எதிர்ப்பு கிளம்பியதால் ட்வீட்டை டெலிட் செய்தாரா சிவகார்த்திகேயன்?

எதிர்ப்பு கிளம்பியதால் ட்வீட்டை டெலிட் செய்தாரா சிவகார்த்திகேயன்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanசின்னத் திரையில் இருக்கும்போதே தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்தவர் சிவகார்த்திகேயன்.

தற்போது வெள்ளித்திரையில் நுழைந்த பின் இந்த வட்டம், இன்னும் விரிவடைந்து பெரியளவில் உருவாகியுள்ளது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ரெமோ படத்தில் பெண் வேடமிட்டு, நர்ஸ் ஆக நடித்துள்ளார்.

எனவே இவரது ரசிகர் ஒருவரும் இதுபோல், பெண் வேடம் அணிந்து, அந்த புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார்.

இதைப் பார்த்த சிவகார்த்திகேயனும் சூப்பர் நண்பா, இப்படி செய்ய தனி தைரியம் வேண்டும் என பாராட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுபோன்ற ரசிகர்களின் செயல்களை நீங்கள் சர்போர்ட் செய்யலாமா? என சிலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்களாம்.

இதனால், ட்வீட்டை சிவகார்த்திகேயன் டெலிட் செய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

விஷால் பிறந்தநாள் விழா; குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

விஷால் பிறந்தநாள் விழா; குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal varalakshmi sarathkumarநடிகர் விஷாலுக்கு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

இன்று சென்னை மாவட்ட புரட்சிதளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் மெர்சி ஹோம்ஸ் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருக்கு காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதை தொடர்ந்து நடிகர் விஷால் திருவல்லிகேணியில் உள்ள கஸ்தூரி காந்தி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.

இவருடன் நடிகை வரலட்சுமி, நடிகர் சவுந்தரராஜா மற்றும் விஷால் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

தனுஷுக்குக்காக அமலாபால் எடுக்கும் ரிஸ்க்

தனுஷுக்குக்காக அமலாபால் எடுக்கும் ரிஸ்க்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush amala paulதனுஷ் நடிப்பில் தொடரி, கொடி ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

இதனையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வட சென்னை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் கதைக் களம் மீன சமுதாயத்தை கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகிறது.

இதில் நந்திதா மீனவ பெண்ணாக நடித்து வருகிறார்.

தற்போது இவரைத் தொடர்ந்து இப்போது அமலா பாலும் மீனவ பெண்ணாக நடித்து வருகிறார்.

மூன்று பாகங்களாக உருவாகும் இப்படத்தில் அமலா பால் 3 பாகங்களிலும் நடிக்கிறாராம்.

இதற்காக மேக்கப் போடாமல் ரிஸ்க் எடுத்து அசல் மீனவ பெண்ணாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஒருவழியாக சுந்தர் .சி-க்கு சூப்பர் ஹீரோ கிடைச்சிட்டாரு

ஒருவழியாக சுந்தர் .சி-க்கு சூப்பர் ஹீரோ கிடைச்சிட்டாரு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor-Jayam-Ravi-Stills-3சங்கமித்ரா என்னும் படத்தை ரூ. 350 கோடியில் மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கிறது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்.

சுந்தர்.சி இயக்கவுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, கலை பணியை சாபுசிரில் கவனிக்கிறார்.

எழுத்தாளர் பிரபஞ்சன் மற்றும் இயக்குநர் பத்ரி ஆகியோர் சுந்தர் சியுடன் இணைந்து கதையை மெறுகேற்றி வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராக உள்ளதால் நீண்ட நாட்கள் கால்ஷீட் தேவைப்பட்டதால், முன்னணி ஹீரோக்கள் மறுத்து வந்தனர்.

இந்நிலையில் இக்கதையில் ஜெயம் ரவி நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரியவந்துள்ளது.

ஒப்பந்தம் கையெழுத்து ஆனவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

இப்படத்தை 2018ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வரத்திட்டமிட்டுள்ளனர்.

இப்படம் இரண்டு ஹீரோக்கள் கதையாக இருக்கும்பட்சத்தில் மகேஷ் பாபு நடிப்பார் எனவும் சொல்லப்பட்டு வருகிறது.

2 கோல்டு-2 சில்வர்… சுட்டுத் தள்ளிய சூர்யாவின் பார்ட்னர்

2 கோல்டு-2 சில்வர்… சுட்டுத் தள்ளிய சூர்யாவின் பார்ட்னர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya rajasekar pandiyanதான் நடிக்கும் படங்கள் மட்டுமில்லாமல் மற்ற படங்களையும் தன் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட் சார்பாக தயாரித்து வருகிறார் சூர்யா.

இந்நிறுவனத்தின் பார்ட்னராக ராஜசேகர் பாண்டியன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு சாம்பியன் சுடுதல் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போட்டியில் நடைபெற்ற 3 பிரிவுகளில் இரண்டு தங்க பதக்கங்களையும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களையும் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறாராம்.

இவர் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருமுகனை கேரளாவில் தொடங்கும் விக்ரம்; நயன்தாரா வருவாரா?

இருமுகனை கேரளாவில் தொடங்கும் விக்ரம்; நயன்தாரா வருவாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram nayantharaமுதன்முறையாக விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் இணைந்துள்ள படம் இருமுகன்.

ஆனந்த் சங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் கருணாகரன், நாசர், தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு தெலுங்கில் Inkokkadu (இன்னொருத்தன்) எனப் பெயரிட்டுள்ளனர்.

தெலுங்கு உரிமையை நீலம் கிருஷ்ண ரெட்டி, ரூ. 11 கோடிக்கு வாங்கியிருக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தை நாளை சென்சாருக்கு அனுப்ப உள்ளனர்.

செப்டம்பர் 8ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் இதன் புரோமோஷன் பணிகளுக்காக நாளை கேரளா செல்கிறார் விக்ரம்.

அங்கேயாச்சும் நயன்தாரா வருவாங்களா சீயான்?

More Articles
Follows