‘தி கேரளா ஸ்டோரி-க்கு தமிழகத்தில் இடமில்லை.; திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி முடிவு

‘தி கேரளா ஸ்டோரி-க்கு தமிழகத்தில் இடமில்லை.; திரையரங்கு உரிமையாளர்கள் அதிரடி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியான படம் ‘தி கேரளா ஸ்டோரி’.

இதில் அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பலானி, ‘வெந்து தணிந்தது காடு’ படப்புகழ் சித்தி இத்னானி, விஜய் கிருஷ்ணா, பிரணவ் மிஸ்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதன் டீசர் வெளியானதில் இருந்தே படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

கேரளாவைச் சேர்ந்த இந்து பெண்கள் முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்வது போன்ற கதையை கொண்டது.

இந்தப் படத்துக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இப்படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுக்களை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், திட்டமிட்டபடி கடந்த மே 5-ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் வெளியானது.

தமிழகத்தில் சென்னையில் 12 தியேட்டர்களிலும் கோவையில் 3 தியேட்டர்களிலும் இந்தப் படம் வெளியானது.

‘தி கேரளா ஸ்டோரி’ படம் தற்போது தமிழகத்திலும் எதிர்ப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், திரையரங்குகள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு கருதி, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை நேற்று முதல் நிறுத்துவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

மேலும், இச்செய்தியை தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணைச் செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

‘The Kerala Story’ stops screening in Tamil Nadu

+2வில் நல்ல மதிப்பெண் பெற்றும் படிக்க முடியவில்லையா.? உங்களுக்கு உதவ விஷால் காத்திருக்கிறார்.!

+2வில் நல்ல மதிப்பெண் பெற்றும் படிக்க முடியவில்லையா.? உங்களுக்கு உதவ விஷால் காத்திருக்கிறார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்று மே 8 தமிழக +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இதனை முன்னிட்டு நடிகர் விஷால் தரப்பில் அவரது ரசிகர் மன்ற சார்பில் ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது.

அந்த அறிக்கையில்

பிளஸ்+2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் விஷால் அவர்களின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகள் மனம் தளராமல் இருக்க வேண்டும். தோல்விகள் வாழ்க்கையில் இயல்பு தான். ஆகையால் எந்த விதத்திலும் முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து படித்து, மறுதேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறோம்.

மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்களுக்கும், அன்பான சொந்தங்களுக்கும் வணக்கம்.

வருடம்தோறும் பிளஸ்+2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, மேற்கொண்டு படிக்க இயலாத வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளை நமது அண்ணன் புரட்சி தளபதி விஷால் அவர்கள் தனது ‘தேவி அறக்கட்டளை’ மூலம் படிக்கவைத்து வருகிறார்.

அதேபோன்று இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்களின் பதிவு நடைபெற்று வருகிறது.

நமது மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள் உங்கள் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பிளஸ்+2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி, தேர்ச்சி பெற்று மேற்கொண்டு படிக்க முடியாத மாணவ, மாணவிகள் குறித்த முழு விபரங்களையும் நமது ‘தேவி அறக்கட்டளை’ மின்னஞ்சல் [email protected] முகவரிக்கு அனுப்புங்கள்.

அவர்களின் மனுக்கள் பரிசீலினை செய்யப்பட்டு, அவர்களின் மேற்படிப்பிற்கு உதவிகள் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்.

V ஹரிகிருஷ்ணன் செயலாளர், மக்கள் நல இயக்கம், ஒருங்கிணைப்பாளர், தேவி அறக்கட்டளை.

Vishal is waiting to help you for +2 students

விஜய்யை இயக்க மறுத்த பாரதிராஜா & கௌதமேனன்.; அதுவும் நல்லதுதான்.. – எஸ்ஏசி ஓபன் டாக்

விஜய்யை இயக்க மறுத்த பாரதிராஜா & கௌதமேனன்.; அதுவும் நல்லதுதான்.. – எஸ்ஏசி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வாவ் மீடியா சார்பில் துரை வீரசக்தி தயாரித்து வரும் படம் , தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன”.

ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் உருவான இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது…

“சினிமாவை நேசித்ததால் ஏதோ ஒரு வகையில் நம்மை அது நேசித்துக் கொண்டிருக்கும். அதற்கு உதாரணம், முதலில் இயக்கினேன், தயாரித்தேன், விநியோகித்தேன், இப்போது இந்த வயதில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன். அதில், நிறைய பணம் சம்பாதித்திருக்கிறேன்.

ஆனால், தங்கர் பச்சான் மாதிரி பெயரை சம்பாதிக்கவில்லை. அவர் விவசாயத்தில் மட்டுமல்ல, படத்திலும் கலப்படமில்லாமல் ஆர்கானிக்காகத் தான் படம் எடுப்பேன். நீங்கள் அதை பார்க்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்.

