20 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டதை பாட்டியிடம் சொல்லாத அதா ஷர்மா அதிர்ச்சி பேட்டி

20 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டதை பாட்டியிடம் சொல்லாத அதா ஷர்மா அதிர்ச்சி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.

கேரளாவிலேயே பல திரையரங்குகள் பட வெளியீட்டுக்கு முன்வரவில்லை.

தமிழகத்திலும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.இதன் ஒரு பகுதியாக தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு விதித்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ள அதா சர்மா சமீபத்தில் ஒரு பேட்டியில், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தில் பாலியல் வன்கொடுமை சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் தனது பாட்டிக்கு காட்ட பதட்டமாக இருந்தது. அதனைப் பார்த்து அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வரார்கள் என பயந்தேன்.

ஆனால், படம் பார்த்த என் பாட்டி இந்தப் படம் நிறைய நல்ல கற்பிக்கக் கூடிய தகவல் இருக்கிறது.

இந்தப் படத்த என் மாணவர்கள் பார்க்க வேண்டும் என்றார். அதற்கு நான் இது வயதுவந்தோருக்கான படம் என விளக்கமளித்தேன்.

இதனையடுத்து பதிலளித்த எனது பாட்டி, இந்தப் படம் U/A சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதனால் இளம் பெண்கள் இந்தப் படத்தைப் பார்த்து விழிப்புடன் இருக்க உதவும் என்றார்.

Adha Sharma, who was afraid to tell her grandmother about the sexual assault

Exclusive – Election Campaign Strategists Agreement – விஜய்யின் தேர்தல் வியூகம்

Exclusive – Election Campaign Strategists Agreement – விஜய்யின் தேர்தல் வியூகம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய் தன் அரசியல் ஆட்டத்தை எப்போதே ஆரம்பித்து விட்டார்.

இதற்கு முன்னோட்டமாக தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் அவர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தினார்.

அவர்களும் கணிசமான வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெற்றனர்.

இதனையடுத்து அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டு அவர்களை பாராட்டி இருந்தார்.

மேலும் அவ்வப்போது தன்னுடைய பனையூர் இல்லத்தில் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

2024ல் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் தன் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டு வருகிறார் விஜய்.

இந்த நிலையில் இன்னும் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இந்த வகையில் 4 தனித்தனி தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பாளர்களிடம் (Election Campaign strategists) நடிகர் விஜய் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் தன்னுடைய திரை பயணத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இன்று மே 21 ஆம் தேதி விஜய்யின் 68 வது படம் குறித்து அறிவிப்பு வெளியானது.

இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.

Actor Vijays Election Campaign Strategists Agreement

ஆட்சியாளர்களுக்கு வருங்கால அக்கறை இல்லை.; ‘இராவண கோட்டம் – தமிழர் நாட்டம்’ என சீமான் பாராட்டு

ஆட்சியாளர்களுக்கு வருங்கால அக்கறை இல்லை.; ‘இராவண கோட்டம் – தமிழர் நாட்டம்’ என சீமான் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு, தீபா, சஞ்சய் உள்ளிட்ட பல நடித்திருந்த திரைப்படம் ‘இராவணக்கோட்டம்’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்த இந்த படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரித்து இருந்தார்.

இந்த படம் வெளியாகி பலரின் பாராட்டை பெற்ற நிலையில் இந்தப் படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சி சீமான் நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டு இந்த படத்தையே பாராட்டியுள்ளார்.

அந்த பதிவில்…

’இராவண கோட்டம்’ திரைப்படம் கண்டேன். நான் பிறந்து வளர்ந்த இராமநாதபுரம் மாவட்ட மண்ணையும் மக்களையும் அங்குள்ள சிக்கல்களையும் அதனதன் இயல்பு மாறாமல் இப்படம் நேர்த்தியாகப் பதிவு செய்திருப்பது கண்டு மகிழ்ந்தேன், நெகிழ்ந்தேன்.

