சிம்பு-விக்ரம்பிரபு-உதயநிதி… மூவருக்கும் உள்ள ஒற்றுமையை சொன்ன மஞ்சிமா

சிம்பு-விக்ரம்பிரபு-உதயநிதி… மூவருக்கும் உள்ள ஒற்றுமையை சொன்ன மஞ்சிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

manjimaஅச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் சிம்புக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் மஞ்சிமா மோகன்.

தற்போது உதயநிதியுடன் இப்படை வெல்லும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் விக்ரம் பிரபுவுடன் நடித்து சத்ரியன் திரைப்படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் தன் சினிமா பயணம் குறித்து அவர் கூறியதாவது…

மஞ்சிமா என்ற பெயரை பெரும்பாலானவர்கள் மங்கிமா என்றுதான் அழைக்கிறார்கள்.

மஞ்சிமா என்றால் அழகு என்று என் அப்பா சொன்னார்.

சத்ரியன் படத்தில் தைரியமான பெண்ணாகவும் அதே சமயம் இங்கிலீஷ் பேசாத பெண்ணாகவும் நடித்திருக்கிறேன்.

நான் இணைந்து நடித்துள்ள 3 ஹீரோக்களுமே (சிம்பு, உதயநிதி, விக்ரம்பிரபு) பெரிய நட்சத்திர குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.

எனவே அவர்களுடன் பழக முதலில் தயக்கம் இருந்தது. ஆனால் அவர்கள் மிகவும் யதார்த்தமாக பழகினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Manjima mohan talks about Simbu Vikram Prabhu and Udhayanidhi

ரஜினியை சந்தித்த முதல்வர் மனைவி என்ன பேசினார்.?

ரஜினியை சந்தித்த முதல்வர் மனைவி என்ன பேசினார்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini and Maharastra CM wife meetingமும்பையில் நடந்து வரும் காலா படப்பிடிப்பில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இதனிடையில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் மனைவி அம்ருதா அவர்கள் ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.

ரஜினியுடனான சந்திப்பு குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது…

ரஜினியை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தற்போதுள்ள சமூக பிரச்சனைகள் மற்றும் அதன் தீர்வுகள் குறித்து இருவரும் பேசியதாக தெரிவித்துள்ளார்.

இன்னும் சில மாதங்களில் ரஜினியின் புதிய கட்சி அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒரு மாநில முதல்வரின் மனைவியுடன் நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Amruta wife of Devendra Fadnavis meets rajinikanth in Mumbai during Kaala Shooting

Amruta wife of Devendra Fadnavis meets rajinikanth in Mumbai during Kaala Shooting

16 வருடங்களை கடந்த சிட்டிசன்; அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட்டிங்

16 வருடங்களை கடந்த சிட்டிசன்; அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

citizen ajith postersஇன்று வேதாளம், விவேகம் உள்ளிட்ட அஜித் படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு நாம் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் 16 வருடங்களுக்கு முன்பே இதுபோன்ற ஒரு எதிர்பார்ப்பை அஜித்துக்கு உருவாக்கி தந்த படம் சிட்டிசன்.

இப்படத்தின் போஸ்டர்களே இதன் மீதான் எதிர்பார்ப்பை எகிற செய்தது.

சரவணன் சுப்பையா இயக்கத்தில் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்திருந்த இப்படத்தில் அஜித் 9 வேடங்களில் கலக்கியிருப்பார்.

ஊழலுக்கு எதிராகவும், லஞ்சம் வாங்கும் அரசியல் அதிகாரிகளுக்கு எதிராகவும் அஜித் பேசும் வசனங்கள் படு பிரபலமாகியது.

இந்நிலையில் இப்படம் வந்து 16 ஆண்டுகள் இன்று (ஜீன் 8) நிறைவடைந்ததை முன்னிட்டு இதை அஜித் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி கொண்டாடி வருகின்றனர்.

Ajith fans celebrates 16 years of Citizen movie

citizen ajith

மீண்டும் ஒரு ரீமேக்கில் உதயநிதி; நமிதா ஜோடியானார்.

மீண்டும் ஒரு ரீமேக்கில் உதயநிதி; நமிதா ஜோடியானார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

namita pramodஜாலி எல்எல்பி என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்தார் உதயநிதி ஸ்டாலின்.

அஹ்மத் இயக்கிய இப்படம் மனிதன் என்ற பெயரில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி.

இப்படம் பஹத்பாசில் நடித்து மலையாளத்தில் வெற்றிப் பெற்ற
‘மகேஷிண்டெ பிரதிகாரம்’ படத்தின் ரீமேக் ஆகும்.

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கவுள்ள இப்படத்தில் நாயகியாக பிரபல மலையாள நடிகையான நமிதா பிரமோத் நடிக்கிறாராம்.

தமிழுக்கு ஏற்ப இப்படத்தில் நிறைய மாற்றங்களை செய்துள்ளதாகவும் முக்கிய வேடத்தில் எம்எஸ் பாஸ்கர் நடிக்கவுள்ளதாகவும் இயக்குனர் பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.

Udhayanidhi and Namitha Pramod romance in Maheshinte Prathikaaram Tamil Remake

ஷாரூக்கான்-ஐஸ்வர்யாராய் இணையும் புதிய படம்

ஷாரூக்கான்-ஐஸ்வர்யாராய் இணையும் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sanjay Leela Bhansalisபிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

சாஹிர் லூதியான்வி மற்றும் அம்ரிதா பிரேம் காதல் கதையை படமெடுக்க சஞ்சய் லீலா பன்சாலி திட்டமிட்டுள்ளார்.

பஞ்சாபின் முதல் பெண் கவிஞரான அமிர்தா பிரேமம் நாவல், கட்டுரை உள்பட பல நூல்களை எழுதியுள்ளார்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினை காரணமாக காதலர்களும் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனவே அதன்படி இந்த கதையில் சாஹிர் லூதியான்வி கேரக்டரில் ஷாருக்கானும், அம்ரிதா பிரிதம் கேரக்டரில் ஐஸ்வர்யா ராயும் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

Shahrukh Khan and Aishwarya Rai to Romance for Sanjay Leela Bhansalis movie

ஸ்பைடரை முடித்துவிட்டு சரத்குமாருடன் இணையும் மகேஷ் பாபு

ஸ்பைடரை முடித்துவிட்டு சரத்குமாருடன் இணையும் மகேஷ் பாபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Spyder Mahesh Babu teams up with Sarath Kumarஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இதனையடுத்து, இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கும் புதிய தெலுங்குப் படத்தில் மகேஷ்பாபு நடிக்கிறார்.

இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு அப்பாவாக சரத்குமார் நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வந்துள்ளன.

After Spyder Mahesh Babu teams up with Sarath Kumar

More Articles
Follows