தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா காலத்தில் பல ஆயிரம் உயிர்களை காப்பாற்றிய சித்த மருத்துவர் வீரபாபு தான் இந்தப் படத்தை இயக்கிய நாயகனாக நடித்திருக்கிறார்.
இவரைப் பற்றி பல திரை பிரபலங்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். மேலும் சாமானிய மக்களும் பலரும் இவரால் குணமடைந்து இன்று நன்றாக வாழ்கிறார்கள்.. எனவே அவரை வாழ்த்தி இந்த பட விமர்சனத்தை தொடர்வோம்…
Cast : Siddha Dr.K.Veerababu, Mahana, Super Subbarayan, Mayilsamy, Kadhal Sukumar, Sams, Ambani Sankar, Venkal Rao
Music : Sirpi
Producer : Vayal movies
Director : Dr.K.Veerababu
ஸ்டோரி..
நாயகன் டாக்டர் வீரபாபு மூலிகை மருத்துவம் செய்து தன் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.. மேலும் சமூக சேவை செய்து மக்களையும் கவனித்து வருகிறார்.
நாயகி மஹானாவுடன் இவருக்கு திருமணம் நிச்சயம் ஆகிறது.. எனவே திருமணத்திற்கு துணிமணிகளை எடுக்க சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
அங்கே உறவினர் குழந்தை ஒன்று காணாமல் போகிறது. அதற்கான தேர்தல் வேட்டையில் வீரபாபு களமிறங்கும் போது தான் அதன் பின்னணியில் பெரிய நெட்வொர்க் செயல்படுகிறது என்பதை அறிகிறார்.
இதனையடுத்து தானே களம் இறங்கி குழந்தைகளை மீட்கும் போராட்டத்தில் ஈடுபடுகிறார். அதன் பிறகு என்ன நடந்தது?
கடத்தப்பட்ட குழந்தைகளை காப்பாற்றினாரா டாக்டர்? திருமணம் நடைபெற்றதா? அதுவே ‘முடக்கறுத்தான்’ பட கதை.
கேரக்டர்ஸ்…
கொரோனா காலத்தில் பலருக்கும் சிகிச்சை அளித்து நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக ஜொலித்தவர் இந்த வீரபாபு.. ரஜினியின் உழைப்பை வியந்து பார்த்த இவர் தற்போது நாயகனாக களம் இறங்கி இருக்கிறார்.
முதல் படத்திலேயே நாயகன்… முதல் படத்திலேயே இயக்குனர் என்ற தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.. ஆனால் மருத்துவம் கை கொடுத்த அளவிற்கு இவருக்கு நடிப்பு கை கொடுக்கவில்லை.. இனி வரும் படங்களில் அதை நாம் எதிர்பார்ப்போம்..
நாயகி மஹானா.. அழகும் திறமையும் நிறைந்த நடிகை.. இன்னும் இவருக்கான காட்சிகளை கொடுத்து இருக்கலாம்.. ஆனால் வந்த சில நிமிடங்களில் நம் மனதை விட்டு நீங்க மறுக்கிறார் மஹானா.
வில்லனாக சூப்பர் சுப்பராயன்.. ஆக்ஷனில் அசத்தியிருக்கிறார். மயில்சாமி காட்சிகளில் நிச்சயம் சிரிக்கலாம்.. சமுத்திரக்கனி முக்கியமான கேரக்டரில் வந்து தன் கேரக்டர் சபாஷ் போடும் அளவிற்கு செய்திருக்கிறார்.
இவர்களுடன் சாம்ஸ், காதல் சுகுமார், அம்பானி சங்கர், வெங்கல் ராவ் ஆகியோரும் ஆகியோரம் உண்டு.. தங்கள் கேரக்டரை நிறைவாக செய்துள்ளனர்
டெச்னீசியன்ஸ் …
அருள் செல்வனின் ஒளிப்பதிவு படத்தை கண்களுக்கு குளிர்ச்சியாக காட்டி இருக்கிறது. சிற்பியின் இசையில் பழநி பாரதியின் வரிகளில் பாடல்கள் ரசிக்கப்படியாக உள்ளது.
நாயகனாக நடித்த டாக்டர் கே.வீரபாபு தான் இயக்கியிருக்கிறார். பல ஆண்டுகள் படித்து தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று தான் டாக்டராக முடியும்.. அதுபோல ஒரு நடிகராக வேண்டும் ஒரு இயக்குனராக வேண்டும் என்றால் அதற்கான முறையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் இதை பலரும் செய்வதில்லை.. இந்த தவறை தான் இந்த டாக்டரும் செய்திருக்கிறார் முறையான பயிற்சி பெற்று இந்த படத்தை இயக்கி நடித்து இருந்தால் இந்த முடக்கறுத்தான் நிச்சயம் ரசிகர்களை தன்னுள் முடக்கி வைத்திருப்பான்..
Mudakkaruthaan movie review and rating in tamil