ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகை

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

96 படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் த்ரிஷா.

அதன் பின்னர் பேட்ட, ராங்கி உள்ளிட்ட ஓரிரு படங்கள் மட்டுமே அவரது நடிப்பில் வெளியானது.

தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் 2022ல் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகை நான் என்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளர் த்ரிஷா.

இந்திய பிரபலங்களுக்கு ஐக்கிய அமீரக அரசாங்கம் தங்கள் நாட்டிற்கு வந்து செல்லும் சிறப்பு விசாவான கோல்டன் விசாவை வழங்கி வருகிறது.

தற்போது இந்த சிறப்பு விசா நடிகை திரிஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை திரிஷா தன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

This popular tamil actress receives UAE golden visa

ரஜினி உண்மையான உழைப்பாளி.; விஜய்க்கு ஒத்தையடி பாதை போட்டுக் கொடுத்தேன்.; எஸ்ஏசி பேச்சு

ரஜினி உண்மையான உழைப்பாளி.; விஜய்க்கு ஒத்தையடி பாதை போட்டுக் கொடுத்தேன்.; எஸ்ஏசி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பாக உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ். ஏ.சந்திரசேகர் ,இயக்குநர் மிஸ்கின், இயக்குனர் பேரரசு நடிகர்கள் விமல், மற்றும் பாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. செயலாளர் கோடங்கி என்ற ஆபிரகாம் வரவேற்புரை வழங்கினார்..

பின்னர் இயக்குநர் பேரரசு பேசுகையில்…

திருப்பாச்சி, சிவகாசி துவங்கி பல நினைவுகளை பகிர்ந்து கொண்டவர் . மிஸ்கின் குறித்து பேசுகையில் உங்கள் படம் எடுக்கும் முறை வேறு எங்களுடைய முறை வேறு ‘நீங்கள் எதார்த்தம் நாங்கள் பதார்த்தம்’ என எதுகை மோனையோடு பேசியவர் சிவகாசி வெளியான தீபாவளியன்று எப்படிப்பட்ட மகிழ்ச்சியை அனுபவித்தாரோ அதே மகிழ்ச்சியை இப்போது இந்த நிகழ்வில் கலந்துகொண்டதில் அனுபவிக்கிறேன் என பகிர்ந்து கொண்டார்.

பேரரசை தொடர்ந்து இயக்குநர் மிஸ்கின் பேசுகையில்…

சினிமாக்காரர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் இருக்கும் உறவு கணவன் மனைவி உறவு போல், அவ்வப்போது அடித்துக் கொள்வோம் அவ்வப்போது சேர்ந்து கொள்வோம். ஆனால் இருவரும் சேர்ந்து வாழ்வது மட்டும் தான் ஒரே வழி. தினம் தினம் சண்டையிட்டு இருக்கிறோம் தினம்தினம் கட்டி அணைத்து இருக்கிறோம். ஆனால் நீங்கள் இல்லாமல் நாங்கள் இல்லை.

இயக்குனர் பேரரசு பேசும்போது சொன்னார்… எங்களைப்போல் படம் எடுக்க முடியாது என்று கூறினார். நான் சொல்கிறேன் உங்களைப் போல் இந்த ஸ்பாட் வசனம் என்னால் எழுதவே முடியாது.

எதார்த்தம் பதார்த்தம் இந்த எதுகை மோனை இதெல்லாம் எனக்கு வரவே வராது. என்றவர் விஷால் பிரச்சனை குறித்து மேலும் சில வார்த்தைகள் பேசினார். எனக்கும் விஷாலுக்கும் இடையே நடந்த சண்டை அதை முடித்துக் கொள்வோம். அவர் உழைப்பாளி நல்லவர் நன்றாக இருந்து விட்டுப் போகட்டும்.

