தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’.
கடந்த மே மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிய இப்படம் மக்களிடையே பெரும் சர்ச்சைக்குள்ளானது.
ஆனால், இப்படம் உலகம் முழுவதும் ரூ.238 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை இயக்கிய சுதிப்டோ சென் தற்போது தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார்.
பிரபல தொழில் அதிபரான சுப்ரதா ராயின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கிறார்.
இந்த படத்திற்கு ‘சஹாரா ஸ்ரீ’ (SAHARASRI) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது
‘சஹாரா ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் இயக்குனர் சுதிப்டா சென் இயக்கும், இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
அந்த போஸ்டரில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரை பார்த்த ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்படும் வகையில் உள்ளது.
லெஜெண்ட் ஸ்டூடியோஸ் மற்றும் பென் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘the kerala story’ movie director next film project music compose to ar rahman