ஆர் யூ ஓகே பேபி விமர்சனம்..; குழந்தையும் குழப்பமும்

ஆர் யூ ஓகே பேபி விமர்சனம்..; குழந்தையும் குழப்பமும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்கதை…

தமிழ் சினிமாவில் தைரியமான நடிகை இயக்குனர் என பெயர் பெற்றவர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இவர் ‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’, ‘ஹவுஸ் ஓனர்’ ஆகிய 4 படங்களை இயக்கியிருக்கிறார்.

தற்போது அவரே தயாரித்து இயக்கியுள்ள டம் ‘ஆர் யூ ஓகே பேபி’.

இந்தப் படம் இன்று வெள்ளிக்கிழமை செப்டம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது. இயக்குனர் ஏ எல் விஜய் இந்த படத்தின் விநியோக உரிமையை பெற்று இருக்கிறார்.

அபிராமி, சமுத்திரக்கனி, மிஷ்கின், ‘ஆடுகளம்’ நரேன், முல்லை, சரண்யா ரவிச்சந்திரன், விஜே ஆஷிக், ரோபோ சங்கர், வினோதினி ஆகியோர் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைக்க, லட்சுமி ராமகிருஷ்ணன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு சென்னை, ராஜபாளையம், கேரள மாநிலம் பாலக்காடு ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

ஒன்லைன்…

பெற்ற குழந்தையை விற்பதும் அதை வாங்குவதும் சட்டப்படி குற்றமாகும்.. இதில் எதை செய்தாலும் சட்ட அனுமதி பெற்று செய்திருந்தால் சுபம்.

கதைக்களம்…

நாயகன் அசோக் – நாயகி முல்லை இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்கின்றனர். அடிக்கடி கருக்கலைப்பும் செய்கின்றனர்.

ஒரு கட்டத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாத சூழ்நிலையில் குழந்தையை பெற்றெடுக்கிறார் முல்லை. தங்கள் குடும்ப வறுமையின் காரணமாக பெற்ற குழந்தையை நர்ஸ் வினோதினி மூலமாக கேரளாவில் வசிக்கும் சமுத்திரக்கனி – அபிராமி தம்பதிக்கு (யார் என தெரியாமல்) விற்று விடுகின்றனர்.

10 மாதங்கள் ஆன நிலையில் தான் பெற்றெடுத்த குழந்தை தனக்கு வேண்டும் என்கிறார் முல்லை. இதனால் வாங்கிய தம்பதியை தேடி அலைகிறார்.

பணம் பெற்றுக்கொண்டு விற்ற குழந்தையை பெற்று தர முடியாது என தட்டிக் கழிக்கிறார் வினோதினி.

எனவே டிவியில் சொல்லாததும் உண்மை நிகழ்ச்சியில் நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் உதவியை நாடுகிறார் முல்லை.

இதனிடையில் குழந்தை நலன் துறைக்கும் (CHILD WELFARE COMMITTEE) இந்த விவகாரம் செல்கிறது.

அதன் பிறகு என்ன நடந்தது? ஒரு டிவி நிகழ்ச்சியால் குழந்தையை மீட்டெடுக்க முடிந்ததா ? கோர்ட் என்ன தீர்ப்பு கொடுத்தது? யார் குற்றவாளி.? என்பதுதான் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

குழந்தையை விற்ற பெண்ணாக முல்லை. அவரின் நடிப்பும் அவர் கோர்ட்டில் பேசும் வசனமும் கண்கலங்க வைக்கும். கருக்கலைப்பு செய்ததற்கான காரணத்தை கூறும்போது.. காண்டம் யூஸ் பண்ணுனா சுகம் இல்லை என்கிறான் என அவர் பேசும் வசனம் பெண்களின் உணர்ச்சியை காட்டுகிறது.

லிவிங் டுகெதர் கணவனாக ‘முருகா’ அசோக் நடித்திருக்கிறார்.. ஆடிசன் என நினைத்து சொல்லாதது உண்மை டிவியை நிகழ்ச்சியில் அவர் ஆட்டம் போடும்போது ரசிக்க வைக்கிறார். அதுவும் கிளாசிக் நடனம்.

குழந்தை பெற முடியாத தம்பதிகளாக சமுத்திரக்கனி மற்றும் அபிராமி. மலையாளம் கலந்து தமிழ் பேசும் அபிராமியும் அழகு.

ஆரம்பத்திலேயே இவர்களின் காட்சி ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது.

சொல்லாததும் உண்மை என்ற நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். இவருக்கு ஏற்கனவே இந்த அனுபவம் இருப்பதால் அதில் அழகாகவே தன் முத்திரையை பதிக்கிறார்.

மிஷ்கின் ஓரிரு காட்சியில் வந்தாலும் மிரட்டல். இவர்களுடன் வினோதினி, சரண்யா ரவிச்சந்திரன், விஜே ஆஷிக் உள்ளிட்டோரும் கவனிக்க வைக்கின்றனர்.

சிபிஐ ஆஃபீஸ்ராக நடித்துள்ளவர் நிஜமான வக்கீல் என்பதால் சட்ட நுணுக்கங்களை அவரிடம் கேட்டு காட்சியாக வைத்திருக்கிறார் இயக்குனர் லட்சுமி.

