தியேட்டரில் ஆட்டோக்களை அனுமதிக்க விஷால் வேண்டுக்கோள்

தியேட்டரில் ஆட்டோக்களை அனுமதிக்க விஷால் வேண்டுக்கோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishalவிஷால் நடித்த கத்தி சண்டை படம் நாளை மறுநாள் வெளியாகிறது.

இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் விஷால். அதில்…

தற்பொழுது அனைத்து திரையரங்குகளிலும் ஆட்டோக்களுக்கு பார்க்கிங் செய்வற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் தங்களது குடும்பதினர்களுடன் படம் பார்க்க வரும்பொழுது அவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும் பகல் வேலைகளிலும் ஆட்டோ சவாரிகள் இல்லாதபோதும் அவர்கள் படம் பார்பதற்கு திரையரங்குகளுக்கு தான் வருகின்றனர்.

இதனால் தியேட்டர் அதிபர்களுக்கு வருமானமே தவிர அவர்களால் நட்டம் ஒன்றும் இல்லை.

மேலும் ஆட்டோ தொழிலாளர்கள் ஒரு திரைப்படம் வெளியாவதர்க்கும், அத்திரைப்படம் வெற்றி பெறுவதற்கும் பல்வேறு வழிகளில் உதவி செய்து வருகின்றனர்.

நமது திரைப்படம் வெற்றியடைவதற்கு உறுதுணையாக உள்ள ஆட்டோக்களை பார்க்கிங் செய்வதற்கு அனுமதி அளித்து ஆட்டோ தொழிலாளர் நண்பர்களுக்கு மனமகிழ்ச்சி தரும்படி பணிவன்புடன் உங்களை கேட்டுக்கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார் விஷால்.

Vishal request to theatre owners regarding Auto Parking

vishal letter

சிவகார்த்திகேயன்-சந்தானம் வரிசையில் கார்த்திக் ராஜ்

சிவகார்த்திகேயன்-சந்தானம் வரிசையில் கார்த்திக் ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay TV serial fame Karthik Raj starring in 465விஜய் டிவியில் பிரபலமான சிவகார்த்திகேயன், சந்தானம் உள்ளிட்ட பலரும் இன்று சினிமாவில் கோலோச்சி கொண்டிருக்கிறார்கள்.

இவர்களை தொடர்ந்து விஜய் டிவியின் “கனா காணும் காலங்கள்” மற்றும் “ஆபீஸ்” சீரியல்களில் நடித்த கார்த்திக் ராஜ் என்பவரும் சினிமாவில் அறிமுகமாகிறார்.

அறிமுக இயக்குனர் “சாய் சத்யம்” இயக்கத்தில் 465 (நாலு ஆறு அஞ்சு) படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தை தொடங்குகிறார்.

இப்பட நாயகி நிரஞ்சனா ஏற்கனவே தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராட்டிணம் மற்றும் கோ2 படங்களில் பணியாற்றிய பிலிப் R சுந்தர் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.

இசை புகழ் திரு. எ.ஆர்.ரஹ்மானின் இசை கல்லூரியில் பயின்ற சஷாங்க் ரவிச்சந்திரன் மற்றும் ஜெஃப் பேட்டர்சன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

“பிச்சைக்காரன்” மற்றும் “சைத்தான்” படங்களில் எடிட்டராக பணியாற்றிய ஜி.ராஜராஜன் இப்படத்திற்கு எடிட்டிங் மற்றும் கலரிஸ்ட்டாக பணியாற்றியுள்ளார்.

மேக் ரியல் மீடியா பாலமுருகன் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகளை கவனித்துள்ளார்.

இப்படம் வழக்கமான த்ரில்லர் கதையில்லாமல் மாறுபட்டு இருக்கும் என கார்த்திக் ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்படத்தலைப்பானது இந்திய அரசியல் சட்டம் இபிகோ வை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

Vijay TV serial fame Karthik Raj starring in 465

தனுஷ் தொடங்கினார்… விடாத முடியாமல் தவிக்கும் அமலா பால்?

