தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒன்லைன்…
சமூக விரோதிகளை வேட்டையாடும் ஒரு ஜவானின் கதை.
கதைக்களம்…
சிறை கைதிகளான 6 பெண்களுடன் சமூக விரோதி விஜய் சேதுபதியை எதிர்த்து போராடும் நபராக ஷாருக்கான். மத்திய அமைச்சர்களை கடத்தி வைத்துக் கொண்டு நாட்டிற்கு நல்லது செய்கிறார் ஷாருக்கான்.
இதனால் மக்கள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெறுகிறது. ஆனால் அதேசமயம் அவரை காவல்துறை ஒரு பக்கம் தேட விஜய்சேதுபதி கும்பல் மற்றொரு பக்கம் தேட ஷாருக்கான் போடும் சதித்திட்டமே சவால் நிறைந்த சீன்கள்.
ஷாருக்கானின் நோக்கம் என்ன? சிறை கைதிகளை வைத்துக்கொண்டு அவர் போராடுவதன் நோக்கம் என்ன? ஷாருக்கானின் பின்னணி என்ன? விஜய் சேதுபதி யார்? அவருக்கும் ஷாருக்கானுக்கும் மோதல் பின்னணி என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த ஜவான்.
கேரக்டர்கள்…
தந்தை – மகன் என இரு வேடங்களில் அசத்தியிருக்கிறார் ஷாருக்கான். இரண்டுக்கும் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
இதுவரை ஷாருக்கானை இப்படி பார்க்காத ரசிகர்களுக்கு இந்த கேரக்டர்கள் பரவசத்தை உண்டாக்கும்.
டூயட் பாடும் நாயகியாக இல்லாமல் ஆக்ஷனிலும் அதகளம் செய்து இருக்கிறார் நயன்தாரா.
யோகி பாபு சில காட்சிகளில் வந்து சிரிக்க வைக்க முயல்கிறார். ஆனால் மந்திரியிடம் வேலை பார்க்கும் யோகி பாபு மந்திரியை மரியாதை இல்லாமல் பேசுவது எல்லாம் ரொம்ப ஓவர்.
எந்த கேரக்டரையும் அசால்ட்டாக செய்பவர் விஜய் சேதுபதி இதில் வில்லத்தனத்தையும் வித்தியாசமாக செய்துள்ளார்.
பிரியாமணி உள்ளிட்ட ஐந்து நாயகிகள் ஆக்ஷனில் அதிரடி காட்டியுள்ளனர்.
விவசாயத்துறை அமைச்சராக நடித்திருப்பவருக்கு விடிவி கணேஷ் குரல் கொடுத்திருக்கிறார். அந்த குரலும் நம்மை கலகலப்புக்கு உண்டாக்கிறது.
பிளாஷ்பேக் சீன்களில் தீபிகா படுகோனே வருகிறார். அவரது காட்சிகள் எமோஷனலாக கொடுக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் தத் சில நிமிடங்களை வந்தாலும் அவரது கேரக்டர் ரசிக்கும்படியாக உள்ளது.
டெக்னீசியன்கள்…
அனிருத்தின் இசையில்.. “வந்த இடம் என் காடு… & ராமையா வஸ்தாவைய்யா ஆகிய பாடல்கள் ஆட்டமும் தாளமும் போட வைக்கின்றன .பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார் அனிருத்.
பொதுவாகவே ஷங்கர் படங்களில் மிகப் பிரம்மாண்டம் இருக்கும்.. ஆனால் அதில் யதார்த்த வாழ்வியல் இருக்கும்.. அவரின் உதவியாளர் அட்லி இயக்கத்தில் பிரம்மாண்டங்கள் மிகைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது.
காட்சிகள் ஜெட் வேகத்தில் மாறிக் கொண்டே இருப்பதால் எந்த காட்சியிலும் பெரிதாக ஒன்ற முடியவில்லை. ஆனால் ஒரு தமிழ் இயக்குனரால் ஹிந்தி ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான விருந்து கிடைத்துள்ளது எனலாம்.
ஜவான் படத்தின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது. கலை இயக்குனரின் பணிகளும் நம்மை வியக்க வைக்கிறது.
படத்தின் பிரம்மாண்ட செட்களுக்காகவே இன்னொரு முறை பார்க்கலாம். தமிழில் நாம் பார்த்த இந்தியன், கத்தி உள்ளிட்ட பல படங்களின் கலவையாக இது தோன்றலாம்.
காரணம் கதைக்களம் அப்படி..
விவசாயிகள் கடனை ஒரு சில நிமிடங்களில் அடைப்பது.. நாட்டின் ஒட்டு மொத்த மருத்துவ தேவைகளை ஐந்து மணி நேரத்தில் சரி செய்வது என்பதெல்லாம் ஓவர் கற்பனை.. ஆனால் இப்படி எல்லாம் நடந்தால் நன்றாக இருக்கும் என்பதை காட்டி இருக்கிறார் இயக்குனர் அட்லி.
ஜெயில் என்பது அரசு அரசின் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இதில் ஒரு தனி நபரின் கட்டுப்பாட்டில் உள்ளது போலவே காட்டப்பட்டுள்ளது. கைதிகளை பார்த்தால் மாடலிங் பெண்கள் போலவே உள்ளனர். உள்ளே ஒரு டீ ஷர்ட் அணிந்து கொண்டு வெளியே பட்டன் போடாமல் சட்டை போட்டிருப்பது கைதிகளுக்கான உடையா? என்பது தெரியவில்லை. ஒருவேளை வட இந்தியாவில் அப்படி கைதிகள் இருக்கிறார்களா?
அதுபோல 6000 பெண் கைதிகள் இருக்கும் சிறைச்சாலையில் எல்லாரிடமும் துப்பாக்கி வந்தது எப்படி? இப்படியான பல கேள்விகளுக்கு விடை இல்லை.
ஆக்சன் சீன்களில் பிரம்மாண்டம் பிரம்மிக்க வைக்கிறது. ஆனால் அதை நம்புவது தான் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.
இப்படத்தின் இறுதியில் ‘ஜவான் 2’ படத்திற்கான க்ளூ கொடுக்கப்பட்டுள்ளது.
அது சுவிட்சர்லாந்தில் உள்ள கருப்பு பணத்தை மீட்டெடுக்கும் கதையாக இருப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது. எனவே ‘ஜவான் 2’ படத்தில் சிவாஜி 2 படத்தை பார்க்கலாம்.
வங்கியில் கடன் பெற்ற தொழிலதிபர்கள் கடனை அடைக்காமல் தள்ளுபடி செய்யும் காட்சிகளும்.. விவசாய கடன்களால் விவசாயிகள் நசுக்கப்படும் காட்சிகளும் கலங்க வைக்கிறது.
அதுபோல பிஎம்டபிள்யூ காருக்கு வரி 7%.. ஆனால் டிராக்டர் கடனுக்கு 12% கடன் உள்ளிட்ட காட்சிகள் மக்களை யோசிக்க வைக்கும்.
அரசு துறைகளில் நடக்கும் ஊழல்களை கொஞ்சம் கொஞ்சமாக காட்டியிருக்கிறார். அதேசமயம் பொருளை வாங்கும் போதும் தரம் பார்த்து வாங்கும் மக்கள் அரசியல்வாதிகளை தரத்தை சோதித்துப் பார்க்க வேண்டும் என சொல்லி இருக்கிறார் இயக்குனர் அட்லி.
ஆக ‘ஜவான்’ அட்லி ஃபார்முலாவில் ஷாரூக்
Jawan movie review and rating in tamil