தமிழ் சினிமாவில் பார்ட் 2 படங்கள் தொடர் தோல்வி.; ரஜினி உஷார்!

தமிழ் சினிமாவில் பார்ட் 2 படங்கள் தொடர் தோல்வி.; ரஜினி உஷார்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Failure of Sequel movies in Tamil Cinemaகடந்த சில வருடங்களாகவே வெற்றிப் பெற்ற படங்களின் 2ஆம் பாகத்தை எடுப்பதை தமிழ் சினிமா உலகினர் கடைப்பிடித்து வருகின்றனர்.

முனி வெற்றிப் பெற்றதை அடுத்து அதே கதைக்களத்தில் காஞ்சனா 1 வெளியானது. இதனையடுத்து காஞ்சனா 2 படமும் வெளியானது.

ஆனால் முதல் பாகத்தை போன்று மற்ற படங்கள் இல்லை என கூறப்பட்டது.

அதுபோல் சிங்கம் 1 வெற்றிப் பெற்றதை அடுத்து சிங்கம் 2, சிங்கம் 3 படங்கள் வெளியானது. 3ஆம் பாகம் எதிர்பார்த்த அளவு வெற்றிப் பெறவில்லை.

அதுபோல் தமிழ்படம் 1, தமிழ்ப்படம் 2 ஆகியவை வெளியானது. இந்த படங்களாவது ஓரளவு பேசப்பட்டது.

ஆனால் டார்லிங்2, விஐபி2, மணல் கயிறு2, பில்லா2, ஜித்தன்2, கோ2, சென்னையில் ஒரு நாள்2 ஆகியவை தோல்வியை தழுவியது.

அதுபோல் அண்மையில் வெளியான விஸ்வரூபம்2, சாமி2 மற்றும் சண்டக்கோழி2 படங்களும் முதல் பாகத்தை போல ஹிட் அடிக்கவில்லை.

முதல் பார்ட்டில் தந்த சுவாரஸ்யத்தை இயக்குனர்கள் 2ஆம் பாகத்தில் தரவில்லை என கூறப்படுகிறது.

மேலும் நடிகர், நடிகைகளின் தேர்விலும், திரைக்கதை அமைப்பதிலும் இயக்குனர்கள் கவனம் செலுத்தவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் மாபெரும் சூப்பர் ஹிட் அடித்த பாட்ஷா படத்தின் 2ஆம் பாகத்தில் ரஜினி நடிக்க வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் தமிழ் சினிமாவில் ஒரே ஒரு பாட்ஷா. அந்த படத்தின் 2ஆம் பாகத்தை எடுப்பது சரியல்ல என ரஜினி உஷாராக தன் கருத்தை தெரிவித்திருந்தார்.

அதுபோல் மற்ற டைரக்டர்களும் உஷாராக இருப்பார்கள் என நம்புவோம்.

விரைவில் எந்திரன் படத்தின் 2ஆம் பாகம் 2.0 ரிலீஸாகவுள்ளது.

அதுபோல் இந்தியன்2, தேவர் மகன்2 ஆகிய படங்களில் கமல் நடிக்கவுள்ளார்.

அதுபோல் உள்ளே வெளியே 2 படத்தை பார்த்திபன் இயக்கவுள்ளது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

பாகுபலி படமானது ஒரே கதையை 2 பாகங்களாக எடுத்திருந்தார் ராஜமௌலி என்பது குறிப்பிடத்தக்கது.

Failure of Sequel movies in Tamil Cinema

தனுஷ்-வெற்றி மாறன் கூட்டணியின் *வடசென்னை* வசூல் எவ்வளவு.?

தனுஷ்-வெற்றி மாறன் கூட்டணியின் *வடசென்னை* வசூல் எவ்வளவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanushs VadaChennai Box office collection reportபொல்லாதவன், ஆடுகளம் ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக தனுஷை வெற்றிமாறன் இயக்கியுள்ள படம் வடசென்னை.

நேற்று வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்த போதிலும் படத்தில் ஏகப்பட்ட கெட்ட வார்த்தைகள் இருப்பதாக புகார்கள் வந்துள்ளன.

மேலும், இது ஏ சான்றிதழை பெற்றுள்ளதால் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர்கள் மறுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதன் முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.

நேற்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் ரூ 7.2 கோடியை வசூலித்துள்ளதாம். தனுஷ் படங்களிலேயே இது மிக பெரிய ஓப்பனிங் என கூறப்படுகிறது.

Dhanushs VadaChennai Box office collection report

சஞ்சய் ராமசாமி பாணியில் விஜய்க்கு பெயர் வைத்த ஏஆர். முருகதாஸ்

சஞ்சய் ராமசாமி பாணியில் விஜய்க்கு பெயர் வைத்த ஏஆர். முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sarkar movie one line story and Vijay Character name revealsஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாராகியுள்ள படம் சர்கார்.

விஜய் நடித்துள்ள இப்படத்தை இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யவுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ஒன் லைன் ஸ்டோரியும் அதில் விஜய்யின் கேரக்டர் பெயர் குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

பிரபல கூகுள் இணையத்தளத்தின் CEO ஆக தமிழரான சுந்தர் பிச்சை இருக்கிறார். அவரைப் போன்ற ஒரு கேரக்டரை விஜய் சர்காரில் செய்திருக்கிறார்.

