மீசைய முறுக்கு விமர்சனம்

மீசைய முறுக்கு விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : ஹிப்ஹாப் ஆதி, ஆத்மிகா, விஜயலட்சுமி, கஜராஜ் விக்னேஷ்காந்த், மாகாபா ஆனந்த், மாளவிகா, ஷாரா, குகன், ஆனந்த், முத்து மற்றும் பலர்.
இயக்கம் : ஹிப்ஹாப் ஆதி
பாடல்கள் இசை : ஹிப்ஹாப் ஆதி
ஒளிப்பதிவாளர் : யுகே செந்தில்குமார் மற்றும் கீர்த்திவாசன்
எடிட்டர்: பென்னி ஒலிவர்
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு : சுந்தர் சி. (அவ்னி மூவிஸ்)

கதைக்களம்…
பாரதியார் மேல் உள்ள பற்றால், தன் இரண்டு பிள்ளைகளையும் தமிழ் பற்றுடன் வளர்க்கிறார் விவேக். இவரின் மூத்த மகன் ஆதி. 2வது மகன் ஆனந்த்.

ஜெயித்தாலும் தோத்தாலும் மீசைய முறுக்கு என்ற தாரக மந்திரத்துடன் வளர்கிறார் ஆதி.

இவரின் சூப்பர் ஹீரோ இவரது தந்தை விவேக்தான்.
அப்பாவின் ஆசைக்காக இன்ஜினியரிங் படிக்கும் இவர், படிப்பை முடித்தபின் இசை ஆல்பங்களை தயாரித்து இசை துறையில் சாதிக்க விரும்புகிறார்.

இதனிடையில் ஆத்மிகாவை காதலிக்கிறார். ஆனால் இவரது இசை கனவு தள்ளிக் கொண்டே போக, ஆத்மிகா தன்னை மறந்துவிட சொல்கிறார்.

இசையா? காதலியா? என்ற நிலையில் தவிக்கும் ஆதி என்ன செய்தார்? காதலியை கரம்பிடித்தாரா? தான் காதலித்த இசை பயணத்தில் இமயம் தொட்டாரா? என்பதை இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் சொல்லி அசத்தியிருக்கிறார் ஆதி.

DEe1R70V0AA4Hos

கேரக்டர்கள்…
முதல் படத்தில் நடித்தோம். இருந்தோம் என்றில்லாமல், படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி பாடி இயக்கி சிக்ஸர் அடித்திருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி.

காலேஜ்ஜில் கெத்து காட்டுவதில் தொடங்கி, ரொமான்ஸ், டான்ஸ், பாட்டு என இளைஞர்களை ஈர்க்கிறார் ஆதி.

இவரின் தம்பி ஆனந்த், மற்றும் நண்பர்களாக வரும் கஜராஜ் விக்னேஷ்காந்த், ஷாரா பாலாஜி, குகன் என அனைவரும் கச்சிதமான தேர்வு.

ஒரு சிலரின் நடிப்பில் செயற்கைத்தனம் தெரிவதை தவிர்க்க முடியவில்லை.

யூடிப்பில் பிரபலமானவர்களை சரியாக பயன்படுத்தி அவர்களுக்கும் சினிமாவில் வாய்ப்பு வழங்கிய ஆதியை பாராட்டலாம்.

காமெடி ட்ராக்கை மாற்றி, குணச்சித்திரத்தில் விவேக் விளாசியிருக்கிறார்.

குழந்தையா இருக்கும்போது அப்பா ஹீரோவாக தெரிவாங்க. நீங்க வளர்ந்துட்டா வில்லனா தெரியுறோமோ? என விவேக் கேட்கும்போது மகன்கள் அப்பாவின் பாசத்தை புரிந்துக் கொள்வார்கள்.

அழகான அன்பான அம்மாவாக விஜயலட்சுமி நல்ல தேர்வு.
நாயகி ஆத்மிகா நடிப்பிலும் பாஸ் மார்க் பெறுகிறார். காதலுக்காக எத்தனை வருடங்கள் காத்திருப்பது? நாளைக்கே நான் வர ரெடி.

நீ ஏத்துக்கிறியா? என கேட்கும்போது நிச்சயம் காதலர்களுக்கு இனியாச்சும் பொறுப்பு வரும்.

