சிவகார்த்திகேயனுக்கும் த்ரிஷாவுக்கும் இப்படியொரு கனெக்ஷனா?

சிவகார்த்திகேயனுக்கும் த்ரிஷாவுக்கும் இப்படியொரு கனெக்ஷனா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and trishaபாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள ரெமோ படத்தில் பெண் வேடமேற்று நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியானது முதல் ரெமோவின் எதிர்பார்ப்பு சற்றே எகிறியுள்ளது.

இந்த லேடீ கெட்டப் மேக்கப் அப்புக்காக மட்டும் கிட்டதட்ட 5 மணி நேரம் ஆனதாம்.

இதனைத் தொடர்ந்து த்ரிஷா நடித்துள்ள நாயகி படத்தின் மேக்கப் அப் தகவலும் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் த்ரிஷா இருவேடங்களில் நடித்துள்ளார்.

அதில் ஒன்று 16 வயது பெண்ணாக வருகிறாராம். அந்த வயதுக்கு 1980 கால கட்டத்தில் வரும் பெண்கள் போல மேக்கப் அப் போட்டு இருக்கிறார்கள்.

இதற்காக த்ரிஷாவும் தினமும் 5 மணி நேரம் மேக்கப் போட்டாராம்.

உதவி இயக்குனர்களுக்கு சூப்பர் சான்ஸ்… ஆரியின் ‘அறிமுகம்.’

உதவி இயக்குனர்களுக்கு சூப்பர் சான்ஸ்… ஆரியின் ‘அறிமுகம்.’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor aariநெடுஞ்சாலை, மாயா, உன்னோடு கா ஆகிய படங்களில் நடித்துள்ளவர் ஆரி.

இவர் தற்போது ஆரிமுகம் என்ற பேனரில் குறும்பட இயக்க வாய்ப்பு தருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது….

இங்கே நிறைய உதவி இயக்குனர்கள் வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர்.

சங்க உறுப்பினர்களாக உள்ள அவர்களுக்கு உதவிடும் வகையில் குறும்பட இயக்கும் வாய்ப்பை வழங்கவிருக்கிறோம்.

இதற்காக ஒர்க் ஷாப் ஒன்றை நடத்தவிருக்கிறோம். அதில் விண்ணப்பிக்கும் அவர்கள் கலந்து கொள்ளலாம்.

இது ஒரு ஆலோசனை கூட்டம் போல நடைபெறும். இதில் திரையுலக ஜாம்பவான்களும் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்குவார்கள்.

அதன்பின் தேர்ந்தெடுக்கும் ஒருவருக்கு குறும்பட இயக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

இதன் மூலம் வருடத்திற்கு ஒரு 10 நல்ல படங்களை கொடுத்தால் எனக்கு மகிழ்ச்சியே. நிறைய நல்ல இயக்குனர்களும் இதன் மூலம் வெளிச்சத்துக்கு வர பாலமாக இருக்கும்.

இவ்வாறு ஆரி தெரிவித்தார்.

‘தளபதி-60’ அப்டேட்ஸ்…. தயாராகும் பிரம்மாண்ட காலேஜ் செட்..!

‘தளபதி-60’ அப்டேட்ஸ்…. தயாராகும் பிரம்மாண்ட காலேஜ் செட்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thalapathy 60 imagesபரதன் இயக்கும் விஜய், கீர்த்தி சுரேஷ், அபர்ணா, ஜெகதிபாபு உள்ளிட்டோர் நடித்து வரும் ‘தளபதி-60’.

ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் சிட்டியில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இதுவரை இப்படத்தின் 40 சதவிகித சூட்டிங் முடிவடைந்துள்ளதாம்.

இந்நிலையில் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு நாளை முதல் தொடங்குகிறது. தொடர்ந்து ஜீலை 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்காக காலேஜ் செட் ஒன்று போடப்பட்டுள்ளதாம்.

