தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும், அவர் மீண்டும் மீண்டும் பிரமாண்டம் மற்றும் தரமான படங்களைத் தயாரித்துள்ளார்.
அவர்களின் சமீபத்திய வெளியீடுகளின் தொடர்ச்சியான வெற்றியைத் தொடர்ந்து, லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த வெளியீடு ‘லால் சலாம்’ திரைப்படம் தயாராகி வருகிறது.
‘லால் சலாம்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இயக்குனர் பொறுப்பேற்றுகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்’..
இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
இப்படத்தில் இருந்து ‘மொய்தீன் பாய்’அவரது கேரக்டர் போஸ்டர் பார்வையாளர்களிடமிருந்து வரவேற்பைப் பெற்றது மற்றும் ஊடகங்களில் மிகவும் சலசலப்பை உருவாக்கியது.
படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவின் பிரபாகர் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு படத்தின் படப்பிடிப்பு துவங்கி திருவண்ணாமலையில் முதல் ஷெட்யூலை முடித்தது.
தற்போது படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது பகுதிகளுக்கான டப்பிங்கை முடித்துள்ளார்.
ஜி.கே.எம். லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் தமிழ் குமரன் மற்றும் குழு தற்போது லால் சலாம் படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கெளரவ தோற்றத்தில் நடிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான லால் சலாம்
திரைப்படம் 2024 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
கூடுதல் தகவல்…
ரஜினிகாந்த் பல படங்களில் ஹிந்துவாக நடித்திருந்தாலும் அவர் ஏற்று நடித்த இஸ்லாமிய கேரக்டர் பாட்ஷா பாய் என்பது ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
1995 ஆம் ஆண்டில் பொங்கல் சமயத்தில் வெளியான படம் தான் ‘பாட்ஷா’ தற்போது கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு மொய்தீன் பாய் பொங்கலுக்கு வருகிறார்.
எனவே அவர் பாட்ஷா பாய் இடத்தைப் பிடிப்பார்ரா?என்பதை பார்ப்போம்..
Lal Salaam movie set to release Pongal 2024