இவரது தோழி, அக்கா ஆகியோரும் நல்ல தேர்வு.
ஆத்மிகா அக்கா லைப்ரரியில் ஆத்மிகா தேடும் காட்சிகளை ரசிச்சு சிரிக்கலாம்.

 

DDyrdXIUQAAsK3x

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கை மட்டும்தான் ஹிப்ஹாப் ஆதி விட்டு வைத்திருக்கிறார். எனவே அவர்கள் இருவரும் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.

மண்ணில் உன்னை சேராவிட்டால் சொர்க்கத்தில் சேர்வேன். அங்கும் ஜாதி இருந்தால் நரகமே போதும் என்ற பாடல் வரியிலும் ஆதி அசத்தியிருக்கிறார்.

பெரும்பாலான பாடல்களை ஆதியே பாடிவிட்டார். ஆனால் சோகமான காட்சியிலும் ராப் பாடல்களை போட்டுவிட்டார். படத்தில் மெலோடி வைத்திருக்கலாமே ப்ரோ.

ஆதியை முழுவதும் நம்பியிருக்கிறார் தயாரிப்பாளர் சுந்தர் சி. அவரின் நம்பிக்கை வீண்போகவில்லை.

மீசைய முறுக்கு… கெத்து

பண்டிகை விமர்சனம்

பண்டிகை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : கிருஷ்ணா, ஆனந்தி, அர்ஜெய், நிதின்சத்யா, சரவணன், ப்ளாக் பாண்டி, மதுசூதனன், அருள்தாஸ் மற்றும் பலர்.
இயக்கம் : பெரோஸ்
இசை : ஆர்.எச்.விக்ரம்
ஒளிப்பதிவாளர் : அரவிந்த்
எடிட்டர்: பிரபாகர்
பி.ஆர்.ஓ. : சுரேஷ் சந்திரா
தயாரிப்பு : விஜயலெட்சுமி

Pandigai-Movie-Stills-6

கதைக்களம்…

மற்றவரை அடித்து தன் தேவையை பூர்த்தி செய்துக் கொள்பவர் நாயகன் கிருஷ்ணா.

ஒரு கட்டத்தில் இந்த வாழ்க்கையே வேண்டாம் என ஒரு ஹோட்டலில் வேலைப்பார்கிறார்.

இதனிடையில் நாயகி ஆனந்தியை ரூட்டு விடுகிறார்.

மற்றொரு புறம், சூதாட்டத்தில் தன் சொத்தை எல்லாம் தாதா ஒருவரிடம் இழந்த சரவணன் வாழ்கிறார்.

கிருஷ்ணாவின் பலத்தை பார்த்த சரவணன், கிருஷ்ணாவுக்கு உதவுவதுபோல தன் சுயலாபத்திற்காகவும் தாதா நடத்தும் ஒரு சண்டைப் போட்டியில் பங்கேற்க வைக்கிறார்.

கிருஷ்ணாவும் அதில் வெற்றி பெற்று நிறைய பணம் சேர்க்கிறார்.

இதனைத் தொடர்ந்து, தான் இழந்த பணத்தை எல்லாம் கிருஷ்ணாவினால் மீட்டுத் தர முடியும் என நினைக்கும் சரவணன், ஒரு சூப்பர் ப்ளான் போடுகிறார்.

அந்த ஐடியா ஒர்க் அவுட் ஆனதா? நினைத்தப்படி பணம் கிடைத்ததா? என்பதை ஆக்‌ஷன் கலந்து ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார் அறிமுக டைரக்டர் பெரோஸ்.

pandigai stills

கேரக்டர்கள்…

மற்ற படங்களை காட்டிலும் இதில் நிறையவே மெனக்கெட்டு இருக்கிறார் கிருஷ்ணா. ஸ்ட்ரீட் பைட் முதல் ரொமான்ஸ் வரை தேறியிருக்கிறார்.

பருத்தி வீரன் சரவணனுக்கு இதில் வெயிட்டான கேரக்டர். படத்தின் கதையே அவரை சுற்றித்தான் நகர்கிறது.
அவரும் அதை உணர்ந்து பண்பட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.