கார்த்தி படத்திற்கு அழகான தமிழ் பெயர் வைத்த மணிரத்னம்..!

கார்த்தி படத்திற்கு அழகான தமிழ் பெயர் வைத்த மணிரத்னம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthi and mani ratnamகாஷ்மோரா படத்தின் டப்பிங் பணிகளில் பிஸியாக இருக்கும் கார்த்தி விரைவில் மணிரத்னம் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதன் சூட்டிங் வருகிற ஜீலை 8ஆம் தேதி ஊட்டியில் தொடங்குகிறது.

இதில் நாயகியாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்க, முக்கிய வேடத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கிறார்.

வைரமுத்து வரிகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பாக மணிரத்னமே இப்படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்திற்கு ‘காற்று வெளியிடை’ என்ற பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அழகான வரி பாரதியாரின் புகழ்பெற்ற காதல் பாடல்களில் ஒன்றான ‘காற்று வெளியிடை கண்ணம்மா’ என்ற பாடலில் இடம் பெற்றுள்ளதாம்.

தன் முதல் படத்திற்கு ரஜினி பாடலை தலைப்பாக்கிய விக்ரம் பிரபு

தன் முதல் படத்திற்கு ரஜினி பாடலை தலைப்பாக்கிய விக்ரம் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vikram prabhu stillsகும்கி படத்தில் அறிமுகமாகி அதிரடி வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் விக்ரம் பிரபு.

தற்போது இவரது நடிப்பில் வீர சிவாஜி மற்றும் வாகா படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றன.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை விக்ரம் பிரபு தொடங்கியுள்ளார்.

பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என தன் நிறுவனத்திற்கு பெயரிட்டுள்ளார். இதன் முதல் தயாரிப்பாக நெருப்புடா என பெயரிட்டுள்ளார்.

இப்படத்தை, சந்திரா ஆர்ட்ஸ் (Chandaraa Arts) மற்றும் சினி இன்னோவேஷன்ஸ் (Cine Innovations) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார்.

இதில் தீயணைப்பு வீரராகவும், தீவிர ரஜினி ரசிகராகவும் நடிக்கிறார் விக்ரம் பிரபு.

இவருடன் நிக்கி கல்ராணி, பொன்வண்ணன்,  “நான் கடவுள்” ராஜேந்திரன்,  “ஆடுகளம்” நரேன், மதுசூதன் ராவ், நாகிநீடு  உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

அசோக் குமார் இப்படத்தை இயக்க, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ரோக்கேஷ் பாடல்களை எழுதுகிறார். ஆர். டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கலையை எம் பிரபாகரன் கவனிக்கிறார்.

ரஜினியின் கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடல் டிரெண்ட்டாகி வரும் நிலையில் ஒரு படத்திற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கும் சிம்புக்கும் ஏற்பட்ட காஸ்ட்யூம் கனெக்ஷன்..!

விஜய்க்கும் சிம்புக்கும் ஏற்பட்ட காஸ்ட்யூம் கனெக்ஷன்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay and simbuகௌதம் மேனன் இயக்கிய ‘அச்சம் என்பது மடமையடா’ எப்போது முடியும் என்பது சம்பந்தபட்டவர்களுக்கே தெரியாது.

இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘AAA’ என்ற ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் சிம்பு.

யுவன் ஷங்கர் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் உருவாகியுள்ளது.

எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தை தொடர்ந்து கிருஷ்ணன் வசந்த் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு அந்தோணி ரூபன்.

இப்படத்தில் சிம்பு மூன்று வேடம் ஏற்கிறார். எனவே பிரபல காஸ்ட்யூம் டிசைனரான சத்யா இப்படத்திற்கு விதவிதமான காஸ்ட்யூம்களை தயார் செய்ய இருக்கிறாராம்.

இவர்தான் விஜய்யின் தெறி மற்றும் தளபதி 60 ஆகிய படங்களுக்கும் காஸ்ட்யூம் டிசைன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

More Articles
Follows