செக்கச் சிவந்த வானம் கைவிட்டதால் சண்டக்கோழியை நம்பும் சரத்

செக்கச் சிவந்த வானம் கைவிட்டதால் சண்டக்கோழியை நம்பும் சரத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jimikki Kammal Appani Sarath bags role in Sandakozhi2மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அங்கமாலி டைரீஸ் படத்தில் அப்பாணி ரவி என்கிற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் அப்பாணி சரத்.

இவர்தான் ஓரிரு தினங்ளுக்கு முன் வெளியான மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் தாதா தியாகராஜனின் மருமகனாக நடித்திருந்தார்.

இது சரத்துக்கு தமிழில் முதல் படம் என்பதால் மிகவும் ஆவலுடன் இருந்தாராம்.

ஆனால் அவரின் காட்சிகள் சில நொடிக்களில் வந்து மறைந்துவிடும்.

இதனால் சற்று வருத்தத்தில் இருக்கிறாராம்.

எனவே விரைவில் வெளியாகவுள்ள விஷாலின் சண்டக்கோழி-2 படத்தைத் தான் பெரிதும் நம்பியிருக்கிறார் சரத்.

Jimikki Kammal Appani Sarath bags role in Sandakozhi2

இசைப்புயல் ரஹ்மானுடன் இணைந்தார் அருண்ராஜா காமராஜ்

இசைப்புயல் ரஹ்மானுடன் இணைந்தார் அருண்ராஜா காமராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Arunraja Kamaraja teams up with AR Rahman in Sarvam Thaala Mayamநடிகர், பாடலாசிரியர், பாடகர் என வலம் வந்த அருண்ராஜா காமராஜா, அவரது நண்பர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தின் மூலம் இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார்.

இந்நிலையில் இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதன் முதலாக கை கோர்த்துள்ளார் அருண்ராஜா காமராஜ்.

ஜிவி. பிரகாஷ் நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கி வரும் படம் ‘சர்வம் தாள மயம்’ படத்தில் இடம்பெறும் ‘பீட்டர் பீட் ஏத்து’ என்று துவங்கும் பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியிருக்கிறாராம்.

இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.

மியூசிக்கல் சப்ஜெக்டாக உருவாகியுள்ள ‘சர்வம் தாள மயம்’ பட பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.

Arunraja Kamaraja teams up with AR Rahman in Sarvam Thaala Mayam

Arunraja Kamaraja teams up with AR Rahman in Sarvam Thaala Mayam

பாலியல் தொல்லையிலிருந்து தப்பிக்க பாடம் எடுக்கும் சிவகார்த்திகேயன்

பாலியல் தொல்லையிலிருந்து தப்பிக்க பாடம் எடுக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan talks about Good Touch and Bad touch in Modhi Vilayadu Pappa short filmசினிமாவில் பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்பவர் சிவகார்த்திகேயன்.

தற்போது பாலியல் தொல்லையிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான ஒரு விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்துள்ளார்.

மோதி விளையாடு பாப்பா என பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படத்தை இயக்குநர் திரு இயக்கியுள்ளார்.

அந்த குறும்படத்தில் ஒரு மரத்து நிழலில் அமர்ந்துக் கொண்டு மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அங்கு ஒரு நடிகராக செல்கிறார் சிவகார்த்திகேயன்.

அங்குள்ள மாணவர்களுக்கு குட் டச், பேட் டச் பற்றி சொல்லிக் கொடுக்கிறார்.

இந்த வீடியோ தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது.

ஆனால் இந்த குறும்படத்தில் சிவகார்த்திகேயன் பாடம் எடுப்பதற்கு முன்பே குழந்தைகள் எல்லா பதில்களையும் கரெக்டாக சொல்லிவிடுகிறார்கள் என்பதுதான் ஹைலைட்.

