நாய்களை வைத்து படம் இயக்கும் நடிகர் விஷால்

நாய்களை வைத்து படம் இயக்கும் நடிகர் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishalசண்டக்கோழி 2 படத்தை அடுத்து தற்போது ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருகிறார் விஷால்.

வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்தில் நாயகியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

மேலும் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார், சச்சு, வம்சி உள்ளிட்ட பலரும் நடிக்க சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தை முடித்துவிட்டு ஒரு படத்தை இயக்கவுள்ளார் விஷால்.

நிஜ வாழ்க்கையில் விலங்குகளை அதிகம் நேசிப்பவர் விஷால். எனவே நாய்களை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்கவுள்ளாராம்.

இப்படம் பற்றிய அறிவிப்பை 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிட உள்ளதாக தெரிகிறது.

மாரி 2 உடன் மோதும் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்

மாரி 2 உடன் மோதும் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and vishnuபாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாரி 2’ படத்தை தயாரித்து நடித்துள்ளார் தனுஷ்.

இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க, கிருஷ்ணா, வரலட்சுமி, வித்யா பிரதீப், டோவினோ தாமஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அராத்து ஆனந்தி என்ற கேரக்டரில் ஆட்டோ டிரைவராக சாய் பல்லவி நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதே நாளில்தான் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்துள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படமும் திரைக்கு வருகிறது.

ரெஜினா கஸாண்ட்ரா நாயகியாக நடித்துள்ள இப்படத்தை எழிலிடம் உதவியாளராக இருந்த செல்லா இயக்கி உள்ளார்.

ஒதில் ஒரு பாடலுக்கு ஓவியா குத்தாட்டம் போட்டுள்ளார்.

சென்சாரில் இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

என்.டி.ராமராவ் படத்தில் சரோஜா தேவி வேடமேற்கும் அனுஷ்கா

என்.டி.ராமராவ் படத்தில் சரோஜா தேவி வேடமேற்கும் அனுஷ்கா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Anushka to do Saroja Devi character in NTR biopicமறைந்த ஆந்திர முதல் மந்திரியும் தெலுங்கு நடிகருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக உருவாகுகிறது.

கிருஷ் டைரக்டர் செய்யும் இந்த படத்தை பாகுபலி போல இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர்.

என்.டி.ஆர் வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார்.

அவரின் மனைவி மனைவி பசவதாரம் கேரக்டரில் வித்யாபாலன் நடிக்கிறார்.

சந்திரபாபு நாயுடுவாக ராணாவும் கிருஷ்ணாவாக மகேஷ்பாபுவும் நடிக்கிறார்கள்.

என்.டி.ராமராவுடன் பல படங்களில் ஜோடி சேர்ந்த சாவித்திரியாக நித்யாமேனனும் ஸ்ரீதேவியாக ரகுல்பிரீத் சிங்கும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்துள்ள சரோஜாதேவி வேடத்தில் அனுஷ்கா நடிக்கவிருக்கிறாராம்.

Anushka to do Saroja Devi character in NTR biopic

விக்ரமின் *கடாரம் கொண்டான்* படத்தலைப்பின் விளக்கம் இதுதான்

விக்ரமின் *கடாரம் கொண்டான்* படத்தலைப்பின் விளக்கம் இதுதான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First look of Vikrams 56th film Kadaram Kondan released by Kamalகமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தி விக்ரம் நடித்து வருகிறார்.

‘தூங்காவனம்’ பட இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா இப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு ‘கடாரம் கொண்டான்’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.

இதன் பர்ஸ்ட் லுக்கை ஓரிரு தினங்களுக்கு கமல் வெளியிட்டார்.

ஆனால் ‘கடாரம் கொண்டான்’ என்றால் என்ன? என்பதை அறிய வேண்டி பலரும் இணையத்தில் தேடியுள்ளனர்.

