மதுவை ரகசிய திருமணம் செய்த ஆர்கே. சுரேஷ்..? அப்போ ‘சுமங்கலி’ நடிகை விஷயம் என்னாச்சு..?

மதுவை ரகசிய திருமணம் செய்த ஆர்கே. சுரேஷ்..? அப்போ ‘சுமங்கலி’ நடிகை விஷயம் என்னாச்சு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RK Suresh and Divyaதாரை தப்பட்டை & மருது உள்ளிட்ட படங்களில் மிரட்டல் வில்லனாக நடித்தவர் ஆர் கே சுரேஷ்.

இவர் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா நடித்த ‘தர்மதுரை’ படத்தின் தயாரிப்பாளர் ஆவார்.

இவர் அண்மையில் பாஜக கட்சியில் இணைந்தார்.

தனக்கும் ‘சுமங்கலி’ சீரியல் நடிகை திவ்யாவுக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக ஆர்.கே. சுரேஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஆனால் என்ன நடந்ததோ திருமணம் நடைபெறவில்லை.

“இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. திருமணம் செய்து கொண்டு பிரச்னைகளைச் சந்திப்பதற்கு முன் விலகி விடுவது நல்லது” என திவ்யா தரப்பில் சொல்லப்பட்டது.

இந்நிலையில், ஆர்.கே. சுரேஷுக்கு கடந்த சில தினங்களுக்கு சினிமா ஃபைனான்சியர் மது என்பவருடன் திருமணம் நடந்துள்ளதாம்.

இது ரகசிய திருமணம் என கூறப்படுகிறது.

Actor RK Suresh confirms his marriage with Madhu

‘வலிமை’ அப்டேட்…; ஹைதராபாத் செல்வாரா தல அஜித்..?

‘வலிமை’ அப்டேட்…; ஹைதராபாத் செல்வாரா தல அஜித்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

valimai updateதல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வலிமை’.

யுவன் இசையமைக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திய இப்பட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் மீண்டும் தொடங்கப்பட்டது.

அங்கு தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கலந்து கொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டானது.

இந்நிலையில் வலிமை பட ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது.

இதற்காக பெரிய அளவில் செட் அமைக்கப்பட்டு வருகிறதாம்.

இங்கு மற்ற நடிகர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளார்கள் என கூறப்படுகிறது.

ஆனால் அந்த செட்டில் அஜித் கலந்து கொள்வாரா?

Ajith to join Valimai shoot soon

கணவர் கட் அவுட்டுடன் வளைகாப்பு நடத்திய நடிகை ஆண் குழந்தைக்கு தாயானார்.

கணவர் கட் அவுட்டுடன் வளைகாப்பு நடத்திய நடிகை ஆண் குழந்தைக்கு தாயானார்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

meghna raj baby boyகாதல் சொல்ல வந்தேன் படத்தில் நாயகியாக நடித்தவர் மேக்னா ராஜ்.

இவர் பார்ப்பதற்க்கு நயன்தாரா போல் இருப்பதால் ரசிகர்களின் கவனம் ஈர்க்கப்பட்டார்.

மேக்னா கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மேக்னா ராஜ் கருவுற்றிருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 8-ஆம் தேதி சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் காலமானார்.

இதனையடுத்து கணவர் சிரஞ்சீவி சார்ஜாவின் கட் அவுட்டுடன், தன்னுடைய வளைக்காப்பு நிகழ்வை நடத்தினார்.

இது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் மறைந்த சிரஞ்சீவி சர்ஜா- மேக்னா ராஜ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

மேக்னாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Actress Meghana Raj blessed with baby boy

Atman-STR… மரண மாஸ் வீடியோ.. ட்விட்டர் இன்ஸ்டா-வில் இணைந்தார் சிம்பு

Atman-STR… மரண மாஸ் வீடியோ.. ட்விட்டர் இன்ஸ்டா-வில் இணைந்தார் சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbuசுசீந்திரன் இயக்கத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இதன்பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு

தற்போது சிம்பு எந்தவொரு சமூக ஊடகத்திலும் இல்லை.

சில வருடங்களுக்கு முன்பு அனைத்து சமூக ஊடகங்களிடம் இருந்து சிம்பு விலகியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று (22.10.20) சிம்பு ட்விட்டர் & இன்ஸ்டா சமூக வலைதளத்தில் இணைந்துள்ளார்.