Sivakarthikeyan talks about Good Touch and Bad touch in Modhi Vilayadu Pappa short film

https://www.youtube.com/watch?v=3bJsab0br7E

சென்னை அடையாளங்களில் ஒன்றாக அல்சபி ஆம்பூர் பிரியாணி மாறும்; கமல் நம்பிக்கை

சென்னை அடையாளங்களில் ஒன்றாக அல்சபி ஆம்பூர் பிரியாணி மாறும்; கமல் நம்பிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Alsafi Ambur Biriyani owner kamalசுமார் 25 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க, ஆம்பூரின் புகழ் பெற்ற பிரியாணி உணவகமான அல்சபி ஆம்பூர் பிரியாணி, கடந்த மாதம் சென்னை வளசரவாக்கத்தில் தொடங்கப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் அதன் 2 வது கிளை சென்னை நுங்கம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ளது.

சுவை மற்றும் தரம் இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகங்களின் 20 கிளைகள் சென்னையில் திறக்கப்பட உள்ளது.

கடந்த மாதம் இதன் முதல் கிளை சென்னை வளசரவாக்கம் திறக்கப்பட்டு வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, உடனடியாக இரண்டாவது கிளை திறக்கும் பணியில் ஈடுபட்ட அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் உரிமையாளர் கமல், தங்களது இரண்டாவது கிளையை நுங்கம்பாக்கத்தில் உள்ள, உத்தமர் காந்தி சாலையில், காவேரி காம்பிளக்ஸ் பக்கத்தில் திறந்துள்ளார்.

நேற்று (செப்.28) நடைபெற்ற திறப்பு விழாவை முன்னிட்டு இரண்டு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்ற சலுகை வழங்கப்பட்டது. மேலும் 12 மணிக்கு பிரியாணி விற்பனை தொடங்கியதுமே சுமார் 1 மணி நேரத்தில் பிரியாணி முழுவதும் தீர்ந்ததோடு, மேலும் பல வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்தது, அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நுங்கம்பாக்கத்தை தொடர்ந்து சென்னை தியாகராயா நகரில் 3 வது கிளை திறக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் உரிமையாளர் கமல்…

“நாங்கள் திறக்கும் அனைத்து கிளைகளிலும் பிரியாணி ஒரே சுவையுடன் தான் இருக்கும். அதற்காக நாங்கள் அதிகமாக மெனக்கெடுகிறோம். எங்களது முதல் கிளைக்கு வாடிக்கையாளர்கள் கொடுத்த வரவேற்பினால் உடனடியாக இந்த இரண்டாவது கிளையை தொடங்கியதோடு, மூன்றாவது கிளையை இன்னும் சில நாட்களில் தி.நகரில் திறக்க உள்ளோம்.

எத்தனை கிளைகள் திறந்தாலும், அத்தனையிலும் எங்களது பிரியாணி ஒரே சுவையுடனும், தரத்துடனும் இருக்கும். அதேபோல் பிராஞ்சீஸ் முறையில் அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் கிளைகளை திறக்க விரும்புகிறவர்களுக்கு, எந்தவித முன் தொகையும் பெறாமல் பிரியாணி உணவகம் திறக்க உதவுகிறோம்.

தற்போது சென்னையில் பல பகுதிகளில் அல்சலி ஆம்பூர் பிரியாணி உணவக கிளைகள் திறப்பதற்காக பலர் தொடர்பு கொண்டுள்ளதால் அதற்கான இடம் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அல்சபி ஆம்பூர் பிரியாணி சென்னையின் அடையாளங்களில் மாறும் என்பது உறுதி.” என்றார்.

சிக்கன் பிரியாணி ஒரு பிளேட் ரூ.90 ஆகவும், மட்டன் பிரியாணி ஒரு பிளேட் ரூ.150 ஆகவும் விற்பனை செய்யப்படுவதோடு, 5 முதல் 6 நபர்கள் உண்ணக்கூடிய பக்கெட் சிக்கன் பிரியாணி முட்டையுடன் ரூ.900 ஆகவும், 10 முதல் 12 நபர்கள் உண்ணக்கூடிய விருந்து பக்கெட் பிரியாணி, இனிப்புடன் சேர்த்து ரூ.1400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 5 முதல் 6 நபர்கள் உண்ணக்கூடிய மட்டன் பக்கெட் பிரியானி ரூ.1100 ஆகவும், 10 முதல் 12 பேர் உண்ணக்கூடிய விருந்து பக்கெட் மட்டன் பிரியாணி ரூ.1800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இலவச டோர் டெலிவரி வசதியை பெற 8260123456 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் www.alsafibiryani.com என்ற இணையத்தளம் மூலமாகவும் ஆர்டர் செய்யலாம்.

