தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் எப்படியாவது இந்த ஜுலை மாதத்திற்குள் ரிலீஸ் ஆகிவிடும் எனத் தெரிகிறது.
எனவே இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது தயாரிப்பு குழு.
ஒரு பக்கம் ஏர் ஏசியா நிறுவனம் இப்படத்தின் விளம்பரங்களை உலக திரையுலகமே ஆச்சரியப்படும் வகையில் செய்து வருகிறது.
இந்நிலையில் மற்ற விளம்பர பார்ட்னர்ஸ் யார்? யார்? என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
ஏர்ஏசியா நிறுவனத்துடன் அமேசான், கேட்பரி 5 ஸ்டார், ஏர்டெல், விஎஸ் ஹாஸ்பிட்டல் (Air Asia, Amazon, Cadbury 5 Star, AirTel, VSHospitals) ஆகியவையும் இணைந்துள்ளது.