’இராவண கோட்டம்’ எனத் தலைப்பிட்டு, இது போன்ற ஒரு கதைக்களத்தை திரைப்படமாக்கத் தெரிவு செய்யவே தெளிவான புரிதலும் துணிவும் வேண்டும். அத்தகைய தெளிவோடும் துணிவோடும் இது திரைப்படமாக வேண்டிய தேவையையும் நோக்கத்தையும் அடைகாத்து, தரமான ஒரு படைப்பாக்கித் தந்துவிட்ட என் அன்புத் தம்பி இயக்குநர் விக்ரம் சுகுமாரன் அவர்களை உளமாரப் பாராட்டுகிறேன்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் நிலவியல் தன்மைக்குள் கதை மாந்தர்களாக நடிகர்களைப் பொருத்திய விதம், இராவண கோட்டத்தின் நேர்த்திக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், ஒப்பனைக் கலைஞர், ஆடை வடிவமைப்பாளர், இயக்குநர், எனத் துறை சார்ந்த கலைஞர்கள் ஒவ்வொருவரும் இப்படைப்பிற்காக அவரவரின் பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

பசுமை படர்ந்த நிலக் காட்சிகளை அழகுறக் காட்சிப்படுத்துவது எளிது. ஆனால், இதுபோன்ற வறண்ட நிலப்பரப்பின் காட்சிகளை அதன் இயல்பு கெடாமலும் அதே நேரம் இரசிக்கும்படியும் படமாக்குவது சவால்கள் நிறைந்தது. அவ்வகையில் காட்சிகளின், கதை மாந்தர்களின் போக்கறிந்து நிலவியலையும் ஒரு கதாப்பாத்திரம் போலக் காட்சிகள் எங்கும் நிறைத்திருக்கிற ஒளிப்பதிவாளர் அன்புத் தம்பி வெற்றிவேல் மகேந்திரன் அவர்களுக்கும் இதற்காக அவருக்குத் துணையாக இருந்த ஆடை வடிவமைப்பாளர், ஒப்பனைக் கலைஞர், கலை இயக்குநர், ஆகியோருக்கும் உளம் நிறைந்த பாராட்டுகள்.

உருக்கமான காட்சிகளிலும் சரி; பரபரப்பான சண்டைக் காட்சிகளிலும் சரி; அதனதன் உணர்வுகள் குலையாமல் சரியாகப் பார்வையாளர்களுக்குள் கடத்திவிடுகிறது லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு. இயக்குநரின் உணர்வோடு ஒத்து பயணித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். படத்தொகுப்பாளர், தம்பி லாரன்ஸ் கிஷோரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

உண்மைக்கு நெருக்கமான இதுபோன்ற கதைக்களத்தில் நிகழும் சண்டைக் காட்சிகள், அசலானவையாக இருந்தால் மட்டுமே படத்தின் நம்பகத் தன்மை கூடும். இந்த பொறுப்புணர்ச்சியின் எல்லை புரிந்து சண்டைக் காட்சிகளைத் திறம்பட அமைத்திருக்கிற தம்பி ராக் பிரபு அவர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

தம்பி ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும்கூட கதை சொல்லிகளாக அமைந்திருப்பது இராவண கோட்டத்திற்குப் பெரும் பலம். இசையமைப்பாளர் தம்பி ஜஸ்டின் பிரபாகரன் அவர்களுக்கும், உணர்வுப் பூர்வமான பாடல்களை மண்ணின் மணம் கூட்டி எழுதியுள்ளப் பாடலாசிரியர்கள், ஏகாதசி மற்றும் கார்த்திக் நேத்தா ஆகியோருக்கும் பேரன்பின் பாராட்டுகளும் உளம் நிறைந்த வாழ்த்துகளும்.

’இராவண கோட்டம்’ திரைப்படத்தை தான் ஏற்று நடித்த கதாப்பாத்திரத்தால் ஒரு தூண்போலத் தாங்கி நிற்கிறார் என் அன்பு அண்ணன் இளைய திலகம் பிரபு அவர்கள். தம்பி விக்ரம் சுகுமாரனால் உருவாக்கப்பட்ட கதாப் பாத்திரங்களைச் சரியாக உள்வாங்கி அவற்றுக்குத் தங்களின் ஈடு இணையற்ற இயல்பான நடிப்பாற்றலால் உயிருட்டியிருக்கும் என் அன்பு அண்ணன் இளைய திலகம் பிரபு அவர்களையும், பேரன்பு மிக்க மாமா இளவரசு அவர்களையும், வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறேன்.

