ரஜினி-தனுஷை அடுத்து சௌந்தர்யாவின் அடுத்த ஹீரோ யார்..?

ரஜினி-தனுஷை அடுத்து சௌந்தர்யாவின் அடுத்த ஹீரோ யார்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vip2 shooting spotசூப்பர் ஸ்டாரை இயக்க பல இயக்குனர்கள் காத்திருக்கும்போது தன் முதல் படமான கோச்சடையான் படத்தில் ரஜினியை இயக்கியவர் சௌந்தர்யா.

இதனையடுத்து இவர் தனது அக்கா கணவர் தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி2 (விஐபி2) படத்தை இயக்கினார்.

இப்படம் அண்மையில் வெளியாகி வெற்றிப் பெற்றது.

இந்நிலையில் சௌந்தர்யாவின் 3வது படம் என்ன? அதில் நடிக்கவுள்ள ஹீரோ யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து அவர் சமீபத்திய பேட்டியில் கூறும்போது…
என் அப்பாவை இயக்குவேன் என ஒரு போதும் நினைக்கவில்லை. அது நடந்தது என் வாழ்க்கையில் ஏதோ ஒன்றை அடைந்துவிட்டதை போன்ற உணர்வு.

அடுத்து தனுஷ் என்ற மிகப்பெரிய நடிகரையும் இயக்கிவிட்டேன்.

3வது படத்தை உடனே இயக்கிவிடு என அப்பா கூறியுள்ளார்.

அதற்கான கதையை அமைக்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

கௌரவ்-உதயநிதி கூட்டணியில் இணைந்த விஜய்சேதுபதி

கௌரவ்-உதயநிதி கூட்டணியில் இணைந்த விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi lend his voice for Ippadai Vellum movieதன் பேனர் தயாரிக்கும் படங்களில் மட்டுமே நடித்து வந்த உதயநிதி அண்மைகாலமாக மற்ற நிறுவன படங்களிலும் நடித்து வருகிறார்.

ஸ்ரீதேனாண்டாள் தயாரித்த பொதுவாக எம்மனசு தங்கம் படத்தில் நடித்தார்.

இதனையடுத்து லைக்கா தயாரிக்கும் ‘இப்படை வெல்லும்’ படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தை கௌரவ் நாராயணன் இயக்க, மஞ்சிமா மோகன், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

டி.இமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் வாய்ஸ் ஓவர் கொடுத்து இருக்கிறாராம் விஜய்சேதுபதி.

இத்தகவலை தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இயக்குனர் கௌரவ்.

Vijay Sethupathi lend his voice for Ippadai Vellum movie

Gaurav narayanan‏ @gauravnarayanan 51s52 seconds ago
#ippadaivellum The whole team is so happy and thankful to VijaySethupathi bro for lending his magical voice for the film.Thank u so much bro

கருத்தவனெல்லாம் கலீஜாம்… வேலைக்காரன் சிங்கிள் ட்ராக் வெளியானது

கருத்தவனெல்லாம் கலீஜாம்… வேலைக்காரன் சிங்கிள் ட்ராக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karuthavanlaam Galeejaam Velaikkaran single track releasedசூப்பர் டூப்பர் ஹிட் அடித்த தனி ஒருவன் படம் வெளியாகி இன்றோடு இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

எனவே இதனை முன்னிட்டு மோகன் ராஜா அடுத்து இயக்கியுள்ள வேலைக்காரன் படத்தின் சிங்கள் பாடலை இன்று வெளியிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத்பாசில், சினேகா நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதன் மியூசிக் ரைட்ஸை பெற்றுள்ள சோனி நிறுவனம் இந்த சிங்கிள் பாடலை இன்று சற்றுமுன் வெளியிட்டது.

அதில் ‘கறுத்தவன்லாம் கலீஜாம்… என்று தொடங்கும் பாடலை வெளியிட்டுள்ளது.

இது தரலோக்கல் குத்து பாடலாக அமைந்துள்ளது.

இந்த சிங்கிள் ட்ராக், ‘Gaana’ மற்றும் ‘Saavn’ இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளன.