முக்கியமாக குழந்தை பெறாமல் தாய்ப்பால் கொடுக்க முடியும் என்பதை இந்த படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லி இருக்கிறார். அதை ஒரு காட்சியாகவும் பயன்படுத்தி இருக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இளையராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம். அபிராமியின் தவிப்பை காட்டும் போது இசையால் உணர்வை பிரதிபலிக்கிறார். ஆனால் பாடல்கள் கவனம் பெறவில்லை.

கேரளாவின் அழகையும் தமிழ்நாட்டின் அழகையும் நேர்த்தியாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர்.

கமர்சியல் படங்கள் போல் அல்லாமல் வாழ்க்கையுடன் ஒன்றிய படங்களை தருபவர் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன். ஆர் யூ ஓகே பேபி படமும் அந்த வகையை சாரும்.

குழந்தை கடத்தல்.. கோர்ட் வழக்கு விசாரணை உள்ளிட்டவைகளை அலசி ஆராய்ந்து இருக்கிறார் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன். குழந்தை கடத்துபவர்கள் விற்ப்பவர்கள் இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் திருந்துவார்கள் என நம்பலாம்.

ஆக.. ஆர் யூ ஓகே பேபி.. குழந்தையும் குழப்பமும்

Are You Ok Baby movie review and rating in tamil

ஐமா விமர்சனம்..; அறைக்குள் அவர்கள்

ஐமா விமர்சனம்..; அறைக்குள் அவர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்கதை…

ஐமா எனும் சொல்லில் (ஐ ) எனும் எழுத்து தெய்வத்தையும் (மா) எனும் எழுத்து வலிமையையும் குறிக்கிறது. அதாவது ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினைகள் கட்டாயம் உண்டு என்கிறார் இயக்குநர்.

இப்படத்தை எழுதி இயக்கியவர் ராகுல்.ஆர். கிருஷ்ணா. இவர் தமிழ், மலையாளத்தில் சில குறும்படங்களில் பணிபுரிந்துள்ளார்.

எவருக்கும் தீங்கு நினைக்காத இரு மனிதர்களுக்கு ஏற்படும் துரோகம் ஏமாற்றம்.. இவற்றை எதிர்கொள்ளும் சுவாரசியத்தை சொல்லும் ஆட்டமே ‘ஐமா’.

தமிழ் எக்ஸாடிக் பிலிம்ஸ் (Tamil Exotic Films ) நிறுவனம் சார்பில் சண்முகம் ராமசாமி ’ஐமா’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் நாயகனாக யூனஸ், நாயகியாக எல்வின் ஜூலியட், முக்கிய கேரக்டர்களில் அகில் பிரபாகரன், மேகாமாலு மனோகரன்,சிஷிரா, சாஜி ஆகியோருடன் தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமியும் திருப்புமுனை கேரக்டரில் வருகிறார்.

கதைக்களம்…

விபத்தில் சிக்கிய மரியா (எல்வின் ஜூலியட் ) ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்கிறார்.

மற்றொரு பக்கம் ஆதாம் (யூன்ஸ்) தன் தாயின் சிகிச்சைக்காக அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்.

சில தினங்களில் இவர்கள் இருவரையும் எவரோ ஒருவர் கடத்தி ரகசிய இடத்தில் அடைக்கின்றனர்.

வாயை கட்டி.. கை கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு அடைத்து துன்புறுத்துகின்றனர். குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலை.

கடத்தியவர்கள் யார்? இவர்களை கடத்த திட்டமிட்டது ஏன்? இருவருக்கும் என்ன தொடர்பு? இருவரையும் ஒரே இடத்தில் அடைத்து வைக்க என்ன காரணம்? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை அளிக்கிறது.

கேரக்டர்கள்…

நாயகன் – நாயகி இருவரை சுற்றிதான் படம். இடைவேளை வரை இவர்கள் மட்டுமே திரையில் ஆக்கிரமிக்கின்றனர். இடைவேளைக்குப் பிறகு வில்லன் மற்றும் சில கலைஞர்கள் வந்து செல்கின்றனர்.

நாயகனாக யூனஸ் ரசிகைகளை கவரும் லுக்கில் வருகிறார். சேவ் செய்து முகத்தை காட்டும் போது நார்மலான பையனாகவும் தாடி வைத்த பின் 1990களின் நடிகர் விஜய்யை நினைவுபடுத்துகிறார். நடிப்பில் ஓகே ரகம்தான்.

நாயகன் கயிற்றை அவிழ்க்கும் காட்சிகள் 10 நிமிடம் காட்டப்படுகிறது.. ஆனால் நாயகி கட்டை அவிழ்க்கும் காட்சிகள் இரண்டு நிமிடத்தில் முடிந்து விடுகிறது.

அடடா இப்படி கூட கட்டை அவிழ்த்திருக்கலாமே என் நாயகனே நினைக்கும் வகையில் நமக்கும் சிரிப்பு வருகிறது. தவிக்கும்போது எவ்லின் ஜூலியட் முக பாவனைகள் முதிர்ச்சி.

ஒரு சீனில் லிப் டூ லிப் கிஸ் கொடுத்து பெருசுகளையும் சூடேற்றுகிறார் ஹீரோயின் ஜூலியட்

வில்லனாக தயாரிப்பாளர் சண்முகம் ராமசாமி. வில்லத்தனம் காட்ட முயற்சித்துள்ளார். சில நேரம் பார்ப்பதற்கு விஜய்சேதுபதி போல இருக்கிறார்.