ஏதோ ஒரு கோபத்தில் நான் திட்டியதும் அவர் திட்டியதுமாக அந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைத்து விடுவோம். அவரை விட்டு நான் வந்துவிட்டேன் என்பதே விஷாலுக்கு கோபம் , அவ்வளவு அன்பு செலுத்தியும் எனக்கு இப்படி செய்துவிட்டாரே என்று நான் திட்ட என இப்படித்தான் இந்த சண்டை வளர்ந்துகொண்டே இருக்கிறது. இனி சண்டை வேண்டாம்.

பத்திரிக்கையாளர்களே நீங்களும் நல்ல விஷயங்களை எழுதுங்கள் தவறா அப்போதே சுட்டிக் காண்பித்து தட்டிக்கொடுங்கள். இத்தனை வருடங்களில் என் ஒவ்வொரு படத்திற்கும் மிகச்சரியான விமர்சனங்களை உங்களிடமிருந்து நான் பெற்றிருக்கிறேன்.

அந்த வகையில் உங்களின் விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு படம் வெற்றி அடைந்தால் தொடர்ந்து பல படங்கள் மாபெரும் வெற்றி அடையும் நாற்பத்தி ஐந்து வருடங்களாக சினிமாவுக்கு மட்டுமே உழைத்துக் கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் 500 கோடி வசூல் பெற எனது வாழ்த்துக்கள்.

என மனதார சொன்ன மிஸ்கின் சென்ற வருடம் தான் ஒன்றரை லட்சம் இந்த சங்கத்திற்கு நிதி கொடுப்பேன் என்று கூறியிருந்தார்.

அதன்படி இந்த வருடம் தீபாவளி நிகழ்வையும் சேர்த்து மேலும் 50 ஆயிரத்துடன் 2 லட்சம் கொடுக்கிறேன். என்று பேசி முடித்தார் மிஸ்கின் சொன்னபடியே தனது நண்பரை அழைத்து மேடையிலேயே வாக்குறுதியை நிறைவேற்றினார்.தொடர்ந்து பேசிய விமல் இனி நான் சிறப்பாக செயல்பட இந்த மேடை உதவும்..இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தமைக்கு நன்றி என்றார்..

நடிகர் பாலா பேசும் போது, தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தில் தீபாவளி பரிசு கொடுக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துக் கொண்டார். மேலும் அண்ணாத்த திரைப்படம் என் அண்ணனின் இயக்கத்தில் நிச்சயம் இந்த வருடம் வெற்றியடையும்.

மேலும் பல வருடமாக நான் பிறந்த தமிழ் மண்ணில் தீபாவளி பொங்கல் போன்ற விழாக்களில் நான் நடித்த திரைப்படம் வெளியாக அதோடு இணைந்து கொண்டாடி மகிழ வேண்டும் என நினைத்தேன் இந்த வருடம் அது சாத்தியப் பட்டிருக்கிறது.

அண்ணாத்த படத்தில் எனக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது எனக் கூறி அமர்ந்தார் நடிகர் பாலா.

இந்த நிகழ்ச்சியின் நிறைவாக பேசிய தயாரிப்பாளர் இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசினார்..

இயக்குனர் மிஸ்கின் பேசும்போது கணவன் மனைவி உறவு போல் சினிமாக்காரர்களுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் உண்டான உறவை கூறினார். எனக்கு பத்திரிகையாளர்கள் நண்பர்கள்.

நண்பர்கள் மாலை நேரத்தில் இணைந்தால் எப்படி பேசிக் கொள்வார்களோ அப்படித்தான். விடிந்து எழுந்தால் நீ என்ன பேசினாய், நான் என்ன பேசினேன் என்று தெரியாது. அந்த அளவிற்கு சண்டையிட்டுக் கொள்வோம் அதே சமயம் கட்டி அணைத்துக் கொள்வோம். அப்படிப்பட்டவர்களின் விழாவில் என்னை அழைத்து சிறப்பு செய்ய தலைவி கவிதா கேட்டுக்கொண்டபோது எல்லோரும் உதவி இருக்கிறார்கள்.