கதை நாயகியாக ஆனந்தியும், உடன் நடித்திருக்கிற தீபா சங்கர், பருத்தி வீரன் சுஜாதா, ஆகியோரும் தத்தமது சரியான நடிப்பாற்றல்களை வெளிப்படுத்தி காட்சிகளின் நம்பகத் தன்மையைக் கூட்டுகிறார்கள். எதிர்க்கதாப்பாத்திரம் ஏற்று வரும் முருகனின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்குப் பெரும் பலமாக அமைகிறது. அதுபோலத் தம்பி அருள்தாஸ், தேனப்பன், ஷாஜி, ஆகியோர் ஏற்ற பாத்திரங்களும் அவற்றுக்கான அவர்களின் நடிப்பும் படத்தில் குறிப்பிடத் தகுந்தது. இராவண கோட்டத்தில் இவர்களின் சிறப்பான பங்களிப்பிற்காகப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

இராவண கோட்டத்தின் நாயகனாக வரும் தம்பி சாந்தனு அவர்களை ஒரு முழுமையான நடிகனாக நான் இப்படத்தில் கண்டேன். காதல், கோபம், ஏக்கம், பாசம், நட்பு, விசுவாசம், எனப் பலதரப்பட்ட உணர்வு நிலைகளில் காட்சிக்குக் காட்சி அவரின் நடிப்பாற்றல் நிறைவைத் தந்தது. இப்படத்தில் நடித்ததன் வாயிலாக ஒரு சமூகப் பொறுப்புணர்வு மிக்க கலைஞனாகவும் நிலை உயர்ந்துள்ளார் சாந்தனு. தம்பி சாந்தனு இதுபோலச் சமூகப் பொறுப்புமிக்கப் படைப்புகளில் தொடர்ந்து நடித்து மேலும் பல உயரங்களை அடைய நெஞ்சாரப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

இப்படி ஒரு கதைக்களத்தை தயாரிக்க முன் வந்ததோடு, அது திரைப்படமாக முழுமை பெற்று வெளியாகச் செய்த தயாரிப்பாளர் இரவி கண்ணன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகளும் பேரன்பின் வாழ்த்துகளும்!

பல்லாண்டுகளாக நாம் பேசி வருவதும் மரங்களின் பிசாசு என்றழைக்கப்படுவதுமான சீமைக் கருவேல மரங்கள், ’உயிர்ச்சூழல் கெடுக்கும் பேரிடர்’ என்பதைப் போகிற போக்கில் ஆழமாகப் பதிவு செய்கிறது இராவண கோட்டம் திரைப்படம். சீமைக் கருவேல மரங்களால் நிகழும் கேடுகள் பற்றியும் நிகழவிருக்கும் வருங்காலப் பேராபத்துகள் குறித்தும், சூழியல் அக்கறையோடு பதிவு செய்கிறது, இராவண கோட்டம்.

வரலாற்றில் நேர்ந்துவிட்ட பிழைகளால் தமிழர்களை ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்ட ஆட்சியாளர்களுக்கு, தமிழர் வாழ்வு குறித்தோ வருங்காலம் பற்றியோ துளியும் அக்கறை இல்லை என்பதையும், அதிகாரத்தை தக்க வைக்க அவர்களால்தான் சாதியப் பிரிவினை உணர்ச்சிகள் திட்டமிட்டு புகுத்தப்பட்டுத் தமிழர்கள் பிரித்தாளப்படுகிறார்கள் என்பதையும் இராவண கோட்டம் தெளிவாக எடுத்துக்காட்டி நிறுவுகிறது.

இராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வைப் பதிவு செய்யும் ’கரிசல் இலக்கியங்கள்’, காகிதங்களில் படைக்கப்பட்ட அளவிற்கு திரைப்படங்களில் இல்லையே என்ற என் நெடுநாள் ஏக்கம் ’இராவண கோட்டம்’ திரைப்படம் கண்ட பிறகுப் பெருமளவு தணிந்தது. இனி வரும் காலங்களில் தொடர்ந்து இம்மண்ணின் நிலவியலையும் வாழ்வையும் திரைப்படங்களாகப் பதிவு செய்ய இப்படம் ஒரு முன்னோடியாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. இப்பெரும் படைப்பிற்கு கதை, திரைக்கதை, உரையாடல், எழுதி, இயக்கிய என் அன்புத் தம்பி விக்ரம் சுகுமாரனுக்கு மீண்டும் என் பேரன்பின் முத்தங்களும் மனம் நிறைந்த பாராட்டுகளும்.

இதுபோன்ற படைப்புகள் தொடர்ந்து வர, உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் உடனடியாக இராவண கோட்டம் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்துப் பேராதரவு தர வேண்டும் எனப் பேரன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இராவண கோட்டம்; தமிழர் நாட்டம்!

