150+ தியேட்டர்களில் FDFS.. 600+ ரிலீஸ்.; அதிகாலை காட்சி வருபவர்களுக்கு கௌதம் மேனன் வேண்டுகோள்

150+ தியேட்டர்களில் FDFS.. 600+ ரிலீஸ்.; அதிகாலை காட்சி வருபவர்களுக்கு கௌதம் மேனன் வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ & ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களை தொடர்ந்து 3வது முறையாக சிம்பு மற்றும் கௌதம் இணைந்துள்ள படம் வெந்து தணிந்தது காடு.

இந்த படம் இரு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் மட்டும் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில் அதிகாலை 4AM & 5AM காட்சிகள் கிட்டத்தட்ட 150 க்கு மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது.

மேலும் தமிழக முழுவதும் 600 தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது.

இந்த நிலையில் VTK ரிலீஸ் குறித்து கௌதம் மேனன் தெரிவித்துள்ளதாவது..

“VTK படத்தின் டிரைலரில் ஒரு மனநிலை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அதே மனநிலை திரையிலும் இருக்கும்.

நாங்கள் டிரைலரில் ரசிகர்களை ஏமாற்ற விரும்பவில்லை. வெந்து தணிந்தது காடு படத்தை அதிகாலை பார்க்க வருபவர்கள் நன்றாக தூங்கி எழுந்து விட்டு வரவும்” என தெரிவித்துள்ளார்.

Gautam Menon talks about FSFS for VTK movie

சிம்பு.. உங்களோட ‘நானே வருவேன்’.; தனுஷ் – செல்வராகவன் எடுத்த முடிவு

சிம்பு.. உங்களோட ‘நானே வருவேன்’.; தனுஷ் – செல்வராகவன் எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலந்தொட்டு இன்றுவரை இரு நடிகர்களை மையப்படுத்தியே ரசிகர்களின் மோதலும் படத்தின் வெற்றியும் தீர்மானிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 40 வருடங்களாக ரஜினி, கமல் போட்டி நிலவி வருகிறது.

தற்போது விஜய் – அஜித், சூர்யா – விக்ரம், தனுஷ் – சிம்பு ஆகியோரிடையே போட்டி நிலவு வருகிறது.

இந்த நடிகர்கள் நண்பர்களாக இருந்தாலும் இவர்களது ரசிகர்கள் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இது போல மோதல்களை அடிக்கடி பார்த்து வருகின்றோம்.

இந்த நிலையில் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தனிந்தது காடு பார்ட் 1’ என்ற படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.

வெந்து தனிந்தது காடு

இதே நாளில் தனுஷ் பட டீசரும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரு வேடங்களில் நடித்துள்ள படம் ‘நானே வருவேன்’.

நானே வருவேன்

தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் தான் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 29 இல் இந்த படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.

Simbus VTK release and Dhanushs Naane Varuven Teaser release updates

நன்றி மறவாமல் சூர்யா – கார்த்தி செய்த காரியத்தை பார்த்தீர்களா.??

நன்றி மறவாமல் சூர்யா – கார்த்தி செய்த காரியத்தை பார்த்தீர்களா.??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடித்த ‘விருமன்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 12-ல் வெளியானது.

கிராமத்து செண்டிமெண்ட் மற்றும் ஆக்ஷன் கலந்த இந்த படத்தை இயக்கியிருந்தார் முத்தையா.

விருமன்

இதில் கார்த்தி உடன் அதிதி சங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

இந்தப் படத்தின் வெற்றியை முன்னிட்டு சூர்யா, கார்த்தி, முத்தையா உள்ளிட்டோருக்கு விநியோகஸ்தர் சக்திவேலன் வைரக் காப்பு பரிசளித்திருந்தார்.

விருமன்

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில் படத்தின் வெற்றிக்கு உழைத்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்து அவர்களது புகைப்படங்களை போஸ்டர்களில் படக்குழு வெளியிட்டுள்ளது.

விருமன்

Suriya Karthi thanks each and everyone of Viruman team

‘சந்திரமுகி 2’க்கு சிக்ஸ்பேக்.; அறக்கட்டளைக்கு நன்கொடை வேண்டாம் – ராகவா லாரன்ஸ்

‘சந்திரமுகி 2’க்கு சிக்ஸ்பேக்.; அறக்கட்டளைக்கு நன்கொடை வேண்டாம் – ராகவா லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டான்ஸ் மாஸ்டர் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் ஆன்மீகவாதி சமூக சேவையாளர் என பன்முகம் கொண்டவர் ராகவா லாரன்ஸ்.