நான் ஏதும் செய்யவில்லையே என்றேன், அதற்கு கவிதா நீங்கள் விழாவிற்கு வந்திருந்து சிறப்பு செய்தாலே போதுமானது என்று சொன்னாலும் என்னால் முடிந்த ஒரு சிறு உதவியை இந்த மேடையில் கொடுக்க விரும்புகிறேன். என்றவர் மேடையிலேயே ரூ.50,000 தொகையை தலைவி கவிதா மற்றும் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கி சிறப்பு செய்தார்.

தொடர்ந்து பேசிய எஸ்ஏசி.. “தனது பாதையில் பத்திரிக்கையாளர்கள் பங்கு எந்த அளவிற்கு முக்கியமானது என பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அதேபோல் ஒரு படைப்பாளி நினைத்தால் களிமண்ணையும் அழகான பானையாக்க முடியும் எனில் விமல் நீ மிஷ்கினை பிடித்துக் கொள் உன்னை மிகப் பெரிய நடிகனாக மாற்ற மிஸ்கின் போன்ற படைப்பாளியால் முடியும் என்றார்.

உண்மையான உழைப்பு இருந்தால் அழகு ஒரு பொருட்டே இல்லை. என் மகனுக்கு நான் வெறும் ஒரு ஒத்தையடிப் பாதை தான் போட்டுக் கொடுத்தேன் இன்று எட்டு வழிச்சாலை அளவிற்கு என் மகன் உயர்ந்திருக்கிறார் என்றால் அவரின் உண்மையான உழைப்புதான்.

அப்படித்தான் திரு. ரஜினிகாந்த் உண்மையான உழைப்புதான் அவர்களை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.

சினிமாவைப் பொருத்தவரை உண்மையாக உழைத்தால் ஒருநாள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உயரத்தில் கொண்டு போய் சேர்க்கும் என மேடையில் இருந்த பாலா மற்றும் விமல் இருவரையும் வாழ்த்தி தான் இயக்குநராக இருந்த காலத்தில் பேரரசு மற்றும் மிஸ்கின் இருவருடனான நினைவுகளை நினைவு கொண்டவர் இப்படிப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துக் கொண்டார்.

சங்க தலைவி கவிதா அவர்கள் பேசும்போது
சங்கத்திற்காக ஏடிஎம் கார்டையே கொடுத்து வேண்டியதை வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்ன உயர்ந்த உள்ளம் படைத்த பிரபலங்கள் நேரடியாக தேவையான பொருட்களுக்கு அந்தந்த கடைகளுக்கு Google pay செய்த பிரபலங்கள் மற்றும் பலவிதமாக ஸ்பான்சர் செய்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் கடமைப்பட்டிருக்கிறது. நோட் போட்டு நாம் வசூலிக்கவில்லை.

நட்பு ரீதியில் என்ன தேவையோ அதை செய்தார்கள். அதில் குறிப்பிட்ட சில பெயர்களை மேடையில் சொல்லி இன்னும் பல உதவிகள் செய்ய இருக்கும் அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

சங்கத்தின் தலைவி கவிதா சொல்லிய மிக முக்கியமான ஒரு விஷயம் பத்திரிக்கையாளர்களுக்கு பல முக்கிய பிரபலங்களிடம் அன்புடன் சில உதவிகளை கேட்டேன் பல நல்ல உள்ளங்கள் என்ன வேண்டும் என்று தாராள மனசுடன் முன்வந்தார்கள்.

ஒவ்வொன்றாக எறும்பு சேகரிப்பது போல் சேகரித்து தனித்தனியாக பிரித்து வைத்து ஒட்டு மொத்தமாக அதை நம் சங்க பத்திரிக்கையாளர்களுக்கு வழங்குவதில் ஒட்டுமொத்த சங்கமும் பெருமைப்படுகிறது என்று நெகிழ்ச்சியாக பேசினார்..

