‘கேள்வி கேட்கவும் தேர்தலில் நிற்கவும் பயமில்லை…’ – விஷால்

‘கேள்வி கேட்கவும் தேர்தலில் நிற்கவும் பயமில்லை…’ – விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal speechதயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைப்பதாக விஷாலை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக வந்த செய்திகளை பார்த்தோம்.

இதுகுறித்து விஷால் கூறியதாவது…

எனக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வரவில்லை.

மீடியாக்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்துதான் இதைதான் தெரிந்து கொண்டேன்.

போண்டா, பஜ்ஜி சாப்பிட்டு கொண்டு தயாரிப்பாளர் சங்கத்தினர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று நான் ஒரு வார இதழுக்கு பேட்டி அளித்துள்ளேன் என்று கூறுகிறார்கள்.

“போண்டா, பஜ்ஜி“ என்பது கெட்ட வார்த்தையா?? அது ஒரு தவறான உணவு இல்லை.

சூட்டிங்கிலும் நாங்கள் அதை தான் சாப்பிடுகிறோம்.

என்னை பொறுத்தவரை சின்ன தயாரிப்பாளர்கள் பெரிய தயாரிப்பாளர்கள் என்று இல்லை அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நாங்கள் குரல் கொடுப்போம்.

தமிழ் திரையுலகம் எனக்கு சாப்பாடு போட்ட தெய்வம்.

அதற்க்கு ஏதாவது தவறான விஷயம் நடந்தால் நான் நிச்சயம் குரல் கொடுப்பேன். கேள்வி கேட்பது தவறே இல்லை.

கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டும். நான் இப்போது என்னை எதற்காக நீக்கி இருக்கிறார்கள் என்ற காரணம் தெரியாமலேயே பேசி கொண்டு இருக்கிறேன்.

இதற்கு சட்ட ரீதியான விஷயம் என்ன என்பதை நான் என்னுடைய வழக்கறிஞரிடம் ஆலோசித்து முடிவெடுப்பேன்.

ஜனவரி தயாரிப்பாளர் சங்க தேர்தல் வரப்போகிறது. தயவு செய்து தேர்தலை நடத்த விடுங்கள்.

நிச்சயமாக இந்த தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எங்கள் சார்பாக ஒரு அணி போட்டியிடும்.

எனக்கும் தாணு அண்ணனுக்கும் எந்த பிரச்சனையையும் இல்லை.

தாணு அண்ணனிடம் கேட்க சில கேள்விகள் இருக்கிறது. நான் நடிகர் சங்க பொது செயலாளராக வருவதற்கு முன்னர் கேள்விகளை கேட்டுள்ளேன்.

இப்போது நான் பதவிக்கு வந்த பிறகு எல்லோரும் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். பதில் சொல்ல வேண்டியது எனக்கு கட்டாயம். அதே போல் அது என்னுடைய பொறுப்பு.

அதே போல் தான் நானும் கேள்வி கேட்கிறேன். அவர்களுக்கு நான் எதிர் இல்லை.
நான் ஜனநாயக முறையில் அவர்களிடம் கேள்வி கேட்டேன். எனக்கு பயமில்லை, கேள்வி கேட்கவும் பயமில்லை.

கேள்வி கேட்டால் பதில் வரவில்லை என்னும் பட்சத்தில் தேர்தலில் நிற்கவும் எனக்கு பயமில்லை.

விஷால் என்ற தயாரிப்பாளருக்கே இந்த கதி என்றால், சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம் கேள்வியே கேட்க கூடாதா??

விஷாலுக்கு இந்த முடிவு எடுத்திருக்கும் நீங்கள், இதே முடிவை கருணாஸுக்கு எடுக்க முடியுமா?

நிச்சயமாக எதிர் அணி என்பது இருக்கிறது. வருகிற ஜனவரி மாதம் நடக்கவுள்ள தேர்தலில் அந்த அணி போட்டியிடும்.

