இளையதளபதி உடன் இணைந்து வரும் சந்தானம்

இளையதளபதி உடன் இணைந்து வரும் சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay santhanamவிஜய்யுடன் சில படங்களில் இணைந்து நடித்தவர் சந்தானம்.

தற்போது சந்தானம் ஹீரோவாகி விட்டதால், காமெடி மட்டும் செய்யும் வேடங்களை தவிர்த்து வருகிறார்.

இனி விஜய்யுடன் இணைவாரா? சந்தானம் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் விஜய் படத்தில் இணையாமல் இருந்தாலும், விஜய் படம் ரிலீஸ் ஆகும் நாளில் தன் படத்தை வெளியிட இருக்கிறார் சந்தானம்.

அடுத்த ஆண்டு 2017ல் பொங்கல் தினத்தில் விஜய்யின் பைரவா வெளியாகவுள்ளது.

இதே நாளில் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படமும் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் வைபவி ஷிந்திலியா, நாகேஷின் பேரன் நாகேஷ் பிஜேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதே நாளில் விஷாலின் கத்தி சண்டை படமும் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘மத்தவங்க நடிப்பாங்க… நீங்க அப்படியில்லையே தனுஷ்’ – கேவி. ஆனந்த்

‘மத்தவங்க நடிப்பாங்க… நீங்க அப்படியில்லையே தனுஷ்’ – கேவி. ஆனந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush kv anandகே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் கவண்.

இப்படத்தின் சூட்டிங்கின் போது, நாயகி மடோனாவின் நடிப்பை பார்த்து வியந்தேன் என தெரிவித்திருந்தார் கே.வி. ஆனந்த்.

பெரும்பாலும் நான் யாரையும் பாராட்டுவது இல்லை எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்கு தனுஷ் தன்னுடைய கமெண்டில், உங்கள் படத்தில் நடிக்கும்போது நானும் அதை உணர்ந்தேன் என குறிப்பிட்டு இருந்தார்.

அதற்கு பதிலளித்து கேவி ஆனந்த் கூறியதாவது…

“மத்த நடிகர்கள் நடிப்பாங்க. எனவே பாராட்டை எதிர்பார்ப்பாங்க.

ஆனால் நீங்க அந்த கேரக்டராக வாழ்வீர்கள். எனவே, வாயடைத்து நிற்பேன்” என தெரிவித்துள்ளார்.

கேவி. ஆனந்த் இயக்கிய ‘அனேகன்’ படத்தில் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

anand k v ‏@anavenkat
@dhanushkraja Others act in films…need compliments to enhance their act. But you LIVED it…made me speechless

திருப்பதியில் குடும்பத்துடன் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

திருப்பதியில் குடும்பத்துடன் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyanதமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களின் ஒருவராக திகழ்கிறார் சிவகார்த்திகேயன்.

அண்மையில் வெளியான இவரது ரெமோ படம், தமிழில் சக்கைப் போடு போட்டது.

ஓரிரு தினங்களுக்கு முன், இதன் தெலுங்கு பதிப்பும் வெளியானது.

இதற்கும் அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் ரெமோ வெற்றியடைந்ததை முன்னிட்டு, சிவகார்த்திகேயன் தன் குடும்பத்துடன் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

அதன்பின்னர் அங்குள்ள ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

தனுஷுக்கு வாய்ஸ் கொடுத்த கமல்… உங்களுக்கு தெரியுமா?

தனுஷுக்கு வாய்ஸ் கொடுத்த கமல்… உங்களுக்கு தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal dhansushசெல்வராகவன் இயக்கிய புதுப்பேட்டை படம், கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி வெளியானது.

இதில் தனுஷ், ஸ்னேகா, சோனியா அகர்வால், பாலாசிங், அழகம்பெருமாள் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தின் 10வது ஆண்டு நிறைவையொட்டி, இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய சொல்லி, தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் இடம்பெற்ற நெருப்பு வாய்னில் என்ற பாடலை கமல்ஹாசன் பாடியிருந்தார்.

இப்பாடல் திரையிடப்பட்ட போது, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

ரஜினி படத்தில் சிரஞ்சீவி-மகேஷ்பாபுக்கு கெஸ்ட் ரோல்

ரஜினி படத்தில் சிரஞ்சீவி-மகேஷ்பாபுக்கு கெஸ்ட் ரோல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini Chiranjeevi and Mahesh babuஷங்கர் இயக்கும் 2.ஓ படத்தில் ரஜினியுடன் அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, இதன் பர்ஸ்ட் லுக்கை அண்மையில் மும்பையில் மிகப்பிரம்மாண்டமாக வெளியிட்டது.

இந்நிலையில் இப்படத்தின் கெஸ்ட் ரோலில் தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி மற்றும் மகேஷ்பாபு ஆகியோர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே படத்தில் பிரபல நட்சத்திரங்கள் இருக்கும் நிலையில், இவர்களும் இணைந்துள்ளதால், படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவும் என கூறப்படுகிறது.

ஆக்ஷன் ரூட்டுக்கு மாறும் காமெடி ஹீரோ சந்தானம்

ஆக்ஷன் ரூட்டுக்கு மாறும் காமெடி ஹீரோ சந்தானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor santhanamவாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் “ஓடி ஓடி உழைக்கனும்“.

இதில் சந்தானம் நாயகனாக நடிக்க, நாயகியாக அமோரா தஸ்தர் நடிக்கிறார்.

இவர்களுடன் யோகி பாபு நான் கடவுள் ராஜேந்திரன், சுவாமிநாதன், ஊர்வசி மதுசூதனராவ், மன்சூரலிகான், மயில்சாமி ஆகியோரும் நடிக்கின்றனர்.

கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையைமக்கிறார்.

எடிட்டிங்கை ராமாராவ் கவனித்துக் கொள்ள, ஞானகிரி இயக்குகிறார்.

இப்படத்தின் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் சந்தானம் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுடன் மோதினாராம்.

ஹீரோவானாலும் இதுநாள் வரை காமெடி ரூட்டில் பயணித்த சந்தானம், தற்போது ஆக்ஷனுக்கு மாறியுள்ளார்.

முறையாக பயிற்சி பெற்று, கராத்தேவில் சந்தானம் பிரவுன் பெல்ட் வாங்கியிருப்பது இங்கே கவனிக்கத்தக்கது.

More Articles
Follows