அதற்கான விளக்கம் இதுதான்…

தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவிலை கட்டியவர் ராஜராஜா சோழன். இவரின் மகனான ராஜேந்திர சோழன், மலேசியாவில் உள்ள கெடா என்ற பகுதி வரை போர் தொடுத்துள்ளார்.
அதில் வென்று அந்த பகுதியை தன் வசப்படுத்தியதால் அவருக்கு ‘கடாரம் கொண்டான்’ என்று பெயர் வந்ததாம்.

இப்படியொரு வரலாற்று சிறப்புமிக்க பெயரை தான் தங்கள் படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர் கமல், விக்ரம் படக்குழுவினர்.

Kadaram Kondan movie title and its historical meaning

உண்மைச் சம்பவத்தை படமாக்கும் *கொம்புவச்ச சிங்கம்டா* டீம்

உண்மைச் சம்பவத்தை படமாக்கும் *கொம்புவச்ச சிங்கம்டா* டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sasikumars Kombu Vecha Singamda movie news updatesதன் முதல் படமான சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமாரை இயக்கினார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

இப்படம் வெற்றிப் பெற்றது. ஆனால் இதற்கு அடுத்து எடுத்த இது கதிர்வேலன் காதல், சத்ரியன் படங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

எனவே மீண்டும் சசிகுமாரை நாயகனாக வைத்து கொம்புவச்ச சிங்கம்டா என்ற படத்தை இயக்கி வருகிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.

இதில் நாயகியாக மடோனா செபாஸ்டின் நடிக்க, கலையரசன், சூரி, யோகிபாபு, இயக்குனர் மகேந்திரன், ஹரீஷ் பெரடி, ஸ்ரீபிரியங்கா, துளசி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய திபு நைனன் தாமஸ் இசையமைத்து வருகிறார்.

படம் பற்றி எஸ்.ஆர்.பிரபாகரன் கூறியதாவது…

இது 1990 முதல் 1994 வரையிலான 4 ஆண்டுகளில் நடக்கும் கதை. மதுரை அருகில் உள்ள சிறு நகரில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைத்திருக்கிறேன்.

அந்த சம்பவம் என்ன? எந்த ஊர் என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. 1990ல் உள்ள சினிமா போஸ்டர்கள், பணம் உள்ளிட்டவைகளை சேகரித்து வருகிறோம். என கூறியுள்ளார்.

Sasikumars Kombu Vecha Singamda movie news updates

கமல் அண்ணன் & கீர்த்தி சுரேஷ் பாட்டி இணைந்த படத்தில் ரஜினி வாய்ஸ்

கமல் அண்ணன் & கீர்த்தி சுரேஷ் பாட்டி இணைந்த படத்தில் ரஜினி வாய்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Oru Nimisham Thala Suthi Ruchu song from DhaDha87கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் நிறைய படங்களில் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

தற்போது அவருக்கு 85 வயதாகிவிட்டது. இருந்தபோதிலும் அவர் ஒரு படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

“தாதா 87” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா நடித்துள்ளார்.

இவர் அண்மையில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்திருந்தார்.

இவர்களுடன் ஜனகராஜ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

விஜய்ஸ்ரீ என்ற புதுமுகம் இயக்கியுள்ள இப்படத்தில் லியாண்டர் லீ மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் “ரஜினியிடம் ஒரு நிருபர் உங்கள் கட்சி கொள்கை என்ன? என்று கேட்டார், ஒரு நிமிஷம் எனக்கு தலை சுத்திருச்சு” என்று ரஜினி கூறியிருந்தார்.

இந்த பேச்சு அப்போது ட்விட்டர் மற்றும் செய்திகளில் பரபரப்பாக பேசப்பட்டது.

“ஒருநிமிஷம் தலை சுத்திருச்சு…” என்ற அந்த டயலாக்கே தற்போது தாதா 87 படத்தில் பாடலாக அமைந்து விட்டது. அந்த பாடல் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்த பாடலின் இறுதியில் ரஜினிகாந்தின் டிரேட் மார்க் சிர்ப்பை பயன்படுத்தியுள்ளனர்.

Oru Nimisham Thala Suthi Ruchu song from DhaDha87

More Articles
Follows