தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மருது படத்தை தொடர்ந்து, லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்தில் விஷால் நடிப்பார் என கூறப்பட்டது.
இதற்காக தனது கால்ஷீட் தேதிகளை விஷால் ஒதுக்கியும் இருந்தார்.
ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அப்படம் கைவிடப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் விஷால்.
தற்போது இருவரும் சந்தித்து பிரச்சினைகளைப் பேசி சமாதானம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
எனவே, விரைவில் ‘சண்டக்கோழி 2’ தொடங்கப்படவுள்ளது.
அல்லு அர்ஜூன் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, இப்படத்தை லிங்குசாமி தொடங்குவார் என தெரிய வந்துள்ளது.