விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தில் சிம்புக்கு பதிலாக மாதவன்

விண்ணைத்தாண்டி வருவாயா 2 படத்தில் சிம்புக்கு பதிலாக மாதவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and madhavanகௌதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

சிம்புவின் திரை பயணத்தில் இப்படம் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளது. அதில் நடிகர் மாதவன் நாயகனாக கமிட் ஆகியுள்ளார்.

இந்நிலையில் சிம்பு இப்படத்தில் கமிட் ஆகாததுக்கு காரணம் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் தான் என்று கூறப்படுகிறது.

கவுதம் மேனனின் இந்த முடிவு சிம்பு ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம்.

கலாம் இறுதிசடங்கு குறித்த பேச்சு; முதல்நாளிலேயே சொதப்பிய கமல்

கலாம் இறுதிசடங்கு குறித்த பேச்சு; முதல்நாளிலேயே சொதப்பிய கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal controversial speech about Abdul Kalam death final eventதனது அரசியல் பிரவேசத்தை நடிகர் கமல்ஹாசன் இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தொடங்கினார்.

அதன்பின்னர் அவர் வருகைக்காக ஏற்பாடாகி இருந்த ‘நம்மவர் சந்திப்பு’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது ராமேஸ்வர மீனவர்கள் தங்களின் கோரிக்கையை அவரிடம் தெரிவித்தனர்.

அதனையடுத்து நடிகர் கமல், பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது அவரிடம் ‘அப்துல் கலாம் இறுதி சடங்கில் பங்கேற்காத நீங்கள், அவரது இல்லத்தில் இருந்து கட்சியை தொடங்குவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கமல், “நான் இறுதி ஊர்வலங்களில் பங்கேற்பதில்லை. அப்படியொரு பழக்கமில்லை. அது என் நம்பிக்கை” என்று குறிப்பிட்டார்.

தற்போது கமலின் இந்த பேச்சு தமிழக மக்களிடையே பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

இதுகுறித்த பல தகவல்கள் தற்போது இணையங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

கமலின் குருநாதர் இயக்குநர் ஆர்.சி. சக்தி மறைந்த போது அவரது வீட்டிற்கு வருகை தந்த கமல் அவரது உடலுக்கு அஞ்சலியும் செலுத்தினார்.

கூடவே ‘உடலை எடுக்கும் போது செய்தி சொல்லுங்கள் வருகிறேன்’ என்று கூறிவிட்டு சென்ற அவர் மீண்டும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று மயானம் வரை வந்திருந்தார்.

அதேபோல நடிகை ஆச்சி மனோரமா மரணத்தின் போதும் கலந்து கொண்டார்.

பத்திரிகையாளர் திரு வல்லபன் மறைவுக்கு வந்த அவர் பல மணிநேரம் அமர்ந்திருந்தார்.

இவையெல்லாம் சிலருக்கு தெரியாமல் இருந்திருக்கலாம்.

ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மரணத்தின் போதும் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட போது கமலும் ரஜினியும் அந்த ஊர்வல வண்டியில் பல மணிநேரங்கள் அமர்ந்திருந்தனர்.

அதுபோல் நடிகர் நாகேஷ் மறைவின் போது கமல் கலந்துக் கொண்டார்.

இவ்வாறு பல உண்மைகள் வரலாற்றில் இருக்க இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதில்லை என்ற கொள்கையோடு வாழ்கிறேன் கமல் சொன்னதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்த முதல் நாளில் கமலின் இந்த பேச்சு இப்படி சொதப்பி விட்டதே என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Kamal controversial speech about Abdul Kalam death final event

sivaji (2)

Breaking: இனி நான் சினிமா நட்சத்திரம் அல்ல; உங்க வீட்டு விளக்கு.. : கமல்

Breaking: இனி நான் சினிமா நட்சத்திரம் அல்ல; உங்க வீட்டு விளக்கு.. : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal speech at Public meeting regarding his political entryகமல்ஹாசன் இன்று தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்து விட்டார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் வீட்டில் இருந்து தன் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இதனையடுத்து அப்துல் கலாம் பயின்ற பள்ளியின் வாசலுக்கு சென்று பார்த்தார்.

பின்னர் ராமநாதபுரம் மீனவர்களை சந்தித்து பேசினார். அதன்பின்னர் பத்திரிகையாளர்களிடையே பேசினார்.

தற்போது ராமநாதபுரம் அரண்மனையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசி வருகிறார்.

அங்கு பேசும்போது…

மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்துள்ளேன். மதுரைக்கு சென்று பேசலாம் என நினைத்தேன்.

