முதல் படத்திலேயே டபுள் ஹீரோயின்ஸ்.; மகனை ஹீரோவாக்கும் இயக்குனர் முத்தையா

முதல் படத்திலேயே டபுள் ஹீரோயின்ஸ்.; மகனை ஹீரோவாக்கும் இயக்குனர் முத்தையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிராமத்து பின்னணியில் திரைப்படம் எடுத்து புகழ் பெற்றவர் இயக்குநர் முத்தையா. இவர் இயக்கத்தில் வெளியான குட்டி புலி, கொம்பன், மருது, கொடிவீரன், புலிகுத்தி பாண்டி, விருமன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த வரிசையில் இயக்குநர் முத்தையா இயக்கும் அடுத்த படத்தின் மூலம் தனது மகனை திரையுலகிற்கு அறிமுகப்படுத்த உள்ளார்.

இயக்குநர் முத்தையாவின் படங்கள் கிராமத்து பின்னணியில் படமாக்கப்படும் நிலையில், இந்த படத்தின் கதை மதுரை மாவட்டத்தை சுற்றி நகர்வதை போன்று எழுதி இருக்கிறார்.

இளைஞர்களை மையப்படுத்திய எமோஷனல் டிராமாவாக இந்த படம் இருக்கும். விஜய் முத்தையா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் தர்ஷினி மற்றும் பிரிகிடா சாகா முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முழுக்க முழுக்க புதுமுகங்களை இந்த படத்தில் நடிக்க வைக்க இயக்குநர் முத்தையா திட்டமிட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்தின் மிகமுக்கிய சண்டை காட்சி ஒருவாரம் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக பெரும் பொருட்செலவில் சினிமா திரையரங்கை செட்டாக உருவாக்கி உள்ளனர். இந்த படத்தை கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்க இருக்கிறார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகள் எம். சுகுமார் மேற்கொள்ள, வெங்கட்ராஜூ படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். கலை இயக்குனராக வீரமணி கணேசன் பணியாற்ற இருக்கிறார்.

முத்தையா

Komban Director Muthaiyas son entering in Tamil Cinema

Director Muthaiya is known for his movie subjects around village backdrop with strong emotions and action sequences. His directorial flicks – Kutty Puli, Komban, Marudhu, Kodi veeran, Pulikuthi Pandi, Viruman have been tremendous success among fans and box office aswell.

Beginning his next director Muthaiya is all set to launch his Son as debutant hero in Tamil Cinema. The movie have Vijay Muthaiya in the lead role. Dharshini brigida saga have done the lady lead.

Like his other movies, the new flick script is designed to happen in and around madurai City. The story of the flick involves many sequences made on teenage emotional drama. The film has new faces to do prominent roles.

Director Muthaiya has planned to complete the shoot in a single schedule. The makers have planned to shoot an action sequence for a week, for which the team has erected a cinema theatre as set in a huge budget. Ramesh Pandian under the banner KKR Cinemas is the producer of the film.

The movie has cinematography done by M Sukumar, Editing by Venkat Raajen. Jen Martin is scoring bgm and songs for the movie. Veeramani Ganesan has been roped in for Art works.

பட்டைய கிளப்பும் பாலாவின் ‘வணங்கான்’ டீசர்.; அசத்தும் அருண்விஜய்

பட்டைய கிளப்பும் பாலாவின் ‘வணங்கான்’ டீசர்.; அசத்தும் அருண்விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘அமைதிப்படை 2’, ‘கங்காரு’, ‘மிகமிக அவசரம்’, ‘மாநாடு’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், பாலாவின் இயக்கத்தில் தயாரித்து வரும் படம் ‘வணங்கான்’.

அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார்.

முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின், சண்முகராஜன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கலை படைப்பா, கமர்ஷியல் படைப்பா என பிரித்துப் பார்க்க முடியாதபடி இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் பாலா.

தரமான படைப்புகளின் மூலம் ரசிகர்களின் ரசனைக்குத் தீனி போடும் விதமாக படங்களைத் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகி வரும் படம் என்பதாலேயே ‘வணங்கான்’ படம் குறித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஏற்கெனவே ‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘வணங்கான்’ படத்தின் டீசரும் அதை உறுதி செய்வது போல ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

டீசர் வெளியான ஒரே நாளிலேயே இதுவரை 4 மில்லியன் ரசிகர்கள் இதைப் பார்த்து ரசித்துள்ளனர்.

