‘இனி என் வாழ்க்கையே அவன்தான்..’ சௌந்தர்யா ரஜினி முடிவு

‘இனி என் வாழ்க்கையே அவன்தான்..’ சௌந்தர்யா ரஜினி முடிவு

soundarya rajini familyகடந்த ஓரிரு நாட்களாக எவரும் எதிர்பாராத ஒரு செய்தி தமிழக ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அது ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து செய்திதான்.

இதனை ஒப்புக் கொண்ட சௌந்தர்யா, விவாகாரத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இவரது ட்விட்டர் பக்கத்தில் இவரது மகன் வேத் கிருஷ்ணா மணலில் விளையாடும் போட்டோவை பகிர்ந்துள்ளார்.

அதில் அக்குழந்தையின் முகம் தெரியவில்லை. “இனிமேல் இவன்தான் என் வாழ்க்கை எல்லாம்” என ஹேஷ்டேக் போட்டு பதிவிட்டுள்ளார்.

ரஜினியை உலுக்கிய சௌந்தர்யாவின் விவாகரத்து

ரஜினியை உலுக்கிய சௌந்தர்யாவின் விவாகரத்து

rajini soundaryaஎந்தவொரு குடும்பம் ஆனாலும், அதில் தேவையற்ற சம்பவங்கள் நடைபெறும்போது, அந்த குடும்பத் தலைவருக்கு மிகப்பெரிய மன உளச்சல் இருக்கும்.

அதுவும் இந்தியாவின் விஐபியான ரஜினிகாந்த் வீட்டில் அப்படியொரு சம்பவம் நடந்தால், அவருக்கு எப்படி இருக்கும்?

இவரது இளைய மகள் சௌந்தர்யா-அஸ்வின் விவாகரத்து செய்தி நம்மையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றால், ரஜினி அதனை எப்படி ஏற்றுக் கொண்டிருப்பார்?

ரஜினி உள்ளிட்ட நலம் விரும்பிகள் பலரும் பலமுறை சௌந்தர்யாவிடம் சமாதானம் செய்தார்களாம்.

ஆனால் தன் முடிவில் கடைசி வரை உறுதியாக இருந்து, இனி விவாகரத்துதான் ஒரே வழி என முடிவெடுத்து விட்டாராம் சௌந்தர்யா.

இதனால் ரஜினி மனம் உடைந்து போய்யுள்ளாராம்.

கார்த்தியின் காஷ்மோரா பாடல்கள் வெளியீட்டு தேதி

கார்த்தியின் காஷ்மோரா பாடல்கள் வெளியீட்டு தேதி

karthis Kaashmoraகோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் இணைந்து நடித்துள்ள படம் காஷ்மோரா.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இப்படத்தை இவ்வருட தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் பாடல்களை செப்டம்பர் 21ஆம் தேதி வெளியிட உள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தமிழகத்தின் ‘மர்லின் மன்றோ’ ஆனார் சிவகார்த்திகேயன்

தமிழகத்தின் ‘மர்லின் மன்றோ’ ஆனார் சிவகார்த்திகேயன்

remo sivakarthikeyan stillsசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தின் ட்ரைலர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என்பதை பார்த்தோம்.

இந்நிலையில் இந்த டிரைலருக்கான டிசைனை இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்டனர்.

இதில் சிவகார்த்திகேயன் கொடுத்து போஸ் ஆனது உலக கனவுக் கன்னி மர்லின் மன்றோவின் புகழ்பெற்ற போஸாக அமைந்துள்ளது.

எனவே இவரது ரசிகர்கள் #MarilynMonroeofTN என்ற ஹேஷ்டேக் கிரியேட் செய்து, உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

பின்குறிப்பு : உலக ரசிகர்களை நடிப்புலகில் தன் அழகாலும், கவர்ச்சியாலும் கட்டிப் போட்டவர் மர்லின் மன்றோ ஆவார். 4 முறை திருமணம் செய்துக் கொண்ட இவர் தனது 36 வயதில் மரணமடைந்தார்.

இவர் தனிமையில் இருக்கும்போது நிர்வாணமாக இருப்பதையே விரும்புவார். எனவே தற்கொலை செய்துக் கொண்டபோதும் நிர்வாணமாக கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டாருக்கு பிறகு விஜய்-விக்ரம்-சூர்யா தான்.!

சூப்பர் ஸ்டாருக்கு பிறகு விஜய்-விக்ரம்-சூர்யா தான்.!

vijay vikram suryaவிஜய் நடித்து வரும் பைரவா அடுத்த வரும் 2017 பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

பரதன் இயக்கிவரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை மட்டும் ரூ. 43 கோடிக்கு விற்கபட்டுள்ளதாம்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் இதை பெற்றுள்ளதை நாம் முன்பே பார்த்தோம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களை தவிர்த்து பார்த்தால், இதற்கு முன்பு விஜய்யின் தெறி, விக்ரமின் ஐ உள்ளிட்ட படங்கள் மட்டுமே ரூ. 40 கோடியை தாண்டி இருக்கிறதாம்.

மேலும் விரைவில் வெளியாகவுள்ள சூர்யாவின் சிங்கம் 3 படமும் ரூ. 40 கோடி விநியோகத்தை தமிழகத்தில் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றும் நாளையும் ‘ரெமோ’ ரசிகர்களுக்கு ‘செம’ விருந்து

இன்றும் நாளையும் ‘ரெமோ’ ரசிகர்களுக்கு ‘செம’ விருந்து

sivakarthikeyanபாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தை 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிறுவனத்தின் முதல் வெளியீடு இதுவே.

ஆனாலும் படத்தின் புரமோஷன் உள்ளிட்ட அனைத்திலும் தன் வித்தியாசமான விளம்பரங்களை செய்து வருகிறார் இதன் நிறுவனம் ஆர்.டி. ராஜா.

இப்படத்தின் ட்ரைலரை நாளை (செப். 19) திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு யூட்டியூப் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையின் இந்த ட்ரைலரின் கிரியேட் டிசைன் ஒன்றை இன்று மாலை 6.00 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதனால் டபுள் சந்தோஷத்தில் உள்ளனர் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.

More Articles
Follows