“இவன் அவனில்லை அவன் இவனில்ல” என சொல்லி சொல்லி சுவாரஸ்யம் கூட்டுகிறார் வில்லன் சண்முகம்.

டெக்னீசியன்கள்..

கே ஆர்.ராகுல் இசையில் 10 பாடல்கள். சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் 10 பாடலா? தேவையற்றது. ரசிகரின் மனநிலை அறிந்து எடிட்டர் கட்டிங் போட்டு இருக்கலாம்.

ஒளிப்பதிவாளர் விஷ்ணு கண்ணனின் பணி பாராட்டுக்குரியது. ஒரே அறைக்குள் முன்பக்கம் பின்பக்கம் தலைப்பக்கம் என ஆங்கிள் மேல் ஆங்கிள் வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

திரில்லர் படமாக தொடங்கி பின்னர் சைன்ஸ் பிக்ஷனாக படம் மாறுகிறது. ஆனாலும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் இயக்குநர்.

இயக்குநர் ராகுல் ஆர்.கிருஷ்ணா.. நாயகன் நாயகியை மையப்படுத்தி கதை சொல்லி அதன் பின்னர் சில முகங்களை திரையில் காட்டி இருக்கிறார் இயக்குனர். இது வித்தியாசமான சிந்தனை தான் என்றாலும் ரசிகர்களுக்கு கதை சொன்ன விதத்தில் தடுமாறி இருக்கிறார். இந்தப் படத்தின் தலைப்புக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்பது இயக்குனருக்கே வெளிச்சம்..

ஆக ஐமா… அறைக்குள் அவர்கள்

AIMA movie review and rating in tamil

டீமன் DEMON விமர்சனம்.; பேயாய் அலைந்த இயக்குநர்

டீமன் DEMON விமர்சனம்.; பேயாய் அலைந்த இயக்குநர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

முன்கதை…

ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் சச்சின், அபர்ணதி, ‘கும்கி’ அஸ்வின், உள்ளிட்டோர் நடித்த படம் ‘டீமன்’.

இப்படத்தை ஆர். சோமசுந்தரம் தயாரிக்க, பிளாக்பஸ்டர் புரொடக்ஷன்ஸ் B. யுவராஜ் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் வெளியிடுகிறார். உடன் இணைந்து வழங்குகிறார் இயக்குநர் வசந்தபாலன்.

ஒன்லைன்…

டெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 நபர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட டீமன்.

கதைக்களம்..

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் வாய்ப்பு தேடி அலைகிறார் நாயகன் சச்சின். அதேசமயம் நாயகனுக்கு வீட்டில் பெண் பார்த்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் சினிமா இயக்க தயாரிப்பாளர் வாய்ப்பு கொடுக்கிறார். எனவே தனியாக தங்கி நண்பர்களுடன் கதை விவாதத்தில் ஈடுபட நினைக்கிறார் நாயகன். அதன்படி சிட்டியில் உள்ள அப்பார்ட்மெண்டில் ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுக்கிறார்.

இரவில் படுத்து உறங்கும்போது எல்லாம் கெட்ட கெட்ட கனவாக வருகிறது. பேய் வந்து இவரை கொல்வது போல காட்சிகள் வருகின்றன. அந்த வீட்டில் அமானுஷ்ய சக்திகள் தான் இவருக்கு பிரச்சனை கொடுக்கிறது.

அந்த பேய்களின் பின்னணி என்ன? அதன் நோக்கம் என்ன? நாயகனுக்கு திருமணம் நடந்ததா? இயக்குனர் ஆனாரா? அவரது வாழ்க்கை மாறியதா? என்பதுதான் மீதிக்கதை

கேரக்டர்கள்…

ஹீரோ சச்சின் கேரக்டருக்கு பெயர் விக்னேஷ் சிவன். ரொம்பவே ஸ்மார்டாக வருகிறார். ஆனால் சில காட்சிகளிலேயே அவருக்கு பேய் பிடித்து விடவே கருவளையம் கொண்ட முகம்.. வியர்வை கொட்டிய சட்டை.. ஓடிக்கொண்டே இருக்கும் கால்கள் என சோர்வடைந்து நம்மையும் சோர்வடையச் செய்து விடுகிறார்.

நாயகி அபர்நதி அறிமுககாட்சி சிறப்பு நாயகனை என்ன பாஸ் என்ன பாஸ் என்று அழைப்பது சிட்டி பெண்களின் குறும்புத்தனம்.

நண்பனாக கும்கி அஸ்வின். நல்லவேளை அவர் காமெடி எதுவும் முயற்சிக்கவில்லை. மாறாக நாயகனுக்கு உதவி இருக்கிறார்.

இவர்களுடன் பிளாஸ்பேக் காட்சியில் சேட்டு குடும்பம் வருகிறது. என்றோ வரும் சாவுக்காக குடும்ப குழந்தைகள் முதல் பெரியவர் வரை தற்கொலை செய்வது எல்லாம் ஓவர்.. அதற்கான காரணமும் நம்பும்படியாக இல்லை.

மற்றபடி நாயகனின் பெற்றோர்.. நாயகியின் பெற்றோர்.. நண்பர்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

டெக்னீசியன்கள்..

