100 நாட்களுக்குள் 2 படங்களை ரிலீஸ் செய்ய விஷால் திட்டம்

100 நாட்களுக்குள் 2 படங்களை ரிலீஸ் செய்ய விஷால் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vishal plans to release his 2 movies within 100 daysகடந்த சில மாதங்களாக சினிமா துறை தேர்தல் முதல் பொதுத்தேர்தல் வரை பிஸியாக இருந்தவர் விஷால்.

இதனால் அவர் நடிக்கும் படங்களின் ரிலீஸ் தள்ளிப்போனது.

தற்போது மீண்டும் தன் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்.

மித்ரன் இயக்கத்தில் அர்ஜீன், விஷால், சமந்தா நடித்துள்ள இரும்புத்திரை படத்தை 2018 ஜனவரி 26ல் வெளியிடவுள்ளனர்.

இப்படத்தை விஷால் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதனையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் உருவாகிவரும் சண்டக்கோழி2 படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதில் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வரலட்சுமி இருவரும் நடித்து வருகின்றனர்.

இதன் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Vishal plans to release his 2 movies within 100 days

தாய்-புரட்சித்தலைவி என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை சினிமா

தாய்-புரட்சித்தலைவி என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை சினிமா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

jayalalithaதமிழகத்தின் முதல்வராகவும், அதிமுக.வின் பொது செயலாளருமான ஜெயலலிதா ஓர் நடிகையும் ஆவார்.

இவரின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக எடுக்க மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளது.

இதற்கு தேவையான விஷயங்களை அவர்கள் கடந்த ஒரு வருடமாக திரட்டி வைத்துள்ளனர்.

இப்படத்திற்கு ‘தாய்-புரட்சித் தலைவி’ என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.

அவர் உயிருடன் இருக்கும்போதே இது குறித்து அவரிடம் பேசியதாகவும், அதற்கு அவர் பிறகு பேசலாம் என்று கூறியதாகவும் தயாரிப்பாளர் ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் எடுக்க போவதாகவும், அவரது சினிமா கால வாழ்க்கையை சென்னையிலும் எடுக்கப்போவதாக கூறப்படுகிறது.

மேலும், அவரது கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும், படப்பிடிப்பு வரும் ஜனவரி மாத இறுதியில் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடவுளை பாத்துட்டேன்; போட்டோ வேண்டாம்; ரஜினியை அலற வைத்த ரசிகர்

கடவுளை பாத்துட்டேன்; போட்டோ வேண்டாம்; ரஜினியை அலற வைத்த ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth fans meet photoநடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தன் ரசிகர்களைச் சந்தித்து வருகிறார்.

நேற்றுத் தொடங்கிய இந்தச் சந்திப்பு இன்னும் 5 நாள்களுக்கு நடக்கிறது.

இன்றைய சந்திப்பின்போது ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்தது. ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக ரஜினி அருகில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர்.

சிலர் ரஜினியின் காலில் விழுந்துவிட்டு பின்னர் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

ஆனால், ஒரு ரசிகர் மட்டும் ரஜினியின் அருகில் நின்று கடவுளை வணங்கிவிட்டு போட்டோ வேண்டாம் என்று கூறி ரஜினியைப் பார்த்துக்கொண்டிருந்தாராம்.

சபையில் இருந்தவர்கள் ’போட்டோ எடுத்துக்கோ’ என்று கூச்சல் எழுப்பினர்.

ஆனாலும், அவர் போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் ரஜினியையே பார்த்துக்கொண்டு நின்றாராம்.

`நான் கடவுளைதான் பார்க்க வந்தேன். போட்டோ எடுக்க வரவில்லை’ என்று கூறி 3 நிமிடம் அங்கே நின்றாராம்.

விசாரித்ததில் அவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த குணசேகர் என்று தெரிந்தது. குணசேகரைத் தொடர்புகொண்டு பேசினோம்…

“9 வயசிலிருந்தே எனக்கு ரஜினியைப் பிடிக்கும். மாவீரன், மனிதன் படங்கள் பார்த்த பிறகுதான் அவரோட நடிப்புத் திறமைமேல தனி மரியாதை வந்துச்சு.

அண்ணாமலை படத்துக்குப் பிறகு, ரசிகர் மன்றம் வெச்சோம். அப்படியே அவர் மேல இருக்க மரியாதை பாசமா மாறுச்சு. அவர் இப்போ எனக்கு கடவுள் மாதிரி. நான் இயக்குநர் ஷங்கரின் கார் டிரைவர். ரஜினி சாரோட நிறைய தடவ படப்பிடிப்பில் இருந்திருக்கேன். ஆனா ஒருதடவக்கூட அவரிடம் போய், நான் உங்க ரசிகர், உங்ககூட போட்டோ எடுத்துக்கணும் அப்படின்னு சொன்னது கிடையாது.