இவர் சற்றுமுன் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்…

தனது ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் என நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்…

அனைவருக்கும் வணக்கம், இரண்டு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, சந்திரமுகி 2 படத்திற்காக எனது உடலை மாற்றுவதற்கு நான் எடுக்கும் ஒரு சிறிய முயற்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்த எனது பயிற்சியாளர் சிவா மாஸ்டருக்கு நன்றி. உங்கள் அனைவரின் ஆசியும் எனக்கு வேண்டும்.

இரண்டாவதாக, இத்தனை ஆண்டுகளாக என்னுடைய ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று உங்கள் நன்கொடைகளால் எனது சேவைக்கு ஆதரவளித்தீர்கள். என்னால் இயன்றதைச் செய்துள்ளேன், தேவைப்படும் போதெல்லாம் உங்களிடமிருந்து உதவியைப் பெற்றுள்ளேன். இப்போது, ​​நான் நல்ல இடத்தில் இருக்கிறேன், மேலும் பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறேன்.

இனி மக்களுக்குச் சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே, ( Larencce Charitable trust ) அறக்கட்டளைக்கு உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் ஆசிர்வாதம் மட்டும் எனக்கு போதும். இத்தனை வருடங்களாக நான் பெற்ற ஆதரவுக்கும் அன்புக்கும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை விரைவில் ஏற்பாடு செய்கிறேன்!

அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள்.

#சேவையே கடவுள்

அன்புடன்
ராகவா லாரன்ஸ்.

No need of donation any more says Raghava Lawrence

கூல் சுரேஷின் ரசிகையாக மாறிய ‘வெந்து தணிந்தது காடு’ பட ஹீரோயின்

கூல் சுரேஷின் ரசிகையாக மாறிய ‘வெந்து தணிந்தது காடு’ பட ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு எவருமே எதிர்பாராத வகையில் விளம்பரங்களை செய்தவர் நடிகர் கூல் சுரேஷ்.

தீவிர சிம்பு ரசிகரான இவர் பல படங்களில காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்துள்ளார்.

இவர் எது பேசினாலும் ‘வெந்து தணிந்தது காடு… வணக்கத்தை போடு..” என்று படத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பார்.

இதன் மூலம் இவருக்கும் படத்திற்கும் ஏகப்பட்ட பப்ளிசிட்டி கிடைத்தது.

செப்டம்பர் 15ஆம் தேதி ‘வெந்து அணிந்தது காடு’ படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் நாயகி சித்தி இதானி ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில்… “கூல் சுரேஷ் இந்த படத்திற்கு அதிக அளவில் பிரமோஷன் செய்துள்ளார். நான் அவருடைய ரசிகை ஆகிவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

Heroine of ‘Vendhu Tananthana Kadu’ became cool Suresh’s fan

பிரபலங்கள் முன்னிலையில் நடிகர் வின் ஸ்டார் விஜய் நடத்திய முப்பெரும் விழா

பிரபலங்கள் முன்னிலையில் நடிகர் வின் ஸ்டார் விஜய் நடத்திய முப்பெரும் விழா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை சாலிகிராமம் குமரன் காலணியில் உள்ள சிகரம் ஹாலில் முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.

பாக்கியம் சினிமா 11ஆம் ஆண்டு விழா – முள்ளும் மலரும் 6ஆம் ஆண்டு விழா, – சாண்டோ சின்னப்பா தேவர் பட திறப்பு விழா மற்றும் பல்வேறு துறையில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கும் விழா என இந்த நிகழ்ச்சி வெகு விமரிசையாக பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த விழாவில் நீதி அரசர் ஜோதிமணி, இயக்குனர் பேரரசு, இயக்குனர் அரவிந்தராஜ், தயாரிப்பாளர் சிகரம் சந்திரசேகர், தயாரிப்பாளர் விஜய் முரளி, பிஆர்ஓ பெரு துளசி பழனிவேல், மக்கள் குரல் ராம்ஜி, மியூசிக் யூனியன் தலைவர் தீனா, பொறியாளர் தா மணிமாறன், இலக்கிய திறனாய்வாளர் கொடைக்கானல் காந்தி அட்வகேட் நீதி செல்வன், தயாரிப்பாளர் காந்திமதி, இயக்குனர் ஹாருன், நடிகை அபிராமி, டாக்டர் அக்பர் கான், நடிகை டயானா ஸ்ரீ
ருத்ர மனோகரன் முள்ளும் மலரும் ஆசிரியர் பொறியாளர் பன்னீர் ராமச்சந்திரன் ஆகியோர்
கலந்து கொண்டனர்.

இயக்குனரும் நடிகருமான பாக்கியம் சினிமா இதழ் ஆசிரியரும் வெளியீட்டாளருமான விண் ஸ்டார் விஜய் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

More Articles
Follows