சத்யசிவா இயக்கத்தில் சசிகுமாருக்கு வில்லனாகும் அப்பானி சரத்

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமாருக்கு வில்லனாகும் அப்பானி சரத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகர் சரத்குமார். (தமிழ் நடிகர் அல்ல)

லிஜோ ஜோஸ் இயக்கி மலையாளத்தில் ரிலீசான ‘அங்கமாலி டயரிஸ்’ படத்தில் அப்பானி என்ற வேடத்தில் நடித்தார் சரத்.

அதன் பிறகு இவரை அப்பானி சரத் என்றே ரசிகர்கள் அழைத்தனர்.

தமிழில் சண்டக்கோழி 2, செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்திருந்தார்.

மேலும் ‘ஆட்டோ சங்கர்’ என்ற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார் அப்பானி சரத்.

இந்த நிலையில் ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்கத்தில் அப்பானி சரத் நடிக்கவுள்ளார்.

இதில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார்.

இதில் சசிகுமாருக்கு வில்லனாக அப்பானி சரத் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Appani Sarath to play antogonist in Sasi kumar’s next

55 வயதுக்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணியில்லை – தமிழக அரசு

55 வயதுக்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணியில்லை – தமிழக அரசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

100 days work tamil naduமஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு (100 நாள் வேலைத் திட்டம்) திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அதில் கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து கூறப்பட்டுள்ளது.

அதில்…

“55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்களை 100 நாள் வேலை திட்டத்தில் பணியமர்த்தக் கூடாது.

மேலும் இதயம் தொடர்பான நோய்கள், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் பணியமர்த்தக் கூடாது.

பணியாளர்கள் அனைவரும் சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும்.

வேலையாட்கள் கொண்டு வரும் உணவுப் பொருட்களை பரிமாறிக் கொள்ளக்கூடாது.

45 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும்”

என உத்தரவிட்டு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது தமிழக அரசு.

இந்த சுற்றறிக்கை ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

Restrictions in Mahathma Gandhi rural development work in Tamil Nadu

‘ரெட்டைச் சுழி’ & ‘ஆண் தேவதை’ படங்களை இயக்கிய தாமிரா மரணம்

‘ரெட்டைச் சுழி’ & ‘ஆண் தேவதை’ படங்களை இயக்கிய தாமிரா மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Thamiraஇயக்குனர் சிகரம் கே பாலசந்தர் மற்றும் இயக்குனர் இயக்குனர் பாரதிராஜா இருவரும் இணைந்து நடித்த படம் ‘ரெட்டைச் சுழி’.

இந்த படத்தை இயக்கியவர் தாமிரா.

அதன் பின்னர் சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன் இணைந்து நடித்த ‘ஆண் தேவதை’ படத்தையும் இயக்கியிருந்தார்.

சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் இயக்குனர் தாமிரா (53 வயது).

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் தாமிரா.

இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இயக்குனர் தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Aan devathai director Thamira died due to Corona

தன் காதலை சேர்த்து வைத்த நண்பனை தேடி அலையும் அபி சரவணன்

தன் காதலை சேர்த்து வைத்த நண்பனை தேடி அலையும் அபி சரவணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kumbaariராயல் எண்டர்ப்ரைசஸ் சார்பில் ‘பறம்பு’ குமாரதாஸ் தயாரிக்கும் தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படம் ‘கும்பாரி’.

யோகிபாபு நடிப்பில் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ எனும் திரைப்படத்தை இயக்கிய கெவின் இரண்டாவதாக இந்த படத்தை இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 30 நாட்களாக நடைபெற்று முடிந்தது. இதனை கும்பாரி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டினர்.

நாயகனாக அபி சரவணன், நாயகியாக மஹானா ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் ஜான் விஜய், பருத்திவீரன் சரவணன், மதுமிதா, சாம்ஸ் & காதல் சுகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இப்படம் பற்றி இயக்குனர் கெவின் கூறியதாவது …

இந்த படம் காதல், காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. நாயகனின் காதலை சேர்த்து வைத்த பால்ய மீனவ நண்பன் தீடிரென காணாமல் போகிறான்.

காணாமல் போன நண்பனை நாயகன் காப்பாற்றினாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் கதை.

இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமாரி, நாகர்கோவில், பூவாறு, முட்டம், பறம்பு மற்றும் கேரளாவின் அடர்ந்த காட்டுப்பகுதி ஆகிய இடங்களில் 30 நாட்களாக ஒரே கட்டமாக நடைபெற்று முடித்துள்ளோம்.

பிரசாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெயப்ரகாஷ் & ஜெய்தன் ஆகியோர் இசையமைக்கிறார்கள்.

ஜெய் படத்தொகுப்பு செய்ய, ராஜு முருகன் நடனம் அமைத்துள்ளார். மைக்கல் சண்டைக்காட்சிகளை அமைக்க, கிருஷ்ணமூர்த்தி டிஐ செய்கிறார்.