தனுஷ் தொடங்கினார்… விடாத முடியாமல் தவிக்கும் அமலா பால்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

amala paul hotவிஜய், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடியவர் அமலா பால்.

அதன்பின்னர் இயக்குநர் விஜய்யுடன் திருமணம், விவாகரத்து என சென்றவர், தனது அடுத்த இன்னிங்ஸை தற்போது தொடங்கி விட்டார்.

ஆனால் தற்போதும் ஹீரோவுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலேயே நடித்து வருகிறார்.

ஆனால் ஜோதிகா, நயன்தாரா மற்றும் த்ரிஷா போன்றவர்கள் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

எனவே இவருக்கும் தனுஷ் தந்த ‘அம்மா கணக்கு’ கேரக்டர் போன்ற கதைகளில் நடிக்க விருப்பாம்.

2016 ஆண்டின் உலகி அழகிக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்?

2016 ஆண்டின் உலகி அழகிக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

miss world 2016உலக அழகி போட்டி வருடந்தோறும் நடைபெற்று வருகிறது.

2016ஆம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி அமெரிக்காவில் உள்ள நேஷனல் ஹார்பர் பகுதியில் நடைபெற்றது.

இதில் உலகில் பல நாடுகளில் இருந்தும் கிட்டதட்ட 120 அழகிகள் கலந்து கொண்டனர்.

பல கட்டத் தேர்வுகளுக்கு பின்னர் போர்டோ ரிகோ நாட்டை சேர்ந்த டி-வாலி என்ற 18 வயது இளம்பெண் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2015-ம் ஆண்டு பட்டம் வென்ற ஸ்பெயின் அழகி மிரேயா லலாகுனா டி. வாலிக்கு கிரீடம் சூட்டி மகிழ்ந்தார்.

இதெல்லாம் இருக்கட்டும். டைட்டில் இருக்கிற அஜித்துக்கும் இவருக்கு என்ன சம்பந்தம் என்றா கேட்கிறீர்களா? பாஸ் இன்னுமா புரியல.

எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்த படம்தானே வாலி. 1999ஆம் ஆண்டில் இப்படம் வெளியானது.

ஹ்ம்…. ப்ப்பா முடியல (உங்க மைண்ட் வாய்ஸ்)

Puerto Rico’s Stephanie Del Valle crowned Miss World 2016

‘தளபதி’ ட்ரெண்டை முறியடிக்க வெளியானது ‘தல’ படம்

‘தளபதி’ ட்ரெண்டை முறியடிக்க வெளியானது ‘தல’ படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ajithஇளைய தளபதி விஜய் நடித்துள்ள பைரவா பாடல்கள் டிசம்பர் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டாலும், தற்போதே எல்லா பாடல்களை வெளியிட்டு விட்டனர்.

ரசிகர்களின் ஆர்வ மிகுதியே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

பாடல் வரிகள் வீடியோவை ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டு இணையத்தை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இதனை ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தல 57 படத்தை இயக்கி வரும் சிவா, திடீரென அஜித்தின் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்.

எனவே பைரவா படத்துடன் தல அஜித்தின் புகைப்படம் தற்போது ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Bairavaa and AK57 were trending at same time

அஜித் ரசிகர்களுக்கு சிவா கொடுத்த இன்ப அதிர்ச்சி

அஜித் ரசிகர்களுக்கு சிவா கொடுத்த இன்ப அதிர்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith thala 57சிவா இயக்கும் தல 57 படத்தில் அஜித்துடன் காஜல், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இதன் சூட்டிங் தற்போது பல்கேரியா நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் அஜித்தின் அடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன் அஜித் ஓட்டும் பைக் சாகச வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director revealed one more still of Ajith from Thala 57

More Articles
Follows