இப்படம் செப்டம்பர் 29-ம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Karuthavanlaam Galeejaam Velaikkaran single track released

velaikkaran single track lyrics

நிஜமான புலியுடன் மோதிய விஜய்; மெர்சலாகும் ரசிகர்கள்

நிஜமான புலியுடன் மோதிய விஜய்; மெர்சலாகும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay mersal tiger fightவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தை இந்தாண்டு 2017 தீபாவளிக்கு வெளியிட உள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டின்போது இதில் 14 சண்டைக்காட்சிகள் இருப்பதாக தெரிவித்தார் இயக்குனர் அட்லி.

அதில் ஒரு சண்டைக்காட்சியில் புலியுடன் விஜய் மோதுவாக காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.

முதலில் இதை கிராபிக்ஸ் புலியாக செய்யலாம் என்ற ஆலோசனையில் இருந்தார்களாம்.

ஆனால் நன்கு பழக்கப்பட்ட சர்க்கஸ் புலியாக இருந்தால் அதனுடன் நான் நிஜமாகவே மோதுகிறேன் என்று விஜய் சொன்னாராம்.

அதன்படி விஜய்-புலி மோதும் காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும், அது நிச்சயம் ரசிகர்களுக்கு மெர்சலான விருந்தாக இருக்கும் என கூறப்படுகிறது.

In Mersal movie Vijay fights with real tiger

இரண்டு சூர்யாவை தொடர்ந்து தனுஷை இயக்கும் செல்வராகவன்

இரண்டு சூர்யாவை தொடர்ந்து தனுஷை இயக்கும் செல்வராகவன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

dhanush selvaragavanசெல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து சூர்யா நடிக்கவுள்ள படத்தை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தன் ரசிகர்களுடன் ட்விட்டரில் கலந்துரையாடினார் செல்வராகவன்.

அப்போது தனக்கு பிடித்த நடிகர் கமல்ஹாசன் என்று தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் விரைவில் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்குவேன் என தெரிவித்துள்ளார்.

Selvaraghavan teams up with Dhanush after Suriya movie

தமிழகம் மற்றும் உலகளவில் விவேகம் வசூல் எவ்வளவு.?

தமிழகம் மற்றும் உலகளவில் விவேகம் வசூல் எவ்வளவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vivegam movie box office collection worldwideகடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி அஜித் நடித்த விவேகம் ரிலீஸ் ஆனது.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் 3 நாட்கள் விடுமுறை என்பதால் வசூல் வேட்டை செய்து வருகிறது.

சென்னையில் முதல்நாள் வசூலில் கபாலி மற்றும் தெறி பட சாதனைகளை முறியடித்துள்ளது.

நான்கு நாட்கள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ. 5.7 கோடியை வசூலித்துள்ளது.

 • முதல் நாள்- ரூ. 1.22 கோடி
 • இரண்டாம் நாள்- ரூ. 1.51 கோடி
 • மூன்றாம் நாள்- ரூ. 1.55 கோடி
 • நான்காம் நாள்- ரூ. 1.47 கோடி
 • மொத்தம் – ரூ. 5.75 கோடி

மேலும் தமிழகளவில் ரூ- 50 கோடி வசூலையும் உலகம் முழுவதும் ரூ. 95 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

வசூல் விவரங்கள் இதோ…

 1. சென்னை- ரூ 5.7 கோடி
 2. செங்கல்பட்டு- ரூ 11 கோடி
 3. சவுத் ஆற்காடு- ரூ 2.2 கோடி
 4. நார்த் ஆற்காடு- ரூ 2.6 கோடி
 5. திருச்சி, தஞ்சாவூர்- ரூ 5 கோடி
 6. சேலம்- ரூ 5 கோடி
 7. மதுரை- ரூ 8.1 கோடி
 8. கோயமுத்தூர்- ரூ 8.7 கோடி
 9. திருநெல்வேலி, கன்னியாகுமரி- ரூ 2.7 கோடி
 10. கர்நாடகா- ரூ 8.6 கோடி
 11. ஆந்திரா, தெலுங்கானா- ரூ 5 கோடி
 12. கேரளா- ரூ 4கோடி
 13. மற்ற மாநிலங்கள்- ரூ 58 லட்சம்
 14. மலேசியாவில் ரூ. 7.8 கோடி
 15. அமெரிக்கா ரூ. 2.8 கோடி
 16. வெளிநாடுகள்- ரூ 27 கோடி

Vivegam movie box office collection worldwide

More Articles
Follows