ஆர் .எஸ். அனந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய, ரவிக்குமார் எடிட்டிங் செய்துள்ளார். ‘அஸ்வின்ஸ்’ பட ரோனி ரபேல் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திரில்லர் படங்களுக்கு இசை மிகவும் முக்கியத்துவமானது என்பதை உணர்ந்து தன் பங்களிப்பை சரியாக கொடுத்துள்ளார். அதுபோல கலை இயக்குனரின் பணியை பாராட்ட வேண்டும்.

ஒரு கலை ஆர்வம் கொண்ட இயக்குனரின் வீட்டை அழகாக அலங்கரித்துள்ளனர். ஒளிப்பதிவியிலும் அதிக சிரமம் எடுத்து கையாண்டுள்ளதை காட்சி நிரூபிக்கிறது. நாயகி வேலை செய்யும் ஆர்ட் கேலரி உள்ளிட்ட அனைத்தும் சிறப்பு.

பொதுவாகவே பேய் படங்கள் என்றால் அடர்ந்த காடு.. காட்டு பங்களா.. விலங்குகள் பூனைகள் என அதிகமாக காட்டப்படும்.. ஆனால் இந்த வழக்கமான பார்முலாக்களை உடைத்து சிட்டி, அதில் ஒரு அபார்ட்மென்ட்.. அமானுஷ்யங்கள் என வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளார் இயக்குநர் ரமேஷ் பழனிவேல்.

பேய் படங்கள்ளில் ஒரு ஃப்ளாஷ் பேக் காட்சி இருக்கும். அதில் பேயாக வந்து பழிவாங்க என்ன காரணம் என்ற கதையும் இருக்கும்.

ஆனால் இதில் வித்தியாசமாக ஒரு போட்டோவை காண்பித்து அதில் டிவி ஓடுவது போல காட்சிகளை காட்டி இருப்பது வித்தியாசமான கற்பனை. ஆனால் அந்த சேட்டுக் குடும்பத்திற்கும் நாயகனுக்கும் என்ன உறவு? என நாயகனே ஒரு காட்சியில் கேட்கிறார். அதற்கான விளக்கம் கொடுக்கப்படவில்லை.

நாயகன் தூங்குகிறார்… பயந்து ஓடுகிறார்.. இப்படியாகவே படம் ஓடிக்கொண்டே இருப்பதால் நமக்கே உறக்கம் வருகிறது.

இயக்குனராக வேண்டும் என ஆசைப்படுகிறார் நாயகன்.. கடைசியில் அது தொடர்பான எந்த காட்சியும் இல்லை.

ஆனால் அடுத்த பாகத்தை எடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு அதற்கான ஒரு சீனை மட்டும் விட்டு வைத்துள்ளார்.. அதுபோல காதல் தொடர்பான காட்சியும் இடம்பெறவில்லை.

ஆக DEMON டீமன்.. பேயாய் அலைந்த இயக்குனர்

DEMON movie review and rating in tamil

மார்க் ஆண்டனி விமர்சனம் 3.5/5..; டைம் ட்ராவல் டான்கள்

மார்க் ஆண்டனி விமர்சனம் 3.5/5..; டைம் ட்ராவல் டான்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒன்லைன்..

1975 – 1995 இந்த 20 வருட இடைவெளியில் நடக்கும் டைம் ட்ராவல் டெலிபோன் கதை இது. இதில் கேங்ஸ்டர் அவரது மகன்கள் என கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர். கேங்ஸ்டர், ஃபேன்டஸி, காமெடி என எல்லா ஜானரில் மார்க் ஆண்டனி்.

கதைக்களம்…

1995.. செல்வராகவன் ஒரு டைம் ட்ராவல் டெலிபோனை கண்டுபிடிக்கிறார். இதன் மூலம் கடந்த காலத்திற்கு மட்டும் செல்ல முடியும். கடந்த காலத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் தான் போன் அழைக்க முடியும் உள்ளிட்ட 5 நிபந்தனைகள் உள்ளன.

1995 ஆண்டில்… விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் நண்பர்கள். எஸ் ஜே சூர்யா-வின் அப்பா எஸ் ஜே சூர்யா தான். இவர்கள் டான் பேஃமிலி. விஷால் ஒரு கார் மெக்கானிக். வன்முறையை விரும்பாதவர்.

தன் ஒரிஜினல் மகனை விட விஷால் மீது தான் அன்பை பொழிகிறார் சூர்யா.. உன் உயிருக்கு ஆபத்து. உன் தந்தையை கொன்ற சுனில் என்னையும் கொல்வான் உன்னையும் கொல்வான் என பாதுகாத்து வளர்த்து வருகிறார். தந்தை பெயரை கேட்டாலே கடுகடுப்பாகிறார் விஷால்.

இதனால் அவருக்கு காதலில் கூட சிக்கல் வருகிறது. ஒரு கட்டத்தில் குடிபோதையில் தனக்கு கிடைத்த டைம் டிராவல் டெலிபோனை வைத்து போன் செய்கிறார் விஷால். ஒரு கட்டத்தில் இதனை வைத்து தன் தந்தையுடன் பேச முயல்கிறார் விஷால்.

இப்படியாக செல்லும் போது தன் தந்தை நல்லவன் என்பதை அறிகிறார். அப்படி என்றால் தன் தந்தையை உயிருடன் மீட்க போராடுகிறார் விஷால்.