அந்த அணிக்கு நான் முழு ஆதரவு கொடுக்கிறேன்.

திருட்டு வி.சி.டி எங்கு பிடிபட்டாலும் என்னை தான் எல்லோரும் டேக் செய்கிறார்கள். தயாரிப்பாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் நிற்பேன்.” என்றார் நடிகர் விஷால்.

‘கறுப்பு பணம் ஒழிப்பு; சாமான்ய மக்கள் கஷ்டப்படுகிறார்கள்..’ – விஜய்

‘கறுப்பு பணம் ஒழிப்பு; சாமான்ய மக்கள் கஷ்டப்படுகிறார்கள்..’ – விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay press meetஇந்தியாவில் கறுப்பு பணத்தை ஒழிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாக ரூ. 500, ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி திடீரென அறிவித்தார்.

இதனால் நாட்டில் சில்லறைத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து பேச இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஜய்.

அப்போது அவர் கூறியதாவது…

“மத்திய அரசு எடுத்துள்ள இந்த துணிச்சலான முடிவை வரவேற்கிறேன்.

நாட்டுக்கு தேவையான, துணிச்சலான முடிவு.

ஒரு நல்ல நோக்கம் இருக்கும்போது, அதற்கான பாதிப்புகள் நிச்சயம் இருக்கும்.

பசிக்கு சாப்பிட முடியாமல், அவசர தேவைக்கு மருந்து வாங்க முடியாமல், வெளியூருக்கு சென்றவர்கள் பஸ்சில் ஏற முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

பணம் இருந்தும் மாற்றமுடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.

தன் பேத்தி திருமணத்திற்காக ஒரு பெரியவர் தன் இடத்தை விற்று இருக்கிறார்.

ஆனால் அந்த பணம் செல்லாது என்பதால் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டார்.
மேலும் ஆஸ்பத்திரியில் ஒரு குழந்தை இறந்துள்ளது.

முன்னேற்பாடுகள் செய்திருந்தால், இதுபோன்ற விஷயங்களை தவிர்த்திருக்கலாம்.

நாட்டுல 20% பேர் பணக்காரர்கள் இருப்பார்கள். அதில் ஒரு சிலர் செய்த தவறுகளுக்காக மீதமுள்ள 80% மக்கள் என்ன செய்வார்கள்?

இதுவரை யாருமே பண்ணாத, பண்ண யோசிக்காத ஒரு முயற்சிதான் இது.

பிரச்சினைக்கு தீர்வாக ஒரு சட்டம் போடுகிறார்கள். அதை அமல்படுத்தும்போது, என்ன பிரச்சினைகள் வரும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதற்கான வழிகளை முன்பே எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பதுதான் என் தாழ்மையான கருத்து.

இப்பிரச்சினை தற்போது கொஞ்சம் குறைந்துள்ளது.

கிராமங்களில் இன்னும் அந்த கஷ்டம் இருக்கிறது. அந்த கஷ்டங்களை மத்திய அரசு தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும்”

இவ்வாறு விஜய் தெரிவித்தார்.

‘பாலியல் சீண்டல்…’ பொது மேடையில் தைரியமாக பேசிய நமீதா

‘பாலியல் சீண்டல்…’ பொது மேடையில் தைரியமாக பேசிய நமீதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

namithaஅம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் வி.எஸ். பழனிவேல் இயக்கி தயாரிதுள்ள படம் ‘சாயா’.

பார்த்திபன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.சி.ஜான்பீட்டர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை, வடபழனியலுள்ள ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.

பாடல்களை நடிகர் ஸ்ரீகாந்த் வெளியிட்டார். தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், நடிகைகள் நமீதா, வசுந்தரா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் படக்குழுவினருடன் பெற்றுக் கொண்டனர்.

விழாவில் நமீதா பேசும் போது…

“இந்தப் படம் ஒரு சமூகக் கருத்தைச் சொல்லும் படம் என்று அறிந்து மகிழ்ச்சி.

