கமல் பரப்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குனர்

கமல் பரப்பிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

சமீபத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து பேசிய கமல், “அந்த படம் உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டது அல்ல என்று கூறினார். மேலும், டைட்டில் கார்டில் “உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்” என்று பாேடும் அளவிற்கு படத்தில் உண்மை இல்லை” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது இதுபோன்ற விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குனர் சுதிப்டோ சென், “இதுபோன்ற விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்வதை இப்போது நிறுத்திவிட்டேன். படத்தை பார்க்காமலேயே சிலர் விமர்சனம் செய்கிறார்கள். படம் பார்த்தவர்கள் தங்கள் மனதை மாற்றிக் கொள்கிறார்கள். நம் நாட்டில் நிறைய முட்டாள்தனமான முன் முடிவுகள் இருக்கின்றன.” எனக் கூறியுள்ளார்.

அப்படி போடுவதனால் மக்களை இதுதான் உண்மை கதை என ஏமாற்றிவிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

the kerala story director Sudipto Sen answer to kamalhaasan comment

‘இந்தியன் 2’ பட அனுபவம் குறித்து நடிகர் சித்தார்த்தின் உற்சாகமும் நன்றியும்

‘இந்தியன் 2’ பட அனுபவம் குறித்து நடிகர் சித்தார்த்தின் உற்சாகமும் நன்றியும்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சித்தார்த் கமல்ஹாசனுடன் இணைந்து “இந்தியன் 2” இல் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் இருவருடனும் பணிபுரிந்த பாக்கியத்தை வெளிப்படுத்தினார்.

2 தசாப்தங்களுக்குப் பிறகு வாய்ப்பை வழங்கிய இயக்குனருக்கு நன்றியை தெரிவித்தார்.

இந்த படத்திற்கான அழைப்பைப் பெறுவதற்கு, நான் மிகவும் பாக்கியவானாக கருதுகிறேன்.

மீண்டும் என்னை அழைத்ததற்காக ஷங்கர் சாருக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றார்.

Actor Siddharth’s Excitement and Gratitude about his experience in ‘Indian 2’

JUST IN ‘மாமன்னன்’ படம் வேற ரூட்.; தன் கேரக்டர் பற்றி கீர்த்தி சுரேஷ் பேச்சு

JUST IN ‘மாமன்னன்’ படம் வேற ரூட்.; தன் கேரக்டர் பற்றி கீர்த்தி சுரேஷ் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரகுமான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாயகி கீர்த்தி சுரேஷ் பேசும்போது…

“மன்னிக்கவும்.. இரவு அதிக நேர மாகி விட்டது.. நான் பாம்பேயில் ஒரு விளம்பர பட சூட்டிங் நடித்துக் கொடுத்துவிட்டு இப்போதுதான் சென்னை வந்தேன்.

இது ஒரு மிகப்பெரிய படம். உதயநிநி மாரி செல்வராஜ் பகத் மாமன்னன் வடிவேலு ரகுமான் ஆகியோர் கூட்டணியில் நானும் இருக்கிறேன்.

எனக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் ஒரு படம் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தில் நான் ஒரு கம்யூனிஸ்ட் பெண்ணாக நடித்திருக்கிறேன். நல்ல மெச்சூரிட்டியான கேரக்டர். இது வேற ஒரு பாதையில் பயணிக்கும் படம். படத்தை எல்லாரும் தியேட்டரில் பாருங்கள். ஆதரவு கொடுங்கள்” என்று பேசினார் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh reveals her character in Maamannan movie

JUST IN விளையாட்டா நடிச்சு விளையாட்டு துறை அமைச்சராகிட்டிங்க – சிவகார்த்திகேயன்

JUST IN விளையாட்டா நடிச்சு விளையாட்டு துறை அமைச்சராகிட்டிங்க – சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி பகத் பாசில் வடிவேலு கீர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தின் இசை விழா தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விழாவில் கமல் மிஷ்கின் வெற்றிமாறன் எஸ் ஜே சூர்யா சிவகார்த்திகேயன் விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

மேடை ஏறிய சிவகார்த்திகேயன் பேசும்போது கலகலப்பாக பேசி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

அவர் பேசும்போது…

ஃபர்ஸ்ட் லுக் வரும் வரை உங்க கெட் அப் லுக்கை காட்டவேணாம்னு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி சொல்லிட்டார்.