அவரின் இயக்கத்தில் இந்த வயதில் நடித்திருப்பதில் மகிழ்ச்சி.

ஒரே காலகட்டத்தில் ஒரே ஊரில் இருந்து சினிமாவிற்கு நானும் பாரதிராஜாவும் வந்தோம். ஆனால், அவர் முதலில் இயக்குநராகிவிட்டார். அவரிடம் உதவி இயக்குநராக வாய்ப்பு கேட்டேன். முடியாது என்று மறுத்துவிட்டார்.

விஜயை நடிகராக்க வேண்டும் என்று ஒரு ஆல்பம் தயாரித்துக் கொண்டு சென்றேன். என்னிடம் ஏன் கொண்டு வந்தாய்? நீயே பெரிய இயக்குநர் தானே, நீயே இயக்கிக் கொள் என்று மறைமுகமாக மறுத்துவிட்டார்.

அவரிடம் உதவி இயக்குநராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன், நடக்கவில்லை. என் பையனை அவர் இயக்கத்தில் நடிக்க வைக்க ஆசைப்பட்டேன், அதுவும் நடக்கவில்லை.

ஆனால், தங்கர் பச்சான் ஒரே படத்தில் எங்கள் இருவரையும் நண்பர்களாக நடிக்க வைத்துவிட்டார்.

இவரைப் போலவே கௌதம் மேனனிடமும் ஆல்பத்தை கொண்டு சென்றேன். அவரும் மறுத்துவிட்டார். அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான், இல்லையென்றால் விஜய் கமர்ஷியல் நாயகனாக ஆகியிருக்கமாட்டார். அதற்காக கடவுளுக்கும் நன்றி” என்றார்.

Bharathiraja and Gautam Menon refused to direct Vijay says SAC

நயன்தாரா விஜய்சேதுபதி அட்லி அனிருத் குறித்து ரசிகர்கள் கேள்விக்கு ஷாருக் ‘நச்’ பதில்

நயன்தாரா விஜய்சேதுபதி அட்லி அனிருத் குறித்து ரசிகர்கள் கேள்விக்கு ஷாருக் ‘நச்’ பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பதான்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகும் ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் மூலம் ஷாருக்கான், பார்வையாளர்களை அதிரடியான பயணத்திற்கு அழைத்துச் செல்ல தயாராகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ‘ஜவான்’ படம் குறித்து, பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ‘ஜவான்’ திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் #AskSRK எனும் பிரிவில் ரசிகர்களுடன் ஷாருக்கான் உரையாடினார்.

இதன் போது ‘ஜவான்’ படம் குறித்தும் அதன் வெளியீட்டு தேதியில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும்.. ரசிகர்கள் ஆர்வத்துடன் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

‘ஜவான் ஏன் தாமதமாகிறது?’ என்று கேட்டதற்கு…

”பார்வையாளர்களுக்கு நேர்த்தியும், தரமும் மிக்க மிக்க படைப்பை வழங்க பட குழுவினருக்கு பொறுமையும், அதற்கான கால அவகாசமும் தேவை” என்று கூறினார்.

‘ஜவானில் எது மிகவும் பிடிக்கும்?’ என்று கேட்ட போது, ” என்னைப் பொறுத்தவரை இது ஒரு புது வகையிலான படைப்பு. இயக்குநர் அட்லீ மாறுபட்ட இரண்டு ஷாருக்கானை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

மேலும் ஜவானை பொருத்தவரை, அட்லீ மற்றும் அவரது குழுவினர் தான் மாஸ். அவர்களின் ஸ்டைல் மற்றும் அணுகுமுறை தான் தன்னை மிகவும் உற்சாகப்படுத்தியது” என்றார்.

நயன்தாராவை பற்றி குறிப்பிடுகையில்… ” அவர்கள் அழகானவர். மிகவும் இனிமையானவர். அவருடன் பணியாற்றுவதற்கு எளிதாகவும், சௌகரியமாகவும் இருந்தது. மிக்க மகிழ்ச்சி” என்றார்.

விஜய் சேதுபதி பற்றி குறிப்பிடுகையில்.. “அடக்கமான மனிதர். சிறந்த நடிகர். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார்.

படத்தின் இயக்குநரான அட்லீ, உங்களை தமிழ் மொழியை கற்க வைத்தாரா? என்று கேட்டபோது…

” அட்லீயும், அனிருத்தும் இணைந்து, என்னை தமிழில் சில பாடல் வரிகளை பாட வைத்துள்ளனர். நான் அவற்றை சரியாக உச்சரித்திருக்கிறேன் என நம்புகிறேன்.” என பதிலளித்தார்.

