கார்த்தி & GV பிரகாஷ் & PS மித்ரன் மெகா கூட்டணி.; பூஜையுடன் தொடங்கியது..!

கார்த்தி & GV பிரகாஷ் & PS மித்ரன் மெகா கூட்டணி.; பூஜையுடன் தொடங்கியது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthi GV Prakashகதை தேர்வில் மிகுந்த கவனம் செலுத்தி நடித்து வருபவர்,கார்த்தி. தற்போது இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணைகிறார்.

வித்தியாசமான கதை அமைப்பில் உருவான ‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் P.S.மித்ரனுடன் கார்த்தி இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெயரிடப்படாத இந்தப் புதிய படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் ‘புரொடக்‌ஷன் 4’ படைப்பாக பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்க, இன்று தீபாவளி நன்னாளில் பூஜையுடன் பாடல் பதிவு ஆரம்பமானது.

ஒளிப்பதிவு ஜார்ஜ் C வில்லியம்ஸ், எடிட்டிங் – ரூபன், கலை இயக்கம் – கதிர், நிர்வாக தயாரிப்பு- கிருபாகரன் ராமசாமி, தயாரிப்பு மேற்பார்வை-பிரசாத், PRO- ஜான்சன்.

பிரமாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், படப்பிடிப்பு போன்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Karthi-P.S.Mithran film commences on Deepavali with auspicious Pooja and song recording

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்”

மதுரையில் மூன்று திரையரங்குகளோடு திறக்கப்பட்ட பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர் “கோபுரம் சினிமாஸ்”

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல சினிமா பைனான்சியரும், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான திரு.G.N.அன்புசெழியன் அவர்களின் மகள் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தனது தந்தை வழியில் தற்போது சினிமா துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.

செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் அவர்கள் MBA முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர். மேலும் இவர் கோபுரம் சினிமாஸின் உரிமையாளர். தீபாவளி திருநாளாகிய இன்று மூன்று திரையரங்குகள் அடங்கிய “கோபுரம் சினிமாஸ்” மதுரை மல்டிபிளக்ஸை திறந்து வைத்தார்.

தீபாவளி தினமான இன்று வெளியாகும் புதிய படங்களை “கோபுரம் சினிமாஸ்” திரையரங்குகளில் திரையிட்டு இதன் சேவையை துவக்குகிறார். மேலும் தமிழகமெங்கும் பிரம்மாண்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை உருவாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.

“கோபுரம் சினிமாஸ்” நிறுவனத்தின் உரிமையாளரான செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீண்ட வரலாறு பொருந்திய ராஜ் திரையரங்கத்தையும் ஆறு திரைகள் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டராக மாற்ற முடிவெடுத்துள்ளார்.

மேலும் வரும் காலங்களில் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் தரமான சிறந்த படங்களையும் தயாரிக்க உள்ளார். இதற்காக பல முன்னனி கதாநாயகர்களிடம் கதை விவாதம் நடத்தப்பட்டுள்ளது.

“கோபுரம் சினிமாஸ்” நிர்வாக உரிமையாளர் செல்வி. சுஸ்மிதா அன்புசெழியன் கூறுகையில், ‘மதுரை மக்களுக்கு நல்ல படம் பார்க்கும் அனுபவத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்பதும், எங்கள் மல்டிபிளக்ஸ்ற்குள் வருபவர்களுக்கு நல்ல பாதுகாப்பையும், தரமான உணவையும் கொடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமில்லாமல் தூய்மையான சூழ்நிலையையும் உருவாக்கி தருவதே எங்களுடைய மகத்தான நோக்கமாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.

“கோபுரம் சினிமாஸ்” மல்டிபிளக்ஸ் – சிறப்பம்சங்கள்

அனைத்து தொழில்நுட்ப வசதிகளுடன் முதல்முறையாக மதுரையில் நவீன ‘டால்பி’ தொழில் நுட்பத்துடன் Laser Projector, 4 Way Speaker, 3D Projection மற்றும் அகன்ற திரை வசதி கொண்ட 3 திரைகளுடன் பிரம்மாண்ட கோபுரமாய் “கோபுரம் சினிமாஸ்” உருவெடுத்துள்ளது.

அன்னிய தேசங்களின் தொழில் நுட்பங்களை மொத்தமாக உள்ளடக்கி புத்தம்புது பொலிவுடன் காட்சியளிக்கும் Interiors, மின்விளக்குகள் மற்றும் மிகப்பிரம்மாண்டமாக கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் Video Wallஐ மக்களுக்காக படைத்துள்ளது.

மக்களின் பாதுகாப்பிற்காக நவீன கேமிராக்கள் மற்றும் பயிற்சி பெற்ற பாதுகாவலர்களை கோபுரம் சினிமாஸ் நியமித்துள்ளது. மேலும் மின் தடங்கல் இல்லாத சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மக்களின் வசதியை கருதி பிரம்மாண்ட பரப்பளவுள்ள கார் பார்க்கிங் மற்றும் பைக் பார்க்கிங்கை உருவாக்கியுள்ளது.

மேலும் மிக முக்கிய அம்சமாக மதுரையில் எங்கும் இல்லாத அளவிற்கு Customer Care வசதி மற்றும் இலவச WiFi வசதியையும் ஏற்படுத்தியுள்ளது

Famous financier Anbu Chezhiyan has ventured into movie theatre business

Stills9

Gopuram Cinemas

JD..? or KD..? தெறிக்கவிடும் விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்.; வாத்தி வந்துட்டாரு..

JD..? or KD..? தெறிக்கவிடும் விஜய்யின் ‘மாஸ்டர்’ டீசர்.; வாத்தி வந்துட்டாரு..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

master teaserவிஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன்தாஸ், ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இனிருத் இசையமைத்துள்ளார்.