அருண்விஜய்யின் மாறுபட்ட கதாபாத்திரமும் அவரது தோற்றமும், ஸ்டண்ட் சில்வாவின் கைவண்ணத்தில் தெறிக்க வைக்கும் ஆக்சன் காட்சிகளும், நாடித்துடிப்பை எகிறவைக்கும் ஜிவி பிரகாஷின் இசையும், ‘வணங்கான்’ படத்தின் டீசரை ரிப்பீட் மோடில் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.

ஒளிப்பதிவை ஆர்.பி.குருதேவ் மேற்கொள்ள, சதீஷ் சூர்யா படத்தொகுப்பாளராகப் பணியாற்ற, கலை இயக்குநராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார்.

தற்போது ‘வணங்கான்’ படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

வணங்கான்

ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோ ஆரம்பித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோ ஆரம்பித்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக ‘கங்குவா’ உள்ளது. இணையற்ற தயாரிப்பு மதிப்பு, திறமையான நடிகர்கள் என படத்தில் ஒவ்வொரு விஷயம் கவனமாகவும் கச்சிதமாகவும் செதுக்கப்பட்டுள்ளது.

நிச்சயம் சூர்யாவின் சினிமா பயணத்தில் மிகச்சிறந்தப் படைப்பாக இந்தப் படம் இருக்கும். ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா படத்தைத் தயாரிக்க, இயக்குநர் ‘சிறுத்தை’ சிவா படத்தை இயக்கியுள்ளார்.

அசத்தலான லொகேஷன், ஆடம்பரமான செட் மற்றும் பிரம்மாண்டமான புரொடக்‌ஷன் டிசைனை ‘கங்குவா’ கொண்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது ஒட்டுமொத்த படக்குழுவினரும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், நடிகர் சூர்யா ‘கங்குவா’ படத்தில் தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணியை தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல்ராஜா, தனது அன்பு மகள் பெயரில் தொடங்கியுள்ள ஆத்னா ஆர்ட்ஸ் ஸ்டுடியோவில் தொடங்கியுள்ளார். இந்த ஸ்டுடியோ உலகத்தரத்தில் அமைந்துள்ளது.

சூர்யா

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதால், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் எதிர்பார்ப்பு முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. இந்த படம் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் வகையில் பல மொழிகளில் வெளியாகிறது.

சிறப்பான சினிமா அனுபவத்தை இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும் என ரசிகர்களுக்கு படக்குழு உறுதி கொடுக்கிறது.

‘கங்குவா’ படத்தில் சூர்யா நாயகனாக நடித்திருக்க, பாலிவுட் நடிகை திஷா பதானி நாயகியாக நடித்துள்ளார்.

’அனிமல்’ படத்தில் தனது நடிப்பிற்காகப் பாராட்டுகளைப் பெற்ற பாபி தியோல் இதில் வில்லனாக மிரட்டலான நடிப்பைக் கொடுத்துள்ளார்.

இதுமட்டுமல்லாது நடிகர்கள் நடராஜன் சுப்ரமணியம், யோகி பாபு மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.

ஐகானிக் இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி இருக்கும் சார்ட்பஸ்டர் பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி இருக்கின்றனர். அவர்தான் இந்தப் படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

சூர்யா

Gnanavelraja launched Aadnah arts studio Suriya started dubbing

மலையாள இலக்கிய நாவலான ‘ஆடுஜீவிதம்’ தழுவல் ’தி கோட் லைஃப்’ ரிலீஸ் அப்டேட்

மலையாள இலக்கிய நாவலான ‘ஆடுஜீவிதம்’ தழுவல் ’தி கோட் லைஃப்’ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு சர்வைவல் அட்வென்ச்சராக உருவாகியுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் ‘தி கோட் லைஃப் (The Goat Life)’ திரைப்படம் 28 மார்ச், 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்திய சினிமாவின் மூன்று உச்ச நட்சத்திரங்கள் இந்தப் படத்தின் வித்தியாசமான போஸ்டர்களை வெளியிட்டனர். இது ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது.

புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த இளைஞன் நஜீப்பின் வாழ்க்கையின் உண்மைக் கதையைதான் இந்த நாவல் விளக்குகிறது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸி இயக்கத்தில் விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள ’தி கோட் லைஃப்’ படத்தில், ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், இந்திய நடிகர்களான அமலா பால் மற்றும் கே.ஆர். கோகுல், பிரபல அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் அபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தி கோட் லைஃப்

வரவிருக்கும் படத்தின் இசை இயக்கம் மற்றும் ஒலி வடிவமைப்பை அகாடமி விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டி ஆகியோர் செய்துள்ளனர்.

படத்தின் பிரமிக்க வைக்கும் காட்சிகளை சுனில் கே.எஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ. ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம் மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத மிகப்பெரிய முயற்சியாகும்.

இதன் தயாரிப்பு தரம், கதைசொல்லல் மற்றும் நடிப்புத் திறன் ஆகியவற்றில் புதிய வரையறைகளை அமைத்துள்ளது. சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் கொடுக்கும்.

இந்திய சினிமாவின் மிகப் பெரிய பாலைவனப் படமான ’தி கோட் லைஃப்’ திரையரங்குகளில் 28 மார்ச், 2024 அன்று இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

தி கோட் லைஃப்

*விஷுவல் ரொமான்ஸ் பற்றி:*

விஷுவல் ரொமான்ஸ் என்பது கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகும். 7 ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில், இந்த நிறுவனம் சிறந்த படைப்புகளைக் கொடுத்து முக்கியமான தயாரிப்பு நிறுவனமாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ‘100 இயர்ஸ் ஆஃப் க்ரிசோஸ்டம்’ என்ற 48 மணிநேரம் நீடித்த ஒரு ஆவணப்படத் தயாரிப்பின் மூலம் விஷுவல் ரொமான்ஸ் சினிமா உலகில் ஒரு மைல்கல்லை எட்டியது.

இந்தப் படம் பரவலாகப் பாராட்டப்பட்டது மட்டுமல்லாது, கின்னஸ் புத்தகத்திலும் இது இடம்பெற்றுள்ளது. இது சினிமா மீது விஷுவல் ரொமான்ஸின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இயக்குநர் பிளெஸி இந்தப் படத்தில் சிறப்பான கதையை சொல்லியுள்ளார்.

ஒரு தேசிய திரைப்பட விருது மற்றும் ஆறு கேரள மாநில திரைப்பட விருதுகள் உட்பட, இந்திய சினிமாவின் தலைசிறந்த விருதுகளை பிளெஸி பெற்றுள்ளார். பிளெஸி ஐப் தாமஸின் திறமையான இயக்கத்தின் கீழ், விஷுவல் ரொமான்ஸ் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது. நிச்சயம் பார்வையாளர்களுக்கு புதுவிதமான சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும்.

தி கோட் லைஃப்

Prithviraj staring The Goat Life movie release news

ஹைதராபாத்திற்கு 1948ல் சுதந்திரம் கிடைச்சுது.; இந்த வரலாற்று படம் பெருமை.. – வேதிகா

ஹைதராபாத்திற்கு 1948ல் சுதந்திரம் கிடைச்சுது.; இந்த வரலாற்று படம் பெருமை.. – வேதிகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நடிகை வேதிகா பேசியதாவது…

வாழ்த்த வந்துள்ள அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்திற்காக என்னை அழைத்தபோது எனக்கே உண்மையான வரலாறு தெரியாது. ஹைதராபாத் மாநிலத்திற்கு 1948 ல் செப்டம்பரில் தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் அது பலருக்கு தெரியாது.

அந்த வரலாற்றின் உண்மையைச் சொல்லும் படத்தில் நானும் இருப்பது பெருமை. வரலாற்றுப் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். நம் சுதந்திர வாழ்க்கைக்காக எத்தனை மனிதர்கள் தியாகம் செய்துள்ளார்கள். போராடியிருக்கிறார்கள் அவர்களின் கதையை இந்தப் படம் சொல்லும். தயாரிப்பாளர் குடூர் சார் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்துள்ளார், நன்றி. பாபி நேஷனல் அவார்ட் வின்னிங் ஆக்டர். அவரை இந்தப் பாத்திரத்தில் பார்த்த போது பிரமிப்பாக இருந்தது. அவருக்கு என்னை, மேக்கப்போடு பார்த்தபோது அடையாளமே தெரியவில்லை. அப்புறம் தான் கண்டுபிடித்தார். மிகச் சிறந்த நடிகர் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. இயக்குநருக்கு என் சிறப்பு நன்றி. என்னுடன் வேலை பார்த்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. எப்போதும் போல் எனக்கும் படத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இசையமைப்பாளர் பீம்ஸ் பேசியதாவது..