இதில் விஜய்யின் பெயர் சுந்தர் ராமசாமி என்பதாகும்.

அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு வரும் விஜய், இங்குள்ள அரசியல் சூழ்நிலைகளை ஆராய்ந்து அதன் பின்னர் இந்த சிஸ்டங்களை மாற்றியமைக்கிறார்.

மேலும் எப்போதும் அரசியல்வாதிகளையே குறை சொல்லிக் கொண்டிருக்காமல் நாமும் திருந்த வேண்டும் என்கிறாராம்.

ஒவ்வொரு தனி மனிதனும் திருந்தினால் நாடு சுத்தமாகும் என்று விஜய் தமிழகத்தை சரி செய்வதாக படத்தின் கதையுள்ளதாம்.

ஏஆர். முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் சூர்யாவின் பெயர் சஞ்சய் ராமசாமி என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

Sarkar movie one line story and Vijay Character name reveals

தீபாவளிக்கு *சர்கார்* உடன் மோத காத்திருக்கும் படங்கள்

தீபாவளிக்கு *சர்கார்* உடன் மோத காத்திருக்கும் படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

List of movies plans to clash with Sarkar on 2018 Diwaliஇந்தாண்டு 2018 தீபாவளிக்கு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் அதிக தியேட்டர்களில் வெளியிட உள்ளனர்.

இருந்தபோதிலும் அதே நாளில் மற்ற படங்களும் சர்கார் உடன் மோத தயாராகி வருகின்றன.

விஜய் ஆண்டனியின் திமிரு பிடிச்சவன், தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா, ஆர்.கே.சுரேஷின் பில்லா பாண்டி ஆகியவை வெளியாகும் எனத் தெரிகிறது.

இத்துடன் சசிகுமாரின் நாடோடிகள் 2 படமும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் மொத்தம் 5 படங்கள் தீபாவளி ரேஸில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

தீபாவளி நெருங்க நெருங்க சில படங்கள் இதிலிருந்து விலக வாய்ப்பு இருக்கலாம்.

தனுஷின் வடசென்னை படம் நேற்றுதான் வெளியானது. எனபே 3 வார இடைவெளியில் அடுத்த (எனை நோக்கி பாயும் தோட்டா) படத்தை வெளியிட வாய்ப்பில்லை என்று நம்பலாம்.

List of movies plans to clash with Sarkar on 2018 Diwali

யு சான்றிதழ் பெற்றுள்ள சீதக்காதி-யை நவம்பரில் வெளியிட திட்டம்

யு சான்றிதழ் பெற்றுள்ள சீதக்காதி-யை நவம்பரில் வெளியிட திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seethakaathi censored U and movie releases on November 2018விஜய்சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான படம் செக்கச்சிவந்த வானம் மற்றும் 96.

இந்த இரண்டு படங்களிலும் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் இரண்டும் மாபெரும் வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சயீரா நரசிம்ம ரெட்டி, ரஜினியின் பேட்ட ஆகிய படங்களும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வருகின்றன.

இதில் விஜய்சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகியுள்ளது.

`நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பேஷன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இதில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

96 பட புகழ் கோவிந்த் மேனன் இந்த படத்திற்கும் இசையமைக்க, சரஸ்காந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கலைக்கும் வயதான கலைஞனுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ளது.

சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ள இப்படத்தை நவம்பர் மாத இறுதியில் வெளியிட உள்ளனர்.

Seethakaathi censored U and movie releases on November 2018

Breaking: 3வது முறையாக இணையும் ஏஆர். ரஹ்மான்-சிம்பு-கௌதம் மேனன்

Breaking: 3வது முறையாக இணையும் ஏஆர். ரஹ்மான்-சிம்பு-கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

AR Rahman Gautham Menon and Simbu to team up for 3rd timeஏஆர். ரஹ்மான் சிம்பு கௌதம் மேனன், ஏஆர். ரஹ்மான் விண்ணைத் தாண்டி வருவாயா, சிம்பு கௌதம் மேனன் படம் அச்சம் என்பது மடமையடா

தமிழ் சினிமாவின் கிளாசிக் இயக்குனர் என்ற பெயர் டைரக்டர் கௌதம் மேனனுக்கு உண்டு.

எந்த ஆக்சன் ஹீரோவாக இருந்தாலும் இவரது படங்களில் மென்மையாக காட்டிவிடுவார்.

அதுபோல்தான் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிம்புவை ரொமான்டிக் ஹீரோவாக்கினார்.

இப்படத்தின் வெற்றிக்கு ஏ.ஆர். ரஹ்மானின் இசை பெரும் உதவியாக இருந்தது.

இதனையடுத்து அச்சம் என்பது மடமையடா என்ற படத்திலும் இந்த மூவர் கூட்டணி இணைந்தது. இது கடந்த 2016ல் வெளியானது.

தற்போது 3வது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளதாம்.

தற்போது இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். விரைவில் முழுமையான தகவல்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.

இது விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் 2ஆம் பாகமாக இருக்க வாய்ப்புள்ளது.

AR Rahman Gautham Menon and Simbu to team up for 3rd time

More Articles
Follows