இப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்யவிருந்த நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிபோனது.

இன்று தீபாவளியை முன்னிட்டு மாலை 6.00 மணிக்கு மாஸ்டர் படத்தின் டீசர் ரிலீஸானது.

இதில் விஜய்யின் பெயர் படத்தில் JD என தெரியவந்துள்ளது.

அதிலும் இந்த வாத்தி மிரட்டலான ரவுடியிசம் செய்வார் என தெரிகிறது.

இந்த டீசரில் விஜய் & விஜய்சேதுபதி மோதும் ஆக்ஷன் காட்சிகள் தெறி லெவலில் உள்ளன.

இதனை விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

Much awaited Master teaser is out now

வசந்தபாலனின் துணை இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவாகும் ஹாரர் படம்

வசந்தபாலனின் துணை இயக்குநர் ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் உருவாகும் ஹாரர் படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விண்டோ பாய்ஸ் எனும் நிறுவனம் சார்பாக R.சோமசுந்தரம் எனும் அறிமுக தயாரிப்பாளர் முதன்முறையாக ஒரு வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகிக் கொண்டிருக்கும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் கலந்த ஹாரர் படமொன்றை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

தேசிய விருது பெற்ற இயக்குநர் வசந்தபாலன் இயக்கிய அங்காடித் தெரு, அரவான், காவியத் தலைவன், ஜெயில் போன்ற சிறந்த படங்களிலும் இதற்குத்தானே ஆசைப்பட்டாய், காஷ்மோரா போன்ற படங்களிலும் உதவி மற்றும் துணை இயக்குநராக பணியாற்றிய ரமேஷ் பழனிவேல் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

பிரபுதேவா நடித்த குலேபகாவலி மற்றும் ஜோதிகா நடித்த ஜாக்பாட் படங்களின் ஒளிப்பதிவாளரான R.S.ஆனந்தகுமார் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணீயாற்றிக் கொண்டிருக்கிறார்
விஜய் ராஜன் கலை இயக்குநராகவும் M.ரவிக்குமார் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்ணனி கோர்ப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

எல்லா காலகட்டங்களிலும் ஹாரர்,சஸ்பென்ஸ்,திரில்லர் வகை திரைப்படங்கள் சரியாக சொல்கிறபட்சத்தில் பெரிதும் வெற்றியடந்துள்ளன.

பீட்ஸா,ராட்சஸன் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம்.அப்படியான ஒரு புதிய முயற்சியாக சஸ்பென்ஸ் திரில்லர் திகில் என எல்லாம் கலந்து சற்றும் சுவாரஸ்யம் குறையாத வகையில் உணர்வுப்பூர்வமான படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ராதிகா அவர்களின் ராடன் நிறுவனம் தயாரித்து சரத்குமார் பிரகாஷ்ராஜ் சேரன் நடிப்பில் வெளிவந்த சென்னையில் ஒருநாள் படத்தில் பார்வதி மேனனுக்கு ஜோடியாக நடித்த சச்சின் இப்படத்தின் நாயகனாக நடித்துள்ளார்.

G.V.பிரகாஷ்குமார் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கும் ஜெயில் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள அபர்நதி கதைநாயகியாக நடித்துள்ளார்.

இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிளை தொடரின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கும்கி அஸ்வின் மற்றும் சுருதி பெரியசாமி எனும் அறிமுக நடிகையும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பரபரப்பான திரைக்கதை வித்தியாசமான காட்சியமைப்புகளோடு உருவாகிக் கொண்டிருக்கும் இப்படம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக திரையரங்குகளில் விரைவில் வெளிவருகிறது.

Director Vasantha Balan associate Ramesh Pazhanivel new film launched

திருமணமானபின் 40 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சாயிஷா

திருமணமானபின் 40 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் சாயிஷா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

balakrishnaகஜினிகாந்த் படத்தில் நடித்தபோது ஆர்யாவுடன் காதல் கொண்டார் சாயிஷா சைகல்.

இதனையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதம் பெற்று திருமணம் செய்துக் கொண்டனர்.

தற்போது ஆர்யாவுக்கு ஜோடியாக டெடி என்ற படத்திலும் நடித்து வருகிறார் சாயிஷா.

அப்போதே ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் கிட்டத்தட்ட 15 வயது வித்தியாசம் என்ற பேச்சும் ரசிகர்களிடையே எழுந்தது.

தற்போது தன்னைவிட 40 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சாயிஷா.

போயபடி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

61 வயதாகும் பாலகிருஷ்ணாவுக்கு 23 வயதான சாயிஷா ஜோடியா? என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Sayyeshaa to play female lead in Telugu actor Bala Krishna’s next film

ரகிட ரகிட பாடலை அடுத்து அனிருத் குரலுக்கு தனுஷின் புஜ்ஜி ஆட்டம்

ரகிட ரகிட பாடலை அடுத்து அனிருத் குரலுக்கு தனுஷின் புஜ்ஜி ஆட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bujji song jagame thanthiramதனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.

ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்டோர் தனுஷ் உடன் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரித்துள்ளார்.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம் பெற்ற ‘ரகிட ரகிட’ பாடல் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ளது.

இந்நிலையில், மற்றொரு பாடலான புஜ்ஜி என்ற பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளனர்.

அனிருத் பாடியுள்ள இந்த பாடலை விவேக் எழுதியுள்ளார்.

இப்பாடலில் மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் நடன அசைவுகளுக்கு தனுஷ் ஆடுவது போல உள்ளது-

Bujji song video from Jagame Thanthiram is out now

More Articles
Follows