சமுதாயத்துக்கு ஏதாவது சொல்ல வேண்டும்,செய்ய வேண்டும் என்றால் திரைப்படம், அரசியல் என இரண்டு வழிகள்தான் இருக்கின்றன .அதனால்தான் நான் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறேன்.

இந்தப் படம் பற்றி பேசும்போது, குழந்தைகளுக்கு பேரண்டிங் பற்றி ,அதாவது நல்ல பெற்றோராக இருப்பது முக்கியம் என்று உணர முடிகிறது. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

ஆம். நான் மூன்று நாய்க்குட்டிகள் வளர்க்கிறேன் எனக்கு அவங்கதான் குழந்தைகள். நான்தான் பெற்றோர் மாதிரி கவனித்துக்கொள்கிறேன்.

என் அண்ணாவுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக்கொள்கிறேன்.

ஒரு விஷயம் ,ஆனால் இந்த விஷயத்தை பிரபலங்கள் யாரும் மேடையில் சொல்ல மாட்டார்கள். நான் சொல்கிறேன். இன்று பாலியல் சீண்டல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிறைய நடக்கின்றன.

நம் அருகிலிருந்து கூட நடக்கின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி மட்டும் கொடுத்தால் போதாது. நல்ல டியூஷன் மட்டும் கொடுத்தால் போதாது. நிறைய சொல்லிக் கொடுக்க வேண்டும்.

எது நல்ல தொடுதல் எது கெட்ட தொடுதல் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும், அதாவது குட் டச் எது, பேட் டச் எது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளிடம் நிறைய கேளுங்கள். நிறைய பேசுங்கள் .இதை அம்மா அப்பா இரண்டு பேருமே செய்யுங்கள் இந்தப் படம் குழந்தைகள் பற்றி சிந்திக்க வைக்கும்படி இருக்கும் என நம்புகிறேன்.

இந்தப் படம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தினார்.

saaya press meet

ஸ்ரீகாந்த் பேசும்போது…

”எனக்கு சினிமாவில் ஒவ்வொரு விழா நடக்கும் போதும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் அதில் கலந்து கொள்ள பிரபலங்களை அழைத்து வருவது பற்றிய எண்ணமும் வரும்.

இதுமாதிரி விழாக்களுக்கு அழைக்கும் போது பிரபலங்கள் யாரும் வர முன்வருவதில்லை. சாக்கு போக்கு சொல்லி பொய்யான காரணம் சொல்லி தவிர்ப்பார்கள், வரமாட்டார்கள்.

இதை எண்ணி வேதனை அடைந்து இருக்கிறேன். இதை நான் அனுபவத்திலும் கண்டு இருக்கிறேன். விழா நடத்துபவர்கள் பலரது தவிப்பையும் உணர்ந்து இருக்கிறேன்.

அதன் வலிகளைப் புரிந்து பிறகு நான் ஒரு முடிவு செய்தேன். என்னை அழைப்பவர்களின் விழாவுக்குச் சென்று அவர்களை வாழ்த்துவது என்று முடிவு செய்தேன்.

நான் சம்பந்தப்படாத விழாவாக இருந்தாலும் சென்று வாழ்த்தி வருகிறேன். ஊக்கப்படுத்துகிறேன்.

அப்படித்தான் இங்கே வந்திருக்கிறேன்.

சினிமாவில் எல்லாரும் இப்படி ஒருவருக்கொருவர் ஊக்கப்படுத்தி ஒற்றுமையாக இருக்கவேண்டும். இப்படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்றார்.

முன்னதாக அனைவரையும் வரவேற்ற ‘சாயா’ பட இயக்குநர் வி.எஸ். பழனிவேல் படம் பற்றிப் பேசும் போது

”பொதுவாக ஆத்மா சம்பந்தப்பட்ட கதை என்றால் அந்த படம் பயமுறுத்துவது போல்தான் இருக்கும். ஆனால் முதன்முறையாக பெற்றோர்களும், குழந்தைகளும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு படமாக ஆத்மாவை மையமாக வைத்துஉருவாகியுள்ளது ’சாயா’.

