தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள்: ஈவி கணேஷ் பாபு, சிருஷ்டி டாங்கே, இந்திர செளந்தர் ராஜன், கீதா கைலாசம் மற்றும் பலர்.
பல்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் & மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து ‘கட்டில்’ படத்தை தயாரித்துள்ளது.
நாம் உழைத்து களைத்து வீட்டிற்கு சென்றால் அட கட்டிலில் படுத்து தூங்க மாட்டோமோ என நினைப்பதுண்டு. இது கட்டில் என்று சாதாரணமாக கருதினாலும் ஒவ்வொரு தலைமுறையும் உருவாக இந்த கட்டில் எவ்வளவு உழைத்திருக்கிறது என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்லும் விதமாக இந்த படத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிறார் நாயகனும் இயக்குனருமான கணேஷ் பாபு.
ஸ்டோரி லைன்…
நாயகன் கணேஷ் பாபு. இவர் அம்மா கீதா கைலாசம் மனைவி சிருஷ்டி டாங்கே மற்றும் 6 வயது மகன்.. அடுத்த குழந்தைக்காக நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் சிருஷ்டி.
ஒரு கட்டத்தில் கணேஷ் பாபுவின் உடன் பிறந்தவர்கள் வெவ்வேறு இடங்களில் செட்டில் ஆகிவிடுகின்றனர். எனவே தங்களின் பரம்பரை வீட்டை விற்க சொல்கின்றனர்.
வீட்டை விற்க மனம் இல்லாத கணேஷ் பாபு வீட்டில் உள்ள தனக்கு பிடித்தமான கட்டிலையும் விற்க மறுக்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டை விற்க அனைவரும் சம்மதிக்கின்றனர்.
அப்போது அந்த பெரிய கட்டிலை வைக்க இடமில்லாமல் தவிக்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்ஸ்..
தாத்தா, தந்தை, மகன் என 3 தலைமுறை கேரக்டரில் நடித்து இருக்கிறார் கணேஷ்பாபு. வயதுக்கு ஏற்ப உடல்மொழி பாவனை என அனைத்தையும் முடிந்தவரை அழகாகவே செய்திருக்கிறார் நாயகன் கணேஷ் பாபு.
இவரே இயக்குனர் என்பதால் இரண்டு பொறுப்புகளை உணர்ந்து கட்டிலை வடிவமைத்திருக்கிறார் கணேஷ் பாபு.
சிருஷ்டி டாங்கே, கர்ப்பிணி பெண்ணாகவே உணர்ந்து பிரசவ வேதனை போல நமக்கும் வலியை ஏற்படுத்துகிறார்
தாயாக கீதா கைலாசம். யதார்த்த நடிப்பில் கவர்கிறார். அதுபோல பத்திரிக்கையாளர் செந்தில் அவர்களும் தன் கேரக்டரில் கனக்கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.
சின்ன கேரக்டரில் விதார்த் சிறப்பு..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ஒளிப்பதிவு: ஒய்டு ஆங்கிள் ரவி சங்கரன்
இசை: ஸ்ரீகாந்த் தேவா
இயக்கம் : ஈவி கணேஷ் பாபு.
கட்டில் என்பதால் உறக்கம்.. உறக்கம் என்றால் இசை.. இசை என்றால் தாலாட்டு என்பதற்கு ஏற்ப ஸ்ரீகாந்த் தேவா தன் இசையை தாலாட்டாக கொடுத்திருக்கிறார்.
ஒய்டு ஆங்கிள் ரவி சங்கரனின் ஒளிப்பதிவும் பி. லெனின் படத்தொகுப்பு ரசிக்கும் படி அமைந்துள்ளது. காலத்துக்கு ஏற்ப காட்சிகளை திறமையாக கையாண்டுள்ளனர்.
கட்டில் என்றால் உறக்கம் மட்டும் அல்ல.. அது உறவுகளுக்கு இணையானது.. அதுவும் ஒரு குடும்ப உறவுகள் உருவாக தலைமுறைகள் உருவாக கட்டில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.. அதை உணர்வுடன் கட்டில் மூலம் கதை சொல்லி இருக்கிறார் கணேஷ் பாபு.
kattil movie review and rating in tamil