‘கத்தி சண்டை’ மிஸ் ஆனாலும் ‘பைரவா’வுடன் இணையும் விஷால்

‘கத்தி சண்டை’ மிஸ் ஆனாலும் ‘பைரவா’வுடன் இணையும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and vishalவிஜய்யின் பைரவா படம் வெளியாகும் 2017 பொங்கல் தினத்தில் விஷாலின் கத்தி சண்டை படமும் வெளியாகும் என முதலில் கூறப்பட்டது.

ஆனால் தற்போது முன்பே வெளியாகிறது.

அதாவது டிசம்பர் 23ல் ரிலீஸ் ஆகிறது கத்தி சண்டை.

விஜய்யுடன் இணைந்து வர கத்தி சண்டை மிஸ் ஆனாலும் விஷாலின் மற்றொரு படமாக துப்பறிவாளன் படத்தின் பர்ஸ்ட் லுக் 2017 பொங்கல் சமயத்தில் வெளியாகவுள்ளதாம்.

மிஷ்கின் இயக்கிவரும் இப்படத்தில் பிரபல இயக்குநர் பாக்யராஜ் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நெல்லையில் மட்டுமல்ல சென்னையிலும் ‘தல நியூ இயர் பார்ட்டி’

நெல்லையில் மட்டுமல்ல சென்னையிலும் ‘தல நியூ இயர் பார்ட்டி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thala ajith latest stills2017 புத்தாண்டை முன்னிட்டு அஜித், விஜய் ஆகியோரின் படங்களை சில திரையரங்குகளில் திரையிட உள்ளனர்.

திருநெல்வேலியை சேர்ந்த ராம் சினிமாஸ் நிறுவனம் விஜய்யின் துப்பாக்கி படத்தை டிசம்பர் 31ஆம் தேதி, இரவு 9.30 மணி காட்சியிலும், அஜித்தின் வீரம் படத்தை புத்தாண்டு தினத்தில் அதிகாலை 6 மணிக்கும் திரையிட உள்ளனர்.

தற்போது நெல்லையை தொடர்ந்து சென்னையிலும் சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளதாம்.

சென்னை போரூரில் உள்ள ஜி.கே. சினிமாஸ் அரங்கில் ஜனவரி 1ஆம் தேதி காலை 9 மணி காட்சியில் பில்லா படம் திரையிடப்படுகிறது.

இதற்காக அங்கே பில்லா பேனர் தற்போதே வைக்கப்பட்டுள்ளது.

‘கஷ்டத்தை புரிந்து கொள்ளாத தமிழ் நடிகர்கள்..’ திருப்பூர் சுப்ரமணியம்

‘கஷ்டத்தை புரிந்து கொள்ளாத தமிழ் நடிகர்கள்..’ திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tirupur Subramaniamபிரபல விநியோகஸ்தரும் கோவை நீலகிரி மாவட்ட திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான திருப்பூர் சுப்ரமணியம் ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் பெருகி வரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மல்டி ப்ளக்ஸை குறித்து கூறியுள்ளார்.

மேலும், அதில் அவர் கூறியிருப்பதாவது…

மல்டி ப்ளக்ஸை பொறுத்தவரை மேல் தட்டு மக்களே அங்கு அதிகளவில் படம் பார்க்கின்றனர். அவர்களுக்கு டிக்கெட் விலை பற்றி கவலையில்லை.

ஆனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தியேட்டர்களுக்கு வரத் பயப்படுகின்றனர்.

எனவே அவர்கள் திருட்டு விசிடியில் படம் பார்க்கின்றனர்.

ஆந்திராவில் உள்ள நடிகர்கள் பெரும்பாலோனார் சொந்தமாக தியேட்டர்கள் வைத்துள்ளனர்.

அவர்களுக்கு தியேட்டர் நடத்துவது எவ்வளவு பெரிய கஷ்டம் என்பது தெரியும்.

எனவே அவர்கள் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதாலும், மக்கள் அதிகளவில் வருவதாலும் நிறைய லாபம் பார்க்கின்றனர்.

ஆனால் தமிழ் நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டு, திருமண மண்டபம் கட்டவே நினைக்கின்றனர்.

தியேட்டர்கள் கட்டுவதில்லை. எனவே அவர்களுக்கு எங்கள் கஷ்டம் புரிவதில்லை” என்றார்.

சி3 ரிலீஸ்: ஏன் இப்படி..? நொந்து கொள்ளும் சூர்யா ரசிகர்கள்

சி3 ரிலீஸ்: ஏன் இப்படி..? நொந்து கொள்ளும் சூர்யா ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singam suriyaசூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சி 3 (சிங்கம் 3) படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இப்படம் முதலில் டிசம்பர் 16, 2016 அன்று வெளியாகும் என மிகப்பிரம்மாண்டமாக அறிவிக்கப்பட்டு டிரெண்ட் ஆனது.