என் தாத்தா குடூர் நாராயண ரெட்டி வரலாற்றைக் கூறியிருக்கிறார். இந்தப்படத்தில் மூலம் நம் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். இப்படி ஒரு சிறப்பான படைப்பில் நானும் பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது அனைவருக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் குசேந்தர் ரமேஷ் ரெட்டி பேசியதாவது…

எங்கள் படத்திற்கு ஆதரவு தர வந்துள்ள அனைவருக்கும் நன்றி. ரஸாக்கர் எனக்கு மிக முக்கியமான படம். நான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவன், ஆனால் எனக்கே இந்தக்கதை அவ்வளவாகத் தெரியாது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 1 வருடம் கழித்தே ஹைதராபாத்திற்கு சுதந்திரம் கிடைத்தது. இந்த வரலாறு தெரியாததற்கு நான் வருத்தப்படுகிறேன். இதில் பணியாற்றியது பெருமை. இந்தக் கதை உங்கள் அனைவரையும் உருக வைக்கும் நன்றி.

நடிகர் தலைவாசல் விஜய் பேசியதாவது…

தயாரிப்பாளர், இயக்குநர் இருவருக்கும் நன்றி. இந்த படத்தில் பணிபுரிந்தது அற்புதமான அனுபவம். இந்த தலைமுறைக்குத் தெரியாத, ஒரு வரலாற்றைச் சொல்லும், இப்படத்தில் நானும் இருப்பது பெருமை. மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

தயாரிப்பாளர் மனோஜ் பெனோ பேசியதாவது…

ஒரு காலகட்டத்தில் படங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருப்பதாகப் பேசினோம். இப்போது டிரெய்லரே ஒரே மாதிரியாக இருப்பதாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்த டிரெய்லரே மிக வித்தியாசமாக இருக்கிறது. தயாரிப்பாளர் மிக அர்ப்பணிப்புடன் இந்தப்படத்தை, பிரமாண்டமாக தயாரித்துள்ளார். படக்குழுவினர் தங்கள் உயிரைக் கொடுத்து, படத்தை அட்டகாசமாக எடுத்துக் கொண்டு வந்துள்ளனர். இந்தப் பட விழாவிற்கு வரக்காரணம் பாபி. என் நெருங்கிய நண்பர். அவர் எப்போதும் கெத்து தான். வேதிகாவிற்கு என் வாழ்த்துக்கள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

தடை உடை பட இயக்குநர் ராகேஷ் பேசியதாவது..

டிரெய்லரே மிரட்டுகிறது. இப்படி ஒரு வரலாற்றைப் படமாக எடுக்க முனைந்த தயாரிப்பாளர், இயக்குனருக்கு நன்றி. இன்னும் சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. இந்தப்படத்தை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழி மாற்றம் செய்ய வேண்டும். படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்

நடன இயக்குநர் ஷெரீஃப் பேசியதாவது…

பாபி எனக்கு நெருங்கிய நண்பர். அவர் எது செய்தாலும் என் ஆதரவு உண்டு. வரலாற்றில் மறைக்கப்பட்ட வரலாற்றை இந்தக் கதை சொல்கிறது. படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார்கள். இந்தப் படம் பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

நடிகர் ஜான் விஜய் பேசியதாவது…

ஒரு பிரம்மாண்டமான வரலாற்றுப் படத்தில் நானும் இருப்பது பெருமையாக உள்ளது. தயாரிப்பாளர், இயக்குநர் இருவருக்கும் என் நன்றிகள். என்னை இந்த படத்தில் நடிக்க வைத்ததற்குச் சிறப்பு நன்றி. பாபி உடன் பணியாற்றியது மகிழ்ச்சி. எப்போது பாபியை பார்த்தாலும் மிக நட்போடு பழகுவார். இப்படம் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் நன்றி.