Director SAC recent speech about Rajinikanth and Vijay

BOX OFFICE KING என மீண்டும் நிரூபித்த ரஜினி.; 2.0 & சர்கார் ரெக்கார்டுகளையும் முறியடித்த ‘அண்ணாத்த’

BOX OFFICE KING என மீண்டும் நிரூபித்த ரஜினி.; 2.0 & சர்கார் ரெக்கார்டுகளையும் முறியடித்த ‘அண்ணாத்த’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி நேற்று தீபாவளியை முன்னிட்டு ரிலீசான படம் ’அண்ணாத்த.

சிவா இயக்கிய இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான நட்சத்திர பட்டாளத்துடன் தயாரித்து இருந்தது. இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. வெளிநாடுகளில் மட்டும் இதுவரை இல்லாத அளவிற்கு 1200 திரையரங்குகளில் வெளியாகி தமிழ் சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்தியது.

தமிழகத்தில் அதிகாலை 4.00 மணி முதல் சிறப்பு காட்சிகள் தொடங்கியது. கொட்டும் மழையிலும் ரசிகர்கள் படம் பார்க்க வந்திருந்தனர்.

படத்திற்கு 70% பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் 30% நெகட்டிவ் விமர்சனங்களே வந்த வண்ணம் உள்ளன. ரஜினி நடிப்பு மற்றும் ஆக்சனை காட்சிகளை யாரும் குறை சொல்லவில்லை. ஆனால் படத்தின் கதை பார்த்து பழக்கப்பட்ட பழைய கதை என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் நேற்றைய வசூல் நிலவரம் தெரிய வந்துள்ளது.

அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் நல்ல வசூலை பெற்று வருகிறது.

சென்னையை பொறுத்தவரை ரஜினி நடித்த 2.0 படமே தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படமாகும்.

மேலும் சென்னையில் மொத்த வசூலில் 15 கோடிகளைத் தாண்டிய நான்கு படங்களில் மூன்று படங்கள் ரஜினி நடித்த (கபாலி உட்பட) படங்கள் தான். ஒன்றே ஒன்று மட்டும விஜய் நடித்த சர்கார் படமாகும்.

அண்ணாத்த படம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் மட்டும் ரூ. 34.92 கோடி வசூல் செய்துள்ளது. இது முதல் நாள் வசூலில் புதிய சாதனையாகும்.

(சில தியேட்டர்களில் டிக்கெட்டுக்கள் 500 முதல் 1200 ரூபாய் வரை விற்கப்பட்டது இந்த கணக்கில் வராது என்பது குறிப்பிடத்தக்கது. அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே இதில் அடங்கும்).

இதற்கு முன்பு, தமிழகளவில் முதல் நாளில் ஒரே நாளில் அதிக வசூல் செய்த படங்களில் ரஜினியின் 2.0 படம் 33 கோடியும்,, விஜய்யின் சர்கார் 31 கோடியும் வசூல் செய்தது.

அண்ணாத்த படம் ஆஸ்திரேலியாவில் நேற்று 1,14,047 ஆஸ்திரேலியன் டாலர்களை வசூலித்துள்ளது. நமது இந்திய ரூபாயில் சுமார் 63 லட்சங்கள் எனலாம்.

படத்தின் வசூல் மற்றும் வரவேற்பு குறித்து சில திரையரங்க உரிமையாளர்கள் தங்களுடைய ட்விட்டர் பதிவில் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

இந்த வரவேற்பு குறித்து இயக்குநர் சிவா தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…, “சாய் சாய்.. ‘அண்ணாத்த’ படத்தின் வெற்றிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள், சன் பிக்சர்ஸ், ஊடக நண்பர்கள், சினிமா விரும்பிகள், என்னுடைய அன்பான குடும்ப ரசிகர்கள், என்னுடைய டீம், என்னுடைய குடும்பம் அனைவருக்கும் நன்றிகள்” எனத் தெரிவித்துள்ளார்.

