தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சக்ரா & ராஜ் இணைந்து தயாரித்து எம் சரவணன் இயக்கத்தில் தர்ஷன் – மஹிமா நம்பியார் நடித்த படம் ‘நாடு’.
இவர்களுடன் சிங்கம்புலி, ஆர் எஸ் சிவாஜி, அருள் தாஸ், இன்பா ரவிக்குமார், வசந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கதைக்களம்..
கொல்லிமலையில் உள்ள தேவநாடு. அங்கு மலைவாழ் கிராம மக்கள் வசிக்கின்றனர். இங்கு மக்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. முக்கியமாக மருத்துவ வசதிகள் இல்லாத கிராமம் இது. விபத்துக்கள் ஏற்படும் நிலையில் எந்த உயிரையும் காப்பாற்ற முடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் மக்கள் போராடி டாக்டர் மகிமா நம்பியாரை அங்கு வர வைக்கின்றனர். ஆனால் அவருக்கு அந்த ஊரில் தங்க விருப்பமில்லை ஆனாலும் மருத்துவ சேவைகளை செய்து பல உயிர்களை காப்பாற்றி வருகிறார்.
இதனால் மக்கள் அவரை தெய்வமாக கொண்டாடுகின்றனர். ஒரு கட்டத்தில் அவர் டிரான்ஸ்பர் (பணியிடம் மாற்றி) செல்ல நினைக்கிறார். மக்கள் இதனை தடுக்க பல சதி திட்டங்களை செய்கின்றனர்.
அதன் பிறகு என்ன நடந்தது? என்பதுதான் படத்தின் மீதிக கதை
கேரக்டர்ஸ்…
பிக் பாஸ் தர்ஷன் இந்த படத்தின் நாயகனாகவும் மகிமா நம்பியார் நாயகியாகவும் நடித்துள்ளனர்.
ஒரு பக்கம் மருத்துவ வசதி மற்றொரு பக்கம் தன்னுடைய வசதி என இரு மனநிலை வேறுபாடுகளை அழகாக தன் நடிப்பில் காட்டி இருக்கிறார் மகிமா நம்பியார்.. தர்ஷன் எதார்த்த மனிதராக சினிமா தனம் இல்லாத நடிப்பை கொடுத்திருக்கிறார்.
தர்ஷனின் அப்பாவாக ஆர் எஸ் சிவாஜி மற்றும் ஊர் தலைவராக சிங்கம் புலி நடித்துள்ளனர்.. ஆர்.எஸ். சிவாஜி தற்போது காலமாகிவிட்டார் ஆனால் இந்தப் படத்தில் அவரது நடிப்பு பேசப்படும் வகையில் உள்ளது.
கலெக்டராக அருள்தாஸ் சிறப்பான நடிப்பு. சிங்கம் புலியின் மகனாக நடித்தவரின் காமெடி சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
டெக்னீசியன்ஸ்..
சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, சத்யா இசையமைத்துள்ளார். இருவரின் பணியும் பாராட்டுபடியான வகையில் உள்ளது.
என்னதான் உயர்தர சிகிச்சை என நாம் பேசிக் கொண்டிருந்தாலும் இன்றளவிலும் பல கிராமங்களில் அடிப்படை வசதி கூட இல்லாத பல கிராமங்கள் இருப்பதை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.
அதே சமயம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் மருத்துவ வசதி இல்லாத ஒரு நாடு நாடே அல்ல என்பதையும் இந்த படம் சித்தரிக்கிறது.
என்றைக்கு கல்வியும் மருத்துவமும் வியாபாரம் ஆனதோ அன்றே மருத்துவர்கள் தங்களுடைய சுயநலத்தை மட்டுமே எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர். மருத்துவ படிப்புகள் எளிதானால் மட்டுமே நல்ல மருத்துவர் இந்த நாட்டுக்கு கிடைப்பார்கள் என்பதையும் திரைக்கதையில் உணர்வு பூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
‘எங்கேயும் எப்போதும்’ என்ற அழகான படத்தை கொடுத்த எம் சரவணன் தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
ஆக நாடு… மருத்துவரை நாடு
naadu movie review and rating in tamil