வழக்கை லதா ரஜினி எதிர்கொள்ள வேண்டும் என கோர்ட்டு உத்தரவு

latha rajiniaknthசௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடித்த அனிமேஷன் படம் கோச்சடையான்.

இப்படத்தை ரஜினிகாந்த் குடும்பமே தயாரித்து இருந்தது.

இதை தயாரித்தது தொடர்பாக மீடியா ஒன் குளோபல் நிறுவனத்திற்கு ஆட்பீரோ என்ற நிறுவனம் கடன் அளித்திருந்தது.

இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்தார்.

அந்தக் கடனை திருப்பிச் செலுத்தாதால் ஆட்பீரோ நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கு, இப்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

ஜூலை 10-ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்த் ரூ.6.23 கோடி பணத்தை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் நடவடிக்கை பாயும் என நீதிமன்றம் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு இன்று (ஜூலை 10) மீண்டும் விசாரணைக்கு வந்தது. லதா ரஜினிகாந்த் பணத்தை திருப்பி செலுத்தவில்லை. இதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

இந்த விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்யவும் சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, பெங்களூருவில் பதிவு செய்யப்பட்ட வழக்கை லதா ரஜினிகாந்த் எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது.

Overall Rating : Not available

Latest Post