பெரும்பாலும் ஆனந்திக்கு அமைதியான கேரக்டரே செட்டாகும். அதில் தன் பங்கை சிறப்பாக செய்திருந்தாலும், ஓவர் ஆக பேசுவது கொஞ்சம் ஓவர்தான்.

சூதாட்டம், வஞ்சகம் என அந்த கேரக்டராகவே தெரிகிறார் மதுசூதனன்.

நல்ல உடல்வாகுடன் வரும் அர்ஜெய் இதிலும் தனித்து தெரிகிறார்.

நிதின்சத்யா, அருள்தாஸ், ப்ளாக் பாண்டி, சண்முகராஜன் ஆகியோர் தங்கள் அனுபவ நடிப்பால் ரசிக்க வைக்கிறார்கள்.

pandigai press meet

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஆர்.எச்.விக்ரமின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்கிறது.

அர்வியின் ஒளிப்பதிவில் ஸ்ட்ரீட் பைட் காட்சிகள் கண்களுக்கு விருந்து.

அறிமுக இயக்குனர் என்றாலும் நன்றாக ஸ்கோர் செய்துள்ளார் பெரோஸ். ஆனால் படத்தில் நிறைய ஆக்ஷன் இருப்பதால் பெண்களை கவருமா? என்பதை கவனித்திருக்கலாம்.

பண்டிகை… ஹாப்பியா கொண்டாடுங்க

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரை விமர்சனம்

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : அதர்வா, சூரி, ரெஜினா கசண்ட்ரா, பிரணிதா, அதிதி போகன்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர்.
இயக்கம் : ஓடம் இளவரசு
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : ஸ்ரீசரவணன்
எடிட்டர்: பிரவீண் கே.எல்.
பி.ஆர்.ஓ. : ஜான்சன்
தயாரிப்பு : டி சிவா அம்மா கிரியேசன்ஸ்

கதைக்களம்…

சேரன் நடித்து இயக்கிய படம் ஆட்டோகிராப் … ஓர் உணர்வுப்பூர்வமான கதை.
அதிலும் பல காதல் கதைகள் இருக்கும்.

அதையே இன்றைய டிரெண்டுக்கு ஏற்ப, கலர்புல்லாக ஜாலியாக பார்த்தால் அதுதான் இந்தப்படம்.
காதல் மன்னன் ஜெமினிகணேசனின் ரசிகரான அதர்வாவின் அப்பா, தன் மகனுக்கும் ஜெமினிகணேசன் என்று பெயர் வைக்கிறார்.

அவரும் பெயருக்கேற்ற போல காதல் மன்னனாகிறார்.

காதல் என்றால் பிக்அப். கல்யாணம் என்றால் எஸ்கேப் என்ற ரசனையில் வாழ்கிறார்.

பல பெண்கள் இவரின் வாழ்க்கையில் இணைகிறார்கள்.

எத்தனை பெண்களை காதலித்தாலும், திருமணம் என்று வந்தால் எல்லாரையும் மணக்க முடியாதே? இறுதியில் இந்த காதல் மன்னன் என்ன செய்தார்? என்பதே இப்படம்

கேரக்டர்கள்…

பெண்கள் விரும்பும் உயரம், உடல் எடை என அசத்தலாக வருகிறார் அதர்வா.

பெண்களை தன் வலையில் விழவைத்து, விளையாடி செல்வதிலும் பாட்டு, பைட்டு, டூயட் என்பதிலும் கலக்கியிருக்கிறார் அதர்வா.

நச்சுன்னு நாலு ஹீரோயின் என்பது போல ரெஜினா கசண்ட்ரா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரணிதா, அதிதி போகன்கர் என அனைவரும் கலக்கல்.

ஒவ்வொருவரும் அவரவர் ஸ்டைலில் தன் திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆட்டோகிராப் ஸ்டைலில் தன் முன்னாள் காதலிகளுக்கு மேரேஜ் இன்விடேசன் கொடுக்க செல்கிறார் அதர்வா.

அவரோடு சூரி இணைந்து அடிக்கும் லூட்டி நிச்சயம் ரசிக்க வைக்கும்.

‘மொட்டை’ ராஜேந்திரனும் அவ்வப்போது வந்து கலகலப்பூட்டு செல்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் ‘அம்முக்குட்டியே’ மற்றும் ‘வெண்ணிலா தங்கச்சி’ ஆகிய பாடல்கள் ரசிக்க வைக்கிறது.