பின்னர் டிசம்பர் 23ஆம் தேதி என்றனர்.

அதன்பின்னர் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சூர்யாவே அறிவித்தார்.

இதனிடையில் சில ஊடகங்கள் பைரவா உடன் மோத உள்ளது என்றனர்.

இதனால் சூர்யா ரசிகர்கள் பலத்த குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளதாக தற்போது தெரிவித்துள்ளனர்.

இதுக்கு முறையா 8 மணிக்கே தேதியை சொல்லி இருக்கலாமே. எதற்கு இந்த முன் அறிவிப்பு காத்திருப்பு என்று சூர்யா ரசிகர்களே நொந்து கொள்கிறார்கள்.

 

தியேட்டரில் ஆட்டோக்களை அனுமதிக்க விஷால் வேண்டுக்கோள்

தியேட்டரில் ஆட்டோக்களை அனுமதிக்க விஷால் வேண்டுக்கோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalவிஷால் நடித்த கத்தி சண்டை படம் நாளை மறுநாள் வெளியாகிறது.

இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் விஷால். அதில்…

தற்பொழுது அனைத்து திரையரங்குகளிலும் ஆட்டோக்களுக்கு பார்க்கிங் செய்வற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது குடும்பதினர்களுடன் படம் பார்க்க வரும்பொழுது அவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் பகல் வேலைகளிலும் ஆட்டோ சவாரிகள் இல்லாதபோதும் அவர்கள் படம் பார்பதற்கு திரையரங்குகளுக்கு தான் வருகின்றனர்.

இதனால் தியேட்டர் அதிபர்களுக்கு வருமானமே தவிர அவர்களால் நட்டம் ஒன்றும் இல்லை.

மேலும் ஆட்டோ தொழிலாளர்கள் ஒரு திரைப்படம் வெளியாவதர்க்கும், அத்திரைப்படம் வெற்றி பெறுவதற்கும் பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகின்றனர்.

நமது திரைப்படம் வெற்றியடைவதற்கு உறுதுணையாக உள்ள ஆட்டோக்களை பார்க்கிங் செய்வதற்கு அனுமதி அளித்து ஆட்டோ தொழிலாளர் நண்பர்களுக்கு மனமகிழ்ச்சி தரும்படி பணிவன்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார் விஷால்.

Vishal request to theatre owners regarding Auto Parking

vishal letter

சிவகார்த்திகேயன்-சந்தானம் வரிசையில் கார்த்திக் ராஜ்

சிவகார்த்திகேயன்-சந்தானம் வரிசையில் கார்த்திக் ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay TV serial fame Karthik Raj starring in 465விஜய் டிவியில் பிரபலமான சிவகார்த்திகேயன், சந்தானம் உள்ளிட்ட பலரும் இன்று சினிமாவில் கோலோச்சி கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை தொடர்ந்து விஜய் டிவியின் “கனா காணும் காலங்கள்” மற்றும் “ஆபீஸ்” சீரியல்களில் நடித்த கார்த்திக் ராஜ் என்பவரும் சினிமாவில் அறிமுகமாகிறார்.

அறிமுக இயக்குனர் “சாய் சத்யம்” இயக்கத்தில் 465 (நாலு ஆறு அஞ்சு) படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தை தொடங்குகிறார்.

இப்பட நாயகி நிரஞ்சனா ஏற்கனவே தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராட்டிணம் மற்றும் கோ2 படங்களில் பணியாற்றிய பிலிப் R சுந்தர் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இசை புகழ் திரு. எ.ஆர்.ரஹ்மானின் இசை கல்லூரியில் பயின்ற சஷாங்க் ரவிச்சந்திரன் மற்றும் ஜெஃப் பேட்டர்சன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

“பிச்சைக்காரன்” மற்றும் “சைத்தான்” படங்களில் எடிட்டராக பணியாற்றிய ஜி.ராஜராஜன் இப்படத்திற்கு எடிட்டிங் மற்றும் கலரிஸ்ட்டாக பணியாற்றியுள்ளார்.

மேக் ரியல் மீடியா பாலமுருகன் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை கவனித்துள்ளார்.

இப்படம் வழக்கமான த்ரில்லர் கதையில்லாமல் மாறுபட்டு இருக்கும் என கார்த்திக் ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தலைப்பானது இந்திய அரசியல் சட்டம் இபிகோ வை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Vijay TV serial fame Karthik Raj starring in 465

More Articles
Follows