Annaatthe box office Collection Rajini break all records

அரசுப்பள்ளியில் இலவச வகுப்பெடுக்கும் வழக்கறிஞர் சுரேஷ் கண்ணன்.; மற்றவர்களும் செய்யலாமே!

அரசுப்பள்ளியில் இலவச வகுப்பெடுக்கும் வழக்கறிஞர் சுரேஷ் கண்ணன்.; மற்றவர்களும் செய்யலாமே!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

30-40 ஆண்டுகளுக்கு முன் அரசுப்பள்ளி என்றாலே மிகப்பெரிய மரியாதை இருந்தது. அப்போது எல்லாம் ஊருக்கு ஓரிரு தனியார் பள்ளிகளே இருந்தன.

பெரும்பாலான மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் படித்தனர். ஆனால் கடந்த 10-20 ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகளுக்கு மதிப்பு கூடியது. இதற்கு காரணம் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் அலட்சியம்.

இந்த பள்ளி ஆசிரியர்கள் கூட தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கின்றனர். மக்கள் வரிப்பணத்தில் அரசு சம்பளம் வாங்கும் இவர்கள் தங்கள் பணிகளை நிறைவாக செய்தால் ஏன்? தனியார் பள்ளிகளை இவர்கள் நாடவேண்டும் என்பதே பெரும் கேள்வியாக உள்ளது.

அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்ற கடுமையான சட்டங்கள் வந்தாலே ஆசிரியர்களின் அலட்சியம் குறையும். பள்ளிகளின் தரமும் தானாகவே உயரும்.

மேலும் அரசுப் பள்ளிகளில் கழிப்பறைகள் வசதிகள் சரியாக அமைக்கப்படவில்லை. பருவ வயதை எட்டிய மாணவிகளுக்கு இது பெரும் மன உளைச்சலை உண்டாக்குகிறது. இதை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. புதுக்கோட்டையில் ஒரு பள்ளியில் கடந்தாண்டு 350 மாணவர்களே இருந்த நிலையில் தற்போது மாணவர்கள் சேர்க்கை 1000த்தை தொட்டு விட்டதாம். இதற்கு மேல் பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதியில்லை என பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்து விட்டாராம்.

தமிழக அரசின் நடவடிக்கையாலும் அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் கூடி வருவதாலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருகிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் உள்ள அரசு உயர் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு சட்ட பாதுகாப்பு கல்வி குறித்து இலவசமாக வகுப்பு எடுக்கள்ளதாக வழக்கறிஞர் செ. சுரேஷ் கண்ணன் முன்வந்துள்ளார்.

அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரும் இதனை வரவேற்பதாக கூறி பள்ளியில் வகுப்பெடுக்க அனுமதியளித்துள்ளார்.

வாரம் ஒரு முறை சட்டக்கல்வி வகுப்புகளை எடுக்கவுள்ளதாக CSK (எ) சி சுரேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். இவர் தன் மகன் மற்றும் மகளை அரசுப் பள்ளிலேயே சேர்த்துள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்ட பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவராக உள்ளார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

மேலும் அந்தப்பள்ளி மாணவர்களின் நலன் கருதி 1000 மாஸ்க் (முக கவசம்), சானிடைசர் உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கியுள்ளார்.

இவரைப் போன்ற நல் உள்ளம் படைத்த நபர்கள் இது போன்ற கல்வி சேவைகளை செய்ய முன் வந்தால் அரசு பள்ளியின் தரமும் மாணவர்களின் அறிவும் மென்மேலும் உயரும் என்பதில் ஐயமில்லை.

Pudukottai BJP Legal Wing President Suresh Kannan taking Free Law class for Govt School Students

https://link.public.app/BRyu

ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 12ல் ரிலீஸாகும் ‘அரண்மனை 3’

ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 12ல் ரிலீஸாகும் ‘அரண்மனை 3’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமான ஜீ 5, பல்வேறு இந்திய மொழிகளில், சிறந்த படைப்புகளைத் தயாரித்து வருகிறது.