இதனையறிந்த அப்பா எஸ் ஜே சூர்யா தடுக்கிறார். உன் தந்தை வந்தால் எனக்கு பிரச்சனை என்கிறார். அப்படி என்றால் 1975-இல் என்ன நடந்தது? டைம் டிராவல் மூலம் பின்னோக்கி சென்றார்களா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது இந்த மார்க் ஆண்டனி படத்தின் கிளைமாக்ஸ்.

கேரக்டர்கள்…

தாடி வைத்த டான் விஷால்.. மீசையில்லாத மெக்கானிக் விஷால்.. என இரண்டு கேரக்டர்களுக்கும் குரலை மாற்றி விஷால் நடித்திருப்பது வித்தியாசமான ஒன்று.. மெக்கானிக் விஷால் கொஞ்சம் பயந்த சுபாவம் என்பதால் அவரின் குரலில் கூட பயம் ஒளிந்திருப்பது பாராட்டுக்குரியது.

மார்க் மற்றும் ஆண்டனி இரண்டுமே விஷாலின் கேரக்டர் பெயர்கள். ஆனால் எஸ்ஜே. சூர்யாவின் ஜாக்கி மற்றும் பாண்டியன் என இரண்டு கேரக்டர்கள் தான் படத்தின் மிகப்பெரிய பலம்.

இப்படத்தின் ஹீரோ விஷால்தான். ஆனால் அவரை ஓவர் டேக் செய்து அதகளம் செய்து இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. படத்தின் டைட்டில் கார்டில் அவருக்கு நடிப்பு அரக்கன் என்று பெயர் போடப்படுகிறது. அதற்கு கொஞ்சமும் குறை வைக்காமல் சூடேற்றி இருக்கிறார் சூர்யா.

இந்த சூர்யாவின் நடிப்பை ஓவர் டேக் செய்ய கடைசியில் மொட்டை பாஸாக வந்து தூள் கிளப்பிருக்கிறார் விஷால். அதிலும் அந்த அனகோண்டா காட்சி ரசிகர்களுக்கு மாஸ் ஸ்ட்ரீட். ஆனால் அதுபோன்ற ஆக்ஷன் காட்சியில் பஞ்சுமிட்டாய் சேலை கட்டி என்ற பாடல் தேவையா? அதை விடுத்து 1995இல் வந்த எத்தனையோ சூப்பர் ஹிட் ஆக்சன் பாடல்களை பயன்படுத்தி இருக்கலாம்.

டைம் ட்ராவல் டெலிபோனை கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக செல்வராகவன். கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்.

நாயகிகள் அபிநயா & ரித்து வர்மா இருவருக்கும் ஸ்பேஸ் இல்லை ஆனாலும் தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கின்றனர்.

தெலுங்கு நடிகர் சுனில், ஒய் ஜி மகேந்திரன், ரெடின் கிங்சிலி ஆகியோரும் உண்டு. படத்தில் சூர்யா விஷால் ரெடின் உள்ளிட்டோர் வேகமாக கத்தி கொண்டு இருப்பது கொஞ்சம் எரிச்சல்தான்.. கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.

டெக்னீசியன்கள்…

ஜிவி பிரகாஷ் இசையில் அதிருதா மற்றும் ஐ லவ் யூ டி என்ற இரண்டு பாடல்கள் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.. அப்பா மகன் விஷால்.. அப்பா மகன் எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட நால்வருக்கும் தனித்தனி பிஜிஎம் போட்டு அசத்து இருக்கிறார்.

ஒரு பக்கம் திறமையான நடிகர்களின் நடிப்பு என்று போற்றப்பட்டாலும் 1975 – 1995 என இரண்டு கால கட்டங்களை கண் முன் நிறுத்தி இருக்கிறார்கள் ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குனர். இவர்களின் இருவரின் பங்களிப்பு மிகப்பெரியது.

1995-களில் வந்த ரஜினியின் ‘முத்து’ படத்தில் குதிரை மலையை தாண்டும். அப்போது நாம் கைதட்டி ரசித்திருப்போம். அதுபோலத்தான் இந்த படத்தில் எந்த லாஜிக்கையும் பார்க்காமல் கைத்தட்டி ரசித்தால் கண்டிப்பாக ரசிக்கலாம்.

1975ல்சில்க் ஸ்மிதா வருவது போல காட்சிகள் உள்ளன. ஆனால் அவர் சினிமாவுக்கு வந்தது 1979ஆம் ஆண்டில் தான். அந்த காட்சியில் எஸ்.ஜே சூர்யா போடும் ஆட்டத்திற்கு கண்டிப்பாக ஆண்டுகளை ஆராய்ச்சி செய்யாமல் சில்க் ஸ்மிதாவின் அழகை ஆராய்ச்சி செய்தால் லாஜிக் எல்லாம் மறந்து மேஜிக்காகும்.

அதுபோல 1995 காட்சிகளை காட்டும்போது வடிவேலு மற்றும் கோவை சரளாவின் டயலாக்குகள் இடம்பெறும். இந்த டயலாக் எப்படி வந்தது என்று நீங்கள் நினைத்தால் அந்த காட்சியை ரசிக்க முடியாது.