ஆனால் உங்கள் அன்பை பார்க்கும்போது இங்கேயே பேச தோன்றுகிறது.

இதுவரை நீங்கள் என்னை சினிமா நட்சத்திரமாக பார்த்தீர்கள்.

என்னை பற்றி நான் என்ன நினைகிறேன் என்பதை நான் உங்களிடம் சொல்கிறேன்.

இனி நான் சினிமா நட்சத்திரமல்ல. உங்கள் வீட்டு விளக்கு.

அதை பத்திரமாக ஏற்றி வைத்து, பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.
அதை நீங்கள் செய்வீர்கள் என் நம்புகிறேன்” என் பேசினார்.

இதனையடுத்து இன்று மாலை மதுரை பொதுக்கூட்டத்தில் தன் கட்சி பெயர் மற்றும் கொள்கைகளை அறிவிக்கவுள்ளார்.

Kamal speech at Public meeting regarding his political entry

அப்துல்கலாம் பள்ளிக்கு அனுமதி மறுப்பில் அரசியல் உள்ளது… : கமல்

அப்துல்கலாம் பள்ளிக்கு அனுமதி மறுப்பில் அரசியல் உள்ளது… : கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Hindu Munnani against Kamal visiting Abdul Kalams schoolஉலகநாயகன் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் கமல்ஹாசன், இன்றுமுதல் அரசியல் களத்தில் நேரிடையாக இறங்கியுள்ளார்.

இதனையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தன் பயணத்தை தொடங்கியுள்ளார்.

இல்லம் சென்ற பின் காலை 8.15 மணிக்கு அப்துல் கலாம் படித்த பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாட முடிவு செய்திருந்தார்.

ஆனால் அரசியல் நோக்கத்தோடு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட கூடாது என கூறி இந்து முன்னணி அளித்த புகாரை அடுத்த பள்ளிக்கல்வித்துறை இதற்கு அனுமதி மறுத்தது.
இந்நிலையில் கலாம் படித்த பள்ளிக்கு செல்லும் திட்டத்தை கமல் ரத்து செய்துள்ளார்.
இருந்தபோதிலும் அந்த பள்ளியின் வாசல் வரை சென்று பார்த்தார் கமல்.

இதுகுறித்து கமல் கூறும்போது அப்துல் கலாம் பள்ளிக்கு செல்ல நினைத்தேன். ஆனால் அனுமதிக்கவில்லை.

பள்ளிக்கு செல்லாமல் அவர்கள் தடுக்கலாம். ஆனால் என் படிப்பை தடுக்கமுடியாது.

பள்ளிக்கு அனுமதி மறுப்பில் அரசியல் உள்ளது” என தெரிவித்தார் கமல்.

Hindu Munnani against Kamal visiting Abdul Kalams school

கலாம் இல்லத்திலிருந்து தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்தார் கமல்

கலாம் இல்லத்திலிருந்து தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்தார் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal started his political tour from APJ Abdul Kalam home at Rameswaramதமிழக அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் ராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, இன்று காலை 8 மணிக்கு அப்துல் கலாம் வீட்டிற்கு சென்ற கமலை, கலாம் பேரன் சலீம் வாசலில் நின்று வரவேற்று அழைத்துச் சென்றார்.

அப்போது, கலாம் புகைப்படம் பொறித்த நினைவுப்பரிசு ஒன்றை சலீம் கமலிடம் வழங்கினார்.

வீட்டின் உள்ளே, அப்துல் கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயரை சந்தித்த கமல் அவரிடம் நலம் விசாரித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.

கலாமின் சகோதரருக்கு வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார் கமல்.

மேலும் தன் காலை உணவை அந்த இல்லத்திலேயே சாப்பிட்டார்.

பின்னர் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.

அதில்…

பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்” என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

Kamal started his political tour from APJ Abdul Kalam home at Rameswaram

Kamal haasan at abdul kalam house (4)

நான் பூ அல்ல; விதை… மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு கமல்ஹாசன் பதிலடி

நான் பூ அல்ல; விதை… மு.க. ஸ்டாலின் பேச்சுக்கு கமல்ஹாசன் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal and stalinகமல் மற்றும் ரஜினியின் அரசியல் வருகையை மறைமுக தாக்கி பேசியிருந்தார் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின்.

அப்போது அவர்கள் காகித பூக்கள். அது மணக்காது என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கமல் இன்று பேசியுள்ளார்.

“நான் பூ அல்ல; விதை. என்னை நுகர்ந்து பார்க்காதீர்கள். விதைத்துப் பாருங்கள் வளருவேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

நாளை கமல் தன் அரசியல் பயணத்தை தொடங்குகிறார்.

More Articles
Follows