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் ஷாருக்கான் நடிக்கும் இந்த திரைப்படம், பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராக செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜவான்

Nayanthara VijaySethupathi Atlee of Fans’ Questions ‘Nuch’ Answers by shahrukhan

தமிழக பிரபலங்கள் இணைந்த 3வது இந்திய அத்தியாயம் : ‘மாடர்ன் லவ் – சென்னை’ ரிலீஸ் அப்டேட்

தமிழக பிரபலங்கள் இணைந்த 3வது இந்திய அத்தியாயம் : ‘மாடர்ன் லவ் – சென்னை’ ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2019-ஆம் ஆண்டு அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற வெப் தொடர் ‘மாடர்ன் லவ்’.

ஆந்தாலஜி வகையைச் சேர்ந்த இத்தொடரின் இந்திய பதிப்பான ‘மாடர்ன் லவ் – மும்பை’ கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இத்தொடரின் சென்னை அத்தியாயத்தின் வெளியீட்டுத் தேதியை அமேசான் ப்ரைம் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த வெப் தொடரை டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இத்தொடரில் பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜுமுருகன், கிருஷ்ணகுமார் ராம்குமார் , அக்‌ஷய் சுந்தர் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகிய ஆறு இயக்குநர்களின் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தொடருக்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார், மற்றும் ஷான் ரோல்டான் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

இத்தொடருக்கு பாடல் வரிகள் இளையராஜா, யுகபாரதி மற்றும் பாக்கியம் சங்கரால் எழுதப்பட்டுள்ளன.

மேலும், இத்தொடர் வரும் மே 18-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது.

இந்த தொகுப்பு பின்வரும் அத்தியாயங்களை உள்ளடக்குகிறது:

1 “லாலாகுண்டா பொம்மைகள்” – ராஜுமுருகன் இயக்கியது, இசையமைப்பு ஷான் ரோல்டன் , ஸ்ரீ கௌரி ப்ரியா, வாசுதேவன் முரளி, மற்றும் வசுந்தரா ஆகியோர் நடித்துள்ளனர்

2 “இமைகள்” – பாலாஜி சக்திவேல் இயக்கியது, இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா, அசோக் செல்வன், மற்றும் டீ.ஜே பானு ஆகியோர் நடித்துள்ளனர்

3 “காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற இமோஜி” –கிருஷ்ணகுமார் ராம்குமார், இயக்கியது, இசையமைப்பு ஜி.வி.பிரகாஷ் குமார், ரித்து வர்மா, சம்யுக்தா விஸ்வநாதன், பவன் அலெக்ஸ், மற்றும் அனிருத் கனகராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்

4.“மார்கழி” – அக்ஷய் சுந்தர் இயக்கியது, இசையமைப்பு இளையராஜா , சஞ்சுளா சாரதி, சூ கோய் ஷெங், மற்றும் ஸ்ரீகிருஷ்ணா தயாள் ஆகியோர் நடித்துள்ளனர்

5.“பறவை கூட்டில் வாழும் மான்கள் ” – பாரதிராஜா இயக்கியது, இசையமைப்பு இளையராஜா , கிஷோர், ரம்யா நம்பீசன், மற்றும் விஜயலக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர்

6.“நினைவோ ஒரு பறவை” – தியாகராஜன் குமாரராஜா இயக்கியது, இசையமைப்பு இளையராஜா , வாமிகா மற்றும் பீபி ஆகியோர் நடித்துள்ளனர்.

மாடர்ன் லவ்

‘Modern Love Chennai’ to release on may 18

திருமணத்திற்கு பிறகு மதம் மாறினாரா குஷ்பு? அவரே கொடுத்த விளக்கம்

திருமணத்திற்கு பிறகு மதம் மாறினாரா குஷ்பு? அவரே கொடுத்த விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குஷ்பு முஸ்லீமாக பிறந்து வளர்ந்தவர்.

மேலும் அவர் சுந்தரை மணந்த பிறகு மதம் மாறியதாகவும் அவருக்கு இந்து மதத்துடன் தொடர்பு இருக்கிறதா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

வெளிப்படையாகப் பேசும் அவர் ட்விட்டரில் ஒரு வலுவான பதிலைக் கொண்டு வந்தார. “என் திருமணத்தை கேள்விக்குள்ளாக்குபவர்கள், அல்லது மதம் மாறி விட்டேன் என்று கூறுபவர்கள், கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும்.

“சிறப்பு திருமணச் சட்டம்” பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை. இது நம் நாட்டில் உள்ளது. நான் மதம் மாறவில்லை என்று குஷ்பு மேலும் கூறினார்.

Did Khushbu convert to different religion after marriage?

More Articles
Follows