1990 காட்சிகளை காட்டும் போது அமராவதி அஜித் பெயர்கள் வருகிறது. இவர் பெரிய ஆளாக வருவார் என்ற டயலாக்குகள் தேவையில்லாத ஒன்று. காரணம் இந்த படத்தை பொருத்தவரை கடந்த காலத்திற்கு மட்டும் தான் செல்ல முடியும் என்கிறார்கள் அப்படி இருக்கும் போது எதிர்காலத்தை கணிப்பதாக வந்த டயலாக் தேவையற்றது.

படத்தின் பிளஸ்.. எஸ் ஜே சூர்யாவும் அவரது மகனும் பேசிக் கொள்ளும் டெலிபோன் காட்சிகளில் ரசிகர்களின் அலப்பறை.. முதல் நாளில் சில்க் ஸ்மிதா வந்து சூர்யாவின் திட்டங்களை முறியடிப்பது.. 2ம் நாள் நினைத்ததை முடிப்பவன் எம்ஜிஆர் – மஞ்சுளா வந்து திட்டத்தை கெடுப்பது என காட்சிக்கு காட்சி செம ரகளையாக இருக்கிறது.

கலை இயக்குநர் ஆர்.கே.விஜய் முருகன், ஆடை வடிவமைப்பாளர் சத்யா என்.ஜே, ஒப்பனையாளர் சக்தி ஆகியோரின் பங்களிப்பால் நம்மால் 1970 காலகட்டத்திற்கு செல்ல முடிகிறது.. சில நேரங்களில் ஓவர் மேக்கப்பும் தெரிகிறது.

அபிநந்தன் ராமனுஜத்தின் ஒளிப்பதிவு அருமை 1970 1990களின் காட்சியை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். முக்கியமாக 1975ல் சென்னையில் ஓடிக்கொண்டிருந்த டபுள் டக்கர் பஸ் காட்டப்படும் போது இன்று உள்ள 2k கிட்ஸ்களுக்கு ஆச்சரியமான ஒன்றாகும். அதில் வைத்துள்ள சில்க் ஸ்மிதா காட்சியும் ஆக்ஷன் காட்சியும் ரசிகர்களுக்கு மரணமாஸ் ட்ரீட் ஆக அமைந்துள்ளது.

வேலுகுட்டியின் படத்தொகுப்பு விறுவிறுப்பை கூட்டியுள்ளது. ஆனால் தேவையற்ற காட்சிகளை வெட்டி இருக்கலாம்.. கருப்பண்ணசாமி வந்து விஷால் சாமி ஆடுவது.. ஒய் ஜி மகேந்திரனின் ஓரினச்சேர்க்கை டயலாக்குகள் தேவையில்லாதது.

ஆங்காங்கே பயன்படுத்தப்பட்ட ‘ரெட்ரோ’ பாடல்கள் செம. ஆக்சன் காட்சிகளில் அனல் தெறிக்கிறது. சண்டைப் பயிற்சியாளர்கள் பீட்டர் ஹெயின், திலீப் சுப்புராயன், கனல் கண்ணன், தினேஷ் சுப்புராயன், மாபியா சசி ஆகியோரின் உழைப்பு வேறலெவல்.

இதுவரை A படங்களின் இயக்குனர் என அறியப்பட்ட ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படத்தில் கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் கதையை நகர்த்தி இருக்கிறார். படத்தைப் பார்க்கும் ஒரு ரசிகர்கள் சிரிக்க வேண்டும் ரசிக்க வேண்டும் என்பதை மட்டுமே நினைவில் கொண்டு லாஜிக்கை மறந்து மேஜிக் செய்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

ஆக மார்க் ஆண்டனி… டைம் ட்ராவல் டான்கள்

Mark Antony movie review and rating in tamil

எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு விமர்சனம்..; அதிகார ‘பந்தா’ட்டம்

எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு விமர்சனம்..; அதிகார ‘பந்தா’ட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

செ. ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு’.

தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும், கல்தா படங்களை இயக்கியவர் இவர்..

நாயகனாக ஷரத் மற்றும் நாயகியாக ஐரா நடிக்கின்றனர். அருவி புகழ் மதன், விஜய் முத்து, இளையா, ஆதேஷ்பாலா, கஜராஜ், ஹரி, பீம்ஜி, ராசி அழகப்பன் & பலர்.

செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தயாரிப்பு : பிரீத்தி சங்கர்

கதைக்களம்..

காலில் ஊனம்.. திக்குவாய் ஆனாலும் திறமையை நம்பும் ஃபுட்பால் கோச் ‘அருவி’ மதன்.

ஏழ்மை நிலையில் இருக்கும் திறமையான வீரர்களை ஊக்குவித்து மாநில அளவிலான போட்டிகளில் இடம்பெற முயற்சிக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வில்லன் ரத்தினம் கும்பலுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் தொழில் முறையில் மோதல் உருவாகிறது.

எனவே இந்த விளையாட்டு வீரர்களின் முயற்சிகளை முறியடிக்க திட்டம் போடுகிறார் வில்லன்.

இந்த ஆட்டத்தில் ஜெயித்தது யார்.?என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

கேரக்டர்கள்…

நாயகனாக ஷரத்.. முகத்தில் தாடி மூக்கு கண்ணாடி என பாதி முகத்தை மறைத்து விடுகிறார். ஆனால் அதையும் மீறி கோபத்தை காட்டும் காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். ஹீரோயின் ஐரா சொல்வதைப் போல கொஞ்சமாவது படத்தில் சிரித்து இருக்கலாம்.

