இரண்டு மில்லியன் பாலோயர்களை பெற்று சிம்பு சாதனை

simbu artசிம்பு நடித்த வாலு, இது நம்ம ஆளு உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸின்போது பெரும் பிரச்சினைகளை சந்தித்தது.

இதனிடையில் சிம்பு பாடிய பீப் சாங் பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

அண்மையில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் தாமதத்திற்கு கூட சிம்புவே காரணம் என சொல்லப்பட்டது.

இதன் பின்னரும் கூட சிம்புவை இயக்க தான் காத்திருப்பதாக கௌதம் மேனன் தெரிவித்திருந்தார்.

இப்படி திரையுலகில் சிம்புக்கு எதிராக எத்தனை பிரச்சினைகள் வந்தாலும், அவருக்கான ரசிகர் பட்டாளம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

அதனை நிரூபிக்கும் வகையில் சிம்புவின் ட்விட்டர் பக்கத்தை தற்போது இரண்டு மில்லியன் (20 இலட்சம்) பேர் பின் தொடர்கின்றனர்.

தமிழ் நடிகர்களில் ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஒரு சில நடிகர்கள் மட்டுமே 2 முதல் 3 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu got 2 million followers on Twitter

Overall Rating : Not available

Leave a Reply

Your rate

Latest Post