Seeman appreciated Raavana Kottam Cast and Crew

தியேட்டர் பணிப்பெண்ணை வைத்து கேக் வெட்டிய ‘பிச்சைக்காரன் 2’ டீம்.: பார்ட் 3 கன்பார்ம்

தியேட்டர் பணிப்பெண்ணை வைத்து கேக் வெட்டிய ‘பிச்சைக்காரன் 2’ டீம்.: பார்ட் 3 கன்பார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வெள்ளிக்கிழமை மே 19 ஆம் தேதி ”பிச்சைக்காரன் 2′ வெளியானது.

இந்த படத்தை விஜய் ஆண்டனி இயக்கி தயாரித்து நடித்து எடிட்டிங் செய்து இசையமைத்துள்ளார்.

இதில் நாயகியாக காவ்யா தப்பார் நடித்திருக்கிறார்.

இந்த படம் வெளியான நாள் முதலே மக்களின் வரவேற்பை பெற்று வசூல் வேட்டை செய்து வருகிறது.

இதனையடுத்து இந்த படத்தின் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடி வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி.

சென்னை அம்பத்தூரில் உள்ள ராக்கி திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தின் வெற்றியை கொண்டாடினார்.

அந்த திரையரங்கில் பணிபுரியும் ஒரு பெண்ணை கேக் வெட்ட வைத்து விஜய் உற்சாகப்படுத்தினார்.

மேலும் பிச்சைக்காரன் முதல் பாகத்தில் இடம் பெற்ற அம்மா பாடலை ரசிகர்கள் முன் பாடினார்.

மேலும் பிச்சைக்காரன் பட 3வது பாகம் வெளியாகும் எனவும் ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்தார்.

இதன்பின்னர் சென்னை பாடியில் உள்ள சிவசக்தி திரையரங்கிலும் ”பிச்சைக்காரன் 2′ படம் பார்த்த ரசிகர்களை சந்தித்தார் விஜய்ஆண்டனி.

Vijay Antony confirmed Pichaikkaran 3

‘பாய்ஸ்’ படத்தில் ஜெனிலியா கேரக்டரில் நடிக்கவிருந்தவர் பிரபல நடிகரின் மகளா.?

‘பாய்ஸ்’ படத்தில் ஜெனிலியா கேரக்டரில் நடிக்கவிருந்தவர் பிரபல நடிகரின் மகளா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

20 வருடங்களுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்திய படம் ‘பாய்ஸ்’.

பொதுவாக ஷங்கர் படங்களில் சமூக கருத்துக்களும் நல்ல கதை அம்சமும் இருக்கும். ஆனால் ‘பாய்ஸ்’ படத்தில் இளைஞர்களை சூடேற்றும் வகையில் கிளுகிளுப்பான மற்றும் ஆபாச காட்சிகளும் அதிக அளவில் இடம் பெற்றிருந்தன.

இந்தப் படத்தில் ஒரே பெண்ணுக்காக ஐந்து நாயகர்கள் அடித்துக் கொள்ளும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஒரு தரமான இயக்குனரிடம் இருந்து இப்படி ஒரு கேவலமான படமா? என அப்போதே பரவலான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த படத்தில் பரத், நகுல், மணிகண்டன், தமன், சித்தார்த் மற்றும் ஜெனிலியா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் ஜெனிலியா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் வரலட்சுமி என தற்போது தகவல்கள் வந்துள்ளன.

இதற்கான நடைபெற்ற ஆடிஷனில் வரலட்சுமி தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் ஆனால் அப்போது சரத்குமார் தன்னுடைய மகளை நடிக்க வைக்க அனுமதிக்கவில்லை எனவும் தகவல்கள் வந்துள்ளன.

Who is first choice in Boys for Genelia Character

ரஜினிக்காக என்கௌன்டர் கதையுடன் காத்திருக்கும் ‘ஜெய்பீம்’ பட ஞானவேல்

ரஜினிக்காக என்கௌன்டர் கதையுடன் காத்திருக்கும் ‘ஜெய்பீம்’ பட ஞானவேல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ மற்றும் ‘லால் சலாம்’ ஆகிய இரு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த இரு படங்களுக்கும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

‘லால் சலாம்’ படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் தான் ரஜினியின் 170வது படத்தையும் தயாரிக்கிறது.

இந்த படத்தை ‘ஜெய் பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார்.

இந்த நிலையில் இந்த படம் குறித்து தகவல்கள் கசிந்துள்ளன. ‘ஜெய் பீம்’ படத்தை போன்று இதுவும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளது.

மேலும் போலீஸ் விசாரணையில் உள்ள போலி என்கவுண்டர்கள் பற்றிய கதையாக இந்த படம் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Thalaivar Rajini 170 movie story line

More Articles
Follows