நாயகியாக அயிரா. படத்தில் அனைவருமே அழுக்காக வரும் போது இவர் மட்டுமே அழகாக வருகிறார். ‘தாக்கு தாக்கு தாக்குறா..’ பாடலுக்கு ஐரா போடும் ஆட்டத்தில் இளமை ததும்புகிறது. ஆனால் பாடல் வரிகளுக்கு பொருந்தாத ஓரிரு ஸ்டெப்புகள் உள்ளதை யாரும் கவனிக்கவில்லையா? படத்தில் இவருக்கு மொத்தமே 4 காஸ்டியூம்கள் தான் போல.

வில்லன் ரத்தினத்தின் அடியாளாக வருகிறார் ஆதேஷ் பாலா. பழைய கால வில்லன் ஸ்டைலில் சிரித்து சேசிங் செய்வது அசத்தல்.

வில்லனின் தம்பியாக நடிகர் இளையா. இந்தப் படத்தில் படு ஸ்மார்ட்டாக இருப்பவர் இவரே. இவருக்கு நாயகியுடன் ஒரு கனவு டூயட் பாடலாவது வைத்திருக்கலாம். ‘பவுடர்’ படம் போல இதிலும் இளையாவுக்கு மேட்டர் சீன்தானா.??.

கால்பந்து பயிற்சியாளராக அருவி மதன். பெரும்பாலும் இவருக்கு பல படங்களில் போலீஸ் கேரக்டர் தான். இதில் திறமையான இளைஞர்களுக்காக இவரின் போராட்டம் கண்கலங்க வைக்கிறது. இவரது முடிவு எதிர்பாராத ஒன்று.

அதிகார ஆசாமியாக ரத்தினம் கேரக்டரில் நரேன். நாக்கை மடித்து கண்களை உருட்டி மீசையை முறுக்கி மிரட்டி இருக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கஞ்சா கருப்பு. உணர்வுபூர்வமான நடிப்பில் கவர்கிறார்.

நடிகை சோனா ஒரே ஒரு காட்சியில் வந்து ரசிகர்களை சூடேற்றி செல்கிறார். அதிலும் காமநெடி வசனங்கள் கைதட்டல் அள்ளும்.

போலீஸ் அதிகாரியாக வில்லன் கைக்கூலியாக முத்துவின் நடிப்பு சிறப்பு. இவர்களுடன் கஜராஜ் & ராசி அழகப்பன் ஆகியோரும் உண்டு.

‘எனக்கும் புள்ள குட்டி இருக்காங்க..’ என்று வீரர்களுக்கு ஆதரவாக பேசுவதும்.. எனக்கும் புள்ள குட்டி இருக்காங்க..’ என்று வீரர்களுக்கு எதிராக ராசி அழகப்பன் பேசுவதும் ஒரே வார்த்தையில் இரண்டு பக்கமும் சாய்வது யதார்த்தத்தை காட்டுகிறது.

டெக்னீசியன்கள்…

வினோத்ராஜா ஒளிப்பதிவு செய்ய அலிமிர்ஸாக் இசையமைத்துள்ளார். இசையும் ஒளிப்பதிவும் நேர்த்தி. இடைவேளைக்கு முன்பு காட்டப்படும் பரமக்குடி பகுதி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. அந்த கிராமத்து வெளிச்சத்தில் ஒளிப்பதிவு செய்தவர் பாராட்டுக்குரியவர் தான்.

அதே நேரம் இடைவேளை வரை இந்த சேசிங் காட்சிகள் மட்டுமே வருவது நம் பொறுமையை சோதிக்கிறது.

கால்பந்தாட்டம் என தலைப்பு வைத்திருந்தாலும் அவர்கள் ஆடும் களமே வேறு என்பதை காட்சிகளில் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா.

வில்லனுக்கும் வீரர்களுக்குமான மோதல் சாதி மோதலை அடையாளப்படுத்தாமல் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.

அதிகார வர்க்கத்திற்கு எதிராக கால்பந்தை ஹரி உத்ரா உதைத்திருப்பது பாராட்டுக்குரியது.

no6 vaathiyaar kaalpandhatta kuzhu Movie review

பரிவர்த்தனை விமர்சனம்..; கணவனின் காதலியை கண்ட மனைவி

பரிவர்த்தனை விமர்சனம்..; கணவனின் காதலியை கண்ட மனைவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சுர்ஜித், சுவாதி, ராஜேஸ்வரி, மோஹித், சினேகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பரிவர்த்தனை’.

M S V புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் பொறி. செந்திவேல் கதை, வசனம் எழுதி தயாரித்துள்ளார்.

வெத்து வேட்டு, தி பெட் ஆகிய படங்களை தொடர்ந்து எஸ்.மணிபாரதி திரைக்கதை எழுதி இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

விஜய் டிவியில் நம்ம வீட்டு பொண்ணு தொடரின் நாயகன் சுர்ஜித் இந்த படத்தின் நாயகனாகவும், ஈரமான ரோஜாவே தொடரில் நாயகியாக நடித்து வரும் சுவாதி இந்த படத்தின் நாயகியாகவும் நடித்துள்ளனர்.

