தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் புதிய பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இது விஷாலின் 34 ஆவது படமாகும்.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்றது .
நாளை நவம்பர் 8ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கப்பட உள்ளது.
இதனை அடுத்து தொடர்ந்து 30 நாட்கள் சூட்டிங் நடைபெற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதுதான் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு.
இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ்ஸ்டூடியோஸ் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் சார்பாக கார்த்திக் சுப்புராஜ் தயாரித்து வருகிறார்.
இதில் விஷாலுடன் பிரியா பவானி சங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
‘தாமிரபரணி’ & ‘பூஜை’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் ஹரி & நடிகர் விஷால் இணையும் 3வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Vishal 34 movie new shooting update