தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாள சினிமா வெற்றிப்பாதையில் தற்போது தமிழ் சினிமாவும் பயணித்துக் கொண்டிருக்கிறது எனலாம்.
இதுவரையில் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத குள்ள மனிதர்களின் வாழ்க்கையை சொல்லி இருக்கிறார் இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன். இவர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர்
ஸ்டோரி…
நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தபால் காரராக பணிபுரிகிறார் எம்.எஸ். பாஸ்கர். இவரது மனைவிக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கிறது. அதில் ஒருவர் இவானா மற்றொருவர் வெங்கட் செங்குட்டுவன்.
கல்லூரி படிப்பை எட்டிய போதும் வெங்கட் 3 அடி உயரம் மட்டுமே இருக்கிறார். ஆனால் இவனா சராசரி பெண்ணாக வளர்கிறார்.
தன் தந்தையைப் போல நானும் ஒரு போஸ்ட்மேன் ஆக வேண்டும் என என நினைக்கிறார் வெங்கட் செங்கட்டுவன்.
இவரது உயிரக் குறைவால் பள்ளியிலும் கல்லூரிகளிலும் பல கிண்டல் பேச்சுகளை எதிர்கொள்கிறார். ஆனால் இவரது குடும்பத்தார் இவருக்கு உறுதுணையாக இருக்கின்றனர்.
ஆனால் தன் திறமையாலும் அறிவாற்றலாலும் பலரை அசத்தி வருகிறார். இதனால் அவரது மதிப்பு கூடுகிறது.
ஒரு கட்டத்தில் கல்லூரியில் படிக்கும் இவானா திடீரென கல்லூரி பேராசிரியை காதலித்து வீட்டை விட்டு ஓடி விடுகிறார்.
இந்த அவமானத்தால் எம் எஸ் பாஸ்கர் மற்றும் அவரது மனைவி தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ஒரு பக்கம் பெற்றோரை இழந்தும் மறுபக்கம் தன் அக்காவை தொலைத்தும் வாழ்க்கை விளிம்பில் இருக்கிறார் வெங்கட் செங்குட்டுவன்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதி கதை.
கேரக்டர்ஸ்…
இவானா & வெங்கட் செங்குட்டுவன்.. அக்கா தம்பியாக ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளாக நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் இது மாதிரி குள்ள மனிதர்களை வைத்து நாயகனாக படம் எடுப்பது பெரிய விஷயம். அதற்காக தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் முதலில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம்.
குள்ள மனிதர்கள் படம் என்றாலே அவர்களை கேலியாகவும் கிண்டலாகவும் செய்வது தான் வழக்கம். ஆனால் ஒரு மாஸ் ஹீரோவாக வெங்கட்டை காட்டி இருக்கின்றனர். அவரும் தன் கேரக்டரை உணர்ந்து வெளுத்துக்கட்டி இருக்கிறார். வெல்டன் வெங்கட்.
இவர் தான் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தில் ஏலியனாக நடித்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
டேய் குள்ளா என்று கூப்பிட்டாலே ஒரு குத்து விடும் காட்சிகள் ரசிக்கும் ரகம்.
இடைவேளைக் காட்சி முக்கியமானதாக அமைந்திருந்தாலும் அதன் பின்னர் அதில் சுவாரசியம் இல்லை என்பது கொஞ்சம் வருத்தம்.
அண்ணாதுரை சச்சின் போன்றவர்கள் உயரம் குறைவானவர்கள் அவர்களும் பல கேலி கிண்டலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் சாதித்த பின்னர் அந்த குள்ளம் ஒரு தடையாக தெரியவில்லை.. அப்படி இருக்கும்போது சாதித்தால் மட்டும்தான் எங்களை கூட சாதாரண மனிதனாக ஏற்றுக் கொள்வீர்களா? என வெங்கட் கேட்கும் போது நிச்சயம் கைதட்டல் அள்ளும்.
சராசரி உயரம் கொண்டவர்கள் மட்டும் எல்லாரும் சாதனையாளர்களா? என அவர் கேட்கும் சமயம் நம்மை கன்னத்தில் யாரோ அறைந்தார் போல ஒரு உணர்வு ஏற்படும்
இவானா கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். தன் உடன் ஒட்டி பிறந்த வெங்கட்டுக்கு ஆதரவாக அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ரசிக்கும் ரகம். ஆனால் தன் தம்பியை விட்டு அவர் ஓடி செல்வது நம்மையே கண் கலங்கும் செய்கிறது. மதி என்ற கேரக்டரில் சிறப்பு சேர்த்திருக்கிறார்.
மேலும், ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.
போலீசாக வேண்டும் என நினைத்து ஆராத்யா அது போலவே போலீஸ் ஆகி கெத்து காட்டுவது ரசிக்க வைக்கிறது. அழகான பெண் போலீசாகவும் நம்மை கவர்கிறார்.
எம் எஸ் பாஸ்கர் ஒரு நடிப்பு களஞ்சியம் என்பது நமக்கு தெரியும்.. கொடுத்த கேரக்டரில் வெளுத்துக்கட்டி இருக்கிறார் சில காட்சிகளில் கண் கலங்கவும் வைக்கிறார்.
ஆடுகளம் நரேன்.. அவரின் மகன் போலீஸ் ஆபீஸர் ஆகியோரும் கச்சிதம்.
டெக்னீசியன்ஸ்…
ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ளது
இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்க பர்வேஸ் கே ஒளிப்பதிவு செய்ய சதீஷ் சூர்யா படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
இயக்குனர் மந்த்ரா வீரபாண்டியன்..
கார்த்திக் ராஜாவின் இசையை நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது. இளையராஜா குரலாக ஒலிக்கச் செய்து நம்மை மெய் மறக்க செய்கிறார் பின்னணி இசையும் இந்த திரில்லர் படத்திற்கு கூடுதல் சிறப்பை கொடுத்துள்ளது.
குள்ளராக இருந்தாலும் அவர் இன்வெஸ்டிகேஷன் செய்யும் விதமே கூடுதல் சுவாரசியத்தை கொடுக்கிறது.
குள்ளம் என்பது ஊனமில்லை அது ஒரு குறையும் இல்லை என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திறக்கதை அமைத்து கைத்தட்டல் பெறுகிறார் மந்த்ரா வீரபாண்டியன்.
இந்த 2023 வருட இறுதியில் ஒரு நல்ல தரமான படத்தை பார்த்த திருப்தி ரசிகர்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என நம்பலாம்..
ஆக மதிமாறன்.. வெல்டன் வெங்கட்
Mathimaran movie review and rating in tamil