பாடல் காட்சியின் போது, ஆர்ட் டைரக்டரின் கைவண்ணம் கவனிக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளரும் எடிட்டரும் அவர்களின் பணிகளில் குறை வைக்கவில்லை.

இயக்குனர் ஓடம் இளவரசு இளைஞர்களை குறிவைத்து படத்தை இயக்கியுள்ளார்.

சில ட்விஸ்ட்கள் கொடுத்து கதையில் புதுமைகள் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாய் வந்திருப்பார்கள் இந்த இருவரும்.

ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்… ரசிக்கவும் சிரிக்கவும்

ரூபாய் திரை விமர்சனம்

ரூபாய் திரை விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் : சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த், ஹரீஷ் உத்தமன் மற்றும் பலர்.
இயக்கம் : அன்பழகன்
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : இளையராஜா
எடிட்டர்: நிர்மல்
பி.ஆர்.ஓ. : மௌனம் ரவி
தயாரிப்பு : பிரபு சாலமன்

கதைக்களம்…
லோடு வேன் ஓட்டும் சந்திரன் மற்றும் நண்பர் கிஷோர் ரவிச்சந்திரன் இருவரும் சென்னைக்கு செல்கிறார் லோடு ஏத்தி செல்கிறார்கள்.
வரும்வழியில் ரிட்டர்ன் ட்ரிப்புக்காக வீட்டை காலி செய்யும் சின்னி ஜெய்ந்த்தையும் ஆனந்தியும் ஏற்றி கொண்டு வருகிறார்கள்.
வீடு கிடைக்காமல் தவிக்கும் சின்னி ஜெய்ந்தால் இவர்கள் இடையே பிரச்சினை எழுகிறது.
இந்நிலையில் இவர்களுக்கும் போலீசுக்கும் தெரியாமல் இவர்களின் வண்டியில் தான் கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணத்தை போட்டு பிறகு எடுத்துக் கொள்ளும் முடிவில் இவர்களை பின் தொடர்கிறார் ஹரிஷ் உத்தமன்.

அப்போது சின்னி ஜெயந்துக்கு மாரடைப்பு வர, வண்டியில் பணம் இருப்பது தெரிய வர, அந்த பணத்தை சிகிச்சைக்காக செலவு செய்துவிடுகின்றனர்.
இதன்பின்னர் ஹரிஷ் உத்தமன் அந்த பணத்தை திருப்பிக் கேட்க, இவர்கள் என்ன செய்தார்கள்? அந்த ரூபாய்யால் வரும் பிரச்சினைகள் என்ன? என்பதே மீதிக்கதை.

DDOXT5GUQAAOyxW

கேரக்டர்கள்…
சந்திரன் ஆனந்தி இருவரும் மிகையில்லாத யதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். கயல் பட காதல் ஜோடி இதிலும் ரசிகர்களை ஈர்க்கிறது.
காமெடியால் இதுவரை கலக்கிய சின்னி ஜெயந்த் இதில் மாறுபட்ட குணச்சித்திர நடிப்பை கொடுத்து கவர்கிறார்.
ஹரிஷ் உத்தமன் மிரட்டல் நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இமானின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

DDOXVI9UwAAVh8S
இளையராஜாவின் ஒளிப்பதிவில் மூணாறின் அழகு நம்மை ஈர்க்கிறது.
யதார்த்தமான கதையை கொண்டு சென்று கடைசியில் கமர்ஷியலாக முடித்திருப்பது கொஞ்சம் நெருடலை தருகிறது.
ரூபாய் படுத்தும் பாட்டை குடும்பத்துடன் காண தந்திருக்கிறார் இயக்குனர் அன்பழகன்.
ரூபாய்… நிச்சயம் செலவழிக்கலாம்

இவன் யாரென்று தெரிகிறதா? விமர்சனம்

இவன் யாரென்று தெரிகிறதா? விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர்கள் விஷ்ணு, வர்ஷா, ஜெயப்பிரகாஷ், அருள்தாஸ், ராம்ஸ், பக்ஸ் மற்றும் பலர்.
இயக்குனர் சுரேஷ் குமார் எஸ் டி
இசை ரகுநந்தன் என் ஆர்
ஓளிப்பதிவு பி & ஜி

IYT 4

கதைக்களம்…

ஹீரோ விஷ்ணுவுக்கு மட்டும் காதல் செட்டாமல் இருக்கிறது. இதனால் காதலிக்கும் அவரது நண்பர்கள் இவரை அடிக்கடி கலாய்க்கின்றனர்.