வீட்டு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான கேட்டரிங் சேவையையும் அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Alsafi Ambur Biriyani will be landmark in Chennai says Kamal

Alsafi Ambur Biriyani will be landmark in Chennai says Kamal

திரைத்துறைக்கு துணையாக இருப்போம்; *நமக்கு நாம்* பட விழாவில் தமிழக அமைச்சர்கள் உறுதி

திரைத்துறைக்கு துணையாக இருப்போம்; *நமக்கு நாம்* பட விழாவில் தமிழக அமைச்சர்கள் உறுதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We will always support Cinema Industry TN Ministers promise at Namakku naam audio launchபுரட்சி வேந்தன் சுந்தரமூர்த்தி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் நமக்கு நாம்.

ஆதரவற்றோரையும் அவர்களை பாதுகாப்பும் இல்லங்கள் பற்றியும் அவர் எடுத்துள்ள படம் இது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, மா.பா. பாண்டியராஜன், இயக்குனர் எஸ்.பி. முத்துராமன், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அப்போது சுந்தரமூர்த்தி பேசும்போது…

அரசியலில் இருப்பவர்களுக்கு எந்த நேரத்தில் எந்த வேலை வரும் என்று தெரியாது. அந்த சூழ்நிலையில் 15 நாட்களுக்கு முன்பே இப்படத்தைப் பார்த்து ரசித்து பல நல்லக் கருத்துக்களை இப்படம் கொண்டுள்ளது.

ஆகையால் என்னால் ஆன உதவிகளையும், அரசு சார்பான உதவிகளையும் செய்வதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். அதேபோல கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் என்னுடைய நண்பர்.

இப்படம் வெளிவருவதற்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் உதவியுள்ளார். ஒரு காலத்தில் படம் எடுப்பது சிரமம், வெளியிடுவது எளிது. ஆனால் படம் எடுப்பது எளிது, வெளியிடுவது மிகவும் சிரமம்.

ஆனால் இந்தக் கதை மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் எடுத்துள்ளேன். 1974ம் ஆண்டு MGR ‘புரட்சி வேந்தன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கி வைத்தார்.

அதில் நான் ஆசிரியராகப் பணியாற்றினேன். அப்போது ஐசரி வேலன் என் நாடகத்தில் பங்கேற்றிருக்கிறார். கிட்டத்தட்ட 25 நாடகங்கள் நடித்துள்ள அனுபவம் எனக்கிருக்கிறது.

இதுவரை எந்தவொரு இயக்குனரிடமும் உதவியாளராகப் பணியாற்றியதில்லை. பத்திரிகையாளராக இருந்தபோதும் இவர்தான் என் குரு என்று சொல்லும் நிலை இல்லை.

அதேபோல் சினிமாத்துறையிலும் பணியாற்றினேன் என்று சொல்லும் நிலை இல்லை. இந்தப் படத்தை நான் எடுக்கும்போது எவ்வளவு சிரமப் பட்டேன் என்பது இப்படக்குழுவினர்களுக்கு நன்றாகத் தெரியும்.

மேடையில் இருக்கும் அத்துனைப் பேரும் உதவிப் புரிந்திருக்கிறார்கள். இப்படத்தை நான் துவங்கும்போது பல தொழில்நுட்ப கலைஞர்கள் மிரட்டினார்கள். சங்கம் இருக்கிறது என்று இடையூறு செய்தார்கள்.

அந்த சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தது ஜாகுவார் தங்கம் தான். இவ்வாறு இயக்குநர் சுந்தரமூர்த்தி கூறினார்.

