முத்தின கத்திரிக்கா விமர்சனம்

முத்தின கத்திரிக்கா விமர்சனம்

நடிகர்கள் : சுந்தர் சி, பூனம் பாஜ்வா, கிரண், சதீஷ், சிங்கம் புலி, விடிவி கணேஷ், ரவிமரியா, யோகி பாபு, சுமித்ரா, வைபவ் மற்றும் பலர்.
இசை : சித்தார்த் விபின்
ஒளிப்பதிவு : பானு முருகன்
படத்தொகுப்பு : என் பி ஸ்ரீகாந்த்
இயக்கம் : வேங்கட் ராகவன்
பிஆர்ஓ : ஜான்சன்
தயாரிப்பாளர் : அவ்னி மூவிஸ் சுந்தர் சி

கதைக்களம்…

40 வயது ஆகியும் மனதுக்கு பிடித்த பெண் அமையும் வரை காத்திருக்கும் பிரம்மசாரி சுந்தர் சி. அரசியலில் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற ஆர்வம் உள்ள மனிதர் இவர்.

இவரின் காதலி பூனம் பாஜ்வா. சுந்தர் சியின் தொண்டர் மற்றும் நண்பராக சதீஷ்.

சுந்தர் சியின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் அண்ணன் தம்பிகளான விடிவி கணேஷ் மற்றும் சிங்கம் புலி.

 

Muthina Kathirika 1

 

இதனிடையில் ரவிமரியாவின் மகளான பூனம் பாஜ்வாவை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து கொடுக்கவும் திட்டம் தீட்டுகின்றனர்.

இந்த சதி திட்டங்களை மீறி, அரசியலிலும் காதலிலும் வென்றாரா நம்ம ஹீரோ என்பதே இந்த முத்தின கத்திரிக்கா.

கதாபாத்திரங்கள்..

இயக்குனராக இருந்த போதும் தற்போது நடிகராக இருந்தாலும் காமெடியில் கொடியை நாட்டியிருக்கிறார் சுந்தர் சி.

தன் நண்பருக்கே தெரியாமல் சதி திட்டம் தீட்டுவதில் கில்லாடி இவர். கூடவே அம்மா சென்டிமெண்ட், ஓவர் ஏஜ் லவ்ஸ் என அனைத்திலும் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

 

Muthina Kathirika 2

 

பூனம் பாஜ்வா… நாயகன் கத்திரிக்கா என்றால் இவர் கவர்ச்சிக்கா. புடவையிலும் வந்து ரசிகர்களை கிறங்கடிக்கிறார். பாடல் காட்சியில் நனைந்து நம்மை சூடேற்றி செல்கிறார்.

இவருடன் ஜெமினி புகழ் கிரனும் மாப்பிள்ளை மீது ஜொள்ளு விட்டு ரசிக்க வைக்கிறார்.

கிராமத்து வேடம் என்றாலும் அதிலும் தன்னால் நிரூபிக்க முடியும் என புகுந்து விளையாடியிருக்கிறார் சதீஷ். படத்தை தன் காமெடியால் கலகலப்பாக்கி இருக்கிறார்.

விடிவி கணேஷின் டைமிங் சென்ஸ் செம. இவரது வாய்ஸே இவரது பலம். என்னைய பாத்து அஜித் சொன்ன முதல் ஆளு நீதான் என்று சொல்லும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை.

 

Muthina Kathirika 3

 

சிங்கம்புலியும் படம் முழுக்க வந்து ரசிகர்களை கலகலப்பாக்கியிருக்கிறார். யோகிபாபு இரண்டே காட்சிகளில் வந்தாலும் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறார்.

ரவிமரியா இதில் காமெடிக்கு குறைவைத்து, போலீசாக வருகிறார். வைபவ் கெஸ்ட் ரோலில் வந்து போகிறார்.

இவர்களுடன் சுமித்ரா மற்றும் சுந்தர் சியின் தம்பி, தங்கை, அண்ணி ஆகியோர் சிறப்பான தேர்வு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

சித்தார்த் விபினின் இரண்டு பாடல்கள் கேட்கும் ரகம். பானு முருகனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. முக்கியமாக நாயகியின் அசைவுகள்.

படத்தின் ப்ளஸ்…

சதீஷ் + விடிவி கணேஷின் டைமிங் சென்ஸ் காமெடி படத்தின் கேரக்டர்களுக்கு இன்ட்ரோ வாய்ஸ் சூப்பர் கவர்ச்சியான நாயகி கதாபாத்திரங்கள்..

 

Muthuna Kathirika 4

 

சிந்திக்கக்கூடிய எலெக்ஷன் பாட்டு

படத்தின் மைனஸ்…

இரண்டாம் பகுதியில் தேர்தலை காமெடியாக்கி சொன்னவிதம்.

யோகிபாபு காட்சியை அதிகப்படுத்தி இருக்கலாம்.

 

Muthina Kathirika 5

 

இயக்குனர் வேங்கட் ராகவன், தான் சுந்தர் சியின் சிஷ்யர் என்பதை ஆணித்தரமாக காட்சிகளில் சொல்லியிருக்கிறார்.

மலையாள படம் ரீமேக் என்பதே தெரியாத அளவிற்கு தமிழ் நாட்டுக்கு ஏற்ப சுவையாக இந்த கத்திரிக்காயை கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில் முத்தின கத்திரிக்கா… சுவையில் குறையில்லை.

Comments are closed.

Related News

பிரபல ஒளிப்பதிவாளரான பாபா பாஸ்கர் தற்போது…
...Read More
இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுந்தர்…
...Read More