இதெல்லாம் ஒரு படமா? ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை கழுவி ஊற்றிய கமல் !!

இதெல்லாம் ஒரு படமா? ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை கழுவி ஊற்றிய கமல் !!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

கேரளாவிலேயே பல திரையரங்குகள் பட வெளியீட்டுக்கு முன்வரவில்லை.

தமிழகத்திலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.இதன் ஒரு பகுதியாக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

அபுதாபியில் இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலர் பங்கேற்கும் IFFA Awards 2023 எனும் திரைப்பட திருவிழா நடைப்பெற்று வருகிறது.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு இந்திய சினிமாவின் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

பிறகு அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவரிடம் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இந்த நிலையில், ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்து பேசிய கமல், “அந்த படம் உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டது அல்ல என்று கூறினார். மேலும், டைட்டில் கார்டில் “உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம்” என்று பாேடும் அளவிற்கு படத்தில் உண்மை இல்லை” என்று காட்டமாக கூறியுள்ளார்.

அப்படி போடுவதனால் மக்களை இதுதான் உண்மை கதை என ஏமாற்றிவிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

kamal haasan ‘the kerala story’ this story is not true says

கார் விபத்தில் சிக்கிய நடிகர் சர்வானந்த்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கார் விபத்தில் சிக்கிய நடிகர் சர்வானந்த்; மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2011ம் ஆண்டு வெளியான ‘எங்கேயும் எப்போதும்’ படம் மூலம் தமிழ் திரையுலக ரசிகர்களை கவர்ந்தவர் தெலுங்கு நடிகரான ஷர்வானந்த்.

சாப்ட்வேர் என்ஜினீயர் ரக்ஷிதா ரெட்டி என்பவருடன் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிச்சயதார்த்தம் சில காரணங்களால் நின்று போனதாக தெலுங்கு இணைய தளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பு தகவல் பரவி வந்தது.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் திருமண தேதியை சர்வானந்த் அறிவித்து இருந்தார்.

ஜெய்ப்பூரில் உள்ள லீலா பேலசில் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி சர்வானந்த், ரக்ஷிதா ரெட்டி திருமணம் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், நேற்று இரவு 2 மணி அளவில் ஹைதராபாத்தில் இருக்கும் ஃபிலிம் நகர் ஜங்க்ஷனில் தனது ரேஞ்ச் ரோவர் காரில் சென்றிருக்கிறார் ஷர்வானந்த்.

காரை அவரே ஓட்டிச் சென்றிருக்கிறார். அப்பொழுது தவறான பாதையில் வந்த பைக்குடன் மோதுவதை தவிர்க்க முயற்சி செய்தாராம் ஷர்வானந்த். அந்த நேரத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது.

ஷர்வானந்த் சென்ற கார் விபத்துக்குள்ளாகியிருக்கிறது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தக்க சமயத்தில் ஷர்வானந்தை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

மேலும், நடிகர் ஷர்வானந்துக்கு விபத்தின் போது காயம் எதுவும் இல்லை. ஷர்வானந்த் நலமாக இருக்கிறார். அவரை பற்றி வதந்தி பரப்ப வேண்டாம் என்று ஷர்வானந்தின் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.

Actor Sharwanand mets with car accident in Hyderabad

சிரஞ்சீவியை அறிமுகம் செய்த இயக்குநர் வாசு காலமானார்

சிரஞ்சீவியை அறிமுகம் செய்த இயக்குநர் வாசு காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கே.வாசு.

கே.வாசு தெலுங்கு முன்னணி கதாநாயகன் சிரஞ்சீவியை முதன் முதலில் ‘பிராணம் கரீது’ என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.

சிரஞ்சீவி முதலில் நடித்தது ‘புனிதக் ரால்லு’ என்ற படமாக இருந்தாலும் அதற்கு முன்பாகவே கே.வாசு இயக்கிய ‘பிராணம் கரீது’ படம் திரைக்கு வந்து விட்டது.

கே.வாசு இயக்கிய ‘ஸ்ரீ சீரடி சாய்பாபா’ படம் இந்தியா முழுவதிலும் உள்ள சாய்பாபா பக்தர்களின் மனதை கவர்ந்தது.

இவரது தந்தை பிரத்தியேகாத்மா, சகோதரர் ஹேமாம்பதராவ் ஆகியோரும் இயக்குனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்தல ராயுடு, இண்டிலோ ஸ்ரீமதி வீதிலோ குமாரி உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், இயக்குனர் கே.வாசு உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இவருக்கு வயது 72.