இதற்கான ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் செய்யும் உடற்பயிற்சி, சிலம்பம், நடனம் உள்ளிட்ட பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன.

இது ரசிகர்களை கவர்ந்துள்ளதால் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Atman-SilambarasanTR#Atman #SilambarasanTR #STR

STR makes grand re-entry on social media

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் கொடுத்தவனின் அடையாளம் தெரிந்தது

விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் கொடுத்தவனின் அடையாளம் தெரிந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathi daughterஇலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ என்ற படத்தில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் இப்பபடம் அறிவிப்பு வெளியானதிலிருந்தே கடும் எதிர்ப்புகள் உருவானது.

தமிழினத்துக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிக்கக் கூடாது என பல தரப்பினரும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

தமிழக அமைச்சர்களும் விஜய்சேதுபதி எதிர்கால நன்மை கருதி் நல்ல முடிவை எடுக்க வலியுறுத்தினர்.

எனவே விஜய் சேதுபதியை இந்தப் படத்திலிருந்து விலகிக் கொள்ளுமாறு அறிக்கை வெளியிட்டார் முத்தையா முரளிதரன்.

அவரது அறிக்கையை ரீட்வீட் செய்து “நன்றி.. வணக்கம்” என்று கூறி ‘800’படத்திலிருந்து விலகினார் விஜய் சேதுபதி.

இதனிடையில் விஜய் சேதுபதி மகளுக்கு Rithik (Handle: @ItsRithikRajh) என்ற ட்விட்டர் ஐடியில் இருந்து வக்கிரமான வார்த்தைகளுடன் ரேப் மிரட்டல் விடுக்கப்பட்டது.

அந்த மர்ம நபரின் செயலுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தன.

தற்போது, அந்த ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த நபர் மீது 3 பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி மகளுக்கு பாலியல் அச்சுறுத்தல் கொடுத்தவனின் அடையாளம் தெரிந்தது.

இலங்கையில் இருக்கும் அந்த இளைஞரை கைது செய்ய இண்டர்போலின் உதவியை நாட தமிழக காவல்துறை முடிவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

TN Police ask interpol help to find srilankan youth who threaten vijay sethupathi daughter

மாஸ் & க்ளாஸ் நடிகர் ஜீவா..; சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 91வது படம் பற்றி சந்தோஷ் ராஜன்

மாஸ் & க்ளாஸ் நடிகர் ஜீவா..; சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 91வது படம் பற்றி சந்தோஷ் ராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தென் இந்திய சினிமா துறையில் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு பெரும் வரலாறும், பெருமையும் இருக்கிறது.

தென்னக சினிமாவிற்கு பல தரமான கலைஞர்களை அந்நிறுவனம் தந்திருக்கிறது.

குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் வகையிலான படைப்புக்களை, உலக ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம், தொடர்ந்து தந்து வருகிறது. பெரும் வெற்றிப்பயணத்தை பல தசாப்தங்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் இந்நிறுவனம் ரசிகர்களை எந்த வகையிலும் ஏமாற்றாமல், அவர்கள் கொண்டாடும் படைப்புகளை, தரமான வடிவத்தில் தருவதில் முதன்மையாக இருக்கிறது.

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாளர் திரு RB சௌத்ரி அவர்கள் தற்போது இந்நிறுவனம் சார்பில் ஒரு புதிய படத்தை தயாரிக்கவுள்ளார்.

ஜீவா முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை பிரபல இயக்குநர் சசியின் உதவியாளர் சந்தோஷ் ராஜன் இயக்குகிறார்.

தற்போதைக்கு இப்படம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் “தயாரிப்பு எண் 91” எனக்குறிப்பிடப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு, தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குழு கலந்து கொள்ள, எளிமையான பூஜையுடன் இன்று காலை ( அக்டோபர் 21, 2020 ) தொடங்கியது.

இயக்குநர் சந்தோஷ் ராஜன் இது குறித்து கூறியதாவது…

தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரும் ஆளுமைகளுள் ஒருவராக திகழும் திரு RB சௌத்ரி அவர்களின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன், இயக்குநராக எனது திரைப்பயணம் துவங்குவது, மிகப்பெரும் மகிழ்ச்சியையும், பெருமையும் அளிக்கிறது.