‘மலேஷியா டு அம்னீஷியா’ ‘டிக்கிலோனா’ ‘விநோதய சித்தம்’ உள்ளிட்ட பல தரமான படைப்புகளை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்த ஜீ5 மேலும் பல சிறந்த பொழுதுப் போக்கு படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.

அதன் வரிசையில், கடந்த மாதம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து வசூல் சாதனை புரிந்த ‘அரண்மனை 3’ திரைப்படம் நவம்பர் 12அன்று ஜீ5 ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.

சுந்தர்.cயின் இயக்கி நடித்துள்ள இப்படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள இப்படத்தை சந்தாதாரர்களுக்கு அளிப்பதில் ஜீ5 மகிழ்ச்சி கொள்கிறது.

Blockbuster Movie ‘Aranmanai 3’ to be released in ZEE5 on November 12th

‘ஜெய்பீம்’ பார்த்து விட்டு செங்கனியின் முன்னாள் காதலர் என்ன சொன்னார் தெரியுமா.?

‘ஜெய்பீம்’ பார்த்து விட்டு செங்கனியின் முன்னாள் காதலர் என்ன சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிப்பில் உருவான ‘ஜெய் பீம்’ படம் நவம்பர் 2 அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த படத்தை பார்த்த அனைவருமே பாராட்டி வருகின்றனர். இது தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் இதை சூர்யா ரசிகர்கள் பெருமளவில் கொண்டாடி இருப்பார்கள் என தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ‘ஜெய் பீம்’ படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் சித்தார்த் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…

‘ஜெய் பீம்’ படம் முழுவதும் அழுது கொண்டிருந்தேன். குற்ற உணர்ச்சியாகவும், அவமானமாகவும் உள்ளது.

தயாரிப்பாளர்கள் ஜோ மற்றும் சூர்யாவுக்குத் தலைவணங்குகிறேன். தன்னைப் பற்றி மட்டுமே திரையில் காட்டாத ஒரு படத்தை ஒரு பெரிய நடிகரால் எடுக்க முடியும் என சூர்யா நிரூபித்துகாட்டியுள்ளார்.

இயக்குநர் த.செ.ஞானவேலுக்கு நன்றி. நடிகை லிஜோமோல் ஜோஸ் தன் தோள்களில் படத்தை தாங்கியிருக்கிறார். ஒட்டுமொத்தப் படமும் அவர் தோளில் அமர்ந்துள்ளது.

செங்கனி வாழ்க்கையை அவரது கண்களே சொல்கின்றன. வாழ்த்துக்கள் மணிகண்டன். ஒவ்வொரு நடிகரும், படக்குழுவினரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

‘ஜெய் பீம்’ படத்தை நாம் எடுத்தது மிகவும் பெருமையாக இருக்கிறது. இருளர் பழங்குடியின மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை விழிப்புணர்வை இந்தப் படம் ஏற்படுத்தும். என்னவொரு வெற்றி. ஜெய்பீம் என்றால் அன்பு. ஜெய்பீம் என்றால் ஒளி”.

இவ்வாறு சித்தார்த் பதிவிட்டுள்ளார்.

எல்லாம் சரி.. செங்கனியின் முன்னாள் காதலர்? என தலைப்பில் உள்ளதே என்றுதானே கேட்கிறீர்கள்..

மலையாளத்தில் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் இந்த லிஜோமோல் ஜோஸ்.

இவர் தான் தமிழில ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ற படத்தில் சித்தார்த்துக்கு காதல் மனைவியாக நடித்திருந்தார். அதாவது ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவாக நடித்து பாராட்டு பெற்றவர்.

சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி அருண் ஆண்டனி என்பவரை லிஜோமோல் ஜோஸ் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.

(இப்போ சொல்லுங்க லிஜா மோலின் முன்னாள் ரீல் கணவர் சித்தார்த் தானே)

Sengani ex lover praises jai bhim movie

sivappu manjal pachai

More Articles
Follows