இயக்குனர் கே.வாசு மறைவுக்கு திரையுலகினர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Filmmaker K Vasu, who introduced Chiranjeevi passes away

சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்

சுதாகரின் உடல்நிலை கவலைக்கிடம்; வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாரதிராஜா இயக்கத்தில் 1978-ம் ஆண்டு வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் சுதாகர்.

தமிழில் தொடர்ந்து ‘கல்லுக்குள் ஈரம்’, ‘சுவரில்லாத சித்திரங்கள்’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘மாந்தோப்பு கிளியே’, ‘எங்க ஊரு ராசாத்தி’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

ரஜினிகாந்த்தின் அதிசய பிறவி படத்திலும் காமெடி வேடத்தில் கலக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் தெலுங்கில் ‘பவித்ரா பிரேமா’, ‘அக்னி பூலு’, ‘ஊரிகிச்சினா மாதா’, ‘போகி மண்டலு’, ‘கொண்டே கொடல்லு’ போன்ற பல படங்களில் முன்னணி நடிகராக நடித்தார்.

தெலுங்கில் காமெடி வேடங்களில் நடிக்கத் துவங்கினார்.

சமீபத்தில் சுதாகரின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், அவர் உயிரிழந்துவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவிவந்தன.

இந்தத் தவறான தகவல் கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நடிகர் சுதாகர் தனது உடல்நிலை குறித்து வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.

அதில், ”எனது உடல்நிலை குறத்து தவறான வதந்திகள் பரவி வருகின்றன. அதனை நம்பாதீர்கள். “நான் உயிருடன் நன்றாக இருக்கிறேன்”. கவலைப்படத் தேவையில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் நடிகர் சுதாகர் தனது உடல்நிலை குறித்துப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Sudhakar put an end to rumours and clarifies his health condition

தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மோடிக்கு நன்றி. #தமிழன்டா என ரஜினி ட்வீட்

தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மோடிக்கு நன்றி. #தமிழன்டா என ரஜினி ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

டெல்லியில் நவீன வசதிகள் கொண்ட புதிய பாராளுமன்றக் கட்டிடம் நாளை மே 28 அன்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்படவுள்ளது

தமிழ்நாட்டின் பண்பாட்டிற்கும், கலாச்சாரத்திற்கும், தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கும் மேலும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்ததுள்ளது இந்த செங்கோல்.

மேலும் இந்திய விடுதலையின் அடையாளமாகவும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு அத்தாட்சியாகவும் விளங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தச் செங்கோல், பிரதமரால் நாளை மே 28ல் திறக்கப்படவுள்ளது.

புதிய பாராளுமன்றக் கட்டிடத்தில், மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் நிரந்தரமாக இடம் பெறவுள்ளது.

இந்த நிலையில் இது இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நேற்று மே 27ல் பதிவிட்டுள்ளதாவது…

இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல்.

#தமிழன்டா

தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

என ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

Rajinikanth tweeted thanks Modi for ‘making Tamilians proud’

விஜய் சேதுபதியின் முதல் ஹிந்தி படம் ஓடிடி-யில் ரிலீஸ்.; லோகேஷ் வாழ்த்து.!

விஜய் சேதுபதியின் முதல் ஹிந்தி படம் ஓடிடி-யில் ரிலீஸ்.; லோகேஷ் வாழ்த்து.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கிய முதல் படம் ‘மாநகரம்’ கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை எஸ்.ஆர். பிரபு தயாரித்திருந்தார்.

முதல் படமே லோகேஷுக்கு வெற்றி படமாக அமைந்தது. தற்போது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் ஹிந்தியில் ரீமேக் ஆகி ‘மும்பைகர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்தப் படத்தை ஹிந்தியில் இயக்க ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ளார்.

தமிழில் முனீஸ்காந்த் நடித்த வேடத்தில் ஹிந்தியில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இவர்களுடன் விக்ராந்த் மாசே, தன்யா மாணிக்டலா, ஹ்ரிது ஹரூன், சஞ்சய் மிஸ்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ் & தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வரும் ஜூன் 2ஆம் தேதி நேரடியாக ஜியோ சினிமாஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.

Here’s the #MUMBAIKAR trailer!

Wishing good luck to the entire team 😊💯

#MumbaikarOnJioCinema from 2nd June
@jiocinema

@vikrantmassey

@VijaySethuOffl

@hridhuharoon

@santoshsivan

@imsanjaimishra

@RanvirShorey
#TanyaManiktala
@sachinskhedekar
#JyotiDeshpande
@riyashibu_

@hr_pictures

@jiostudios

@TimesMusicHub

Lokesh Kanagaraj wishes to Vijay Sethupathi’s Mumbaikar

More Articles
Follows