சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ முன்னோட்டம்

சிம்புவின் ‘அச்சம் என்பது மடமையடா’ முன்னோட்டம்

Achcham Yenbadhu Madamaiyada stillsவிண்ணைத் தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து, மீண்டும் சிம்பு-கௌதம் மேனன்-ஏஆர்.ரஹ்மான் ஆகியோர் இணைந்துள்ள படம் ‘அச்சம் என்பது மடமையடா’.

நீண்ட நாட்களாக தயாரிபில் இருந்த இப்படம் நாளை நவம்பர் 11ஆம் ரிலீஸ் ஆகிறது.

இப்படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்…

 • சிம்புவின் நண்பராக டான்ஸர் மாஸ்டர் சதீஷ் இதில் முதன்முறையாக அறிமுகமாகியுள்ளார்.
 • சிம்புவின் சிஸ்டரின் தோழியாக நடித்துள்ளார் மஞ்சிமா மோகன்.
 • முதலில் நட்பாக பழகும் இவர்கள் பின்னர் காதலர்களாக மாறுகின்றனர்.
 • இப்படத்தின் முதல் பாதியிலேயே படத்தின் 5 பாடல்களும் இடம்பெறுகிறதாம்.
 • காரணம் இரண்டாம் பாதி, முழுக்க முழுக்க ஆக்ஷன் இருப்பதால், பாடல்கள் அதற்கு இடையூறாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடாம்.
 • இதில் பைக் பிரியராக சிம்பு நடித்துள்ளார். எனவே படுவேகத்தில் பைக்கை ஓட்டும் காட்சிகள் இருக்கிறதாம்.
 • மேலும் இது ரோடு ஜர்னி டைப் படமாக உருவாகியுள்ளது-
 • பிரச்சினை என்று வரும்போது நாம் ஓடி ஒளியக் கூடாது என்பதால்தான் அச்சம் என்பது மடமையடா என படத்திற்கு தலைப்பிட்டு இருக்கிறார்களாம்.
 • இப்படத்தில் நாயகியாக முதலில் கமிட் ஆனவர் பல்லவி சுபாஷ்.
 • ஆனால் இந்த படம் தாமதம் ஆக, அவர் தெலுங்கு சினிமாவில் பிஸியாகிவிட்டாராம். எனவேதான் மஞ்சிமா மோகனை தமிழ், தெலுங்கு என இரண்டிலும் கொண்டு வந்துள்ளார் இயக்குனர்.
 • இதில் இடம் பெற்றுள்ள தள்ளிப்போகாதே என்ற டியூனை பல முறை கேட்டும் கவிஞர் தாமரைக்கு புரியவில்லையாம்.
 • இருந்தாலும், பலமுறை கௌதம் விளக்கம் கொடுக்க கேட்டு கேட்டு எழுதியிருக்கிறார் தாமரை.
 • இதற்கான டியூனை விமானத்தில் பறந்துக் கொண்டே ரஹ்மான் கம்போஸ் செய்துள்ளார்.
 • சூட்டிங்குக்கு எப்பவும் சிம்பு லேட்டாகத்தான் வருவாராம்.
 • ஆனால் வந்த பின் மொத்த குழுவையும் ஜாலியாக வைத்திருப்பாராம். காட்சிகளை உடனே முடித்து கொடுத்து விடுவாராம்.
 • இப்படத்தை தமிழில் யாரும் தயாரிக்கவில்லை.
 • ஆனால் தெலுங்குப் பதிப்பிற்கு கிடைத்த பணத்தை வைத்தே இரண்டு படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக கௌதம் தெரிவித்துள்ளார்.
 • தமிழகமெங்கும் 500க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட இருக்கிறார்கள்.
 • இதன் வெளியீட்டு உரிமையை ட்ரைடண்ட் ஆர்ட் ரவி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your rate

Latest Post

Related News

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் முதன்முறையாக…
...Read More
கௌதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா…
...Read More