நடிகர் ராஜ் அர்ஜுன் பேசியதாவது…

உங்களால் தான் நாங்கள். நீங்கள் பாராட்டுவதால் நாங்கள் சரியாக பணியாற்றுகிறோம். ஆதலால் உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் கதாபாத்திரத்திற்காக நான் பிறந்ததாக நினைக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பை தந்ததற்கு குடூர் நாராயணன் ரெட்டி சாருக்கு மிகப்பெரிய நன்றி. உயிரைத் தந்து இந்த குழுவினர் படத்தை எடுத்துள்ளார்கள். இது வரலாற்றுப்படம் ,ஆனால் அதில் ஆக்சன், டிராமா எல்லாம் இருக்கிறது அதையெல்லாம் தாண்டி உணர்வுகள் இதில் நிறைந்திருக்கிறது. இப்படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.

நடன இயக்குநர், நடிகர் ராம்ஜி பேசியதாவது…

இந்த படத்தில் சின்ன ரோல் தான் ஆனால் பவர்ஃபுல் ரோல் செய்துள்ளேன். இந்த படத்தில் நடிக்க காரணமான சங்கர் மாஸ்டருக்கு நன்றி. இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் இருவருக்கும் நன்றி. வரலாற்றில் மறைக்கப்பட்டதை ஒவ்வொரு இந்தியனுக்கும் எடுத்துச் செல்லும் படமாக இப்படம் இருக்கும். இது தான் உண்மையான பான் இந்தியன் மூவி. உங்கள் ஆதரவை தாருங்கள் அனைவருக்கும் நன்றி.

நடிகர் சரத் ரவி பேசியதாவது…

இந்தப்படத்தை அனைத்து பத்திரிக்கை நண்பர்களும் நல்ல முறையில் எடுத்துச் செல்ல வேண்டும். பாபி அண்ணாவுடன் 3 படங்கள் செய்துள்ளேன். அவர் ஒவ்வொரு படத்திலும் பெயர் கிடைக்குதோ, இல்லையோ உயிரைக் கொடுத்து உழைப்பார். இந்தப்படத்தில் இன்னும் அதிகமாக உழைத்துள்ளார். அவருக்கு இப்படி ஒரு படம் வந்து கொஞ்ச காலம் ஆகிவிட்டது. இந்தப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.

Vedhika speech about The hidden truth of Hyderabad Nizam

‘ரஸாக்கர்’ கதை புரியல.. வரலாறு தெரிய 40 கோடியில் எடுத்து இருக்காங்க.. – பாபி சிம்ஹா

‘ரஸாக்கர்’ கதை புரியல.. வரலாறு தெரிய 40 கோடியில் எடுத்து இருக்காங்க.. – பாபி சிம்ஹா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் குடூர் நாராயண ரெட்டி வழங்கும், இயக்குநர் யதா சத்யநாராயணா இயக்கத்தில், பாபி சிம்ஹா, வேதிகா நடிப்பில், சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில், ஹைதராபாத் நகரில் உண்மையில் நிகழ்ந்த, மறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வை, அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “ரஸாக்கர்”.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இந்நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது.

இந்நிகழ்வினில்..

தயாரிப்பாளர் குடூர் நாராயண ரெட்டி..

வணக்கம். இது மட்டுமே எனக்குத் தமிழில் தெரிந்த வார்த்தை. சமர்வீர் கிரியேஷன்ஸ் சார்பில் என் குழுவினர் அனைவருக்கும் நன்றி. எங்கள் பெருமைமிக்க படைப்பான, ரஸாக்கர் படத்தின் டிரெய்லரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. நம் வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு உண்மையை இந்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்வது நம் கடமை என நினைக்கிறேன்.

இப்போதைய ஹைதராபாத் 1948ல் இந்தியாவில் சேர்க்கப்படுவதற்கு முன், முஸ்லீம் நிஜாம் மன்னரால் துர்க்கிஸ்தானாக மாற்றப்படுவதாக இருந்தது. இந்திய அரசால் அது தடுக்கப்பட்டது. எங்கள் வம்சத்தில் என் தாத்தா போராடி மக்களை மீட்ட கதையைக் கேட்டிருக்கிறேன். அவர் அந்தப்போராட்டத்தில் தான் உயிர் நீத்தார்.