இந்தப்படம் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மாணவர்களுக்காகஎடுக்கப்பட்டுள்ளது. எனவே குழந்தைகள் ஒருமுறையாவது இந்த படத்தைப்பார்த்தால் அவர்களுக்கு கல்வியின் அவசியம் புரியும்.

ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆத்மா அவனதுஉடலைப் பார்க்க முடியுமா? பார்த்தால் என்ன செய்யும்? இந்தகேள்விகளுக்கெல்லாம் ”சாயா” படம் பதிலளிக்கும் ” என்றார்.

இவ்விழாவில் இயக்குநர்கள் மனோஜ் குமார், கே.எஸ்.அதியமான், தாமிரா, இசையமைப்பாளர் ஏ.சி. ஜான் பீட்டர் , படத்தின் நாயகன் சந்தோஷ் கண்ணா, நடிகர்கள் கராத்தேராஜா, ‘பாய்ஸ்’ராஜன், சின்ராஜ், நடிகைகள் வசுந்தரா, பட நாயகி காயத்ரி, தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

நிறைவாக தயாரிப்பாளர் சசிகலா பழனிவேல் நன்றி கூறினார்.

தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து விஷால் நீக்கம்

தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து விஷால் நீக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vishal imagesதயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தயாரிப்பாளர் விஷால் கடந்த 17.08.2016 அன்று ஆனந்த விகடன் இதழில் அளித்த பேட்டி சங்கத்தின் ஒற்றுமையையும், கட்டுப்பாட்டையும் சீர்குலைக்கும் செயலாக இருந்தது.

மேலும் இதுபோல் தொடர்ந்து அவர் சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக பலமுறை நடந்துகொண்டதை குறிப்பிட்டு, அவருக்கு கடந்த 02.09.2016 அன்று தயாரிப்பாளர்கள் சங்கம் மூலமாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.

அதற்கு அவர் அளித்த பதில் 12.11.2016 அன்று நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் கலந்து ஆலோசித்ததில் திருப்தியாக அமையாத பட்சத்தில் செயற்குழு கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின்படி சங்க விதி எண் 14D-யில் உள்ளபடி விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் விஷாலை சங்க அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இன்று முதல் (14.11.2016) தற்காலிகமாக நீக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனுஷ் பட பாடலில் கௌதம் மேனன் செய்யும் புதுமை

தனுஷ் பட பாடலில் கௌதம் மேனன் செய்யும் புதுமை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush and gautham menon stillsதனுஷ் நடிப்பில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன்.

மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்க, எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

விரைவில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

ஆனாலும் படத்தின் வில்லன் மற்றும் இசையமைப்பாளர் யார்? ஆகிய விஷயங்களில் படு ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.

இதனிடையில், பாடல்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற கற்பனையிலே சில பாடல்களை படமாக்கி விட்டாராம் கௌதம்.

இதற்கு நாயகன் தனுஷும் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

இந்நிலையில் இதன் இசையமைப்பாளரை ஒரு பாடலை வெளியிட்டு அதன் மூலமாக அறிவிக்க இருக்கிறார்களாம்.

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஷ்ணு

இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஷ்ணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishnu vishal wife rajiniமாவீரன் கிட்டு படத்தை தொடர்ந்து, கதாநாயகன் படத்தில் நடிக்கிறார் விஷ்ணு விஷால்.

அறிமுக இயக்குனர் முருகானந்தம் இயக்கும் இப்படத்தில் நாயகியாக கேத்ரீன் தெரசா நடிக்கிறார்.

இந்நிலையில் விஷ்ணுவின் மனைவி ரஜினி இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

எனவே இருவரின் புகைப்படத்தையும் போட்டு, என் வாழ்க்கையின் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

vishnu vishal ‏@iamvishnuvishal
Happy bday to d superstar of my life

More Articles
Follows