கோச்சடையான் நஷ்ட ஈடு விவகாரம்.; லதா ரஜினிக்கு கைது வாரண்ட்..?

latha rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினியின் 2வது மகள் சௌந்தர்யா கோச்சடையான் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

கடந்த 2014ல் வெளியான இப்படம் ரஜினியின் சினிமா கேரியரில் பெரிய தோல்வி படமாக இடம் பிடித்தது.

இப்படத்தின் கர்நாடக மாநில விளம்பரம் மற்றும் வியாபாரத்தை ஒரு தனியார் நிறுவனம் கவனித்துக் கொண்டது.

படம் வெற்றி பெறாத காரணத்தால் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்த நிறுவனம் கூற, லதா ரஜினி அவர்கள் நஷ்ட ஈடு மறுத்துள்ளார்.

இந்த பிரச்சினையில் லதா ரஜினி காட்டிய கணக்கும், அவரது கடிதமும் போலியானது என்று அந்த நிறுவனம், பெங்களூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

மேலும் கோர்ட்டில் ஆஜராகவும் நேரில் வந்து விளக்கம் அளிக்கவும் லதா ரஜினிக்கு உத்தரவிட்டது.

தற்போது 3வது முறையாக மே 20ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

ஒருவேறை இதற்கும் ஆஜராகாவிட்டால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் எனத் தெரிகிறது.

Overall Rating : Not available

Related News

சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடித்த…
...Read More
லதா ரஜினி தயாரிப்பில், சவுந்தர்யா ரஜினிகாந்த்…
...Read More
ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா…
...Read More

Latest Post