டு உரிமையாளர் பாலாசிங் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். அவரின் பார்வையே மிரட்டலாக உள்ளது.

புரோக்கராக வரும் சிசர் மனோகர் கச்சிதம். போனில் பேசிக்கொண்டே அவர் செய்யும் காரியங்கள் ரசிக்க வைக்கிறது. இங்க நல்லவங்களா வாழ முடியாது என அவர் கூறுவதும் செய்வதும் ரசிக்கலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

உமா சங்கரின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்-ன் இசையும் ரசிக்கும் ரகமே. ஆனால் ஒரு பாடல் பிட்டு பிட்டாக அடிக்கடி வந்து நம்மை சோதிக்கிறது.

வந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னை என்பார்கள். ஆனால் சென்னையில் வசிக்கும் மக்களுக்கே அதன் கஷ்டங்கள் தெரியும்.

வாடகை வீடு, அதிகபட்ச கரண்ட் யுனிட், இயந்திர வாழ்க்கை என பலவற்றை கூறிக் கொண்டே போகலாம்.

ஹவுஸ் ஓனர் போடும் நிபந்தனைகள் அதற்கு பயந்து வாழும் சென்னை வாசிகள் என அனைத்தையும் மிக யதார்த்தமாக சொல்லியுள்ளார் டைரக்டர்.

சென்னைக்கு வேலைத் தேடி வரும் நபர்களுக்கு இந்த படம் ஒரு பாடம். சில காட்சிகள் சோர்வை தந்தாலும் யதார்த்தம் மீறாமல் படத்தை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம்.

கடிகார மனிதர்கள்… வாடகை வீடு மனிதர்கள்

Kadikara Manithargal Movie Review and rating

Comments are closed.