இந்தக்கதை ஹைதராபாத் மக்கள் மீது கட்டவிழ்த்து நடத்தப்பட்ட வெறியாட்டத்தை, அதிலிருந்து ஹைதராபாத் மீண்டு வந்த கதையை பதிவு செய்யும். இதை எப்படியாவது திரையில் பதிவு செய்ய வேண்டும் என்பது என் லட்சியமாக இருந்தது. இக்கதையை நீங்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.

நடிகர் பாபி சிம்ஹா பேசியதாவது…

வாழ்த்த வந்த அனைவருக்கும் முதலில் நன்றி. முதலில் இந்தக் கதை கேட்ட போது, எனக்கே சரியாக புரியவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்ற வரலாறு, எனக்கே தெரியாமல் இருந்தது.

இந்த உண்மை பற்றி தேடித் தெரிந்துகொண்டேன். உடனே கண்டிப்பாக இந்தப் படம் செய்கிறேன் என்றேன். உலகத்திற்கு இந்த கதை தெரிய வேண்டும்.

குடூர் நாராயண ரெட்டி சாருக்கு என் நன்றி. அவர் தாத்தா இந்தப் போராட்டத்தில் போராடி இறந்துள்ளார். அவர் நினைத்தால் ஒரு கமர்சியல் படம் எடுத்திருக்கலாம் ஆனால் 40 கோடியில் இந்த வரலாறு அனைவருக்கும் தெரிய வேண்டுமென, இப்படத்தை எடுத்துள்ளார்.

இப்படி ஒரு படத்தை உருவாக்க முனைந்த இயக்குனருக்கு நன்றி. நடிகை வேதிகா, இப்படத்தில் முதலில் அவரை மேக்கப்போடு பார்த்த போது எனக்கு அடையாளமே தெரியவில்லை. அத்தனை மாறியிருந்தார். அவருக்கு என் வாழ்த்துக்கள். அனுஷா புது நடிகை மாதிரியே தெரியவில்லை. நன்றாக நடித்துள்ளார்.

ஜான் விஜய், தலைவாசல் விஜய் சார், ராம்ஜி சார் அனைவரும் அற்புதமாக நடித்துள்ளனர். படத்தில் அத்தனை கலைஞர்களும் மிக அர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். இப்படம் வரலாற்றில் மிக முக்கியமான படமாக இருக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

இயக்குநர் யதா சத்யநாராயணா பேசியதாவது…

தமிழ் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். மணிரத்னம் சார் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். சுஹாசினி மேடத்திடம் இந்தக் கதையை போனில் சொன்னேன், அவர் என்னைப் பாராட்டினார். இப்படத்திற்காக என்ன உதவி வேண்டுமானாலும் செய்வதாகச் சொன்னார், அவருக்கு நன்றி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு முழுப் பாத்திரமாக மாறிய பாபிக்கு என் நன்றி. கோலிவுட் தென்னிந்தியாவுக்கு தாய் மாதிரி. ரஸாக்கர் மூலம் அறிமுகமாகும் என்னை இங்கு ஆசிர்வதிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ் மக்களுக்கு, ஒரு படம் பிடித்தால் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். இப்படம் அவர்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்.

இந்தியாவிற்கே சுதந்திரம் கிடைத்த போது, ஹைதராபாத்தில் மக்கள் நிஜாமுக்கு எதிராகப் போராடி கொண்டிருந்தார்கள். வல்லபாய் படேல் எடுத்த நடவடிக்கைகள் மூலம், போர் செய்து தான் ஹைதராபாத் விடுதலை செய்யப்பட்டது. பல மாகாணங்களாகப் பிரிந்து கிடந்த இந்தியாவை வல்லபாய் படேல் தான் ஒருங்கிணைத்தார். ஆனால் ஹைதராபாத் மாநிலத்தை அத்தனை எளிதாக ஒருங்கிணைக்க முடியவில்லை. அது துர்கிஸ்தானாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள இந்து மக்கள் நிஜாம் மன்னரால் துன்புறுத்தப்பட்டனர். பெண்கள் சீரழிக்கப்பட்டார்கள். ரஸாக்கர் ஹைதராபாத் மக்கள் மீது நடத்திய வன்முறை அளவில்லாதது. அதைத்தான் இப்படத்தில் சொல்ல முயன்றுள்ளோம். தமிழ் ரசிகர்கள் எங்களின் வரலாற்றைச் சொல்லும் இப்படத்தை ஆதரிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.

First i don’t know story of Razakar says Bobby Simha

More Articles
Follows