தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி.
கார்த்தி தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், கார்த்தியின் 27வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
’96’ படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கம் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார்.
இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தில் அரவிந்த்சாமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.
இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வாயிலாக தெரிவித்துள்ளார்.
PC Sreeram to wield the camera for Karthi’s 27th movie