காரணம் அவரோட ரசிகரா அவர சந்திக்கணும்னு எனக்குள்ள வைராக்கியம். அதனாலதான் இந்த ரசிகர்கள் உடனான சந்திப்பில் கலந்துகிட்டது.

அவர் பக்கத்துல ரசிகரா போய் நிக்கணும்னு மட்டும்தான் ஆசை. போட்டோ புடிக்கணும்னு ஆசை கிடையாது. அவர் எனக்கு கடவுள். அவர் பக்கத்துல ஒரு சில நொடி அவரோட ரசிகரா நின்னேன். அதுவே போதும் அவர் அரசியலுக்கு வரணும்.

மக்களைக் காப்பாத்தணும். இதுதான் என்னோட ஆசை” என்று முடித்தார்.

ஜீவாவுக்கு ஜோடியானார் அர்ஜுன் ரெட்டி படபுகழ் ஷாலினி பாண்டே

ஜீவாவுக்கு ஜோடியானார் அர்ஜுன் ரெட்டி படபுகழ் ஷாலினி பாண்டே

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jiiva and Shalini pandeyகலகலப்பு-2′ படத்தினை தொடர்ந்து நடிகர் ஜீவா தனது அடுத்த படத்தை டான் சாண்டி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

ஜீவாவின் 29வது படமாக உருவாகும் இந்த படத்தில், இவருக்கு ஜோடியாக ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் புகழ் ஷாலினி பாண்டே நடிக்க போகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் கூறுகையில், “காமெடி த்ரில்லர் ஜேனரில் இந்த படம் உருவாகிறது.

இதற்கு `விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். இந்தப் படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் ஒன்றும் இடம்பெறுகிறது.

படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தற்போது தமிழ் படமான ‘100% காதல்’ என்னும் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

விஜய் ரசிகர்களுக்கு 2017 மெர்சல் தீபாவளி; 2018 மெர்சல் பொங்கல்

விஜய் ரசிகர்களுக்கு 2017 மெர்சல் தீபாவளி; 2018 மெர்சல் பொங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal stillsஇந்த வருடம் அக்டோபர் 18ஆம் தேதி விஜய் நடித்த மெர்சல் படம் வெளியானது.

எனவே இந்த வருட தீபாவளி மெர்சலாக்கி கொண்டாடினர் விஜய் ரசிகர்கள்.

இப்படம் வந்து 100 நாட்களை நெருங்கும் வேளையில் அடுத்த வருடம் 2018 பொங்கல் தினத்தில் ஜனவரி 14ல் ஜீடிவியில் இப்படத்தை ஒளிப்பரப்பாக இருக்கின்றனர்.

எனவே அடுத்த வருட பொங்கலையும் விஜய் ரசிகர்கள் மெர்லாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஜன-28ல் லிப்ரா புரொடக்சன்ஸ் பிரமாண்ட குறும்பட திருவிழா..!

ஜன-28ல் லிப்ரா புரொடக்சன்ஸ் பிரமாண்ட குறும்பட திருவிழா..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Libra production contestசில விஷயங்கள் சொன்ன நேரத்தில் நடக்காமல் தள்ளிப்போவது என்பது கூட நல்லதற்குத்தான் என்றே நினைக்க தோன்றுகிறது. ஆம்.. தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் தயாரிப்பு நிறுவனங்களில் குறிப்பிட்டு சொல்ல கூடியவற்றில் ஒன்றான லிப்ரா புரடக்சன்ஸ் குறும்பட இயக்குனர்களுக்கு வெள்ளித்திரை வாசலை திறந்துவிடும் ஒரு முயற்சியாக கடந்த நவ-29ல் குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தது.

இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரடக்சன்ஸ். அந்தவிதமாக போட்டிக்கு வந்த 946 படங்களில் இருந்து சிறந்த 53 குறும்படங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டன.

இந்தநிலையில் தான் இந்த விழாவை வரும் ஜன-28ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இப்படி தள்ளி வைப்பதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. கனடா, ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்தும் இந்தப்போட்டியில் குறும்படங்கள் கலந்துகொள்ள இருகின்றன.

அதுமட்டுமல்ல, சில சர்வதேச திரைப்பட நடுவர்(ஜூரி)களும் இந்த விழாவில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

அதனால் இந்த குறும்பட விழா முன்னைவிட இன்னும் பிரமாண்டமாக, மற்ற குறும்பட விழாக்களுக்கு முன்னோடியான நிகழ்ச்சியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

அதனால் இந்த நீண்ட தாமதத்திற்காக லிப்ரா புரொடக்சன்ஸ் உங்களிடம் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது.

More Articles
Follows