கமல் சார் முன்னாடி இருக்கும்போது இதை கெட்டப்னுலாம் சொல்லாதீங்க ப்ளீஸ்.

சினிமாவில் விளையாட்டா நடிக்கத் தொடங்கி இப்போ விளையாட்டு துறை அமைச்சராகிட்டிங்க என உதயநிதியை கலாய்த்து பேசினார் சிவகார்த்திகேயன்.

மேலும் நானும் மாரி செல்வராஜ் பிரதரும் ஒண்ணா கிரிக்கெட் லாம் விளையாடி இருக்கோம். அப்போ அவர் ஒழுங்காக கிரிக்கெட் ஆடல ..ஆனா எடுத்த படம் எல்லாமே சிக்சர் தான்.

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

sivakarthikeyan speech about Udhayanidhi in maamannan audio launch

JUST IN நான் நம்பும் அரசியலைப் பேசி இருக்கிறது ‘மாமன்னன்’.. – கமல்ஹாசன்

JUST IN நான் நம்பும் அரசியலைப் பேசி இருக்கிறது ‘மாமன்னன்’.. – கமல்ஹாசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி தயாரித்து நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இறுதியாக மேடை ஏறி கமல்ஹாசன் பேசும்போது…

“நான் மாமன்னன் படத்தை பார்த்து விட்டேன். இது ஒரு முக்கியமான அரசியலை பேசி இருக்கிறது. நான் நம்பும் அரசியலை பேசியிருக்கிறது.

சென்டிமெண்ட் காட்சிகளில் ரகுமானின் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளது. தன் சினிமா வாழ்க்கையில் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார் வடிவேலு.

மாமன்னன் படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்படவில்லை. மாறாக இரண்டு வாரங்கள் கழித்து வெளியிடப்படும் என தெரிகிறது.

ஜூன் 29ஆம் தேதி ‘மாமன்னன்’ திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர உதயநிதி திட்டமிட்டுள்ளார்.

Kamalhassan speech at Maamannan Audio launch

JUST IN வடிவேலு ஓகே சொல்லலேன்னா ‘மாமன்னன்’ வேண்டாம் – உதயநிதி

JUST IN வடிவேலு ஓகே சொல்லலேன்னா ‘மாமன்னன்’ வேண்டாம் – உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதயநிதி நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1ம் தேதி சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கோலிவுட்டில் உள்ள பல முன்னணி நட்சத்திரங்கள் இயக்குனர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இந்த விழாவில் மேடை ஏறி உதயநிதி பேசும் போது..

” வடிவேலு இந்த படத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இந்த படம் தொடங்க வேண்டாம் என நான் மாரி செல்வராஜிடம் கூறிவிட்டேன்.

வடிவேல் ஒப்புக்கொண்ட பிறகு நான் தான் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், ரகுமான் ஆகியோரிடம் பேசி இது என் கடைசி படம் என்று கூறி இந்த மாமன்னன் படத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்தேன்.

நான் காட்சியில் இல்லாத போது வடிவேலு காட்சிகளை படமாக்கினார் மாரி செல்வராஜ். அதன் பின்னர் அந்த 10/நிமிட காட்சிகளை பார்த்தபோது என்னால் நம்ப முடியவில்லை.

நான் வடிவேலுவை கட்டிப்பிடித்து பாராட்டினேன்” இவ்வாறு மேடையில் பேசினார் உதயநிதி.

Udhayanidhi hugged Vadivelu for his performance in Maamannan

More Articles
Follows