இதனால் சேலன்ஞ்ச் செய்து ஒரு சூப்பர் பிகரை காதலிக்க புறப்படுகிறார்.

அப்போதுதான் நாயகி வர்ஷாவை சந்திக்கிறார். அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில் இவரது முன்னாள் தோழியும் இவரது வாழ்க்கையில் குறிக்கிடுக்கிறார்.

இவர் செய்த சேலன்சில் வெற்றிப் பெற்றாரா? என்பதே ‘இவன் யாரென்று தெரிகிறதா’ படத்தின் கதை.

IYT 2

கேரக்டர்கள்…

விஷ்ணு மற்றும் வர்ஷா இருவரும் யதார்த்த காதலர்களாக வருகிறார்கள். இன்றைய காதலர்களை அடிக்கடி நினைவுப்படுத்துகின்றனர்.

போலீஸ் உடையிலும் வர்ஷா சற்று கவர்ச்சியாகவே தெரிகிறார்.

இஷாரா இதில் 2வது நாயகியாக வருகிறார். தனக்கான வேலையை கரெக்ட்டாக செய்திருக்கிறார்.

வழக்கமான காதல் கதையாக தொடங்கும் இப்படம் திடீரென இரண்டாம் பாதியில் காமெடி களமாக மாறி ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கிறது.

IYT 1

மும்பை பாய்ஸ்களாக வரும் அருள்தாஸ், பக்ஸ், ராம்ஸ் கூட்டணியின் காமெடி சரவெடிதான்.

மிரட்டல் வில்லன்களாகவே இதுவரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இதில் முற்றிலும் செம காமெடி.

எதுன்னாலும் ஆர்டர் பண்ணி சாப்பிடுன்னு சொன்னா ஸ்ரீலங்காவில் இருந்து மீன் ஆர்டர் பண்ணி சாப்பிட்டுறான் பாஸ்.

குளிரா இருக்குதுன்னு நெருப்பு கோழியை ஆர்டர் பண்ணி சாப்பிடுறான் பாஸ் என்று சொல்லும் காட்சிகளில் நிச்சயம் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.

அதிலும் ஜெயப்பிரகாஷ்க்கு போன் போட்டு, இவர்கள் மொக்கை மேல் மொக்கை வாங்கும் காட்சிகள் அக்மார்க் காமெடி.

aana porandhavan iyt

அதுபோல் இவர்களின் பாடலும் நல்ல குத்து ரகம். அதிலும் ராம்ஸ் சேவிங் செய்துவிட்ட பின் யாரென்றே தெரியவில்லை.

அப்பா கேரக்டரில் வரும் ஜெயப்பிரகாஷ், ஹீரோ நண்பர்கள் அர்ஜுன், ராஜ்குமார் ஆகியோர் நல்ல தேர்வு.

யுகபாரதி வரிகளில் என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் கேட்கலாம்.

முதல்பாதியை நாடகத்தனம் இல்லாமல் கொண்டு சென்றிருந்தால் இவன் நிச்சயம் அதிகம் ரசிக்கப்பட்டு இருப்பான்.

‘இவன் யாரென்று தெரிகிறதா’ இவனை தெரிந்துக் கொள்ள ஒருமுறை பார்க்கலாம்

அதாகப்பட்டது மகாஜனங்களே விமர்சனம்

அதாகப்பட்டது மகாஜனங்களே விமர்சனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்


நடிகர்கள் :
உமாபதி, ரேஷ்மா ரத்தோர், கருணாகரன், பாண்டியராஜன், மனோபாலா, ஆடுகளம் நரேன், யோக்ஜேப்பி, தம்பிராமையா மற்றும் பலர்.
இயக்கம் : ஆர். இன்பசேகர்
இசை : இமான்
ஒளிப்பதிவாளர் : பிகே வர்மா
எடிட்டர்: ஜி. மதன்
பி.ஆர்.ஓ. : பிடி செல்வகுமார் (ராஜ்குமார்)
தயாரிப்பு : சிவரமேஷ் குமார் (சில்வர் ஸ்கீரின்)

கதைக்களம்…

நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி அறிமுகமாகியுள்ள படம் இது.

