விஷாலின் கருப்பு நிறத்தை ஓவராய் கலாய்த்த விஷ்ணு

விஷாலின் கருப்பு நிறத்தை ஓவராய் கலாய்த்த விஷ்ணு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal vishnuவிஷால் நடித்துள்ள கத்தி சண்டை படம் நாளை டிச. 23ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படத்தில் நான் கொஞ்சம் கருப்புதான் என்ற வரிகள் தொடங்கும் பாடல் அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று சற்றுமுன் விஷால் ட்விட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ரசிகர்கள் பலரும் கேள்விகளை கேட்டனர்.

இதில் விஷாலின் நண்பரும் நடிகருமான விஷ்ணு ஒரு கேள்வியை கேட்டுள்ளார்.

ஒரு டவுட்.. நீங்க கொஞ்சம் கருப்புன்னா… அப்போ கருப்புன்னா என்ன? இது ஓவராய் இல்லையா? என்று கேட்டுள்ளார்.

vishnu vishaal ‏@iamvishnuvishal 3m3 minutes ago
#VishalLive ‘naan konja karuppu dhaan song’ one doubt, neenga KONJON karuppu na appo karuppu na yenna ?? overaa illay ;);) @VishalKOfficial

Vishnu Vishal made fun of Vishal’s black skin

மீண்டும் விஜய் சேதுபதிக்கு கைகொடுக்கும் தனுஷ்

மீண்டும் விஜய் சேதுபதிக்கு கைகொடுக்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush Vijay sethupathiதனுஷ் தயாரித்த நானும் ரௌடிதான் படத்தில் நடித்து இருந்தார் விஜய் சேதுபதி.

இப்படம் விஜய்சேதுபதிக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

இதனையடுத்து வட சென்னை படத்தில் இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.

இந்நிலையில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் இணைந்துள்ள படம் கவண்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஹாப்பி ஹாப்பி நியூ இயர் என்ற பாடலின் டீசரை நாளை 23ஆம் தேதி 7 மணிக்கு தனுஷ் வெளியிடவிருக்கிறாராம்.

இத்தகவலை கே.வி. ஆனந்த் தன் ட்விட்டரில் சற்றுமுன் பகிர்ந்துள்ளார்.

ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

anand k v ‏@anavenkat 4m4 minutes ago
Our own Kaali @dhanushkraja will release #Kavan HappyHappy Newyear Song teaser tomorrow 23rd @ 7pm @hiphoptamizha @archanakalpathi

Vijay Sethupathi’s Kavan movie song teaser launch by Dhanush

சிவகார்த்திகேயன் சோதனை அருண் விஜய்க்கும் வந்தது

சிவகார்த்திகேயன் சோதனை அருண் விஜய்க்கும் வந்தது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan Arun Vijayரெமோ படத்தின் நன்றி விழாவில் சிவகார்த்திகேயன் கண்ணீர் விட்டு அழுதார்.

நான் இங்கே வேலை செய்யவே வந்துள்ளேன். என்னை வேலை செய்ய விடுங்கள். தொந்தரவு செய்யாதீர்கள் என மேடையில் பேசினார்.

யாரால் என்ன பிரச்சினை? என்று பஞ்சாயத்து ஒரு பக்கம் நடந்து வருகிறது.

இதே போல் தற்போது அருண் விஜய்யும் தன் கருத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில்… நான் இங்கே வேலை செய்யவே வந்துள்ளேன்.

மற்றவருடன் போட்டி போட்டு யாருக்கு செல்வாக்கு என்பதை நிரூபிக்க வரவில்லை. வாழுங்கள் வாழ விடுங்கள் என தெரிவித்துள்ளார்.

அருண் விஜய் நடித்துள்ள குற்றம் 23 படம் 2017 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ArunVijay ‏@arunvijayno1
I am here to do my job with passion not to compete who is big.. Please do not backstab.. Live and let live.

Sivakarthikeyan and Arun Vijay facing same problems in Cinema

மீண்டும் காக்கி சட்டையில் ‘சிறுத்தை’ கார்த்தி

மீண்டும் காக்கி சட்டையில் ‘சிறுத்தை’ கார்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi again Policeமணிரத்னம் இயக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

இப்படம் 2017 காதலர் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கார்த்தி.

இதில் நாயகியாக ராகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

‘சிறுத்தை’ படத்திற்கு பின் இதிலும் காக்கி சட்டை அணியவிருக்கிறார் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யா ஒளிப்பதிவு செய்ய, காஷ்மோரா படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

ஜனவரி முதல் வாரம் இதன் சூட்டிங் தொடங்குகிறது.

Karthi Vinoth next movie titled Theeran Adhigaram Ondru

கீர்த்தி சுரேஷிடம் விஜய் நேரில் சொன்ன மூன்று வார்த்தை

கீர்த்தி சுரேஷிடம் விஜய் நேரில் சொன்ன மூன்று வார்த்தை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay keerthy sureshதமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடிக் கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

இவர் விஜய்யுடன் நடித்த பைரவா’ படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளார். அதில்…

‘விஜய் சாரின் ரசிகையாக இருந்த நான், இன்று அவருடன் நடித்ததை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.

விஜய் சார் அமைதியானவர். அதிகம் பேச மாட்டார்.

பைரவா சூட்டிங் முடிந்த சமயத்தில் ‘நீங்க நல்லா நடிச்சிருக்கீங்க’ என்று மூன்றை வார்த்தைகளில் என்னை பாராட்டினார்” என்று தெரிவித்துள்ளார்.

Vijay appreciates Keerthy Suresh performance in Bairavaa movie

‘பைரவா’வை கலாய்த்தவருக்கு வெங்கட் பிரபு-அருண்ராஜா காமராஜ் பதிலடி

‘பைரவா’வை கலாய்த்தவருக்கு வெங்கட் பிரபு-அருண்ராஜா காமராஜ் பதிலடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Venkat prabhu Arunraja Kamarajவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள பைரவா பாடல் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது.

ஆனால் பாடல்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என ஒரு யூடியுப் பிரபல விமர்சகர் தெரிவித்திருந்தார்.

எனவே அவரின் ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்த பாடகர் அருண்ராஜ் காமராஜ், வெங்கட் பிரபுவிடம் என்னான்னு கேளுங்கள் சார் என பதிவிட்டு இருந்தார்.

அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு ‘சார் நம்ம மக்களுக்காக படம் பண்றோம், அவர்களுக்கு பிடிக்கும் சார்’ என்று அந்த விமர்சகருக்கு பதிலடி கொடுத்தார்.

@Arunrajakamaraj @itisprashanth @Music_Santhosh @YouTube hehehe bro naama makkalukku pandrom!! Makkal kodaduvaanga!! Adhaney venum
— venkat prabhu (@vp_offl)

மேலும் அருண்ராஜா காமராஜ் அந்த விமர்சகருடன் ட்விட்டரில் வாக்குவாதம் செய்தார்.

அதில்.. “நான் என் வழியில போறேன். எதிரில் எவன் வந்தாலும் பார்க்க மாட்டேன்” என கடும் ஆவேசமாக தெரிவித்துள்ளார் அருண்ராஜா காமராஜ்.

Venkat prabhu and Arunraja Kamaraj reaction to Bairavaa Songs

More Articles
Follows