கோச்சடையான் விவகாரம்: லதா ரஜினிக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

Latha Rajinikanth pulled up by SC over non payment of duesலதா ரஜினி தயாரிப்பில், சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு கோச்சடையான் திரைப்படம் வெளியானது.

இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரெடக்சன் பணிகளை செய்த ஆட் பிரு அட்வர்டைசிங் நிறுவனம், 6 கோடியே 20 லட்சம் ரூபாயை லதா ரஜினிகாந்த் செலுத்தவில்லை என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதை எதிர்த்து, லதா ரஜினி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், 3 மாதத்தில் பணத்தை செலுத்துமாறு கடந்த பிப்ரவரி மாதத்தில் உத்தரவிட்டது.

ஆனால், இதுவரை லதா ரஜினி பணத்தை தரவில்லை என ஆட் பிரு அட்வர்டைசிங் நிறுவனம் முறையிட்டது.

இதையடுத்து, இதுவரை பணம் செலுத்தாதது ஏன் என்றும், எப்போது தொகையை செலுத்தப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதுடன் பணத்தை செலுத்தவில்லை என்றால் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Latha Rajinikanth pulled up by SC over non payment of dues

Overall Rating : Not available

Latest Post