உமாபதி ஒரு கிதாரிஸ்ட். எப்போதுமே அதனுடன் எங்கும் திரிபவர். அந்த கிதாரிலேயே அவரின் போட்டோ, போன் நம்பர், அட்ரஸ் எல்லாவற்றையும் குறிப்பிட்டு இருப்பார்.

ஒரு முறை இவருடைய செக்யூரிட்டி நண்பருக்கு உதவ செல்கிறார். அன்றைய தினத்தில் அந்த வீட்டில் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து விடுகின்றனர்.

அப்போது தவறுதலாக அந்த கிதாரை அங்கு மிஸ் செய்துவிடுகிறார்.

இதனால் போலீஸ்க்கு தடயம் கிடைத்துவிடும் என்பதால் அந்த வீட்டிற்குள் டிடெக்கிவ் ஏஜெண்டாக செல்கிறார்.

அதன்பின்னர் அங்கு நடக்கும் சுவராஸ்யங்களே இப்படத்தின் கதை.

கேரக்டர்கள்…

நடிப்பை விட நடனத்தில் அதிகம் ஸ்கோர் செய்கிறார் உமாபதி. இவரது குரலில் கம்பீரம் இல்லாததால் ஹீரோ கொஞ்சம் தடுமாறுகிறார்.

ரேஷ்மா ரத்தோர் கண்களை உருட்டி அழகாக வருகிறார். ஆக்ஷன் மற்றும் பாடல்களில் கவர்கிறார்.

கருணாகரன் தன்னை பலசாலியாக காட்டிக் கொள்ளுவது கொஞ்சம் புதுசு.

நிறைய அடி வாங்கிய பின் குடும்ப சென்டிமெண்டை கூறி அடியாட்களை கருணாகரன் கவர்வது ரசிக்க வைக்கிறது.

எதற்காக திருடர்கள் வந்தார்கள் என்பது தெரியாமல் ஆடுகளம் நரேன் தவிப்பது அருமை.

எவரும் எதிர்பாராத வகையில் மனோபாலா வில்லனாக மாறுவது செம காமெடி ட்விஸ்ட்.

யோக் ஜேப்பி மற்றும் பாண்டியராஜன் கேரக்டர்களை நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையில் அனைத்து பாடல்களும் அருமை. ஒரு குத்து பாடல் மற்றும் இதமான மெலோடிகள் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

ஏனடீ, நீ என்னை இப்படி ஆக்கின..? அந்த புள்ள மனசுக்குள்ள, இதற்குத்தானே ஆகிய பாடல்கள் இதமான ராகம்.

யுகபாரதியின் வரிகளும், ஸ்ரேயா கோஷல் தேன் குரலும் இமானின் எவர் கிரீன் மேஜிக் என்றே சொல்லலாம்.

ஆனால் டூயட் பாடல்கள் அனைத்தையும் ஒரே போலவே படமாக்கிவிட்டார். கொஞ்சம் வைரைட்டி காட்டியிருக்கலாமே.

வர்மாவின் ஒளிப்பதிவும் மதனின் படத்தொகுப்பு ரசிக்க வைக்கிறது.

படத்தின் கதையில் பெரிதாக புதுமையில்லை என்றாலும் கலகலப்பாக படத்தை எடுத்து செல்கிறார் இயக்குனர்.

க்ளைமாக்ஸில் அதாகப்பட்டது மகாஜனங்களே… ஒரு பொருளை தொலைத்துவிட்டு எப்படி எங்கோ தேடுகிறோம்? என விளக்கம் அளித்து, டைட்டிலை சொல்லிவிட்டார்.

தம்பிராமையாவை அருமையாக பயன்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்திருக்கலாம்.

ஆனால் அவரது மகன் படம் என்பதால் ஒரே ஒரு காட்சியில் மட்டும் காட்டிவிட்டு மோசம் செய்துவிட்டார்.

அதாகப்பட்டது மகாஜனங்களே… ஒருமுறை பார்க்கலாம்.

More Articles
Follows