முத்தின கத்திரிக்கா முன்னோட்டம்..!

முத்தின கத்திரிக்கா முன்னோட்டம்..!

இயக்குனராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுந்தர் சி., நாளடைவில் நாயகனாக மாறினார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, மீண்டும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வந்தார்.

தற்போது தன் உதவி இயக்குனர் வேங்கட் ராகவன் இயக்கியுள்ள ‘முத்தின கத்தரிக்கா’ படத்தில் நாயகனாக மாறி இப்படத்தை தயாரித்துள்ளார்.

இது மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘வெள்ளி மூங்கா’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

ஆனால் தமிழுக்கு ஏற்றவாறு, காமெடி, அரசியல் நையாண்டி என அனைத்தும் கலந்த கலவையாக கொடுத்துள்ளனர்.

கவர்ச்சியிலும் அழகிலும் நம்மை கலங்கடித்த பூனம் பாஜ்வா இதில் நாயகியாக நடித்துள்ளார்.

இவர் போதா குறைக்கு பூனம் பாஜ்வாவின் அம்மாவாக ‘ஜெமினி’ புகழ் கிரண் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் சதீஷ், விடிவி கணேஷ், சிங்கம்புலி, சிங்கப்பூர் தீபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதில் விடிவி கணேஷ் காமெடி கலந்த வில்லத்தனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

சுந்தர்சி -குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

வருகிற ஜீன் 17ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகிறது. அன்று இப்படத்தின் திரைவிமர்சனத்தை பார்ப்போம்.

Leave a Reply

Your rate

Latest Post

Related News

பிரபல ஒளிப்பதிவாளரான பாபா பாஸ்கர் தற்போது…
...Read More