தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உதயநிதி தயாரித்து நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று ஜூன் 1ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக வந்த அமைச்சர் உதயநிதி அரங்கத்திற்குள் நுழைவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது…
“மாரி செல்வராஜ் படத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனையும் இந்த ‘மாமன்னன்’ படத்திலும் இருக்கும்.
இந்த படம் சமூக நீதி பற்றி பேசி இருக்கிறது. மாரி செல்வராஜ்க்கும் எனக்கும் ஒரு அரசியல் புரிதல் இருக்கிறது.
நான் பகத் கீர்த்தி உள்ளிட்ட பலர் இருக்கிறோம். ஆனால் எங்களை எல்லாம் தள்ளி வைத்து வடிவேலு ஒரு கேரக்டர் செய்து இருக்கிறார்.
இந்த படத்தை ஜூன் 29ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
எனக்கு முதல்வர் அமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார். எனவே அதை பொறுப்புடன் செய்ய வேண்டும்.
அனேகமாக மாமன்னன் படம் தான் கடைசி படமாக இருக்கும். ஒரு நல்ல படத்தில் நடித்த திருப்தி இருக்கிறது.
கமல் சார் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க இருந்தேன். அதைக் கூட மறுத்து விட்டேன். மக்கள் பணி இருப்பதால் படங்களின் அடிப்பதில்லை
இப்போது கூட கடும் பணி சுமைகளுக்கு நடுவே இந்த இசை விழாவிற்கு வந்திருக்கிறேன். மேலும் டப்பிங் பணிகளையும் முடித்துக் கொடுத்திருக்கிறேன்.
ஆனால் மாரி செல்வராஜ் மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க கேட்டுக் கொண்டுள்ளார். சூழ்நிலை பொருத்து முடிவு எடுக்கலாம்.”
என உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
Udhayanidhi says I came to the ‘MAAMANNAN’ music festival only with difficulty