Abi Saravanan next film is titled Kumbaari

வாக்கு எண்ணிக்கைக்கு தடை.? மே 1 & 2 ஊரடங்கு குறித்து தமிழக புதுச்சேரி அரசுகள் பரிசீலிக்க கோர்ட் உத்தரவு

வாக்கு எண்ணிக்கைக்கு தடை.? மே 1 & 2 ஊரடங்கு குறித்து தமிழக புதுச்சேரி அரசுகள் பரிசீலிக்க கோர்ட் உத்தரவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

high court of madrasதமிழகம், புதுச்சேரியில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது்

இந்த சிகிச்சைக்கான தடுப்பூசி, ஆக்சிஜன், வென்டிலேட்டர், படுக்கைகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளது.

மேலும் சிலர் கொடுத்துள்ள பொதுநல வழக்குகளும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,…

“மக்கள் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாகத் தெரியவந்தால், மே 2 வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்கப்படும்.

இத்துடன் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குத் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க கூட உத்தரவிடுவோம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனா சிகிச்சையில் மக்களின் உயிர் காக்கும் விவகாரத்தில் விஐபி கலாச்சாரம் இருக்கக் கூடாது.

ரெம்டெசிவிர் மருந்தை அனைவரும் தினமும் பயன்படுத்த வேண்டியதில்லை. வென்டிலேட்டர், ரெம்டெசிவிர் ஆகியவை யாருக்குத் தேவைப்படுகிறது என்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.

கொரோனா தொற்று உள்ளதா? என சோதனை செய்யாமல் அரசு மருத்துவமனைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

விமான நிலையங்கள் மற்றும் மாநில எல்லைகளில் கரோனா பரிசோதனையைக் கட்டாயமாக்க வேண்டும்.

மே 1 (தொழிலாளர் தினம் அரசு விடுமுறை) மற்றும் 2 (வாக்கு எண்ணிக்கை) தேதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து தமிழக, புதுச்சேரி அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.

தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தை அணுகுபவர்களுக்கு மட்டும் அனுமதிக்கும் வகையில் ஏப்ரல் 28-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும்” என்று பரிந்துரை செய்தனர்.

இத்துடன் இந்த, வழக்கை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.

High court asks TN & Podny government to implement lock down on May 1 & 2

கொரோனா கொடுமை.: ரஜினி அன்றே சொன்னதை ஆதரித்த ஐகோர்ட்.; ட்விட்டரில் ட்ரெண்டிங்

கொரோனா கொடுமை.: ரஜினி அன்றே சொன்னதை ஆதரித்த ஐகோர்ட்.; ட்விட்டரில் ட்ரெண்டிங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகடந்த (ஏப்ரல்) 6ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் “கரூரில் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற உத்தரவிடக்கோரி தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் அதிமுக வேட்பாளருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அதில்…” இரண்டு அறைகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.

கொரோனா 2வது அலை பரவி வரும் நிலையில் 77 வேட்பாளர்களின் முகவர்களையும் (பூத் ஏஜண்ட்) வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கும் போது தனிமனித சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது.

கொரோனா நடைமுறைகளை பின்பற்ற முடியாத நிலை ஏற்படும்’ என அமைச்சர் தனது மனுவில் கூறியிருந்தார்.

மேலும் வாக்கு எண்ணிக்கையை மூன்று அறைகளில் நடத்த வேண்டும். குறைந்த எண்ணிக்கையில் மட்டும் முகவர்களை அனுமதிக்க வேண்டும்.

அத்துடன் அவசர தேவைக்கு மருத்துவ குழுவை பணியமர்த்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது…

“கொரோனா பரவலுக்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரமே காரணம். அவர்கள் தங்கள் இஷ்டம்போல் பிரசாரம் செய்தனர்.

நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை.

தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வேற்று கிரகத்தில் இருந்தார்களா?

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை.

மே 2 வாக்கு எண்ணிக்கை நாளன்று அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருக்க வேண்டும்.

ஒருவேளை கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க நேரிடும்” எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தை இன்றைய விசாரணையில் எச்சரித்தனர்.

இந்த நிலையில் ஐகோர்ட்டின் இந்த உத்தரவை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

“எங்கள் தலைவர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் விலகி 29/12/2020 அன்று ஓர் அறிக்கை விட்டார்.

அப்போது.. கொரோனா 2வது அலை உருவெடுத்து விட்டது. அரசியலுக்கு வருவேன் என்று கூறி விட்டு வராமல் போனால் நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி வருபவர்களை (கொரோனாவுக்கு) பலிகடா ஆக்க மாட்டேன்.

நான் உண்மையை பேசுவதற்கு என்றுமே தயங்கியதில்லை.” என அந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

அன்று ரஜினிகாந்த் சொன்னதை தான் இன்று ஐகோர்ட்டும் தெரிவித்துள்ளது என்பதை அன்றே_சொன்ன_ரஜினி என்ற ஹேஷ்டேக்கில் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Rajini fans happy with madras high court desicion

More Articles
Follows