பல பெரும் கலைஞர்களுக்கு, இயக்குநர்களுக்கு திரையுலகில் திறவுகோலாக, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மூலம் வாய்ப்பளித்து, உருவாக்கிய பெருமை கொண்டவர் RB சௌத்ரி அவர்கள்.

அப்படியான நிறுவனத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் ஆசிர்வாதம். இத்தருணம் உற்சாகத்தையும், சுற்றிலும் நிறைய நேர்மறை எண்ணங்களையும் என்னுள் விதைத்திருக்கிறது. வழக்கமாக ரசிகர்கள், நடிகர்களையும், இயக்குநர்களையும் பார்த்து, அவர்களை பின்பற்றி படம் பார்த்து வந்த முறையை, தகர்த்தெறிந்தது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம்.

ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி, தரமான குடும்ப படங்களை, ரசிகர்கள் 100% சதவீதம் கொண்டாடும் வகையில் தொடர்ந்து தந்து வந்திருக்கிறது. எதிர்பார்ப்புகளை கூட்டுவது மட்டுமல்லாமல், அந்த எதிர்பார்ப்பை தவறாது பல தசாப்தங்களாக நிறைவேற்றி வந்திருக்கிறது. அதனால் தான் தென்னக சினிமாவின் முடிசூடா மன்னாக திகழ்கிறது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம்.

நடிகர் ஜீவாவுடன் இணையவுள்ளது குறித்து கூறியபோது…

இது எனக்கு இரட்டை சந்தோஷ தருணம், ஜீவா அவர்கள் தமிழ் சினிமாவின் அரிய திறமைகளுல் ஒருவர். அவர் மிக ஆழமான படைப்புகளில் திறமையான நடிப்பை தந்தும், கமர்ஷியல் படங்களில் எளிதாக ரசிகர்களை கவர்ந்தும் சாதனை படைத்தவர்.

மாஸ் மற்றும் க்ளாஸ் எனும் இரண்டு திறமையும் கொண்டவர் அவர். இயக்குநர் சசி அவர்களின் “டிஷ்யூம்” படத்தில் உதவியாளராக பணிபுரிந்த போது படப்பிடிப்பில் நடிகர் ஜீவாவின் நடிப்பு திறமையை கண்டு வியந்திருக்கிறேன்.

அப்படத்தில் அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. இயல்பிலேயே மிகவும் எளிமையான, கலகலப்பான மனிதர். சுற்றியுள்ளவர்களை தன் கலகலப்பான குணத்தால் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார். எனது கதையையும் அப்படியானதொரு கதாப்பாத்திரத்தை கொண்டிருப்பதால் அவரை அணுகினேன்.

தற்போது தமிழ் சினிமாவில் முன்ணனி நடிகராக வளர்ந்து, இந்திய அளவிலான முக்கிய நடிகராக மாறிவிட்ட போதிலும், அவர் அதே எளிமையுடனே தான் பழகுகிறார்.

இது தான் எந்த ஒரு இயக்குநரும் அவருடன் பணிபுரிய விரும்பும் குணமாக இருக்கிறது. இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு, எனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் ஆசிர்வாதம். மேலும் இப்படம் தரப்போகும் மிகச்சிறந்த அனுபவங்களுக்காக காத்திருக்கிறேன்.

காஷ்மீரா பர்தேஷி மற்றும் ப்ரயாகா நாக்ரா இப்படத்தின் நாயகிகளாக நடிக்கிறார்கள் அவர்களோடு VTV கணேஷ், சித்திக், ஷா ரா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கவுள்ளார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

இசை – ஜிமிக்கி கம்மல் புகழ் ஷாநவாஸ் ரெஹிமான்

ஒளிப்பதிவு – சித்தார்த் ராமசுவாமி

படத்தொகுப்பு – ராகவேந்திரன் எனும் ஶ்ரீகாந்த்

சண்டைப்பயிற்சி – R. சரவணன்

கலை இயக்கம் – R. மோகன்

உடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர்

உடைகள் – கணேஷ்

ஒப்பனை – சண்முகம்

புகைப்படங்கள் – அன்புராஜ்

போஸ்டர் டிசைன்ஸ் – கபிலன்

புரடக்‌ஷன் மேனேஜர் – நாகராஜ்

புரடக்‌ஷன் டிசைனர் – ஶ்ரீநாத். R

Actor Jiiva’s next film to be directed by Santhosh Rajan and produced by super good films

super good films jiiva film

More Articles
Follows