தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தேவகுமார் இயக்கத்தில் ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், வெங்கட் ராவ், கிரேசி கோபால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மதுரியா புரொடக்ஷன்ஸ் சார்பில் மனோஜ் கிருஷ்ணசுவாமி தயாரிப்பில் உருவாகியுள்ளது ‘இந்த கிரைம் தப்பில்ல’.
கதைக்களம்…
ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத இரண்டு கதைகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். அதன் பின்னர் இறுதியாக இரண்டையும் இணைத்து ஒரு முடிச்சு போட்டு இருக்கிறார்.
ஒரு பக்கம்.. ஒரு பெண்ணை துரத்தி துரத்தி மூன்று நண்பர்கள் காதலிக்கிறார்கள். அந்த நண்பர்களுக்கே தெரியாமல் தன் பெயரை மாற்றி சொல்லி மூவரையும் காதலிப்பதாக சொல்கிறார் நாயகி மேக்னா.
இந்த கதை ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம்… ஆடுகளம் நரேன் தலைமையில் சில இளைஞர்கள் சமூகத்திற்காக போராடுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் தான் காதலிப்பதாக சொன்ன 3 ஆண்களையும் ஒரு பாழடைந்த பங்களாவிற்கு வரச் சொல்கிறார் நாயகி மேக்னா. அங்கு மூவருக்கும் தண்டனை கொடுக்கப்படுகிறது.
அவர்கள் யார்? அவர்களை தண்டிக்க என்ன காரணம்.? இந்த பெண் யார்? ஆடுகளம் நரேன் அவரின் பங்கு என்ன? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள் & டெக்னீசியன்கள்…
அழகு மேனகையாக மேக்னா. தன் பெயருக்கு ஏற்ப அழகாக ஜொலிக்கிறார். ஆனால் அவர் 3 பேரை காதலிப்பதிலேயே அவரின் சூழ்ச்சி தெரிகிறது. இவரே கதையின் நாயகி என்பதால் கூடுதல் சிரமம் எடுத்து சிறந்த நடிப்பை கொடுத்திருக்கலாம். ஆனால்..??
மேக்னாவை சுற்றும் 3 ஆண்களுமே நாடகத்தனமான நடிப்பை கொடுத்துள்ளனர். நடிப்பிலும் எந்த சுவாரசியமும் இல்லை.
ஆடுகளம் நரேன் நன்றாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை.. ஒரு காட்சியில் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காப்பாற்ற வாருங்கள் என நாயகி இவரை அழைக்கிறார். ஆனால் வர முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்கிறார். இப்படி ஒரு சமூக போராளி பேசுவாரா? என்று தெரியவில்லை.
ஒரு குற்றவாளியை தண்டிக்க நாமும் ஒரு குற்றம் செய்யலாம் என சொல்ல வருகிறது இந்தக் கிரைம் தப்பு இல்லை.
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தினாலும் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்து விடுகிறார்கள்.. சட்டம் ஒழுங்கும் சரியில்லை.. காவல் துறையும் பெண்களை பாதுகாக்கவில்லை என சொல்கிறார் இயக்குனர் தேவகுமார்.
கற்பழிப்புக்கு நிரந்தர தீர்வு குற்றவாளிகளை தண்டிப்பது மட்டும்தான். எனவே தண்டிப்பவர்களுக்கு ஆதரவாக இந்த க்ரைம் தப்பில்லை என்று சொன்னாலும் அதை சொன்ன விதத்தில் திரைக்கதை அமைத்த விதத்தில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர்.
படத்தின் ஒளிப்பதிவு பாடல்களும் பெரிதாக கை கொடுக்கவில்லை. படத்தின் படத்தொகுப்பாளரும் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
ஆக இந்த கிரைம் தப்பில்லை.. படத்தை பார்க்கலேனாலும் தப்பில்லை..
Indha Crime Thappilla movie review and rating in tamil