S.P. முத்துராமன் பேசும்போது

புரட்சி வேந்தன் ஆசிரியராக இருந்த சுந்தரமூர்த்தியை நீண்ட காலமாக காணவில்லையே என்று தேடியபோது, ஆதரவற்ற மூத்த குடிமக்கள், குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் இல்லம் வைத்து நடத்துகிறார் என்ற செய்தியைக் கேட்டபோது மகிழ்ச்சியடைந்தேன்.

எனது இல்லத்தில் இருப்பவர்களை வைத்து ஒரு கதை எழுதி இயக்கி, அவர்களையே நடிக்கவும் வைத்திருக்கிறேன் வந்து பாருங்கள் என்றபோது, இவருக்கு என்ன தைரியம் என்று வியந்தேன். எனக்கு அந்த தைரியம் இல்லை.

வியாபார நோக்கோடு மட்டுமே படம் எடுப்பவன் நான். இந்த மனிதர் நல்லக் கருத்துக்களை மக்களிடையே சேர்க்க வேண்டும் என்ற நோக்கோடு படம் எடுத்திருக்கிறார் பாராட்டுக்கள். மேலும், உலகத்தில் இரண்டு மக்கள் இருக்கும் வரை யாரும் அனாதை இல்லை என்றார்.

பத்திரிகையாளர் ராம்ஜி பேசும்போது

இப்படம் சொல்ல வரும் கருத்து இரண்டு தான். அனாதைகளை உருவாக்க வேண்டாம். முதியவர்களை இல்லத்தில் தள்ள வேண்டாம். விழிப்புணர்வு மற்றும் சமூக சிந்தனையுள்ள படத்தை எடுத்திருக்கிறார் சுந்தரமூர்த்தி. வாழ்த்துக்கள் என்றார்.

அமைச்சர் கடம்பூர் ராஜு பேசும்போது

ஆதரவற்றவர்களுக்கு ஒரு இல்லம் நடத்தி, யதார்த்தத்தைப் படமாக்கி அதன்மூலம் மக்களுக்கு கொண்டு சேர்க்கின்ற நல்லப் பணியை செய்த புரட்சி வேந்தன் சுந்தரமூர்த்தியைப் பாராட்டுகிறேன்.

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சூழ்நிலைக் காரணமாக ஆதரவற்று இருப்பவர்களுக்கு இல்லம் வைத்து நடத்துகிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த இல்லத்திற்கு பல உதவிகளை செய்தார் என்று கூறினார்கள்.

அரசியலையும் சினிமாவையும் பிரிக்க முடியாது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். முதல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வரை அனைவரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான்.

பல நல்ல கருத்துக்களை நாடகங்கள், சினிமா மூலமாகத்தான் மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறார்கள். ஆகையால் சினிமாத் துறைக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றார்.

We will always support Cinema Industry TN Ministers promise at Namakku naam audio launch

40வது பிறந்தநாளில் வருங்கால மனைவி பெயரை அறிவிக்கிறார் பிரபாஸ்

40வது பிறந்தநாளில் வருங்கால மனைவி பெயரை அறிவிக்கிறார் பிரபாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Baahubali hero Prabhas to reveal marriage plans on his 40th birthdayபாகுபலி படத்திற்கு முன்பே கிட்டதட்ட 15க்கும் மேற்பட்ட படங்களில் பிரபாஸ் நடித்திருந்தாலும், பாகுபலி படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு உலகம் அறிந்த நடிகராகிவிட்டார்.

தற்போது 3 மொழிகளில் தயாராகிவரும் சாஹோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவர் தனது 40வது பிறந்தநாளை அடுத்த மாதம் அக்டோபர் 23-ந் தேதி கொண்டாடுகிறார் பிரபாஸ்.

அன்றைய தினத்தில் அவர், தனது வருங்கால மனைவி குறித்த தகவலையும் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
வருங்கால மனைவி அனுஷ்காவா இல்லை வேறு பெண்ணா என்பதை அன்றைய தினத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

எனவே கொஞ்ச நாள் பொறுத்திருந்து பார்ப்போம்.

Baahubali hero Prabhas to reveal marriage plans on his 40th birthday

More Articles
Follows