இதோ விமர்சனம்…

சுவாதி & ராஜேஸ்வரி இருவரும் சில வருடங்களுக்கு முன் கல்லூரித் தோழிகள்…

தற்போது இதில் ராஜேஸ்வரியின் கணவர் டாக்டர். ஆனால் கணவருக்கு தன்மீது துளியும் அன்பு இல்லை என்பதை உணர்கிறாள். தன் கணவன் பொக்கிஷமாக N என்ற எழுத்துள்ள ஒரு பரிசை பத்திரமாக பாதுகாத்து வருகிறார்.

இந்த சூழ்நிலையில் ஒருநாள் மன உளைச்சலில் தவிக்கும் ராஜேஸ்வரி தன் கல்லூரி தோழி சுவாதியை பார்க்க கிராமத்திற்கு செல்கிறாள். அங்கு சில நாட்கள் தங்கியிருக்கிறார்.

தன் தோழியோ திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தன் கணவர் வைத்திருக்கும் அதே பரிசு பொருளை போல தன் தோழி வீட்டிலும் காண்கிறார்.

அதன் பின்னர் தான் தன் தோழியும் தன் கணவரும் ஏற்கனவே காதலர்கள் என்பதை அறிகிறாள். அதன் பின்னர் இவள் என்ன செய்தாள்? என்பதுதான் ‘பரிவர்த்தனை’.

Artists :

Surjith – Naveen
Swathi – Pavithra
Rajeshwari – Nandhini
Mohith – Naveen (school stage)
Smega – Nandhini (school stage)
Bharathimohan – Pannaiyar
Divyasridhar – Pannaiyar wife
Rail Karthi – Murugesan (Naveen father)

கேரக்டர்கள் & டெக்னீசியன்கள்…

நாயகன் சுர்ஜித்.. நாயகி சுவாதி சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பிடிக்காத வாழ்க்கையை வாழும் கடுப்பான கணவனாக சுர்ஜித் நடித்திருக்கிறார்.

சுவாதி – ராஜேஸ்வரி இருவரும் கொள்ளை அழகு. இருவரின் நடிப்பும் அவர்களின் அழகை தாண்டி ரசிக்க வைக்கிறது.

இதில் நடித்த பாரதிமோகன் மற்றும் இளம் வயது நாயகர்களாக நடித்த விக்ரம் ஆனந்த் மாஸ்டர் விதுன் இளவயது நாயகிகளாக சுமேகா, ஹாசினி & இவர்களுடன் ரயில் கார்த்தி ஆகியோரும் ஙநடித்துள்ளனர்.

கோகுலின் ஒளிப்பதிவில் கிராமத்து அழகும் சிட்டியும் சிறப்பாக உள்ளன.

ரஷாந்த் அர்வின் இசை அமைத்துள்ளார். பாடல்களும் வரிகளும் சிறப்பு சேர்க்கின்றன. இவர் தான் மோகன் நடித்து வரும் ‘ஹரா’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

கவிஞர் வி.ஜே.பி ரகுபதியின் பாடல் வரிகளை பாராட்டியே ஆக வேண்டும். காதலுக்காக.. காதல் முறிவுக்காக.. மீண்டும் மலரும் காதலுக்காகவும் என ரசித்து எழுதியிருக்கிறார்.

பாக்யராஜ் – அம்பிகா நடித்த ‘அந்த 7 நாட்கள்’ படத்தில்.. “என்ட காதலி நின்ட மனைவியாகலாம்.. பக்ஸே நின்ட மனைவி என்ட காதலியாக முடியாது என்ற வசனம் இருக்கும்.

அந்த வரிகளை தற்போது நவீன காதலுக்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கிறார் இயக்குனர் மணிபாரதி.

உன் காதலன் என் கணவனாகி விட்டான். ஆனால் நிம்மதியான வாழ்க்கை இல்லை என்பதால் மனைவி எடுக்க முடிவு வித்தியாசமான ஒன்றுதான்..

பிடிக்காத வாழ்க்கையை பலர் வாழ்ந்து கொண்டிருந்தாலும் சிலர் மட்டுமே விவகாரத்து கேட்டு கோர்ட்டில் வரிசையாக நிற்கின்றனர். இந்த மனமாற்றத்தை தைரியமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

தன் முன்னாள் காதலன் ஊரை விட்டு சென்று விட்டதால் காதலியால் தேட முடியவில்லை. ஆனால் காதலி இருக்கும் இடம் தெரிந்தவர் அவரை தேடி கிராமத்திற்கு வந்திருக்கலாமே என்று கேள்வி எழுகிறது. அதற்கான சரியான விளக்கம் படத்தில் கொடுக்கப்படவில்லை. வசனங்களாக அமைக்கப்பட்டிருந்தாலும் காட்சிகள் இல்லை என்பது வருத்தம்.

“வாழ்க்கை ஒருமுறை அதை பிடித்தவர்களுடன் வாழ்வது மட்டுமே வாழ்க்கை” என்பதை ஆணித்தரமாக அடித்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

Parivarthanai movie review

Technicians :

Production, Story, Dialogue – Pori. SenthiVel
Screen play, Direction : S. ManiBharathi.
DOP : K. Gokul.
Music : Rishaanth Arwin.
Editing : Rolex.
Co Director : Elamaaran.
Lyrics : Vjp Ragupathi.
Choreography : Dhina.
Pro : Manavai Bhuvan.

More Articles
Follows